"Football is back"!
சென்ற வாரத்தில் அமெரிக்காவில் மீண்டும் மீண்டும் கேட்க நேர்ந்த ஒரே வாக்கியம். இங்கே Football என்றால் இந்தியாவிலோ மற்றும் பல நாடுகளிலோ நடக்கும் கால்பந்து அல்ல. அந்த கால்பந்திற்கு அமேரிக்கா வைத்த பெயர் "Soccer" . இந்த Football அமெரிக்க விளையாட்டு . கைகள் மற்றும் கால்கள் இரண்டிலும் பந்தை தொட்டு பிடித்து உதைத்து எரிந்து ஆடும் ஆட்டம்.
இந்த வாரத்தில் துவங்கிய இந்த ஆட்டம் 2020 பெப்ரவரி மாத்தில் முடியும். பல நகரங்களுக்கான அணிகள் மொத்தமாக 256 ஆட்டங்கள் ஆட இறுதி ஆட்டமான "Superbowl" இந்த வருடம் ப்ளோரிடா மாகாணத்தில் நடக்க இருக்கின்றது.
சிறு வயதில் இருந்தே அடியேனுக்கு விளையாட்டு துறையில் மிக ஆர்வம். "I love the competitiveness". எண்பதின் ஆரம்பங்களில் பாகிஸ்தான் அணி மேற்கு இந்திய அணிக்கு எதிராக கிரிக்கெட் ஆடும் போது அந்த ஆட்டத்தின் நேர்முக வர்ணனையை ரேடியோவில் இந்தியாவில் இரவு முழுக்க நாங்கள் கேட்ட நாட்கள் உண்டு. விளையாட்டு என்றால் அவ்வளவு விருப்பம்.
அது ஏன் பாகிஸ்தான் என்று கேட்போருக்கு ஒரு சிறிய விளக்கம். அந்த நாட்களில் எந்த அணி மேற்கு இந்தியா தீவிற்கு சென்றாலும் அந்த அணி கிழி கிழி என்று கிழிக்க பட்டு திருப்பி அனுப்பபடுவார்கள். பாகிஸ்தான் மட்டும் சற்று போராடும். அதனால் தான்.
சரி, கதைக்கு வருவோம்.
இந்த Football சீசன் ஆரம்பித்து விட்டால் சில குடும்பங்களில் வாழ்க்கை முறையே மாறிவிடும் என்பது விதி. அடியேனும் விதிவிலக்கு அல்ல! நான் வாழும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு மட்டும் இரன்டும் அணிகள் உண்டு. இரண்டுமே நல்ல அணி.
ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு ஒரு ஆட்டம் பிறகு ஞாயிறு பல ஆட்டங்கள் தொடர்ந்து திங்கள் ஒரு ஆட்டம்.
இந்த சீசன் ஆரம்பித்த உடனேயே.. இங்கே அதை தொடர்ந்து யார் வெல்வார்கள் என்று பல போட்டிகள் நடக்கும்! இது ஒவ்வொரு அலுவலகத்திலேயும் . நட்ப்புக்கள் மத்தியிலும் ஆரம்பித்து அடுத்த ஆறு மாதங்கள் போவதே தெரியாது.
இந்த வாரம் அலுவலகத்தில் இந்த போட்டி ஆரம்பிக்க .. தலைக்கு 20 டாலர் என்று மொத்த குடும்பமும் சேர்ந்து விட்டோம். ஆறு மாதம் கழித்து வெற்றி பெறுவோருக்கு குறைந்த பட்சம் ஒரு லட்சம் டாலர்.
மொத்த குடும்பமா? இங்கே தான் அடியேனின் சுய நலம்.
அடியேன் அம்மணி மற்றும் மூத்தவள் 20 இளையவள் 17 என்று இருக்க, இப்போதெல்லாம் குடும்பமாக நாங்கள் இணைந்து செய்யும் காரியங்கள் அரிதாகி விட்டன. ராசாதிக்கள் இருவரும் படிப்பு வேலை இசை விளையாட்டு என்று படு பிசி. அடியேனுக்கு வாரத்தில் 40 மணி நேரம் தான் வேலை. அது முடிந்தவுடன் இல்லத்தில் சற்று உதவி மற்ற படி "சும்மா தான்" ! அம்மணி வேலை முடித்து இல்லத்து பணிகளையும் சீராக முடிக்க அவர்களுக்கு நேரம் சரியாக உள்ளது.
இந்த ஆட்டத்தில் சுயநலம் எங்கே உள்ளது? இதோ சொல்கிறேன்.
இந்த ஆட்டத்தில் நால்வரும் இருப்பதால் ஒவ்வொரு வாரமும் நால்வரும் சேர்ந்து இந்த வாரம் எந்த அணியை ஆதரிக்கின்றோம் என்று ஒரு விவாதம். மற்றும் சென்ற வாரம் யார் வெற்றி பெற்றார்கள் என்ற Bragging. மூத்தவள் வேறொரு நகரத்தில் கல்லூரியில் இருந்தாலும் வாரத்திற்கு குறைந்த பட்சம் மூன்று முறையாவது அலைபேசியில் அழைத்து விவாதிப்பாள். இளையவள் அம்மணியிடம், அந்த அணி சரியில்லை. இந்த அணி நல்ல அணி என்று பாடம் எடுப்பாள்.
இந்த வருடம் முதல் ஆட்டம் நேற்று "Green Bay Packers VS Chicago Bears" இந்த இரண்டு அணிக்கான ஆட்டம். இந்த ஆட்டம் Chicago நகரில் நடக்கும். யார் வெற்றி பெறுவார்கள் என்று இரண்டு அணியின் நிறை குறைகளை நால்வரும் ஆராய்ந்த பின்னர்.. இரு அணியும் சமபலம் பெற்றவர்கள் என்று நிர்ணயித்தோம்.
மூத்தவள்.. இரண்டு அணியும் சமபலம் பெற்றது என்று கூறி, இருந்தாலும் இந்த ஆட்டம் சிகாகோ நகரில் நடப்பதால் Chicago Bears அணிக்கு Home Advantage இருக்கும் என்று கூறி Chicago Bears அணி தான் வெற்றி என்று பந்தயம் கட்டினாள்.
இளையவளோ இரண்டு அணியும் சமமான அணி, இருந்தாலும் Green Bay Packers அணியின் முக்கிய வீரன் (Quarter Back ) ஆரோன் ராட்ஜர்ஸ் தன்னுடைய பெற்றோர்களை சரியாக கவனிக்கவில்லை என்று சற்று கோபமாகி Chicago Bears தான் வெற்றி பெரும் என்றாள்.
அடியேனோ இரண்டு அணியையும் நன்றாக கூறு போட்டு பார்த்து ஆரோன் ராட்ஜர்சின் ஆட்டத்தினால் Greenbay Packers தான் வெற்றி பெரும் என்றேன்.
அம்மணி யாரை ஆதரிக்கிறார்கள் என்று மூவரும் ஆவலாக விசாரிக்க..அம்மணியோ கண்டிப்பாக Chicago Bears என்று சொல்ல..
மூத்தவள் " எப்படி Chicago Bears தான் ஜெயிக்கும்னு சொல்றீங்க?"
அம்மணி " ஈஸி, உங்க அப்பா சொல்றது எதுதான் நடக்குது. அவரு எது தோக்கும்னு சொல்றாரோ அது தான் ஜெயிக்கும்.. "
ஆட்டம் நேற்று முடிந்தது. அருமையான துவக்கம். யார் வெற்றி பெற்றார் என்று நான் சொல்ல மாட்டேன்.
அமெரிக்காவில் பிள்ளைகளோடு வாழும் குடும்பத்திற்கு நான் சொல்லும் ஒரு அறிவுரை. "Football League " ஏதாவது இருந்தால் குடும்பமாய் பங்கேருங்கள். இது ஒரு சுகமான பயணம்! அனுபவம்!
யார் வெற்றி பெற்றார் என்று நான் சொல்ல மாட்டேன்.//
பதிலளிநீக்குஅதனால் என்ன கூகிள் ஆண்டவர் தெரிவித்து விட்டார். வாழ்த்துக்கள்.
Jayakumar
விசு எஞ்சாய்ட்!! சூப்பர். கூடியவரை நிகழ்வுகளுக்கும் சரி அப்பப்ப குடும்பத்தோடு பங்கேற்றல் என்பது சுகமான விஷயம் அதுவும் அங்கிருக்கும் குடும்பங்களுக்கு இதைக் கட்டாயமாக வைத்துக் கொள்ளலாம்... உங்க அறிவுரைக்கு முழு ஆதரவு...
பதிலளிநீக்குநல்ல ஹெல்தி உரையாடல்கள் விசு. ஒரு குடும்பத்துக்கு மிக மிக அவசியமான ஒன்று.
கீதா