செவ்வாய், 24 ஜூன், 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?

தோழி மைதிலி கேட்க நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் பதிலை படித்து உற்சாகப்பட்டு நான் எழுதிய என் பதில்கள்.

1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
அந்த பாட்டி பார்த்தாயா? எப்படி கம்பீரமா அந்த தாத்தவை வைச்சி இருக்குனு வரவங்க எல்லாம் சொல்லனும்.

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
அப்படி எதுவும் இல்லை. கற்று கொண்ட சில காரியங்களை மறக்க விரும்புகிறேன்.

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
'அண்ணே, நான் மட்டும் உங்களை பற்றி தவறாக பேசினேன் என்பதை உண்மை என்று நம்பினால், கீழ காஞ்சி போய் இருக்கும் அந்த அசிங்கத்தை மென்னு என் முகத்தில் காரி துப்புங்கள்'  என்று ஒருவர் அடுத்தவரிடம் கேட்டதை கேட்டு...சென்ற வாரம்!

4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
மெழுகுவர்த்தி கொளுத்தி  TV பார்ப்பேன், இல்லை இல்லை புத்தகம் படிப்பேன்.

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
இரண்டும் பெண் பிள்ளைகள் அல்லவா... உன் தாயை பார். அவர்கள் வழியை பின்பற்று.

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால்
எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

இந்தியாவின் தனி மனித ஒழுக்கத்தை.

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
என் 10 வயது மகளிடம். ஒளிவு மறைவு இல்லாமல் உள்ளதை உள்ளது என்று அன்போடு எடுத்து சொல்லுபவள்.

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
அட பாவிகளா, அது பழைய செய்தி, இப்ப நடந்த காரியத்த கேள்வி பட்டீர்கள் என்றால் இன்னும் சுவராசியமாக இருக்கும். அதுமட்டும் இல்ல, இந்த செய்தி பொய்யான செய்தி. உண்மைய கேள்வி பட்டீர்கள் என்றால் என்னையும் வெட்டி விட்டு நீங்களும் நாக்கை புடுங்கி கொண்டு மண்டையை போட்டு இருப்பீர்கள்.

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
சோகமான கடந்த காலத்தால் நல்ல எதிர் காலத்தை இழந்து விடாதே. பிள்ளைகளுக்காய் வாழ்ந்து காட்டு.

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
100வது பிறந்த நாளாய் எப்படி கொண்டாடலாம் என்று யோசிப்பேன் (மீண்டும் முதல் கேள்விக்கு போகவும்)

9 கருத்துகள்:

  1. ஆஹா! அட்டகாசம் சார்!! ஆர்வமாய் பதில் தந்தது சூப்பர்!
    ஒ! உங்க வீட்டிலும் ரெண்டு தேவதைகளா!!
    ரொம்ப சுவாரஸ்யமான பதில்கள் அந்தாதி ஸ்டைல் ல முடிச்சது சூப்பர்!! ஒரு சின்ன கரெக்சன் டி.டி அண்ணா என் வட்டத்தில் மாட்டிக்கொண்டவர் என்றாலும் இதை தொடங்கி வைத்தது மதுரை தமிழன் அவர்கள் தான். நட்பால் இணைந்திருப்போம் சகோ:) நன்றி!

    பதிலளிநீக்கு
  2. மைதிலி அவர்களே, பின்னோட்டத்திற்கு நன்றி. தனபாலனும் சரி மதுரை தமிழனும் சரி , என்னை சார்ந்தவர்கள்தான். தவறாக காட்டியதற்கு வருந்துகிறேன். எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? தயவு செய்து "சார்" என்று என்னை அழைக்காதீர்கள். "அண்ணாத்தே" என்று அழைக்க படுவதை பெருமையாக கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி... நன்றி...

    மெழுகுவர்த்தி கொளுத்தி TV பார்ப்பேன் - ஹா... ஹா...

    // தனி மனித ஒழுக்கத்தை // சிறப்பு... பாராட்டுக்கள்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "தனி மனித ஒழுக்கம்" நண்பா சென்ற மாதம் இருமுறை இந்தியா செல்ல நேர்ந்தது. தனி மனித ஒழுக்கம் போகும் பாதையை பார்த்து மனம் வெந்து , நொந்து, சோர்ந்து, சாய்ந்து போனது.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரர்!

    என் வலைப்பூவுக்கும் வருகைதந்து வாழ்த்தியமைக்கு நன்றி!

    இங்கும் உங்கள் பதில்களும் அட்டகாசம்.

    வழ்த்துக்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி இளமதி. தம் பதில்களை மீண்டும் மீண்டும் ரசித்தேன்...ருசித்தேன்.

      நீக்கு
  5. //மெழுகுவர்த்தி கொளுத்தி TV பார்ப்பேன்,// அவ்வ்! ;))
    சுவாரசியமான பதில்கள் விசு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி இமா! அது என்னவோ தெரியவில்லை. எனக்கும் மின்சாரத்திற்கும் எப்போதுமே ஒரு விட்ட குறை தொட்ட குறை. நான் கேட்ட மின்சார சம்பந்தமான கேள்விக்கு பேராசிரியர் சாலமன் பாப்பையா பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் (8:10) முறையை இங்கே பாருங்கள்.
      https://www.youtube.com/watch?v=IEcnEX0yj6Y

      நீக்கு