வியாழன், 31 டிசம்பர், 2020

2020 டேக் இட் ஈஸி..

தங்களில் அநேகருக்கு இந்த 2020 பெரிய சவாலாக அமைந்து இருந்தாலும், எனக்கும் என் குடும்பத்திற்கும் இந்த வருடம் ஒரு சுவாரஸ்யமான படிப்பினையாக தான் இருந்தது.

இங்கே அமெரிக்காவில் பல துறைகள் கோவிட் காரணத்தினால் மூட பட்டு அந்நிறுவனத்தில் பணிபுரிவோர்களின் நிதிநிலைமை பாதிக்க பட்டு இருந்த போதிலும் அம்மணியின் மருத்துவ துறை மற்றும் என் நிதி துறை இரண்டும் "அத்தியாவாசியதுறையாக " நிர்ணயிக்க பட்டதால் இருவரின் வேலைகளின் சில சிறிய மாற்றங்கள் இருந்தாலும் பெரிதான பாதிப்பு ஒன்றும் ஏற்பாவிலை,


உடற் பயிற்சி, மருத்துவ பரிசோதனை , உண்ணும் பழக்கம்,  நன்கொடை, சேமிப்பு , குடும்பத்தோடு விடுமுறை, அம்மாவோட நேரம் கழித்தல் என்று பலவற்றை வருட ஆரம்பித்தில் இருந்தே கூட்டி கழித்து மார்ச் வரை கடை பிடித்து வந்தாலும் அதன் பின்னர் அம்புட்டும் Gone for  Six.


குறிப்பாக அம்மா ஒரு Nursing Home "ற்கு மாற்ற பட, மாதம் ஒரு முறை கண்ணாடி சுவற்றின் ஒரு பக்கத்தில் அவர்கள் மறு பக்கத்தில் நான். தோலை பேசியில் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு பேசி கொண்டு வருகிறோம்.


ஒன்பது மாதமாக இல்லத்தில் இருந்தே வேலை செய்வதால், மூன்று வேலை சமையலையும் செய்து கொள்ள வாய்ப்பு கிட்டியது. அதை சரியாக பயன் படுத்தி கொண்டேன் என்று தான் சொல்லவேண்டும்.


இந்த காலத்தில் மற்ற வருடங்களை விட அதிக நேரம் விவிலியம் படிப்பதில் செலவு செய்ய முடிந்தது. இன்னும் கற்க வேண்டும்.


மிகவும் நெருங்கிய பழகிய மூன்று சொந்த பந்தங்கள் இந்த மானிட வாழ்க்கையை கடந்து சென்றார்கள். மூவருக்கும் கிட்ட தட்ட என் வயது தான். மிகவும் அருமையான மக்கள். Gone too soon.


சிறிய வயதில் இருந்தே விளையாட்டில் மிக்க ஆர்வம் கொண்டவன் நான். கிரிக்கெட்டில் வருடக்கணக்கில் மணி நேரத்தை கழித்து அம்புட்டும் சூதாட்டம் என்று 90  களில் அறிந்த உடனே, யப்பா சாமி.. இவனுங்கள இன்னும்மா நம்பனும்னு, அதை அறவே நிறுத்திவிட்டு, இங்கே அமெரிக்காவில் NFL என்ற Football  என்ற ஆட்டத்தை ரசித்து வருகிறேன்.  நான் வாழும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு பல வருடங்களாக எந்த அணியும் இல்லாததால் ஏதாவது ஒரு அணியை பின் பற்றி வந்த எங்களுக்கு சில வருடங்களுக்கு முன்பு இரண்டு அணி. 


LA RAMS 

LA CHARGERS


இதில் LA CHARGERS அணியை தள்ளி வைத்து விடுவதே மேல். மொத்த சீசனிலும் நம் இதயத்தை ஏதோ கோவித்து கொண்ட காதலி போல் நொறுக்கி கொண்டே இருப்பார்கள். அதனால் தான் LA RAMS நம் அணி.


இந்த வருடம் ஆட்டங்கள் நடக்குமா நடக்காத என்று நினைத்து கொண்டு இருந்த வேளையில் ஆட்டங்கள் ஆரம்பிக்க.. LA RAMS அணியின் ஆட்டமோ ஜான் என்ற முழம் சருகியது போல் போனது. அடுத்த வருடம் முத்த ஞாயிறு அன்று ஒரு ஆட்டம் . அந்த ஆட்டம் தான் இந்த அணிக்கு மிகவும் முக்கியமான ஆட்டம். அதில் வெற்றி பெற்றால் தான் Play off க்கு போக முடியும் என்ற நிலை. 


ஒரு வாரமாக மேலும் கீழும் நடந்து விரல்களில் உள்ள நகத்தையும் எல்லாம் கடித்து குதறிய  பின் சக LA RAMS விசிறி ஒருவர் அலை பேசியில்..


We will go to Play Offs. Just take it easy ..


என்று சொல்ல..


 டேக் இட் ஈஸி என்று பாடி கொண்டே, ஞாயிறுக்காக காத்து கொண்டு இருக்கின்றேன்.


Lets hope 2021 brings better days. After all what's life without HOPE.


Happy New Year Everybody.



4 கருத்துகள்: