வியாழன், 13 ஆகஸ்ட், 2020

தல தல தான்...

மார்ச் மாதம் துவக்கத்தில் எங்கள் கம்பெனியின் தலைமை அதிகாரி அனைவரையும் அழைத்து..

"எல்லாரும் அவங்க அவங்க கம்ப்யூட்டர்,பிரிண்டர், மேசை, சேர், லொட்டு, லொசுக்கு அம்புட்டையும் எடுத்துன்னு வூட்டுக்கு போங்க. நாங்க திரும்பவும் சொல்ற வரைக்கும் வூட்டுல இருந்து தான் வேலை செய்யணும்"ன்னு சொல்ல..

அலுவலகத்தில் உள்ள அம்மணிகள் சந்தோசமாகவும் ஆண்மகன்கள் சோகமாகவும் கிளம்பினோம்.

அன்றில் இருந்து இன்று வரை நிலைமை மாறவில்லை.

அடியேனுக்கு பரவாயில்லை. ராசாதிக்கள் இருவரும் 18+ . வீட்டில் தனியாக இருக்கலாம். சிறுபிள்ளைகள் இருக்கும் இல்லத்தோருக்கு  இந்த ஏற்பாடு மிகவும் பிடித்து இருந்தது. பள்ளி மற்றும்  டே கேர் இரண்டும் தற்காலிகமாக மூட பட்டுள்ளதால், இந்த பெற்றோர்களுக்கு வீட்டிலே பிள்ளைகளையும் பார்த்து கொண்டு வேலையும் செய்து கொண்டு இருப்பது மிகவும் பழகிவிட்டது மட்டும் அல்லாமல் பிடித்து விட்டது என்று தான் சொல்லவேண்டும்.

ஆறு மாதமாக அனைவரும் இல்லத்திலேயே வேலை செய்து கொண்டு வேலையும் சீராக போய் கொண்டு இருப்பதால் கொரோனா காலம்  முடிந்தபின் கூட முன்புபோல் அனைவரும் மீண்டும் அலுவலகம் வந்து வேலை செய்வோமா என்பது சந்தேகமே.

சென்ற வாரம், எங்கள் தலைமை 

"யாருக்காவது அலுவலகம் திரும்ப வேண்டுமென்றால் திரும்பலாம். ஆனாலும் இது வாலண்டரி தான். உங்களுக்கு விருப்பம் என்றால் மட்டுமே.  என்று சொல்ல"

அடுத்த நாளே.. நான் கம்பெனிக்கு சொந்தமான ஒரு பெரிய பிக் அப் ட்ராக்கை ஓட்ட முயற்சிக்க.. தலைமை.

"ட்ரக் எடுத்துன்னு எங்க போற?"

"வீட்டுக்கு தான்"

"ஏன், ட்ரக்"

"என் ஆபிஸ் கம்ப்யூட்டர், டேபிள், சேர் எல்லாத்தையும் எடுத்துனு வரேன். நாளையில் இருந்து ஆபிசில் இருந்து தான் வேலை.."

"நான் தான் வாலண்டரின்னு சொன்னேனே.."

மனதில்...

நீங்க வாலாண்டரின்னு சொன்னது எனக்கு வாழ்ந்துக்கோன்னு கேட்டிச்சே ..

"பாஸ்... ஐ வாண்ட் டு பி பேக் இன் ஆபிஸ்."

"சரி, ஒரு வேலை பண்ணுவீட்டுல இருக்குற அம்புட்டும் வீட்டுலே இருக்கட்டும், ஆபிசுக்கு வேணுங்குறத புதுசா ஆர்டர் பண்ணிடு.."

"வாட்!!!?"

"உனக்கு மட்டும் இல்ல.. யார் யாருக்கு திரும்பவும் ஆபிஸ் வரேனுமோ, எல்லார்ட்டையும் வீட்டுல இருக்குறத வீட்டுலே வைச்சிட்டு ஆபிசுக்கு புதுசா ஆர்டர் பண்ணிடு"

"ஏன்..?"

"இப்ப எல்லாரும் வீட்டில் இருந்து பழகியாச்சு.. இனிமேல் மீண்டும் ஆபிஸ்  வந்தாலும், அடிக்கடி வீட்டுல இருந்து வேலை செய்யுற நிலைமை வரும், திரும்பவும் திரும்பவும் எடுத்துக்குனு இங்கே அங்கேன்னு அலையாம. இங்கே ஒன்னு அங்கே ஒன்னு இருந்தா ஈஸி தான்"

மனதில்.. வெள்ளை வெள்ளை தான்.. என்னமா யோசிக்கிறாய்ங்க !

'சரி, நீ ஏன் அடிச்சி பிடிச்சி ஆபிசுக்கு வர துடிக்கிற.. "

"சும்மா தான்.. "

வழிந்தேன்.. 

காலையில் எழுந்தவுடன் அம்மணியும்  இளையவளும், நீ வூட்டுல  தான சும்மா இருக்கேன்னு ...

துடப்பம், முறம் , துணி, லாண்டரி, சமையல்ன்னு அம்புட்டுக்கும் ஏதாவது சொல்லிட்டு போய்ட்டுறாங்க. சாயங்காலம் வந்தவுடன்.. 

"காலையில் இருந்து சும்மா தானே கம்ப்யூட்டர் எதிரில் இருக்கீங்க.. ஏன் வீட்டுவேலை எல்லாம் முடிக்கலன்னு! "

சத்தம் போடுறாங்கனு அவர்ட்ட  எப்படி சொல்ல முடியும்?

அவரிடம் இருந்து விடை பெருமுன்  ஒரு கேள்வி கேட்டேன்..

"பாஸ்.. இந்த கொரோனா பிரச்சனை எப்ப முடியும்.  நம்ம வாழ்க்கை எப்ப நார்மல் நிலைமைக்கு திரும்பும்?"

"நவம்பர் 4 ம் தேதி, ராத்திரி 11 மணிக்கு "

அட பாவத்த.. என்ன இப்படி குறி வச்சி அடிக்கிறார் என்று நினைக்கையில்.. நவம்பர் 4 ம் தேதி தான் இங்கே பொது தேர்தல் என்ற நினைவு வந்தது.

" ஏன். தேர்தலுக்கும் கொரோனாவுக்கும் என்ன சம்பந்தம்?"

"நவம்பர்  4 ட்ரம்ப் வெற்றி பெற்றால்.. அம்புட்டு பேரும் அடுத்த நாலு வருசத்துக்கு வாயை மூடின்னு இருப்பாங்க"

"தோத்தா!!?"

"நாடே தப்பிச்சிச்சி, கொரோனாவெல்லாம் சும்மா பேச்சுக்கு தான். அமெரிக்காவில் எந்த பிரச்னையும் இல்ல.. அம்புட்டும் இன்னைக்கு இருந்து நல்லாயிடிச்சின்னு கொரோனா கதையை ஊத்தி மூடிடுவாங்க..."

"புரியல"

அரசியலில் இதே எல்லாம் சகஜம் என்பதை..

"All is fair in Politics " 

என்று ஆங்கிலத்தில் கூறி விடை பெற்றார்.

தல தல தான்!


9 கருத்துகள்:

  1. வெள்ளை வெள்ளையான யோசனை, தீநுண்மி அழிந்தாலும் செயல் படுத்துவார்கள் போல... சில வகையில் லாபம்...

    பல வகையில் மனிதத்தன்மை இயந்திரம் கூடும்...
    மனிதம் மேலும் கெடும்...

    பதிலளிநீக்கு
  2. ஆறு மாதமாக அனைவரும் இல்லத்திலேயே வேலை செய்து கொண்டு வேலையும் சீராக போய் கொண்டு இருப்பதால் கொரோனா காலம் முடிந்தபின் கூட முன்புபோல் அனைவரும் மீண்டும் அலுவலகம் வந்து வேலை செய்வோமா என்பது சந்தேகமே.//

    நிக்சயமாக இது பழகிவிடும் விசு. பலரும் இதை விரும்புகிறார்கள். அட்லீஸ்ட் தெருக்களில் ட்ராஃபிக் இல்லாமல் இருக்கும். எழுத்தாளர் சுஜாதா இப்படி எதிர்காலத்தில் ஆகலாம் என்று சொல்லியிருந்தது சமீபத்தில் பேசப்பட்டது.

    நீங்க ஏன் ஆஃபீஸ் போனீங்கன்னு தெரியாதா!! ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  3. கொரோனாவெல்லாம் சும்மா பேச்சுக்கு தான். அமெரிக்காவில் எந்த பிரச்னையும் இல்ல.. //

    இப்படி ட்ரம்ப் சொல்வதாகத்தானே அறிந்த நினைவு.

    ஆனால் இத்தொற்று நிறைய அனுபவங்களைக் கற்றுத் தருகிறது

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  4. இங்கே அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை தற்போது. ஆபீஸ் பக்கமே தலை வைத்துகூட படுக்கக்கூடாது இன்னும் சில காலத்திற்கு.

    பதிலளிநீக்கு
  5. ஆம்.  இப்படியே பாழாகி விடும் என்றுதான் தோன்றுகிறது.  அவர்களுக்கும் நிறைய செலவு மிச்சம்.

    பதிலளிநீக்கு