வெள்ளி, 4 டிசம்பர், 2020

மூன்று வாரம் முன்னதாக வெளிவந்த - ரஜினியின் டிசம்பர் 31 ம் தேதி அறிவிப்பு!

டிஸ்கி:

இது முற்றிலும் என் கற்பனையே. ரஜினி என்ற ஒரு நடிகனை நான் மிகவும் ரசித்து கொண்டாடி இருக்கின்றேன்.  ஒரு எளிமையான ஆரம்பத்தில் இருந்த வந்தவர் தன் நம்பிக்கையாலும் விடா முயற்சியினாலும் சற்றும் பின் வாங்காமல் தன் இலட்சியத்தை நோக்கி பல முறை எதிர் நீச்சல் போட்டு திரை உலகத்தில் சக்ரவர்த்தியாக திகழ்ந்தார்- திகழ்கின்றார்-திகழுவார்.

திரையில் ரஜியினியை கொண்டாடிய எனக்கு அவரின் அரசியல் பிரவேசம் "இது இவருக்கு தேவையா" என்றுதான் நினைக்க வைக்கின்றது. இந்த கொரோனா காலத்தில் எழுவது வயதில் சிறுநீரக மாற்றோடு இவர் அரசியல் காலத்தில் நுழைவது "இது இவருக்கு தேவையா " என்று மீண்டும் நினைக்க வைக்கின்றது. 

ரஜினி இன்னும் பல்லாண்டு சுகத்தோடு வாழவேண்டும். இன்னும் பல படங்களில் (தன் வயதிற்க்கேற்ற) பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று வாழ்த்திவிட்டு ..

இதோ அவரின் டிசம்பர் 31 ம் தேதிக்கான அறிவிப்பை இங்கே தருகின்றேன்.



வணக்கம்.

நான் அரசியலுக்கு வரவேண்டுமா , எப்போது வரவேண்டும் என்று அந்த ஆண்டவன் தான் சொல்ல வேண்டும் என்று நான் கூறியது உங்கள் நினைவில் இருக்கும். அந்த ஆண்டவன் இன்று அதற்கான பதிலை சொல்லி விட்டான். 

மனதில் அரசியலுக்கு வந்து உடனடியாக தமிழகத்திற்கு மாற்றத்தை தரவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், உடலளவில் என்னால் அந்த ஆசையை நிறைவேற்ற முடியவில்லை.

நான் ஏற்கனவே தெரிவித்த படி உடலளவில் சற்று உபாதைகள் உள்ளதால் என்னால் நேரடியாக தீவிர அரசியலில் ஈடுபட முடியாது என்பதை என் ரசிகர்களுக்கு மிகவும் வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறேன். இதை கூறுவதில் என் மனதில் இருக்கும் வருத்தம் என் ரசிகர்களுக்கு புரியும்.

வரும் சட்டசபை தேர்தலில் என் ரசிகர்கள் அனைவரும் தம் தம் மனசாட்சிக்கு ஏற்றபடி வாக்களியுங்கள். தாம் வாக்களிக்கும் போது நதி இணைப்பு, தேசிய நலன் மற்றும் ஆன்மிகத்தை ஆதரிப்பவர்களுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.

ஆண்டவன் நமக்கு நல்லதே செய்வான்.

வணக்கம்.

4 கருத்துகள்:

  1. என்ன தல இப்படி சொல்லிபுடீங்க 😔😂🤣

    பதிலளிநீக்கு
  2. ***ரஜினி என்ற ஒரு நடிகனை நான் மிகவும் ரசித்து கொண்டாடி இருக்கின்றேன். ஒரு எளிமையான ஆரம்பத்தில் இருந்த வந்தவர் தன் நம்பிக்கையாலும் விடா முயற்சியினாலும் சற்றும் பின் வாங்காமல் தன் இலட்சியத்தை நோக்கி பல முறை எதிர் நீச்சல் போட்டு திரை உலகத்தில் சக்ரவர்த்தியாக திகழ்ந்தார்- திகழ்கின்றார்-திகழுவார்.***

    இதுவும் கற்பனை தானா?!

    Visu: We can not even do what we wishes to do in our life. We make decisions for pleasing others. Are we not? But we expect someone else (like Rajini) to do what pleases us?!! Or what we think as good for him??? Is that not funny?

    Nobody listens to anybody, Visu. That's what life is all about!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இதுவும் கற்பனை தானா?!//

      No Varun. Growing up, I really enjoyed watching Rajini Movies. He was the Man. We couldnt wait for Rajinis next releases.

      I sincerely wish he lives a happy life.

      I was just writing about what I thought hed do about his political life. I COULD BE COMPLETLY WRONG.

      How about Football, ah? Steelers lost to a team with no name. RAMS is back on track I guess. :)

      நீக்கு