புதன், 27 ஜனவரி, 2021

Sir மற்றும் The White Tiger

 காது முழுக்க சார் .. சார் .. Sir !

கடந்த பல வருடங்களாகவே சில பல காரணங்களினால் சினிமா பார்ப்பதை தவிர்த்து வந்தேன். தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலமும் சேர்த்து தான். ஹிந்தி சினிமாவா? அதை பார்த்து ரசிக்கும் அளவிற்கு நமக்கு அறிவு கிடையாது. அதனால் அதை எப்போதும் பார்ப்பதில்லை.


கொரோனா காலம் துவங்கி இல்லத்திலேயே இருப்பதால் நேரம் சற்று கிடைப்பது மட்டுமல்லாமல் ராசாதிக்கள் இருவரும் தம் தம் சொந்த கால்களில் நிற்க துவங்கியதால் இன்னும் சற்று நேரம் கிடைக்க, சில மாதங்களாக இந்த சினிமா பார்க்கும் பழக்கம் மீண்டும் துவங்கியுள்ளது.

சென்ற வாரம் அலுவலகம் செல்ல, அங்கே இருந்த அமெரிக்க சக பணியாளர்கள் சிலர்.. 

" எங்க போன விசு, முக்கியமான விஷயம் பேசணும், வா" 

என்று அழைக்க , 

என்னவா இருக்கும் என்று நினைக்கையில்..

"Sir  , மற்றும் The White Tiger படம் பாத்தீயா? "

"இல்லை.. ஏன்?"

"சூப்பர் படம்" பாரு, ரெண்டுமே இந்திய படம்"

"ஓ ஓகே.. பாக்குறேன்.."

என்று சொல்லி, இணைய தளத்தை தட்ட..

"சார்"

80களில் நாம் அனைவரும் ரசித்த "Pretty  Woman " கதையை போல் அமைந்துள்ளது. அந்த படத்தில் நாயகி ஒரு "Commerical  Sex  Worker ", இந்த படத்தின் நாயகி ஒரு வீட்டின் வேலை காரி. 

முழு கதை அமைப்பும் " A feel good" ரகம். கதையில் வில்லன் நெகட்டிவ் பாத்திரம் என்று எதுவும் இல்லை. அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த ஒரு இந்தியவம்சாவளி பணக்கார ஆர்கிடெக்ட்டின் திருமணம் நின்றுவிட,சோகத்தில் வாழும் அவர் தன் இல்லத்தில் பணிபுரியும் வேலைக்காரியின் மேல் எப்படி காதல் வயப்படுகிறார் என்பதே கதை.

பாம்பே வாழ்க்கையையும் சரி, அந்த நாயகியின் கிராம வாழ்க்கையையும் சரி, கொச்சை படுத்தாமல் ரம்மியமாக சொல்லு இருக்கின்றார்கள். எங்கேயும் முகம் சுளிக்கவில்லை. 

"ஓ , பரவாயில்லை, இந்தியாவில் கதை அமைந்து இருந்தாலும், இந்தியா "Filthy" , தூசி , அழுக்கு, பாம்பாட்டிகள்,  பிச்சை காரர்கள் என்ற அந்த பழைய டெம்ப்லேட் இல்லாமல் சீராக படத்தை அளித்து இருந்தார்கள். 

அடுத்து "The White Tiger"

இது எல்லாம் ஒரு படம் என்று எப்படி எடுத்து வைத்துள்ளார்கள். இந்தியாவை அசிங்க படுத்தி அதில் குளிர் காய்ந்து இருக்கின்றார்கள். ஒரே ஒரு காட்சி...

நாயகன் ஒரு இடத்தில்மிகவும் கோவமாக இருக்க அவரின் எதிரில் ஒருவர்   தெருவில் அமர்ந்து மலம் கழிக்கிறார். அதை பார்த்த நாயகனும் தன் பேண்ட்டை இறக்கி அவருடன் சேர்ந்து மலம் கழிக்கிறார். இருவரும் சிரித்து கொண்டே!

எவ்வளவு கேவலமாக சித்தரிக்க முடியுமோ அவ்வளவு கேவலமாக இந்தியாவை சித்தரித்து இருக்கின்றார்கள். 

கதை திரை கதை என்று ஒன்றுமே இல்லை. அடுத்தவன் குப்பையில் ஆதாயம் தேடி இருக்கின்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இதில் விசேஷம் என்னவென்றால்...

கூட பணி புரியும் அமெரிக்கர்கள் அனைவருக்கும் இந்த படம் மிகவும் பிடித்து இருக்கின்றது. ஒவ்வொரு முறை யாராவது இந்தியனை பார்த்து விட்டால்..

"White  Tiger " பார்த்தியா ? சூப்பர் இல்ல!!?"

என்னத்த பதில்  சொல்வது என்று தெரியாமல்,  தலையை கீழே போட்டு கொண்டு தவிர்த்து வருகின்றேன் 

படத்தை பார்த்து முடிக்கையில், இளையவள் வர..

"என்ன பாக்குறீங்க" 

"White  Tiger "

"வேற வேலை இல்லை, உங்களுக்கு ! ஏன் ரெண்டு மணி நேரத்தை குப்பையில் கொட்டுறீங்க!!?"

"சாரி !"

இந்த குப்பையின் அசுத்தத்தில் இருந்து மீள சில நாட்களாகும் போல இருக்கின்றது.

இளையவள் மீண்டும் வந்து..

"அது சரி, அந்த Slum Dog Millionaire படம் பார்த்தீங்களா? "

"இல்லை, நீ தானே அதை  பார்த்துட்டு  குப்பைன்னு சொன்ன.. "

"நான் ஒன்னும் அதை பாக்கல, குப்பைன்னு தெரிஞ்சா விலகி  போகணும் , அதை பார்த்துட்டு இது குப்பைன்னு ஆராய்ஞ்சிட்டு இருக்க கூடாது . 

2 கருத்துகள்:

  1. Sir  என்றொரு நஸிருதீன் ஷா மாடொத்த ஹிந்தி படம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படி ஒரு படமா?

    பதிலளிநீக்கு
  2. இதையெல்லாம் சென்சார் செய்யமாட்டார்களா!!
    ராசாத்தியின் அறிவுரை அருமை.

    பதிலளிநீக்கு