வெள்ளி, 6 செப்டம்பர், 2019

வேட்டையாடு விளையாடு !


"Football is back"!

சென்ற வாரத்தில் அமெரிக்காவில் மீண்டும் மீண்டும் கேட்க நேர்ந்த ஒரே வாக்கியம்.  இங்கே Football என்றால் இந்தியாவிலோ மற்றும் பல நாடுகளிலோ நடக்கும் கால்பந்து அல்ல. அந்த கால்பந்திற்கு அமேரிக்கா வைத்த பெயர் "Soccer" . இந்த Football அமெரிக்க விளையாட்டு . கைகள் மற்றும் கால்கள் இரண்டிலும் பந்தை தொட்டு பிடித்து உதைத்து எரிந்து ஆடும் ஆட்டம்.

இந்த வாரத்தில் துவங்கிய இந்த ஆட்டம் 2020 பெப்ரவரி மாத்தில் முடியும். பல நகரங்களுக்கான அணிகள் மொத்தமாக 256 ஆட்டங்கள் ஆட இறுதி ஆட்டமான "Superbowl" இந்த வருடம் ப்ளோரிடா மாகாணத்தில் நடக்க இருக்கின்றது.

சிறு வயதில் இருந்தே அடியேனுக்கு விளையாட்டு துறையில் மிக ஆர்வம். "I  love the competitiveness".  எண்பதின் ஆரம்பங்களில் பாகிஸ்தான் அணி மேற்கு இந்திய அணிக்கு எதிராக கிரிக்கெட் ஆடும் போது அந்த ஆட்டத்தின் நேர்முக வர்ணனையை ரேடியோவில் இந்தியாவில்  இரவு முழுக்க நாங்கள் கேட்ட நாட்கள் உண்டு. விளையாட்டு என்றால் அவ்வளவு விருப்பம்.