புதன், 8 ஜூலை, 2020

ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாற்றாதே ஏமாறாதே..

எனக்கு  ஆங்கிலத்தில் மிகவும் பிடித்த பழமொழிகளில்  "Cheat me once shame on you, Cheat me twice shame on me"  இதுவும் ஒன்று. 

என்னை நீ ஒரு முறை ஏமாற்றினால் உனக்கு வெட்கக்கேடு.
அதே நீ என்னை மீண்டும் ஏமாற்றினால் எனக்கு தான் வெட்கக்கேடு.
 இந்த பழமொழி தான் எவ்வளவு உண்மை. இந்த பழமொழியில் அமைந்துள்ள தத்துவத்தை பின்பற்றியதால் நான் கண்ட பலன்கள் மிக அதிகம்.

நேற்று வலைத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருக்கையில்..

"மீண்டும் கிரிக்கட்! இங்கிலாந்து மேற்கிந்திய தீவுகள் நேரடி மோதல்"

என்று காண நேரிட்டது.

அட பாவத்தை.. கொரோனா சனியன் நம்மை விட்டு ஒழிந்தாலும் இந்த கிரிக்கெட் சனியன் ஒழியாது போல இருக்கேன்னு சொல்லிட்டு மனதை பிளாஷ் பேக்கிற்கு அனுப்பினேன்.

இந்தியா பாகிஸ்தான் ஆட்டம். ஷார்ஜாவில்! நம்ம நாட்டு மானம் மரியாதை எல்லாம் இதுல தான் இருக்குன்னு இவனுங்க கொடுத்த பில்ட் அப்பில் மயங்கி .

படிப்பு புலப்பு எல்லாத்தையும் தள்ளி வச்சிட்டு, மணி நேர கணக்கில் தொலை  
 காட்சிக்கு முன்னால உக்காந்து, எத்தனை மணி நேரம்?.

என்னமோ இந்த கிரிக்கெட்டில் தான் இந்தியாவே உலகத்தையே ஆள போதுன்னு ஒரு நினைப்பு.

அப்படி பல நாட்களை - வருடங்களை கழித்துகொண்டு இருக்கும் போது ஒரு நாள் தான் சொன்னாங்க.. 

"விசு, அது அம்புட்டுமே மேட்ச் பிக்ஸ் பண்ணதாம்"!

"வேதம் புதிது" வந்த நேரம் என்று  நினைக்கின்றேன். அதே வேகத்தில் எவனுமே அறையாம பளார்ன்னு ஒரு சத்தம் கேக்க ரெண்டு கண்ணும் 90 டிகிரி திரும்பி முதுகை பாத்துட்டு வந்தது.

97 - 98 போலன்னு நினைக்குறேன். அன்னைக்கு தலையை சுத்தி போட்டேன். அதுல இருந்த அந்த பக்கமே வேணும்ன்னு. 

கொஞ்சம் நாள் கழிச்சி.. தீவிர கிரிக்கட் "பக்தா" ஒருத்தர்.. 

"விசு, இந்த பிக்சிங் பண்ணது மொத்தமே முஸ்லீம்ங்க, அசார், வாசிம், சலீம் மாலிக்..தான் முக்கியம், அவங்க எல்லாரையும் பேன் பண்ணியாச்சு, இப்ப சுத்தமாயிடிச்சி"

"அட பாவி.. அம்புட்டு பெரும் முஸ்லீம்ங்க..!!!? "

"ஆமா!"

"முட்டாள்.. !! அஜய்  ஜடேஜா, ஹன்சி க்ரோனி , ஹெர்ஷல் கிப்ஸ் எல்லாரும் எப்ப முஸ்லீம் ஆனாங்க...?

"அது .. அது..."

"மூடினு போ... இங்கேயும் வந்து மதத்தை ஏத்தாத.. ஏற்கனவே வெந்த புண்ணொடு இருக்கேன்.."

சில மாதங்கள் கழித்து..

இன்னொரு "பக்தா" வந்து...

"கங்குலி.. டெண்டுல்கர், டிராவிட் ...இவங்க எல்லாம் சுத்தமான பிளேயர்.. இப்ப கேம் சுத்தமாயிடிச்சி.." 

"நீ சொன்ன இந்த மூணு பேர் டீமில் இருக்கும் போது தான் நிறைய கேம் பிக்ஸ் ஆகி இருக்கு"

" இவங்களும் இன்வால்வ்ன்னு சொல்ல வரியா?"

"நோ!!!"

"பின்ன, என்ன சொல்ல வர?"

"பிக்ஸ் பண்ணி மாட்டுனாங்களே.. அவங்கள கூட சனியன் ஒழியட்டும்னு விட்டுடலாம், ஆனா இவங்கள மாதிரி ஆளுங்கள?"

"இவங்க என்ன தப்பு பண்ணாங்க? "

"உனக்கு மார்ட்டின் லூதர் கிங் என்ற அமெரிக்க மகானை பத்தி தெரியுமா?"

"தெரியாது, சொல்லு!!"

"இந்த மூணு பேரை மட்டும் இல்ல.. இந்த ஒட்டு மொத்த கிரிக்கெட் அணிய பார்த்தாலே அவரு சொன்னது தான் நினைவுக்கு வருது"

"அப்படி என்ன சொன்னார்?"

"He who passively accepts evil is as much involved in it as he who helps to perpetrate it. He who accepts evil without protesting against it is really cooperating with it."

"தீமை நடக்கும் போது அதை அறிந்தும்  அமைதியாக இருப்பவனும் அந்த தீமையை செய்தவனாகிறான்.தீமையை  எதிர்த்து போராடாமல் அமைதியாக இருப்பவனும் அந்த தீங்குக்கு துணை போகிறான்"

"ஓ!!"

"இவ்வளவு வருடமா நடந்து வந்த இந்த சூதாட்டம் இவங்க யாருக்கும் தெரியாம நடந்து இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தும் அடுத்த செஞ்சரி, விளம்பரம் , கோடி கணக்கில் பணம்ன்னு அமைதியா இருந்தாங்க பாரு, இவங்களுக்கும் அவங்களுக்கும் ஆறு வித்யாசம் கூட இல்லை."

பல வருடங்கள் கழித்து, இன்னொரு "பக்தா"...

"என்ன விசு.. அமெரிக்கா வந்தவுடன்.. என்னமோ இங்கேயே பிறந்து வளர்ந்த மாதிரி அமெரிக்கன் புட்பால் மட்டும் தான் பாக்குறியாமே. கிரிக்கெட்டை  மறந்துட்டியா?"

" Cheat me once shame on you,  Cheat me twice shame on me"

"கிரிக்கெட்டில் சூத்தாட்டம் எல்லாம் அந்த காலம் விசு.. இப்ப IPL ன்னு ஒரு லீக். ஒவ்வொரு சிட்டிக்கு ஒரு டீம். அமெரிக்கன் லீக் போலவே, சென்னை சூப்பர் கிங்ஸ் தான் டாப்"

"ஓ கேள்வி பட்டேன். ரெண்டு வருசத்துக்கு முன்னால கூட, டீம்மோட  முதலாளியோட மருமகன் மேட்ச் பிக்சிங்கில் மாட்டி.. அப்புறம் டீமை  தள்ளி வைச்சிட்டாங்கன்னு படிச்சேன்?"

"அது என்னவோ உண்மை தான். அவரையும் தான் தண்டிச்சி  தமிழக கிரிக்கெட் ஆபிஸ் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு கூட வரக்கூடாதுன்னு  அறிக்கை விட்டார்களே."

"அறிக்கை ..யார் விட்டது?"

"இந்திய மற்றும் தமிழக கிரிக்கெட் வாரியம்"

"இந்திய வாரியத்தை விடு.. அது இப்ப அமித் ஷா மகனுக்கு குத்தகை போட்டு கொடுத்துட்டாங்க.. தமிழக வாரியத்துக்கு வா"

"அங்கே என்ன விஷேஷம்?"

"தமிழக வாரிய தலைவர் யாரு தெரியுமா?"

"சொல்லு"

" யாரை நீ மேட்ச் பிக்ஸ் பண்ணேன்னு சொல்லி மைதானம் பக்கமே வரக்கூடாதுன்னு சொன்னார்களோ.."

"...!!!?"

"அவரோட சம்சாரம்"

"ரியலி!!!"

"சீக்கிரம் போ, டாஸ் மிஸ் பண்ணிடாத.."

என்று சொல்லிவிட்டு..

"ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாற்றாதே ஏமாறாதே" 

என்று பாடி கொண்டே  நடையை கட்டினேன். 




4 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. என்னதான் சொல்வேன் தனபாலன். என்னத்த சொல்லுவேன். நம்ம தொழில் அப்படி!

      நீக்கு
  2. சமீபத்தில் இந்தியா உலகக்கோப்பை ஜெயித்ததில் கூட பிக்சிங் இருப்பதாக தற்போதைய செய்தி.  

    பதிலளிநீக்கு