செவ்வாய், 22 செப்டம்பர், 2020

கொட்டோ கொட்டுனு கொட்டும் போது..(NFL)

இன்னாடா, விசுவை ஆளையே காணோம்னு கேட்டுன்னு (அப்படி யாரும் இருந்ததா தெரியல, இருந்தாலும் சும்மா ஒரு பில்ட் அப் இருக்கணும் தானே, அதான் ) இருக்கும் நட்புகளுக்கு..

சென்ற பதிவில் எழுதியது மாதிரி இங்கே NFL சீசன் துவங்கியாச்சி. NFL என்றழைக்கப்படும் National Football League இங்கே அட்டகாசமாக கொண்டாடப்படும், அந்த கொண்டாட்டத்தில் அடியேனும் மகிழ்ந்து கொண்டு இருப்பதால் , நேரம் அதிலேயே செலவிடப்படும்.

எங்கேயும் எப்போதும் RAMS !

இந்த போட்டியில் மொத்தம் முப்பத்தி இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு நகரத்தின் பெயரோடு சேர்த்து தங்களின் அணியின் பெயரையும் வைத்து கொள்வார்கள்.

நான் வாழும் லாஸ் அஞ்செல்ஸ் நகரத்திற்கு இரண்டு அணிகள் உண்டு. சில வருடங்களுக்கு முன்பு வரை ஒரு அணி கூட இல்லாமல் இருந்தது வேறொரு கதை.

Los Angels RAMS

Los Angels CHARGERS.

இதில் எனக்கு பிடித்த அணி RAMS . ஆண்டவன் புண்ணியத்தில் இந்த வருடம் முதல் இரண்டு ஆட்டங்களும் மிக சிறப்பான முறையில் வெற்றியாக அமைந்தன.



Always ready with a RAMS Shirt

RAMS MASK 


அது சரி, 32 அணிகள் என்னைக்காவது ஒரு நாள் தானே ஆடுவாங்க.. அதுக்கு என்ன நீ ரொம்ப பிஸின்னு பில்ட் அப், இதெல்லாம் டூ மச் என்று சொல்வது கேட்கின்றது. அதுதான் FOOTBALL . கொஞ்சம் ஆசை பட்டு இறங்கிட்டோம்!!!, மவனே வைச்சி செஞ்சிடும். 

ஒவ்வொரு வாரமும் வியாழ கிழமை ஒரு ஆட்டம். பின்னர் ஞாயிறு பதிமூணு ஆட்டம், கடைசியா திங்கள் கிழமை ஒரு ஆட்டம்னு நடக்கும்.

இதுல இன்னொரு விஷயம். இங்கே இந்த ஆட்டத்தில் பெட்டிங் எக்கச்சக்கமா நடக்கும், லீகல் பெட்டிங் தான். அது மட்டும் இல்லாமல் பத்து பேர் சேர்ந்த ஒரு க்ரூப் ஆரம்பிச்சி அங்கே வேற பந்தயம் கட்டி ஆடுவாங்க.

எங்க ஆபிசில்  ஒரு போட்டி. வார வாரம் நடக்கும் போட்டிகளிலும் எந்த எந்த அணி வெற்றி பெறும்னு கணிக்கனும். அதுல வெற்றி பெறுவோருக்கு  வாரத்துக்கு நூறு டாலர். கடைசியா பிப்ரவரி மாதம் போட்டி முடியும் போது மொத்த சீசனை கணிச்சவங்களுக்கு லம்ப்பா ஒரு பரிசுத்தொகை.  இது ஆபிசில் அனனைவரையும் கவர்ந்தாலும், எனக்கு பிடிச்சது வேறொரு போட்டி.

25  டாலர்  கட்டி ஆடலாம். அடுத்த 17 வாரத்துக்கு ஒவ்வொரு வாரமும் ஒரு வெற்றி பெரும் அணியை தேர்வு செய்யணும். ஒரு முறை ஒரு அணியை தேர்வு செஞ்சிட்டா  அதுக்கு அடுத்து வர வாரங்களில் அந்த அணியை மறுபடியும் தேர்வு செய்ய முடியாது. 

போன வருஷம் வீட்டுல இருக்க அம்மணி கண்மணிகள்னு சேர்த்து ஆளுக்கு ரெண்டு டிக்கட் மொத்தம் இருநூறு டாலர் போட்டு வாங்கி வாரம் வாரம் ஒன்னு ஒண்ணா கோட்டை விட்டு பதிமூனாவது வாரம் கடைசி என்ட்ரியும் போக, பதினேழு வாரம் சரியா சொன்ன நபருக்கு 180 ,000  டாலர் பரிசு .

இந்த வருஷம் பரிசு தொகை 223 , 000 . எட்டு டிக்கட் வாங்கியாச்சு.,  இந்த வருஷம் மொத்தம் 9950 பேரு இதுல இருக்காங்க. இந்த 9950 டிக்கெட்டில் முதல் வாரமே கிட்டத்தட்ட நாலாயிரம் என்ட்ரி காலி (அடியேன் குடும்பத்து நான்கு  உட்பட) . என்னத்த பண்றது? டாப் டீம் மூணு INDIANA  COLTS, SAN FRANCISCO 49ERS, PHILADELPHIA EAGLES  இந்த மூணும் ஊத்திக்கிச்சி. 

முதல் வாரமே கிட்டத்தட்ட  பாதி பேரு போயாச்சே அடுத்த வாரம் என்னவாகுமோன்னு இருக்கையில் இரண்டாவது வாரம் மொத்தம் 200 பேரு கூட தோக்கல.  எல்லா டீமும் எதிர்பார்த்த படியே வெற்றி பெற்றாட்சி.

இரண்டு வாரம் தாக்கு பிடிச்சாச்சு. இன்னும் பதினைஞ்சே வாரம் தான். வாரம் வாரம் ஒரே அணிதான். 

பதிவர் வருண், இந்த பதிவை படிக்க நேர்ந்தால், இந்த வாரத்திற்கு நான் வெற்றி பெரும் என்று தேர்வு செய்த  அணிகள் 

SF 49ers  (VS NY Giants ) மற்றும் IND COLTS (VS NY JETS)! தேரும் தானே!!!? 

ராகுகாலம்,கேது, சனி, செவ்வாய், கணக்கு, ஊரு பேர் , எத்தனை எழுத்துன்னு ஜோசியம் பார்க்க தெரிஞ்சவங்க "ப்ரெசென்ட் சார்" ன்னு பின்னூட்டத்தில் சொல்லுங்க. மொத்த பரிசு 223,000$  அதுல உங்களுக்கு 10%.

ஓகே? 

டீல் ஆர் நோ டீல்?

GO RAMS!


15 கருத்துகள்:

  1. Well, you beat Cowboys in a close game. Eagles suck anyway.

    Why did you guys get rid of Todd Gurley? That is a big mistake! :)

    Let us see how you guys play against the Bills! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Todd Gurley...

      Grrr...
      I still cant get over it. We should have never traded him. He was my favorite RAMS too. You see the NO 30 Shirt that I am wearing, thats GURLEY's shirt. I was talking to a fellow RAMS the other day, and he feels Todd is not fully fit yet and might not complete the season.

      RAMS should run over BILLS. Aftgerall BILLS gave away 17 (to JEts) and 28 (to Dolphins) offense.Me think its going to be 33-14 in favor of RAMS.

      Will get back to you on Monday.

      PS: There are some mouth watering games this Week, man.
      CHIEFS - RAVENS
      &
      SEAHAWKS - COWBOYS

      Games are going to be awesome.

      GO RAMS!

      நீக்கு
    2. Well, can not under estimate Bills. Bills offense and depends teams little edged than Rams. Home field is advantage for Bills. Anyhow it's going to be good game. I'm eagerly waiting for Chiefs Vs Ravens. good weekend and enjoy the games :-)
      -Sasikumar

      நீக்கு
    3. Sasikumar,

      Dude.. You made my day. I love talking football and to have someone read my tamil bolg and comment about it is like " கரும்பு தின்ன கூலி " Lets keep talking for the season ( Hoping the season will go on).

      Bills are "iffy". The mere fact taht they gave 17 points to Darnald and Jets tells a lot about their defence and Goff would murder them (GO RAMS)

      We do have some great games this weekend. Have fun!

      நீக்கு
  2. My predictions for 3rd week games:
    1. Dolphins
    2. Steelers
    3. Eagles
    4. 49'ers
    5. Patriots
    6. Titans
    7. Washington football team
    8. Bills
    9. Bears
    10. chargers
    11. colts
    12. Sea-hawks (No body stops Russell Wilson)
    13. Buccaneers
    14. Cardinals
    15. Green Bay
    16. Ravens

    Lets see.

    Thanks,
    Sasikumar

    பதிலளிநீக்கு
  3. My predictions for 3rd week games:
    1. Dolphins (JAGS)
    2. Steelers
    3. Eagles
    4. 49'ers
    5. Patriots
    6. Titans (VIKINGS)
    7. Washington football team (BROWNS)
    8. Bills (RAMS)
    9. Bears
    10. chargers
    11. colts
    12. Sea-hawks (No body stops Russell Wilson, till he plays DOnald and RAMS)
    13. Buccaneers
    14. Cardinals
    15. Green Bay
    16. Ravens

    I agree except for those in brackets!

    Dude.. Are you serious? RAMS arent going to lose to Bills. No way!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Vikings QB Kirk Cousin is not on his level. He is struggling lot this season. Off course Titans QB and RB Henry will do some magic.

      Washington depends team stronger than Browns. New rookie QB playing much better than Alex Smith. remember, Game 1 Washington bounce back against Eagles.

      I personally like Russell Wilson rather than Sea-Hawks. he is capable to change games in 4th quarter.

      Thanks,
      Sasikumar

      நீக்கு
    2. Wow...

      Dolphins destroyed Jags, man. Thank God, I didnt put them on my Suicide Pool.

      நீக்கு
    3. Visu,
      I didn't expect Rams bounce back and score 32. So close and good game. Of course, Only Patriots can do from 3-28 to win the game. :-)
      I predictions was wrong with Washington team.
      Bears VS Falcons , Titans Vs Steelers was also so close games.
      Bengals and Eagles fighting to win the game in OT.

      Thanks,
      Sasikumar

      நீக்கு
    4. Sasi,

      We lost it in the first qtr. It was a great comeback (a lucky call, as well).
      I am so pissed off with Chargers for losing to Panthers. They destroyed my Survivor pool.
      So pissed off.

      And Cardinals losing to Lions?

      I cant say anyhtong more.

      Wait a minute. Cowboys are leading Hawks by one with three minutes to go.

      What a week.

      நீக்கு
  4. Sorry. In my previous message I mentioned Titan Vs Steelers.
    Titans Vs Vikings also good game.

    பதிலளிநீக்கு
  5. ***RAMS should run over BILLS. ***

    Unfortunately Rams could not finish well! :(

    It was a good game, though! But what matters is the final score! lol

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Varun,

      I knew you were coming! lol.

      It was a great game and yes, the final score matters!

      RAMS did play well, I would say! It was a memorable week with lotsa great games.

      Russell Wilson, hes pretty much playing chess with all the other QBs playing Checkers.

      Monday night game is going to be awesome.

      RAVENS - CHIEFS!!!!?

      It cant get better. Bring it on.

      On a side note..

      GO HEATS!

      Love Lakers, but cant stand LeBron!

      நீக்கு