வியாழன், 2 நவம்பர், 2017

பூண்டுக்குள் ஒரு "பூ"கம்பம் ...

நான்காவது.. ஆம்பூர் பள்ளியில் (நம்ம ராசி, வருசத்துக்கு ஒரு பள்ளி)
தள்ளு வண்டியில் மிக்ஸர் மற்றும் இனிப்புகளை விற்ற தனலக்ஷிமி அப்பாவிடம் மாலை வாங்கிய மிக்ஸரை பாதி தின்று விட்டு, மீதியை அடுத்த நாள் பள்ளிக்கு எடுத்து செல்ல..
எங்க அப்பா செஞ்சதா?


ஆமாம்... நேத்து வாங்கினேன் .. என்று சொல்லி கொண்டே ஒரு வாய் போட, ஒரு வித்தியாசமான ருசி..
அது எதில் இருந்து வருகின்றது என்று ஏற்கனவே ஒரு முறை அறிந்ததால்.. மிக்ஸர் பாக்கெட்டில் கை விட்டு தேடி அந்த பொருளை எடுத்து..
"தனா .. இது என்ன? மிக்ஸரில் எனக்கு ரொம்ப பிடிச்சது இது தான்" என்று சொல்ல..
அவளோ .. "பூண்டு" என்றாள் ...
அடுத்த நாள்.. செய்தித்தாளில் அவள் சுருட்டி வந்த பொட்டலத்தை பிரித்தால் , அம்புட்டும் மிக்ஸரில் இருந்த பூண்டு..
உனக்கு இஷ்டம்னு நேத்து அப்பாக்கு தெரியாமல் மிக்ஸர் பாட்டிலில் இருந்து பொறுக்கின்னு வந்தேன்.. இந்தா..
அடுத்த நாலு நாள் வயிறு வலி.. பின்ன.. 200 கிராம் வறுத்த பூண்டை ஒரே ஆளா சாப்பிட்டா...
பூண்டின் ருசி.. இன்னும் எனக்குள்..
தனலக்ஷ்மி எப்படி இருக்கின்றாளோ?

4 கருத்துகள்: