புதன், 22 நவம்பர், 2017

அப்பா என்றழைக்காத உயிர் இல்லையே...

அலை பேசி அலறியது..

இரவு 9 :40

காலை ஐந்து மணிக்கு வேலைக்கு சென்று வந்த அசதியோடு அம்மணி தூங்க, அவர்கள் எழுந்துவிட கூடாதே என்று அடித்து பிடித்து எடுத்து வெளியே அடுத்த அறைக்கு போய்..

ஹலோ..

டாடா..

மூத்தவள் தான்.

நன்றி திருநாள்  (Thanks Giving Day) விடுமுறைக்கு வருகின்றேன் என்றாள்.. ஒன்னும் செய்தி வரவில்லையே என்று இருந்தேன்.


மகள்.. எங்க.. வீட்டுக்கு வரேன்னு சொன்னீயே..?

இல்லை டாடா.. ரொம்ப பிசி.. முடியாதுன்னு நினைக்கிறேன்.

அய்யயோ ... உங்க அம்மா ரொம்ப பீலிங் ஆயிடுவாங்க.. ப்ளீஸ் வா..!

அம்மாட்ட சொல்லிட்டேன்.. ஷி அண்டர்ஸ்டாண்ட்ஸ்..

ஐயோ.. உனக்கு பிடிக்கும்னு..

நான் பிசி  டாடா.. அடுத்த மாசம் பாக்கலாம்..



அப்படி என்ன பிசி..?

ரெண்டு வாரம்   துணி.. பரீட்சைன்னு சொல்லி துவைக்காம அப்படியே இருக்கு.. அதை வாஷிங் போட்டு எடுக்கவே...

ஒரு மூட்டையில் போட்டு எடுத்துன்னு வா .. இங்கே பாத்துக்கலாம்.

இல்ல டாடா.. அவ்வளவு நேரம் வண்டிய ஓட்டினு வந்தா ரொம்ப டயர்ட் ஆகிடுது .. இங்கேயே பாத்துக்குறேன்.

நீ .. எடுத்துன்னு வா.. நான் பாத்துக்குறேன்.

ப்ராமிஸ்..

உங்கொப்பரானை..

அம்மாக்கு தெரிஞ்சா கத்துவங்க...

அட்ஜஸ்ட்  பண்ணிக்கோ..

என்னை இல்லை.. உங்களை கத்துவங்க..

அதை விடு.. எனக்கு பழகிடிச்சி.

டெம்ப்ட்டிங்கா தான் இருக்கு.. இருந்தாலும் வேணா விடுங்க.. அடுத்த மாசம் பாக்கலாம். ரொம்ப வேலை..

வேற என்ன வேலை..?

வண்டிய சர்விஸ் செய்யணும்..

கவலைய விடு..நேரா வீட்டை வந்து சேரு.. நான் சர்வீஸ் எடுத்துனு போறேன்..

அம்மாக்கு தெரிஞ்சா..?

திட்டுவாங்க.. என்னை தான்.. பழகிடிச்சி.

ஆசையா தான் இருக்கு.. இருந்தாலும் வேணாம் விடுங்க..

என்ன தான் உன்னை தடுக்குது?

நிறைய ஷாப்பிங் செய்யணும். கிச்சனுக்கு.. காலேஜுக்கு.. இந்த வீக்கெண்ட்
 பண்ணாட்டி ரொம்ப கஷ்டம் ஆயிடும்..

இப்பவே லிஸ்ட் அனுப்பிடு. நான்  வாங்கி வைச்சிடுறேன்..,

அம்மாக்கு தெரிஞ்சா..

அதே கதை தான்.. விடு..

இப்படி இன்னும் அடுத்த ஆறு  கண்டிஷனை அவள் போட, நானோ.. பரவாயில்லை வா.. பாத்துக்கலாம் வா என்று நான்  சொல்ல ..

அம்மாக்கு தெரிஞ்சா என்று அவள் அலற,,

திட்டுவாங்க.. எனக்கு பழகிடிச்சின்னு சொல்ல..

கடைசியாக..

டாடா...

சொல்லு..

ஐ அம் சீரியஸ்.. அங்கே வந்தவுடன் அம்மாவுக்கு பயந்து பேச்சை மாத்த மாட்டிங்களே... ப்ராமிஸ் பண்ணுங்க..

"I promise.. Cross my Heart and Hope to Die" என்று சொல்ல..

தேங்க் யு.. கதவை திறங்க.. நான் வீட்டுக்கு வெளியே தான் இருக்கேன்.


போட்டாலே ஒரு போடு!


HAPPY THANKS GIVING EVERYBODY!

2 கருத்துகள்:

  1. ஹாஹாஹாஹாஹா சிரிச்சு முடிலப்பா!!!!! எதிர்பார்த்துட்டோம்னாலும்....சிரிச்சுட்டோம்....

    ஸாரி லேட் விஷ்ஷஸ் ...நன்றி நாளுக்கு!

    பதிலளிநீக்கு