வியாழன், 18 செப்டம்பர், 2014

(9)மூன்றாம் பிறை - தொடர் கதை

மறைந்த இயங்குனர் பாலு மகேந்திராவுக்கு ஓர் அஞ்சலி!

ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்கவும் 

தொடர் கதை... (சென்ற இடுகை படிக்க இங்கே சொடுக்கவும்)


சீனு... Mr. Srinivasan,  தலைமை ஆசிரியரை பார்க்கவேண்டும் என்று அங்கே அந்த பள்ளியில் இருந்த வாட்ச்மனை சந்துரு கேட்க்க,

 அவர் இப்ப இங்க வேலை செய்யவில்லையே, அவருக்கு பதிலாக வேறொருவரை நியமித்து இருக்கின்றார்கள் என்றான்.

நான் அவருடைய நண்பன், அவரை எங்க பார்க்க முடியும்?

நீங்க உள்ள போய் ஆபிசில் கேளுங்க, அவர்கள் சொல்லுவார்கள்.
உள்ளே ஆபிசில்...




சார், என் பெயர் சந்திரசேகர், நான் உங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஸ்ரீனிவாசனின் நண்பன். அவரை பார்க்க முடியா?

ஒ, நேத்து போன் செய்தது நீங்க தானா?

ஆமா சார்,

நைஸ் டு மீட் யு மிஸ்டர். சந்திரசேகர், பயணம் எல்லாம் எப்படி?

குட். சார், சீனு எங்க, அவருக்கு என்ன ஆச்சி? என்னை ஏன் உடனே புறப்பட்டு வரசொன்னீங்க?

மிஸ்டர். சந்திரசேகர்,

என்னை சந்துரு என்றே அழைக்கலாம்.

சந்துரு, சில நாட்களாகவே ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு மன நிலை குன்றி போய் உள்ளது. அவரால் ஆபிசில் வந்து வேலை செய்ய முடியாது. தானே யோசிக்கும் அந்த சுய நிலையில் அவர் இல்லை.

என்ன சார் ஆச்சி. சில மாதங்களுக்கு முன் கூட நான் பார்த்தேனே, நல்லா தானே இருந்தார். இப்ப என்ன திடீர் என்று.

சில பேர் அவருக்கு காதல் தோல்வியினால் இந்த மாதிரி ஆகிவிட்டது என்கின்றார்கள். சில பேர் அவர் காவல் துறையிடம் பயந்து இந்த மாதிரி ஆகிவிட்டது என்று சொல்கின்றார்கள். ஆனால் எங்களுக்கு உண்மை என்னவென்று தெரியவில்லை.

இப்ப அவர் எங்க இருக்கார் சார்?

அவர்  பழைய வீட்டிற்கு நீங்க போய் இருகின்றீர்களா? அதற்கு வழி தெரியுமா?

தெரியும் சார், அதே வீட்டில் தான் இருக்காரா?

இல்ல, சந்துரு, அந்த வீட்டிற்கு போகும் வழியில் , ஒரு ஏரி வரும், அந்த ஏரியை ஒட்டி ஒரு பட்டறை இருக்கு. அங்கே நடராஜ் என்ற ஒருவர் இருப்பார். அவரிடம் கேட்டு பாருங்கள், சரியாக சொல்லுவார்.

சரி சார், நான் உங்களை பிறகு சந்திக்கின்றேன்.

நேராக ஏரியை நோக்கி புறப்பட்டான் சந்துரு. வழியில் ஒரே யோசனை, தானும் சீனுவும் சென்ற சந்திப்பில் பேசி கொண்டது..

சீனு, நீ இந்த பெண்ணை ஊருக்கு கூடிக்கொண்டு போவது எனக்கு என்னமோ சரியா தெரிய வில்லை.
எனக்கு சரியா படுது சந்துரு.

ஆர் யு சூர்?
தி மோர் ஐ திந்க் அபௌட் இட், தி மோர் ஐ வான்ட் டு டூ  இட், சந்துரு.

ஓகே...

அதற்கு பின் ரயில் நிலையத்தில், ஓகே பாய் சீனு. டேக் கேர்.

அதற்க்கு பின் என்ன ஆகி இருக்கும். ஊரில் ஏன் காவல் துறையின் மேல் பயம் என்று பேசி கொள்கின்றார்கள். காதல் தோல்வியாக இருக்காது, ஏன் என்றால், அந்த பெண் சுய நினைவை இழந்தவள். என்ன ஆகி இருக்கும்.

ஒரு 10 நிமிடத்தில் அந்த பட்டறையை வந்து அடைந்தான். அங்கே..

இங்க, நடராஜ் யார்?

நான் தான், உங்களுக்கு என்ன வேண்டும்?

என் பெயர் சந்துரு, நான் சீனுவுடைய நண்பன். அவரை பார்க்க முடியுமா?
உட்காருங்கள் சந்துரு சார், சீனுக்கு நீங்க நண்பன் என்று சொல்றிங்க. கடைசியா எப்ப அவரை பார்த்தீர்கள்?

சில மாதங்களுக்கு முன், சென்னையில்.

சந்துரு சார், அவர் முன்பு போல அல்ல, இப்ப அவர் நிலைமை கொஞ்சம் மோசம். நிறைய பேரை அவருக்கு நினைவில் இல்லை. அவர் வாழ்க்கையில் அவரை அதிகம் தெரிந்தவர்களை தான் அவருக்கு நினைவிலேயே இருக்கு. நான், என்கிட்டே வேலை செய்யும் பையன் பீட்டர், இந்த பள்ளி கூடத்து முதலாளியம்மா, மற்றும் பக்கத்துக்கு வீட்டு பாட்டி.. இவங்கள தவிர அந்த விஜி, விஜி என்னும் பொண்ணு.. மத்த யாரையும் அவருக்கு தெரியவில்லை.

சரி நடராஜ், நான் அவர பார்க்க முடியுமா?

அவர் ராத்திரி ரொம்ப லேட்டா தான் தூங்க போவார்.. எப்ப தூங்குவார், எப்ப எழுவார்னே தெரியாது. பட்டறைக்கு பின்னாலே ஒரு சின்ன குடிசை போட்டு இருக்கேன், அங்கே தான் அவரும் , அவர் நாயும் இருப்பாங்க. என்னாலே முடிந்த சாப்பாடு ஏதாவது போடுவேன். இந்த பள்ளிகூடத்து முதலாளி கொஞ்சம் பண உதவி செய்வாரு. வாங்க போய் பார்க்கலாம்.

சீனுவை பார்த்த சந்துரு அதிர்ந்தே விட்டான்.


தூங்கி கொண்டு இருந்தான் சீனு, அருகில் சுப்ரமணியோடு.  முகம் முழுக்க தாடி, கிழிந்து போன சட்டை, அழுக்கு பேன்ட். ஒரு காலில் செருப்பு, மற்றொரு செருப்பு அருகில்...

நடராஜ் எழுப்பினான்... ராமா... ராமா..

நடராஜ், அவர் பெயர் சீனு தானே, நீங்க ஏன் ராமா என்று அழைக்கின்றீர்கள்?

அவர் இப்ப எல்லாம் ராமா என்று கூப்பிட்டால் தான் தெரிந்து கொள்கின்றார்.

ஏன் என்று சந்துரு கேட்க்கும் முன், நடராஜ், மீண்டும் ராமா என்று அழைக்க, அந்த நாய் எழுந்து சீனுவின் முகத்தை நக்க துவங்கியது.

எழுந்தான் சீனு...எதிரில் சந்துரு...

ஒரு சில வினாடிகள் பார்த்தான் சீனு, சந்துருவை உற்று நோக்கிய பின்....

சந்துரு, சந்துரு....என்று சொல்லிவிட்டு குழந்தை போல் கதறி கதறி அழ ஆரம்பித்தான்.

லட்சுமி தன் காரை இன்னும் வேகமாக ஓட்ட ஆரம்பித்தாள்.

தொடரும்....

www.visuawesome.com

4 கருத்துகள்:

  1. ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா போது சார், கமல் சார் இன்ட்ரோவும் அழகா சொல்லீருக்கீங்க, தொடருங்கள், தொடர்கிறோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து படித்து பின்னூட்டம் தருவதற்கு நன்றி ஜெயசீலன் அவர்களே.
      www.visuawesome.com

      நீக்கு
  2. சில்க்கு எப்போ வருவார்கள் என்கிற ஆவலுடன்...
    காத்திருக்கிறேன்...!!

    பதிலளிநீக்கு