புதன், 20 மே, 2020

நான் ரொம்ப நல்லவன், அவன்தான் பிச்சைக்காரன்!

இன்று காலை சுப்பையா வீரப்பன் என்ற பதிவரின் " அன்றாட காய்ச்சிக்கூட்டம்  யார் தெரியுமா" என்ற ஒரு பதிவை படிக்க நேர்ந்தது. பதிவின் முடிவில் "பகிர்வு"என்று எழுதி இருந்தார்.  அந்த பதிவில் இப்படி ஒரு கருத்து.

//இங்கேயாவது (இந்தியாவில்?) மனிதாபிமானம் இருக்கு, தேடி கொண்டு போய் சாப்பாடு கொடுக்குறாங்க. அங்க (அமெரிக்காவில்) அவனவன் பொழப்பே நாறிட்டு கிடக்கு. பீரோ நிறைய சரக்கு பாட்டில் தான் அடுக்கி வைச்சி இருப்பான். பெரும்பாலும் ரெடிமேட் புட் தான்சுட்டு போட்டாலும் சமைக்க வராது. அங்க எவனும் அன்னதானம் பண்ணமாட்டான்..
இன்னைக்கு உலகத்திலே காஸ்டிலியான பிச்சைக்காரன் அமெரிக்காக்காரன் தான்.//

மேலே உள்ள வார்த்தைகளில் தான் என்ன ஒரு காழ்ப்புணர்ச்சி. வாழ்வின் முதல் பாதியை இந்தியாவிலும் இரண்டாவது பாதியை அமெரிக்காவிலும் கழித்ததால் இவ்விரு நாட்டின் நன்மை தீமைகளையும் மக்களின் குணத்தையும் அறிந்தவன் நான்.

//இங்கே நிறைய பேர் தேடி போய் சாப்பாடு கொடுப்பாங்க அங்கே அவனவன் புழப்பே நாறிட்டு இருக்கு//



சந்தோசம்.. இந்தியாவில் தேடி போய் சாப்பாடு கொடுப்பான் என்று கேள்வி படும் போது மனதில் ஒரு நிம்மதி. ஒரு நாட்டின் மக்கள் இப்படி தான் இருக்கவேண்டும் என்ற எண்ணமும் வருகின்றது,  ஆனால், ஒரு படி மேல் போய் .. அங்கே அவனவன் நாறிட்டு இருக்கான் என்று சொல்கையில் தான்   இவர்களுக்கு என்ன ஒரு காழ்ப்புணர்ச்சி ஏன் இன்னொரு நாட்டின் மக்களின் அவதியில் அப்படி ஒரு இன்பம் என நினைக்க வைக்கின்றது.

பல வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் குடியேறிய போது  எனக்கு  முதல் வேலை ஒரு Non Profit நிறுவனத்தில் "Director of Finance". அந்த நிறுவனம் "Homeless " மற்றும் வன்முறையால் வீட்டை விட்டு வெளியேறிய  பெண்கள் போன்றவர்களுக்கு தற்காலிக இல்லம் அமைத்து தரும் நிறுவனம்.  அந்த நிறுவனத்தின் நிதி மொத்தமாகவே மற்றவர்களின் நன்கொடையை நம்பி தான் இருக்கும்.  பல மில்லியன் டாலர் பட்ஜெட் கொண்ட நிறுவனம். அங்கே நிதி துறையில் இருந்ததால் யார் யார் எவ்வளவு தருகின்றார்கள் என்று பார்த்து அலறியே விட்டேன். பாமர மக்களில் இருந்து கோட்டீஸ்வரர்கள் வரை அள்ளி அள்ளி தருவார்கள்.

உலகின் பெரிய பணக்கார்களை எடுத்து கொள்ளுங்கள். பில் கேட்ஸ், வாரன் பப்பெட், முகநூலின் மார்க் . இவர்கள் தான் அளிக்கும் நன்கொடைக்கு எவ்வளவு என்று அனைவரும் அறிவோம். ஒட்டு மொத்த அமெரிக்கர்களும் இவ்வாறான நல்லெண்ணம் கொண்டோர் என்று சொல்லவில்லை.

இவர்களின் நன்கொடை உள்ளம் என்னடா உயர்ந்த மக்கள் இவர்கள் என்று என்னை வியக்க வைத்தது.

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், எச்சை கையில் காக்கை விரட்டமாட்டான் என்றும் கேள்வி பட்டுளேன்.

அங்கே பணி புரியும் நேரத்தில் யாரவது தெருவில் உதவி கேட்டு நின்றால், உடனே வண்டியை  ஒதுக்கி விட்டு அந்த அதிகாரிகளுக்கு போன் போடுவேன். சில மணி நேரங்களில் அங்கே அதிகாரிகள் இருப்பார்கள்.  அவர்களை எங்கள் நிறுவனம் நடத்தும் இல்லத்திற்கு அழைத்து செல்வார்கள்.

இங்கே ஒரு பிரச்சனை. ஒருவர் தானாகவே முன்வந்தால் தான் இவ்வாறான இடத்திற்கு அழைத்து செல்ல படுவார்கள்.  இங்கே தெருவில் உள்ள சிலர் இம்மாதிரியான இல்லத்தில் உள்ள விதிகளை பிடிக்காமல் தெருவில்லேயே வாழ விருப்பம் தெரிவிப்பார்கள். அவர்களுக்காக நாம் பிரார்த்திக்க தான் முடியும்.

மனிதாபிமானம்.

மனிதாபிமானம் என்பது எங்கேயும் உண்டு. அது ஒரு குணம் நம்மில் பலருக்கு இருக்கும் சிலருக்கு இருக்காது. அதற்காக இங்கேயாவது மனிதாபம் உண்டு அங்கே என்று ஆர்பரித்தால், அங்கேயே ஒருவரின் மனிதாபம் மறைந்து விட்டது.

நேற்று நடந்த சில  நிகழ்ச்சிகள்..

17  வயதான இளையவள்...

'நான் பக்கத்துல "ஸ்டார் பக்ஸ் " காபி வாங்க போறேன், உங்களுக்கு ஏதாவது வேணுமா? "

"அதெல்லாம் தான் பூட்டி இருக்கே.. "

"ஓ நோ.. உள்ள தான் போய் உக்கார முடியாது, காரிலேயே போய் வாங்கின்னு வரலாம்"

"சரி ஒரு ஸ்மால் காப்பி "

சில நிமிடங்களில் சிரித்துகொண்டே வந்தாள்..

"என்ன மக.. சிரிப்பு?"

"நீங்க லார்ஜ் காப்பி  கேட்டு இருக்கலாம்"

"ஏன்"

"எனக்கு காப்பி , பிரேக் பாஸ்ட் உங்களுக்கு காபி வாங்கிட்டு காசு கொடுக்க போனா.. அங்கே இருந்த கேஷியர் , வேணாம், உங்களுக்கு முன்னால காரில்  இருந்தவர் உங்களுக்கும் சேர்த்து கொடுத்துட்டு போய்ட்டார்"

"ஓ நைஸ்.. தெரிஞ்சவங்களா? "

"முன்னே பின்ன பார்த்ததே இல்லை!!!"

"நைஸ் பீப்பிள், உனக்கு தான் இருவது டாலர் மிச்சம்"

"டோன்ட் பி சீப் டாடி. "

"என்ன சொல்ற!!!?"

"அவங்க கொடுத்ததையெல்லாம், வாங்கிட்டு.. என் கார்டை கொடுத்து எனக்கு பின்னால வரவங்களுக்கு இதுல சார்ஜ்  பண்ணுங்கன்னு சொல்லிட்டு வந்துட்டேன்'

சின்ன விஷயம் தான், இருந்தாலும் மனிதாபம்.

நேற்று எங்கள் ஏப்ரல் மாதத்தின் Finance meeting. நான் தான் ப்ரெசென்ட் பண்ணவேண்டும். எங்கள் நிறுவனத்தில் ப்ரெசிடெண்ட் கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா?

"போன மாசம் எவ்வளவு நன்கொடை கொடுத்தோம்!!?"

மேலும்.. அவர் சொன்ன சில வார்த்தைகள்..

இந்த கொரோனாவுக்காக அரசாங்கம் கொடுத்த  "ஸ்டிமுலஸ்"  பணத்தை தொடாதே.. அது நமக்கு தேவையே  படாதுன்னு நினைக்கின்றேன். அந்த பணத்தை நாம எடுக்குறது நம்ம பேரன் பேத்திகளிடம் நாமே திருடுவதற்கு சமம்.

இதுவும் மனிதாபிமானம்.

இல்லத்தில் இருந்தே வேலை செய்கிறோம். மத்திய உணவு நேரத்தில் காலிங் பெல் அடிக்க கதவை திறந்தால் எதிரில் ஒருவர் சாப்பாடு பையோடு..  Door  Dash  டெலிவரி.

"தப்பான வீடு , நான் ஆர்டர் பண்ணல.. "

"சரியான வீடு தான், அந்த மூணாவது வீட்டில் இருந்து உங்களுக்கு ஆர்டர் பண்ணாங்க..."

"மனிதாபம்"

Little moments like these are what make life worth it!

//சரக்கு பாட்டில் அடுக்கி வைச்சி இருப்பான்//

சரியா சொன்னீர்கள். சரக்கு பாட்டில் வீட்டில் அடிக்கி வைச்சி இருப்பான் என்று சொல்லும் போதே அவன் பாட்டில் முடியிற வரைக்கும் குடிக்க மாட்டான் என்று சொல்லிவிட்டீர்கள். குடி என்பது ஒவ்வொரு தனி மனிதனை பொறுத்து இருக்கின்றது. அதற்காக ஒரு நாட்டையே கேவலமாக பேசுவது ,காழ்ப்புணர்ச்சி மட்டுமே.

//சமைக்கவே மாட்டான்//

அருமை! இந்நாட்டில் வந்த புதிதில் எனக்கும் இந்த சந்தேகம் வந்தது. என்னடா இது? எங்கே பார்த்தாலும் உணவகம், எவனும் வீட்டில் சமைக்க மாட்டான் போல இருக்கே.. என்று.

அதற்கு நான் கண்ட பதில். இங்கே 90% மக்களுக்கு அவர்களின் சம்பளம்  ஒரு  மணிநேரத்திற்கு என்று வழங்கப்படுகின்றது. இங்கே எப்போதும் வெளியே  சாப்பிடுவார்கள் சிலரை விசாரிக்கையில்,

சமைக்கணும்னா கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாகுது. அதுக்கு பதிலா ஒரு மணி நேரம் வேலைக்கு போகலாம் என்று பதில் தான்.

//அன்னதானம்//

அட பாவத்த. இது அறியாமை மட்டுமே. இங்கே அன்னதானத்திற்கான நிறைய இடங்கள் உள்ளன.  மக்களின் அன்னதானத்தை விடுங்கள். அரசாங்கம்  வறுமையில் வாழ்வோர்க்கு " Food Stamps"  மாதாமாதம் வழங்கிவிடும்.

அன்னதானம் பண்ண மாட்டான் என்பது முற்றிலும் தவறு.

முடிவாக, இங்கே என்று தம்பட்டம் அடியுங்கள். நாங்கள் தான் தேடி தேடி தானம் செய்வோம் என்று சொல்லுங்கள். எங்களுக்கு குடிபழக்கம் இல்லை என்று பெருமை கொள்ளுங்கள். அன்னதானத்தில் எங்களுக்கு நிகர் யார் என்று மார் தட்டி கொள்ளுங்கள். 

ஆனால், அடுத்தவனுக்கு இந்த குணம் இல்லை. அவன் பிச்சைக்காரன் என்று ஆர்ப்பரித்து கொண்டாடும் மனம் நமக்கு எதற்கு? தேவை இல்லையே!

11 கருத்துகள்:

  1. இந்த மனநிலை உள்ளவன் தவறுக்கு மேல் தவறு செய்பவன்...

    பதிலளிநீக்கு
  2. அவருக்கு தெரிஞ்சதை அவர் சொல்லிவிட்டார். காரணம் கிணத்து தவளையாக இருக்கிறார்.... இப்படித்தான் பலர் இருக்கிறார்கள். என்னத சொல்ல அமெரிக்கர்கள் செல்பிஷ்தான் ஆனால் எல்லா நேரங்களிலும் அல்ல

    பதிலளிநீக்கு
  3. //மனிதாபிமானம் என்பது எங்கேயும் உண்டு//

    ஆமாம் அண்ணே .சரியா சொன்னிங்க .மகள் செய்தது அருமையான செயல்  .ஒரு செயின் ரியாக்ஸன் மாதிரி அது அழகா தொடரும் .நிறைய பேர் வெளிநாட்டினர் பற்றியும் வெளிநாட்டு வாழ் நம் மக்கள் பற்றியும் தவறான அபிப்ராயம் வச்சிருக்காங்க ..போன வாரம் இந்த லாஃடவுன் நேரத்திலும் பார்த்தது செய்ன்ஸ்பரி சூப்பர்மார்கெட்டில் ஒரு பெரிய கார்ட்போட் பாக்ஸ் இருக்கும் food bank என்று வச்சிருப்பாங்க நாம் விரும்பிய பொருளை அதில் நிரப்பலாம் ..இந்த சூழலிலும் தனக்கு மட்டும் வங்கிக்காம அதையும் முழுசா நிரப்பி இருக்காங்க மக்கள் .வெளிநாட்டுக்காரன் குடிப்பார்கள்தான் ஆனா அவங்க குடிச்சிட்டு ரோட்டில் உருள்வதுமில்லை குடும்பத்தை வதைப்பதுமில்லை அவர்களுக்கு லிமிட்ஸ் தெரியும் .எவ்வளவோ சொல்லலாம் சொல்லிட்டே போலாம் நல்ல விஷயங்களை .

    பதிலளிநீக்கு
  4. //You dont have to defend or justify here. You can only say, Indians are doing everything America does today//

    Cant disagree on that. Period!

    BTW, whats your take on NFL. I got some tickets for RAMS games, hoping that the games would be played.

    பதிலளிநீக்கு
  5. விசு மிக மிக முக்கியமான ஒன்றை சொல்லாமல் விட்டு விட்டீர்கள்.ஒரு றுபா அரிசிய கொடுத்துட்டு ஒரு மணி நேரம் போட்டோவுக்கு போஸ் கொடுக்க மாட்டாங்க

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. வணக்கம். நலம் தானே வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!

      நீக்கு
  7. விசு, பொதுவாகவே மனிதர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். அதாவது criticising the unknown at the first instance. அமெரிக்கா என்றில்லை, தமிழ்நாட்டில் இருந்து வட இந்தியாவில் சென்று பணிபுரியும்போது தமிழர்களை உயர்வாகவும் வடவர்களைத் தாழ்வாகவும் பேசுவார்கள். ஆனால் சில ஆண்டுகள் அங்கேயே தங்கிவிட்டால் வட இந்தியாவே சொர்க்கம் என்பார்கள். இந்தக் கருத்துக்கெல்லாம் நாம் அதிக மதிப்பளிக்கவேண்டாம். அதே சமயம் அமெரிக்கர்கள் எல்லாருமே கலப்படமற்ற நல்லவர்கள் என்பதும் சரியில்லைதான் என்பதைக் கடந்த இருபதாண்டுகளாக அமெரிக்கா வந்துபோகும் நான் நன்றாகவே அறிவேன். விடுங்கள், நம்மால் இயன்றவரை நாம் நல்லவர்களாக இருக்க முயலுவோம், இந்தியாவில் இருந்தாலும் இல்லை அமெரிக்காவில் இருந்தாலும்!

    உங்கள் எழுத்தைத் தொடர்ந்து படிக்கிறேன். ஆனால் பின்னூட்டம் போடுவதில் சற்றே சோம்பேறித்தனம் வந்துவிடுகிறது. வீட்டில் அனைவரும் நலமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதே சமயம் அமெரிக்கர்கள் எல்லாருமே கலப்படமற்ற நல்லவர்கள் என்பதும் சரியில்லைதான் என்பதைக் கடந்த இருபதாண்டுகளாக அமெரிக்கா வந்துபோகும் நான் நன்றாகவே அறிவேன்/

      ஒரு நாட்டில் உள்ள அனைவருமே மிகவும் நல்லவர்கள் சுயநலமற்றவர்கள் என்று யாராவது சொன்னால் அதைவிட தவறான கூற்று வேறு எதுவும் இருக்காது.

      நன்மை தீமை இரண்டும் எங்கும் உண்டு. ஆனால் இந்த பதிவை எழுதியவர்...

      நம்மை போல் அங்கு அன்னதானம் செய்வதில்லை.
      நம்மை போல் அங்கு மனிதாபிமானம் இல்லை.
      நம்மை போல் அங்கே தேடி போய் உணவு தருவது இல்லை...
      அவர்கள் பிச்சைக்காரர்கள் என்று சொல்லி அதில் ஒரு சந்தோசம் காண்பதை என்னவென்று சொல்வது?

      பதிவிற்கு வந்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி.

      நீக்கு
  8. விசு எங்கள் முந்தைய கமென்ட் வந்ததோ? என்னாச்சு என்று தெரியவில்லையே...

    கீதா

    பதிலளிநீக்கு
  9. இங்குள்ள பலருக்கும் வெளிநாட்டினரைப் பற்றி தவறான எண்ணங்கள் உள்ளன. மகன் அங்கு இருப்பதால் நிறைய நல்ல விஷயங்களும் தெரிய வருகிறது. வருடனளுக்கு முன் அங்கிருந்த சில மாதங்களில் எனக்கும் பல நல்ல விஷயங்கள் தெரிந்தது. உங்க மாகாணத்தில்தான் இருந்தோம். நிறைய நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டோம்.

    கீதா

    பதிலளிநீக்கு