வியாழன், 11 செப்டம்பர், 2014

9-11. நெஞ்சு பொறுக்குதிலையே..


செப் 11 கடந்த சில வருடங்களாக மறக்க முடியாத நாள் சிலருக்கு. அதற்க்கு தகுந்த காரணம் உண்டு. அமெரிக்காவில் நடந்த தாக்குதலில் பல்லாயிர கணக்கான மக்கள் உயிர்  இழந்தனர். இது நடந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கும்.  ஆனால் நான் சொல்ல வரும் செப் 11, 1921ல் நடந்தது. என் அருமை பாரதியார் இறைவனடி சேர்ந்த நாள் இது.



யாம் ... யாம் என்று தான் தனை அழைத்தான் பாரதி.. யாம் என்று உன்னை நீயே அழைத்து கொள்ள நீ என்ன ராஜ பரம்பரையா என்று கேட்டதற்கு யாம் தமிழ் பரம்பரை, அதனால் தான் யாம் எம்மை யாம் என்று அழைக்கின்றோம் என்றான்.  அவ்வளவு சுயமரியாதை.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்... இன்று இருந்தால், அழுது இருப்பான். தணியாமலே..
தனி மனிதனுக்கு உணவில்லையேல்..... இன்று இருந்தால் பசித்து இருப்பான் உணவில்லாமலே...
சாதிகள் இல்லையடி பாப்பா ... இன்று இருந்தால் பிரித்து  வைக்கப்பட்டு இருப்பான்... சாதி கணக்கில்...
நல்லதோர் வீணை செய்து...இன்று இருந்தால்... அவனே அதை விட்டெரிந்து இருப்பான்... அடுப்பில்.

இரண்டு பெண்களுக்கு தகப்பன், நான். எனக்கென்று இவன் எழுதி கொடுத்த பாடல்..

ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
ஓடி விளையாடு பாப்பா
கூடி விளையாடு பாப்பா கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா
ஓடி விளையாடு பாப்பா

பாலைப் பொழிந்து தரும் பாப்பா - அந்த
பசு மிக நல்லதடி பாப்பா
வாலைக் குழைத்து வரும் நாய் தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா

பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்லலாகாது பாப்பா
பொய் சொல்லக் கூடாது பாப்பா
தெய்வம் நமக்குத் துணை பாப்பா - ஒரு
தீங்கு வர மாட்டாது பாப்பா

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா

ஜாதிகள் இல்லையடி பாப்பா
ஜாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம் - பாப்பா

ஜாதிகள் இல்லையடி பாப்பா
நீதி உயர்ந்த மதி கல்வி
நீதி உயர்ந்த மதி கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர் பாப்பா


இந்த " மகா கவி" பேசின அதே தமிழ் பேசும் பாக்கியம், அதுவே எனக்கு போதும். நன்றி பாரதி. நல்லவேளை, நீ 1921 போய் விட்டாய்.

இன்று இருந்து இருந்தால்....


www.visuawesome.com

9 கருத்துகள்:

  1. வணக்கம்
    இரு நினைவு நாள்களை நினைவு கூர்ந்துள்ளீர்கள்.... அத்தோடு பாரதியார் பாப்பா பாட்டும் மிக நன்றாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டுமே நம் வாழ்வின் சோக நாட்கள். வருகைக்கும் வார்த்தைக்கும், வாக்குக்கும் நன்றி ரூபன் அவர்களே...

      நீக்கு
  2. மகா கவி பேசியத் தமிழைப் பேசுகிறோம் என்பதே
    நமக்குப் பெருமைதான்
    நன்றாக சொன்னீர்கள் நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாம் அறிந்த புலவரிலே...
      யாம் அறிந்த மொழிகளிலே...
      இதை விட வேறு சொல்ல இயலுமா?
      வருகைக்கும் வார்த்தைக்கும், வாக்குக்கும் நன்றி

      நீக்கு
  3. இன்று இருந்திருந்தால்...... பதிவின் தொடக்கத்தி நீங்கள் சொன்ன

    என்று தணியும் இந்த சுதந்திர தாகம்... இன்று இருந்தால், அழுது இருப்பான். தணியாமலே..
    தனி மனிதனுக்கு உணவில்லையேல்..... இன்று இருந்தால் பசித்து இருப்பான் உணவில்லாமலே...
    சாதிகள் இல்லையடி பாப்பா ... இன்று இருந்தால் பிரித்து வைக்கப்பட்டு இருப்பான்... சாதி கணக்கில்...
    நல்லதோர் வீணை செய்து...இன்று இருந்தால்... அவனே அதை விட்டெரிந்து இருப்பான்... அடுப்பில்.

    இதெல்லாம் நடந்திருக்கும் என்பது சத்தியமான உண்மை விசு ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்வது அருணா.. நாம் கொடுத்து (கெடுத்து )வைத்தது அவ்வளவு தான்.. வருகைக்கு நன்றி.

      நீக்கு
  4. பாதகஞ்செய்தவரைப் பார்த்தால் பயங்கொள்ளலாகாது பாப்பா..
    மோதி மிதித்துவிடு பாப்பா அவ‌ர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா...

    என்னே ஒரு தைரியமான வரிகள், பாரதியார் மட்டும் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தால் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு விடிவெள்ளியாக இருந்திருப்பார், இப்போதும் இருக்கிறார் தான், நினைவைப் போற்றுவோம், பதிவுக்கு வாழ்த்துகள் சார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த காலத்து மொழியில் சொன்னால் இது அல்லவா "மாஸ்". வருகைக்கு நன்றி.

      நீக்கு
  5. பாட்டுப் புலவன் பாரதி நினைவு
    சிறந்த இலக்கியப் பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு