திங்கள், 12 மார்ச், 2018

பஞ்சாபி மசாலா வடை - ஆபத்வந்தவன்..

அம்மணியும் இளையவளும் (மூத்தவ தான் கல்லூரி போய்ட்டாளே) சனி மதியம் எங்கேயோ போறோம்னு கிளம்ப..

கிளம்ப போற  நேரத்தில்.. ஏங்க, நீங்க சும்மாதானே இருப்பீங்க.. ( அது எப்படி.. வாரம் முழுக்க வேலைக்கு போயிட்டு வந்து சனிக்கிழமை ஒரு நாள் வீட்டுல இருந்தா.. நீங்க சும்மாதானே இருப்பீங்கன்னு சொல்றாங்க )

சும்மாதானே இருப்பீங்கன்னு ஆரம்பிக்கும் போதே..

எனக்கு இன்னைக்கு பின்னாடி தோட்டத்தில் நிறைய வேலை இருக்குனு சொல்லிட்டு..

நீங்க கிளம்புங்க.. அப்புறம் பார்க்கலாம்...

கிளம்பினார்கள்..

வீட்டில் தனியா இருந்தா நம்ம பண்ற முதல் வேலையே பாட்டு தானே.. இசையை  திருப்பி விட்டு... அப்படியே ரிலாக்ஸ் பண்ணுகையில்..

தொலை  பேசி அலறியது...

ஏங்க..



சொல்லு...

தோட்டத்தில் இருப்பேன்னு சொன்னீங்க. வீட்டு போனை முதல் ரிங்கிலே எடுக்குறீங்க..

நல்ல கேள்வி..

சொல்லுங்க.. எப்ப எப்ப எல்லாம் பதில் சொல்ல தெரியலையே.. அப்ப பதில் யோசிக்குறதுக்காக.. நல்ல கேள்வின்னு சொல்லி...

நல்ல கேள்வின்னு சொல்லி ( பதில்... என்ன சொல்வது... வீட்டு போன்.. எப்படி சமாளிப்பது)

நல்ல கேள்வின்னு சொல்லி நேரத்தை கடத்துவீங்க...

சே.. சே... ஏன் அப்படி .. (என்னத்த சொல்றது... மண்டையில் எதுவும் வர மாட்டேங்குதே)

எப்படி ஒரே ரிங்கில் எடுத்தீங்க..

அதை... வெளியே தோட்டத்தில் இருப்பேன்னு .. வீட்டு போனை என் செல் போன்னுக்கு பார்வேர்ட் பண்ணி வச்சி இருந்தேன்,

எனக்கு ஒரு உதவி பண்ணுங்க...

சொல்லு...

இன்னைக்கு இந்தியன் கடையில் என்ன என்ன வாங்கனும்ம்னு ஒரு லிஸ்ட் எழுதி வைச்சி இருந்தேன்.. டேபிள் மேலே அந்த லிஸ்டை வைச்சி இருக்கேன்.. கொஞ்சம்...

ஐயோ.. தோட்டத்து வேலையில் இருக்கேன்.. என்னால வர முடியாது.

அந்த லிஸ்டை ஒரு போட்டோ எடுத்து அனுப்புங்க..

ஓ... சரி ... ஒரே நிமிஷம் லைனில் இரு.. அனுப்புறேன்..

லைனில் இருந்தா எப்படி அனுப்புவீங்க.. செல் போனில் தானே பேசினு இருக்கீங்க.. இல்லாட்டி வீட்டு போனில் பேசினு எனக்கு பொய்...

சே.. சே..கட் பன்னு அனுப்புறேன்.....

அனுப்பினேன்.. இசை தொடர்ந்தது...

அலை பேசி...

சொல்லு..

ஒரு உதவி பண்ணுங்க..

அனுப்பிட்டேன்..

அது கிடைச்சிடிச்சு.. கொஞ்சம் இந்த மார்க்கெட்டுக்கு வாங்க..

ஏன்,..

இவளுக்கு இங்கே இருந்து எதோ நகம் வெட்டுற கடைக்கு போகனும்மாம்.. அந்த திங்ஸ் எல்லாம் வண்டியில் இருந்தா கெட்டுடும்.. நீங்க வந்து அத எடுத்துன்னு வீட்டுக்கு போய்டுங்க..

சரி..

என்னங்க.. முடியாதுன்னு சொல்லுவீங்கன்னு இவட்ட பந்தயம்  கட்டினேன் .. இப்படி பண்ணிடீங்களே..

நான் முடியாதுன்னு சொல்லிடுவேன்.. அவ லைனில் வருவா.. நீயாவது சும்மா தான் குதிப்ப.. அவ சலங்கையை வேற கட்டினு வந்துடுவா.. அதுதான்..

கடையை அடைந்தேன்...

ஒரு பெரிய தள்ளு வண்டி நிரம்ப சாமான்கள் இருக்க.. அம்மணி ஒரு  கை தள்ளு வண்டியை என்னிடம் கொடுத்து விட்டு.. எனக்கு ஒரு உதவி பண்ணுங்க.. நாங்க ரெண்டும் பேரும்  கிளம்புறோம்.. அங்கே உள்ள சூடா சமோசாவுக்கு பணம் கட்டிட்டேன்..ஆறு சமோசா.. அது ரெடியானவுடன் வாங்கினு  நீங்க  வீட்டுக்கு போங்க.

சரி...

என்று சொல்லிவிட்டு .. வண்டியை தள்ளி கொண்டே சமோசா பக்கம் போக... 

இன்னும் ஒரு அஞ்சி நிமிஷம்..

சரி.. என்று சுற்றும் முற்றும் நோட்டமிட்டேன்...

எதிரில் "இந்தியன் ஸ்னாக்ஸ்" என்ற எழுத்து தெரிய... என்ன இருக்கின்றது என்று பார்க்க சென்றேன்..

சமோசா ரெடி என்ற சத்தம் வர..

ஓடி சென்று சமோசாவை வாங்கி கொண்டு வண்டியில் போட்டு... வீட்டை நோக்கி வர..

ஏங்க..

சொல்லு..

எனக்கு ஒரு..

உதவி தானே .. சொல்லு செய்யுறேன்.

சமத்து..அதுல நிறைய சாமானை உடனே பிரிஜ்ஜில் வைக்கணும்.. ப்ளீஸ்.. வைச்சிடுங்க..

ஓகே..

இல்லத்தை அடைந்தேன்...

ஒரு சமோசாவை.. (ஆறு இருக்கு ... ஒன்னும் சொல்ல மாட்டாங்க என்ற தைரியத்தில்..) ருசித்து கொண்டே..

ஒவ்வொரு பையாக திறக்க..

அம்மணி தான் .. என்ன என்ன வித்தியாசமா யோசிக்கிறாங்க.. முதல் பையில் பானி பூரிக்கான வட்ட வட்டமாக.. சுட்ட ஐட்டம்..

தொடர்ந்து... ஊது  பத்தி..(அது என்னமோ ஊது பத்தின்னு சொன்னாலே  .. ட்ரைனில் கிறுக்கியவங்க நினைவு தான் வருது)  

மற்றும்... நிறைய பூஜைக்கான விடயங்கள்..

இதுவரை நான் பார்த்திராத பல காய் கறிகள்.. மற்றும்.. மளிகை சாமான்கள்..

இதையெல்லாம் ஏன் வாங்கினாங்க.. ஒரு பையிலும் மீன் கருவாடு எதுவும் இல்லையே என்று யோசித்து கொண்டே அனைத்தையும் அடுக்குகையில்....

கடைசி டப்பா ஒன்று என் கவனத்தை ஈர்த்தது..

பஞ்சாபி வடா..



பஞ்சாபி வடா.. இதை வாழ்க்கையிலே கேள்வி பட்டதே இல்லையே. ..என்று நினைத்து கொண்டு... அலைபேசியை அழுத்தினேன்.,..

சொல்லுங்க..

ஒரு சமோசா..

சொல்லுங்க..

சாப்பிட்டேன்..

ஒன்னு போதும்..முழுக்க முழுக்க உருளை கிழங்கு.. இன்னொன்னு எடுக்காதிங்க.. சரி.. அப்புறம் பார்ப்போம்.

ஒரு நிமிஷம்..

சொல்லுங்க..


இந்த பஞ்சாபி வடை வாங்கி வச்சி இருக்கியே..

எந்த பஞ்சாபி வடை..?

நீ தானே வாங்கின.

புரியல..!

நீ வாங்கின சாமானில் பஞ்சாபி வடை இருந்ததே..

என்ன சொல்றீங்க..?

அத ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியே சாப்பிடலாமா? இல்லாட்டி சமைக்க வேண்டுமா?

நீங்க என்ன சொல்றீங்கன்னு..

பஞ்சாபி வடை.. நீ தானே வாங்கின ...

எப்ப...?

இன்னைக்கு..!

இன்னைக்கு நான் எங்க பஞ்சாபுக்கு போனன்?

கிண்டல்,.... பி சீரியஸ்.. அது மட்டும் இல்ல. வேற இந்த பானி பூரி ... ஊது பத்தி (அது என்னமோ ஊது பத்தின்னு சொன்னாலே  .. ட்ரைனில் கிறுக்கியவங்க நினைவு தான் வருது)கூட...!?

ஏங்க..?

சொல்லு..

வேற யாரையாவது  தள்ளினு வந்துடீங்களா?

சே.. சே..கல்யாணமாகி இம்புட்டு வருசமமாகுது .. உனக்கு என் மேல இன்னும் நம்பிக்கை வரலையா..?

நினைப்பு தான் பிழைப்பை ..நான் வண்டிய சொன்னேன்..!

நானும் வண்டியதான். சாரி..  ஓ.. ஓகே..

மீன் கருவாடு எல்லாம் இருந்ததா?மொத்தம் 134  டாலர்  கொடுத்தேன்..

மீன் கருவாடு எல்லாம் இருக்கு..(அவசரத்துக்கு ஒரு பொய் சொல்லிவிட்டு  ..அட பாவி.. தவறான வண்டியை உருட்டினு வந்துட்டேன் போல இருக்கே...)

அப்பாடா.. அப்புறம் பாக்கலாம். என் வயித்தில நெருப்பை கொட்டுனீங்க...

சே.. சே.. எப்ப வருவீங்க..?

இன்னும் ஒன்றை மணியாகும்..

பரவாயில்லை.. மெதுவா வாங்க...

அம்புட்டையும் எடுத்து போட்டு கொண்டு... கடைக்கு செல்ல.. அங்கே.. "யு மீன் ஐ மீன்" என்று ஒரு வட இந்திய குடும்பம் மைக்கல் மதன காமராஜன் பாணியில்    சண்டை போட்டு கொண்டிருக்க.. அப்படியே ரிவர்ஸ் வாங்கி.. சாமான்களை வண்டியிலே போட்டு விட்டு..

மீண்டும்.. ..அனைத்தையும் வாங்க ....ஆரம்பிக்க..

என்ன ... என்ன ... என்ன. என்ன.. என்ன... என்ன.. என்று யோசிக்கையில் ..

போனில் அம்மணிக்கு அனுப்பிய லிஸ்ட் நினைவிற்கு வந்தது.

அனைத்தையும் வாங்கி ..

காஷியரிடம் போய்.. பில் போடாந்திங்க.. மொத்தம் எவ்வளவு வருதுன்னு சொல்லுங்க..

ஏன்..?

பண பிரச்சனை தான்....

 என்று வழிய..

அவரும் கூட்டி கழித்து.. 125  டாலர் என்று சொல்ல..

ஒரு நிமிஷம் இருங்க..!

மொத்தம் 134 டாலர்ன்னு சொன்னாங்களே.. 9 டாலர் மிஸ்ஸாகுதே.. என்று யோசிக்கையில் .. எதிரில் வந்த சமோசா மாஸ்டர்..

திருப்பவும் வந்துடீங்களா?  சமோசா எப்படி இருந்தது.?

நல்லா   இருந்தது.. தேங்க்ஸ்.. என்று சொல்லும் போது தான்.. பல்ப் எரிந்தது.

ஒரு சமோசா எவ்வளவு..

1.50 ..

ஒன்னு "ஒன்னு ஐம்பது".. அந்த லாஜிக் பிரகாரம் பார்த்தா  ஆறு ஒன்பது டாலர்..

வாய்ப்பாடு சொல்லி கொடுத்த வாத்தியாருக்கு நன்றி சொல்லி .. ஆறு சமோஸாவையும் வாங்கி கொண்டு ..

வண்டியை வீட்டிற்கு விட்டு...

எல்லாவற்றையும்  அடுக்கி விட்டு..

வண்டியில் இருக்க  ஊதுபத்தி (அது என்னமோ ஊது பத்தின்னு சொன்னாலே  .. ட்ரைனில் கிறுக்கியவங்க நினைவு தான் வருது)  மற்றும் மத்த சாமான்களை என்ன செய்யலாம்னு யோசிக்கையில்..

எங்க அந்த பஞ்சாபி வட?

என்று கேட்க..

எங்கே .. எங்கே..   ஒரு நிமிஷம் இரு...

என்று சமையல் அறை  வழியாக வண்டிக்கு ஓடி போய் அதை எடுத்து வந்து தர..

ஏங்க.. இது என்ன 11 சமோசா இருக்கு?

அவன் கொடுத்தான் .. வாங்கி வந்தேன்.. ஏன்?

நான் ஆறுதானே சொன்னேன்..

தப்பா கொடுத்துட்டான் போல இருக்கு..

இல்லைங்க ஏமாத்த கூடாது.. இருங்க எவ்வளவு சார்ஜ் பண்ணி இருக்கான்னு   பார்க்குறேன் என்று ஆன் லைனில் வங்கிக்கு செல்ல..

ஐயோ ஐயோ .. என்று மனம் பதற..

ஏங்க.. ?

சொல்லு..

134 டாலர் ரெண்டு முறை சார்ஜ் பண்ணி இருக்காங்க..

ஏன்..

தெரியலை..  இருங்க அவங்கள கூப்பிடுறேன்..

நீ வேணாம் நான் கூப்பிடுறேன்..

இப்பவே கூப்பிடுங்க..

ஏதோ ஓர்  எண்ணை அழுத்தி..

ஹலோ..

மதியம் வந்தோம்..இரண்டு முறை.. என்று எனக்கு நானே சொல்லி கொள்ள..

அந்த கணக்கிலேயே போட்டுடுங்க...

ஏன்?

ஓகே.. இப்பவே வரேன்..

தொலை பேசியை அணைக்கையில்

என்ன சொல்றாங்க..?

திரும்பவும் கணக்குல போட முடியாதாம். நேரா வந்தா "கேஷ்" தருவங்களாம்.

இப்பவே நான்  போய் வாங்கின்னு வரேன்.

நீ எதுக்கு.. நானே போறேன்..

என்று வண்டியை கிளம்புகையில்..

ஏங்க.. ஒரு நிமிஷம்..

என்ன.. ?

இந்த பஞ்சாபி வட நமது இல்லை.. தப்பா வந்து இருக்கு.. அவர்களிடமே கொடுத்துடுங்க..

என்று சொல்ல...

சரி.. என்று பக்கத்தில் இருந்த பார்க்கிங்  லாட்டில் பத்து நிமிடம் அமர்ந்தேன்..

சிறுக சிறுக..குருவியை போல் சேர்த்த சீக்ரட் பணத்தில் இருந்து அம்மணிக்கு 134 டாலர் கொடுக்கனும்மேன்னு எனக்குள்ளே ஒரே வருத்தம்.

எனக்கு மட்டும் தான் இப்படியா? என்று நினைக்கையில் பின் சீட்டில் இருந்த  வட இந்தியனின் மளிகை  சாமான்கள் என்னை பார்த்து சிரித்தது.

நல்ல வேளைபஞ்சாபி வடைய திரும்பவும் கொடுக்க வந்தவங்க.. இதை எல்லாம் பாக்கல..

ஒரு வேளை .. பார்த்து இருப்பாங்களோ..


எனக்கு மட்டும் தான் இப்படியா?


பின் குறிப்பு :

இந்த பதிவை படித்தவுடன் படித்தவுடன் தோழி ஒருத்தவங்க... அது வடை இல்ல வாடின்னு சொல்லறீங்க..
நான் பெண்கள் மேல் மிக மரியாதை வைத்துள்ளவன். விளையாட்டுக்கு கூட வாடி போடின்னு பேச மாட்டேன்.


6 கருத்துகள்:

  1. நீண்ட நாளுக்கு பிறகு உங்கள் எழுத்தை படிக்கிறேன்! மனசு லேசானது! அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. ha ha haaaa-good one- You make sure she doesnt send u for shopping again---idhula oodhupathi vera :)

    பதிலளிநீக்கு
  3. பதிவில் வரும் படத்தை பத்தி பேஸ்புக்கிலோ இல்ல ட்விட்டர்லயோ பார்த்த நினைவு

    பதிலளிநீக்கு
  4. நான் பெண்கள் மேல் மிக மரியாதை வைத்துள்ளவன். விளையாட்டுக்கு கூட வாடி போடின்னு பேச மாட்டேன்.
    ha ha ha!

    பதிலளிநீக்கு