வியாழன், 16 ஜூலை, 2020

இந்த கூத்தாடிய என்ன பண்றது?

காதலியை அடிச்சி துன்புறுத்துவது. சட்டத்துக்கு புறம்பா காட்டுக்குள் போய்  வேட்டை ஆடுவது, தொண்டை வரை குடிச்சிப்புட்டு காரை ஓட்டினு ரோட்டுல படுத்துன்னு இருந்த அன்றாண்டகாய்ச்சிகளை வண்டி ஏத்தி சாவடிகிறது ...
உள்ளங்கை சேற்றில் படாத விவசாயி!

இப்ப சமீபத்தில்," வாரிசு - குடும்பம்" பின்பலம் இல்லாமல் முன்னேறும் நடிகர்களை வளர விடாமல் தடுப்பது..

என்று பல உன்னதமான செயல்களுக்கு சொந்தகார்தான், " சல்மான் கான்"

என்னமோ சினிமாவில் ஒரு நடிகராகி பிரபலம் ஆகிவிட்டால் உலகமே தன் காலில், தனக்கு எல்லாருமே அடிமை .. நான் .. நான்.. நான்..

என்ற ஒரு போக்கு.

குடித்து விட்டு ஆட்களை கார் ஏற்றி கொன்ற வழக்கில் இவருக்கு ஆதரவாக வந்த தீர்ப்பை படித்தால்...

"அட பாவத்த. அந்த காருக்கு என்ன திமிர் இருந்தா தானா ஓடி போய் ரோட்டு ஓரம் இருந்த ஆட்களை ஏத்தி கொன்னு இருக்கும்?"

என்று நம் அனைவரையும் வியப்பிக்கும் வண்ணம் இருந்தது அந்த தீர்ப்பு.

பணத்தின் மூலம் எதையும் வாங்கலாம் என்று உலகிற்கு உணர்த்திய உத்தமன் இவர்.

சரி சிலருக்கு செயல் தான் தவறும், வாயின் வார்த்தைகள் நல்லா இருக்கும்ன்னு, அந்த ஆட்களில் இவரை சேர்க்க கூடாது. 

வாயும் வார்த்தையிலும் கூட அதே சனி தான்.

சில வருடங்களுக்கு முன்பு, ஷூட்டிங்கில் ரொம்ப பிஸியாமே என்று கேட்ட கேள்விக்கு..

"ஐயோ...! ரொம்ப பிசிங்க! ரொம்ப கஷ்டம் ! மணி கணக்கில் தொடர்ந்து ஷூட்டிங். இது முடியும் போது என்னமோ என்னை யாரோ கற்பழிச்ச மாதிரி பீல் பண்றேன்"

"கற்பழிப்பு" என்பது இவருக்கு கஷ்டமான ஷூட்டிங் போல.. 

சரி, இந்த கூத்தாடியை பத்தி இப்ப ஏன் எழுதிறேனா? அம்புட்டும் நம்ம சாபக்கேடு தான். இந்த ஆளை பத்தி எல்லாம் படிக்கணும்னு. 
 
இந்த வாரம் ஒரு செய்தி. 

இந்த கூத்தாடி ட்விட்டரில் ஒரு போட்டோ போட்டு "Respect to all farmers" ன்னு எழுதி வைச்சி இருக்கு.

அந்த போட்டோவில் இவர் உடம்பு முழுக்க சேற்றை ஆளுங்க வைச்சி பூசி இருக்காங்க. (கொஞ்சம் விசாரிச்சு பாத்தா சேற்றுக்கு பதிலா சாக்கலேட் கூட போடு இருப்பாங்க போல இருக்கு). கையுறை போட்டு சேற்றை உடம்பு முழுக்க தடவி இருப்பாரு போல இருக்கு. உள்ளங்கையிலும் விரல்களிலும் மட்டும் சேறு மிஸ்ஸிங்! 

இவரு விவசாயம் பண்ணி பண்ணி அலுத்து போய் உடம்பு முழுக்க சேறாகி நெற்றி வேர்வை நிலத்தில் விழும்படி விவசாயம் பண்ண மாதிரி ஒரு பில்ட் அப்.

என் அருமை கூத்தாடிகளே...

உங்களின் மார்க்கெட் ரேட்டைஉயர்த்த விவசாயிகளை அவமானப்படுத்தாதீர்கள்.

நெஞ்சு பொறுக்குதில்லையே!  

2 கருத்துகள்:

  1. ஒருசில நடிகர்கள் தவிர மத்த எல்லாரும் விளம்பர பிரியர்களே!
    தமிழில் ஆடுகளம் கிஷோர், பிரகாஷ் ராஜ், மாதவன்லாம் நிஜமாவே சத்தமில்லாம விவசாயம் செய்றாங்க.

    பதிலளிநீக்கு
  2. தண்டனை வழங்காதவர்கள் தான் முதல் குற்றவாளிகள் - அரசாங்கமும்...

    பதிலளிநீக்கு