செவ்வாய், 7 ஏப்ரல், 2020

கை நிறைய சம்பளம், இந்தியாவிற்கு வந்துடு…

மீள் பதிவு (Saturday, December 19, 2015).



"விசு, ரொம்ப நாளா வெளிநாட்டிலே இருக்கிறியே? ஒரு “ஆறுவருஷம்” நல்ல ஒரு ப்ராஜக்ட் இருக்கு, வரியா?"


"மாப்பு, ரெண்டு வாரம் விடுமுறைக்கு வந்தாலே எனக்கு அங்கே பிரச்சனை,இதுல அங்கேயே வந்து தங்க சொல்லுறியா?அதை பத்தி வேற ஒரு நாள் சொல்லுறேன், இப்ப விஷயத்திற்கு வா, என்ன ப்ராஜக்ட் இது?
"என்ன வேலை என்பதை அப்புறம் சொல்லுறேன், முதலில் எவ்வளவு “மாலு’ தேரும்என்பதை கேட்டுக்கோ."
"ஒன்னாம் தேதி ஆனா வரி இல்லாமல் சுளையா மாசத்துக்கு50,000 ருபாய்."
"ஓகே அப்புறம்",
"நீ வேலைக்கு வர நாள் எல்லாம் ஒவ்வொரு நாளுக்கும் 2000 ரூபாய்!!!"
"என்னா மாப்பு, முதலில் சம்பளம் 50,000 ரூபாய்ன்னு சொன்ன, அப்புறம் வேலைக்கு வர நாளுக்கு 2000 ருபாய்ன்னு சொல்ற? சம்பளம் வாங்கினா வேலைக்கு போய் தானே ஆகனும்?"
"கொஞ்சம் பொறுமையா கேளு. மாசம் 45,000 ருபாய் உனக்கு ஒரு “செகரட்டரி” வைச்சிக்கவும், உன் இதர செலவிற்கும்"
“செகரட்டரி” கூடவா..சூப்பர் , மேல சொல்லு."
"நீ யார செகரட்டரியா வைக்கிறன்னு கூட யாருக்கும் சொல்ல வேண்டாம்."
"அட்டகாசம், வேற என்ன!!!?"
"நீ வேலைக்கு போகும் பொது ட்ரெயினில் போனா முதல் வகுப்பு பிரயாணம். விமானத்தில்  போன நீ செலவு பண்ற ஒவ்வொரு ரூபாய்க்கும்,  1.25, காரில் போனா கிலோ மீட்டர்க்கு 16 ருபாய்."
"மாப்பு, வெளி நாட்டில் வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிடன்னு கொஞ்சம் கஷ்டம்மா இருக்கு. பிறகு சொல்லு.."
"இப்ப சொன்னேன் இல்ல, ரயில்-விமானம்-கார்னு.. அதில நீ உன் சம்சாரத்தையும் கூட்டிக்கொண்டு போகலாம். அதுக்கும் உனக்கு அதே டீல் தான்."
"ஐயையோ… சொல்லவே இல்லையே…!!!"
"ஆனால் ஒன்னு, 6 மாசத்தில்  8 முறைதான் சம்சாரத்த கூட்டிக்கொண்டு போகணும், அதுக்கு மேல உன் செலவு தான். இவங்க ரொம்ப ” ஸ்ட்ரிக்ட்”."
அப்படியா… அதை பாத்துக்கலாம். மேலே சொல்லு
"உனக்கு ஒரு மொபைல் தொலை பேசி, அப்புறம் ஒரு லேன்ட் லைன் இலவசம். எவ்வளவு வேணும்னாலும் பேசிக்கலாம்."
"மாப்பு, திருவிளையாடலில் “தருமி” சொன்ன மாதிரி “எனக்கு இல்லை” எனக்கு இல்லை” ன்னு பதற வச்சிட்டியே.."
"உனக்கு கார் வாங்க ஒரு 4 லட்சம் ரொக்க பணம்.."
"அது தான் கிலோ மீட்டர்க்கு 16 ருபாய் தருவாங்கன்னு சொன்னியே.. அப்புறம் எதுக்கு இந்த ரொக்க பணம்?"
"விசு, குடுக்கிற தெய்வம் கூறிய பிச்சின்னு குடுக்கும் போது, சைலண்டா வாங்கிக்கோ.. கூட கூட பேசாத. தண்ணீர்…மின்சாரம் இலவசம்…"
"அடேங்கப்பா.."
"அதுக்கும் மேல உனக்கு வாடகை இல்லாத வீடு வேற…"
மாப்பு….? என்னடா சொல்லுற? சரி இவ்வளவு சொன்னீயே… மருத்துவ வசதி?
"இல்லாமல் போய்டுமா விசு? அருமையான மெடிக்கல் இன்சுரன்ஸ் பாலிசி இருக்கு."
"மாப்பு, நான் சில வருடங்களாவே, இந்த கம்ப்யுட்டர் சார்ந்த விஷயங்களுக்கு அடிமை ஆகிவிட்டேன். அந்த இதர செலவு மாசம் 45000 சொன்னீயே, அதுல எனக்கு தேவையானதா வாங்கி கொள்ளலாமா?"
"சில்லரைதனம்மா பேசாத விசு.. இவ்வளவு தரவங்க… அதை மறந்துடுவாங்களா?"
"உனக்கு  கம்ப்யூட்டர்க்கு ஒரு 2 லட்சம் . பேப்பர், ப்ரிண்டர்க்கு ஒரு 50,000, அது  மட்டும் இல்லாமல்  “ஐ பேட்”   Wi-Fi , இன்டர்நெட் எல்லாத்துக்கும் சேத்து மாசம் ஒரு 5000 ருபாய்.வைச்சிக்க நீ..
"அருமை மாப்பு.. அருமை!!!"
"சரி, இவ்வளவு இருந்தாலும், அங்கே இந்தியாவில் நான் வாழ்ந்த என் வீட்டு ஏரியாவில் தண்ணீர் வசதி இல்ல, ரோடு கொஞ்சம் மேடு பள்ளம் அந்த மாதிரி சின்ன சின்ன விஷயம், அதுக்கு ஏதாவது…"
"விசு, ஒரு 15 கோடி.."
"என்னாது.. 15 கோடியா!!!?"
"ஆமா, ஒரு 15 கோடி தருவாங்க. அதை வச்சி இது எல்லாம் பண்ணிக்கோ."
"சூப்பர்..!!!"
"விசு, கடைசியா ஒரு விஷயம்.. இவ்வளவு தராங்களே , வேலை ரொம்ப அதிகமா இருக்குமோன்னு பயந்துடாத.  நீ வேலைக்கே போக தேவை இல்லை. இது எல்லாம் உன் வீட்டை தேடி வரும்.  கை எழுத்து கூட போட தேவை இல்லை."
"கூட வேலை செய்றவங்க நான் வேலைக்கு வரவே இல்லைன்னு போட்டு கொடுத்துடுவாங்களே, மாப்பு".
"சும்மா பதறாத விசு.. இவங்க யாருமே வேலைக்கு போறது இல்லை."
"சரி கூட வேலை செய்றவங்க பெயர் ஏதாவது தெரிஞ்சா சொல்லு மாப்பு"
"ஒ அதுவா, நம்ம சச்சின் டெண்டுல்கர், ஜெமினி உடைய மகள் ரேகா, மற்றும் பலர்."
"மாப்பு, என்னதான் சொன்னாலும், இங்க ஒரு நல்ல வாழ்க்கையை வருட கணக்கில் வாழ்ந்துட்டேன், அதனால் இந்த நாட்டை விட்டு வெளியேற கொஞ்சம் தயக்கமா இருக்கு.."
"முட்டாள்தனமா பேசாத விசு. உன்னை எவனாவது கண்டிப்பா இங்கே வான்னு சொன்னானா ….நீ அங்கேயே  கூட இருக்கலாம்.."
"சரி மாப்பு.. இந்த வேலை பேரு ஏன்னா!!?"

"ராஜ்யசபா MP"

ஒரு சந்தேகம்.

இந்த MP MLA MLC போன்ற தியாகிகளுக்கு அவர்கள் பதவி போன பின்னாலும் இறக்கும் வரை மற்றும் அவர்கள் இறந்தவுடன் அவர்கள் துணை இறக்கும் வரை கணிசமான  பென்ஷன் வேற தரங்களாம். அது உண்மையா?


 

3 கருத்துகள்:

  1. ஆண்டி இண்டியணான உமக்கு நிச்சயம் இந்த வேலை கிடைக்காது

    பதிலளிநீக்கு
  2. ஆனா...முதல்ல டெபாசிட் கட்டணும் கட்சித் தலைமைக்கு ..அதுவும் கோடிக்கணக்கில்..

    பதிலளிநீக்கு