வெள்ளி, 2 அக்டோபர், 2020

பாட்டு பாட வா!

கொஞ்சம் கிட்டார் கொஞ்சம் கீபோர்டு  கொஞ்சம் ட்ரம்ஸ் கொஞ்சம் ராகம் மாறாமல் நம்மகிட்ட இருக்கு என்ற விஷயம் கொஞ்சம் கொஞ்சமா கொஞ்ச பேருக்கு தெரியவர நம்மளையும் கொஞ்சம் பேர் கொஞ்சும் படி ஒரு கொஞ்சம் நல்ல நேரமா வாழ்க்கை போய் கொண்டு  இருந்த நேரத்துல.


அம்மா "இங்கே நீ படிச்சி கிழிச்சது போதும் மதராசுக்கு போய் படி"ன்னு சொல்லி அனுப்ப அங்கே போனா அம்புட்டு ஒன்று விட்டதுங்களும் இங்கிலீசில் மட்டும் பேச, நமக்கும் இங்கிலீஸ் வரும், ஆனா இவனுங்க லேலவே வேற மாதிரி இருக்கேன்னு நினைக்கையில்,

ஒரு நாள், ஒரு பார்ட்டி.

பள்ளியில் கூட படிக்கும் அதே தெரிவில் வசிக்கும் ஆங்கிலோ இந்தியன் பிரென்ட் கார்ல்ட்டன் ஸ்மித் வீட்டில் நடக்கும்  ஒரு பிறந்த நாள் விழாவிற்கு செல்லும் பாக்கியம்.

ஞாயிறு கிழமை மதியம் ஆனாலே " Voice  of  America"காவை ரேடியோவில் பத்தாவது சேனலில் தடவி கிடவி கண்டித்து பிடிச்சி  அதுல ஏதாவது ஒரு இங்கிலீஸ் பாட்டு வர அதை சப்தமா கேட்டுக்குனு இருந்த கார்லட்டானோட அப்பா க்றிஸ் ஸ்மித், கதவுக்கு வெளியே நின்னுனு இருந்த என்னை,

"சன் ஒய் ஆர் யு ஸ்டேண்டிங் இன் தி வெயில், கம் அண்ட் ஸ்டண்ட் அண்டர் தி புளியாமரத்து நெயில்" என்று உள்ளே அழைக்க அங்கே சென்றால் மீண்டும் ஆங்கிலம்...

"Hey, hows you?"

"Fine thanks, BTW, it is not How is you? It is how are you?"

"Really! that tells me you are from Country" 

என்று ஒருத்தன் சொல்ல அனைவரும் சிரிக்க...

நானோ, என்னடா இது.. வாழ்க்கை முழுக்க "How are you?" ன்னு தானே கேள்வி பட்டு இருக்கேன். இவங்க என்ன வித்தியாசமா என்று நினைத்து..

"கார்ல்ட்டன், Is it  How is you or How are you? "

"How are you" is the right thing, but "how is you" is the latest fashion.

அடுத்தது என்ன? பெருசுங்க எல்லாம் ஹெர்குலஸ்- Thumbsup - Passing Showவுக்கு தாவ, ஹாலில் இருந்த கிட்டாரை எடுத்த கார்ல்டன்  அமர்ந்து வாசித்தான்.

"கார்ல், தட்ஸ் குட் ப்ளெயிங், Cliff Richards , Bachelor Boy, isnt? "

"Yes, you know western songs!!?"

"Of Course,  I love western"

"What's your favorite song"

"Stand By me"

"O my God, I like that song, let me play, sing"

வருடங்கள் எத்தனை ஆனாலும், எந்த நட்ப்பை  கிட்டாரோடு பார்த்தாலும் , 

உடனே "Stand by me"  தான்!

1961 ல் வெளியான அருமையான பாடல்.

இதோ அதன் தமிழாக்கம்.

இரவு வந்து உலகே இருட்டாக

நிலவின் ஒளி

ஒன்று மட்டுமே நாம்

காண்கையில்..


நான் அச்சப்படமாட்டேன்..

நான் அச்சப்படவே மாட்டேன்..

என் அருகே நீ இருந்தால்..


நாம்  மேல்நோக்கி பார்க்கும்

அந்த  வானமே  நொறுங்கி வீழ்ந்தாலும்

மலைகள் இடம்பெயர்ந்து

சமுத்திரத்தில் வீழ்ந்தாலும்

நான் அழமாட்டேன், கண்ணீர் விடமாட்டேன்..

என் அருகே நீ இருந்தால்..


ஆங்கிலத்தில் ...

When the night has come And the land is dark

And the moon is the only light we'll see

No I won't be afraid

Oh, I won't be afraid

Just as long as you stand, stand by me


So darlin', darlin', stand by me

Oh, stand by me

Oh, stand

Stand by me, stand by me


If the sky that we look upon

Should tumble and fall

Or the mountains should crumble to the sea

I won't cry, I won't cry

No I won't shed a tear

Just as long as you stand, stand by me

And darlin', darlin', stand by me


Oh, stand by me

Woah, stand now

Stand by me, stand by me

பின் குறிப்பு :


மேலே உள்ள வீடியோவில் பாட்டை மட்டும் ரசியுங்கள். இருவரின் சிகை அலங்காரத்தை விமரிசிக்க வேண்டாம், கொரோனா ஊரடங்கினால் இல்லத்தரசிகளின் கை  விளையாட்டு தான் அது. 


3 கருத்துகள்: