திங்கள், 13 நவம்பர், 2017

வீட்டுக்கு வீடு... ஸ்லீப்பர் செல்!

டாடா .. அடுத்த வருஷம் மே மாசம் ஒரு வாரத்துக்கு ஸ்பெயின் போக போறேன்..

ஆர்பரித்தாள்.. மூத்த ராசாத்தி.

நைஸ்.. என்ன விஷயம்?

எங்க காலேஜ் கொயர்.. அங்கே போய் வேற வேற ஊருல இருக்க கோயிலில்  பாட போறோம்.

வாவ்.. சூப்பர்..  அது சரி.. அம்மாட்ட ஓகே வாங்கிட்டியா?

அம்மாட்ட ஓகே  வா, அதெல்லாம் உங்களுக்கு மட்டும் தான், எங்களுக்கு எப்ப அவங்க இல்லைனு சொன்னாங்க..

சிறிது நேரம் கழித்து ..

ஏங்க .. அவ என்னமோ ஸ்பெயின் போறாளாமே .. சொன்னாளா?

சொன்னா.. ரொம்ப குஷியா இருக்கிறா? போகட்டும்.

அதை நான் பாத்துக்குறேன்..

சரி.. ஒரு பிளோவில் சொல்லிட்டேன்.. விடு..

நல்ல பெரிய கோயிலாம். கதீட்ரலாம் ..உங்களுக்கு தான் ஊரு சுத்துணும்னா  ரொம்ப ஆசையாச்சே.. நீங்களும் அவ கூட போறீங்களா?

கிண்டல் தானே பண்ற?


ஐ அம் சீரியஸ்.. போறீங்களா..

மே மாசம் - ஒரு வாரம்..  நான்..

போறீங்களா .. இல்லையா?

அவளுக்கு ஓகே வா? காலேஜ் பசங்க.. நான் அவங்க கூட..

அவளோட போக முடியாது. அவ பாட்டுக்கு அவங்க காலேஜ் ப்ரோக்ராமில் இருப்பா.. நீங்க அவ எங்க எங்க பாடுறாளோ .. அங்கே மட்டும் போய் ஒரு ஓரத்தில் உக்காந்து கேட்டுட்டு கைதட்டிட்டு... மத்த நேரத்தில் ஊரை சுத்தி பாருங்க..

இளையவள் ஒத்துக்குவாளா?

அவ என்ன சொல்றது.. அவளுக்கு அந்த நேரத்தில் ஸ்கூல் .... போறீங்களா இல்லையா?

போறேன்.. போறேன் .. கடைசியா ஒரு முறை.. நீ கிண்டல் பண்ணலை இல்ல..

இன்னொருமுறை..

இல்லை.. தமாஸுக்கு கேட்டேன்.

மனம் ஸ்பெயின் போனது...ஸ்பெயின் என்ற உடனே நம் நினைவில் வருவது.. அவர்களின் கால்பந்து லீக் ...ரியல் மாட்ரிட்.. பல ஜாம்பவான்கள் கொண்ட அணி. மாட்ரீட் நகரில் இந்த அணி ஆடுகையில் அந்த ஊரே ஸ்தம்பிக்கும் என்று கேள்வி..


போறோம் தான் போறோம்.. அந்த நேரத்துல இவங்க கேம் இருக்கா என்று செக் பண்ண எனக்கு.. இன்ப அதிர்ச்சி.

நான் அங்கே இருக்கும் ஒரு நாள் ரியல் மாட்ரிட் அணி ஆடுகின்றது.

அடுத்த ஐந்தே நொடியில்..

தண்டம்..

சொல்லு வாத்தியாரே..

ரியல் மாட்ரீட்  .. இன் மாட்ரீட்..


வாத்தியாரே..எப்படி .. எங்க.. யாரு.. எதுக்கு.. ஏன்? எப்ப?  நான்? எனக்கு எனக்கும் வரணும் .. என்ன செய்வியோ தெரியாது.. நானும் வந்தாகணும்.

டே . நான் போறேன்னு உனக்கு எப்படி தெரியும்.

நல்ல கேள்வி. என்னை வெறுப்பேத்த தானே கூப்பிட.. நீ என்ன பொய் சொன்னீயே .. அதை எனக்கும் சொல்லு.. நான் வந்தே ஆகணும். இல்லாட்டி நீ போக கூடாது. 

தண்டம்..

அம்மணிட்ட என்ன பொய் சொன்ன?

எந்த பொய்யும் சொல்லல?

வாத்தியாரே.. காந்திய சுட்டுட்டாங்களாம்.
இவளுங்க ஒருத்தியோடதான்..

இவளுங்க உங்களோ

டேய்.. உண்மையாவே. மூத்தவ அங்கே பாட்டு  பாட போறா.. நீயும் போயிட்டு வான்னு அவங்களே அனுப்புறாங்க.

எனக்கு வரணும்...

உங்க ஆபிஸ் அங்க இருக்குதானே..

இருக்கு,, ஆனா, அங்கே இப்ப எந்த ப்ராஜெக்ட் இல்லையே.

கூட்டி கழிச்சி பாரு.. ஏதாவது வரும்.. வர வைப்போம்.. இன்னொரு விஷயம்.. கூடவே சுந்தரிய கூட்டினு வந்துடாத.. ஓன்லி பேச்சிலர்ஸ்.

சரி..  ஒரு நல்ல பிளான் சொல்லு.. மறந்துடாத எனக்கும் வரணும்.

ரெண்டு நாள் டைம் கொடு.. இது கொஞ்சம் சீரியஸான விஷயம்.. யோசிச்சு சொல்றேன்.


இந்த மாதிரி ஆட்டத்துக்கு தனியா போனா நல்லா இருக்காது.. கூட்டமா  போகணும்.

பள்ளி கூடத்தில் ஒன்றாக படித்த தற்போது ஐரோப்பாவில் உள்ள.. நண்பனை அழைத்து..

ரியல் மாட்ரீட்.. இன் மாட்ரீட் , மே 2018 .

ஐ அம் இன். கீப் மீ போஸ்ட்டட். அம்மணிட்ட மட்டும் ஒரு முறை கேட்டு கன்பார்ம் பண்ணிக்குறேன். ரெண்டு நாள் கொடு,

சூப்பர்..

இந்தியாவில் உள்ள நண்பனுக்கு ஒரு போன்.

ரியல் மாட்ரீட்.. இன் மாட்ரீட் , மே 2018 .

வரேன் விசு. ஆனா லீவ்.. பட்ஜெட் கொஞ்சம் பாக்கணும். இருந்தாலும் வரேன்..

என்ன..திடு திப்புனு வரேன்னு சொல்லிட்ட? அம்மணிட்ட கேக்க வேண்டாமா?

விசு. எங்க வீட்டில் ஒரு ஒப்பந்தம்.. அம்மணி எப்ப வேணுமா அவங்க பிரெண்ட்ஸ் பார்க்க.. சொந்தத்தை பார்க்க போகலாம் வரலாம். அதே தான் எனக்கும். ஒருத்தரை ஒருத்தரு கேக்க தேவை இல்லை. அங்க எப்படி?

இங்கேயும் ஒரு ஒப்பந்தம் இருக்கு..

என்ன?

ஏங்க.. உங்களை யாரு எங்கே எதுக்கு கூப்பிட்டாலும்.. எனக்கு தெரியாது.. வீட்டுக்காரம்மாட்ட கேட்டுக்கோன்னு சொல்லிடுங்க..

ஏன்?

எப்படியும் நான் தானே முடிவு பண்ணனும் .. அதனால உங்க நேரத்தை என் வீணடிக்கணும், நானே நேரா முடியாதுன்னு சொல்லிடறேன்.

நீ மூணு முடிச்சி போட்ட நேரத்திலே இதை சொல்லி இருக்கணும், விசு..

சொன்னேன்..

என்ன சொன்ன?

நீ எனக்காக எதையும் மறந்து வாழவேண்டாம். உன் பிரெண்ட்ஸ்.. உனக்கு பிடிச்சவங்களோடு எப்ப வேணும்னாலும் போலாம் வரலாம்.

குட்.. அப்புறம்.. அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?

தேங்க்ஸ்.. ஆனா இதையே சாக்காவைச்சின்னு நீங்களும் முந்தி போலவே வெளியே போய் கூத்தடிக்கலாம்னு நினைக்காதீங்க..

ஐயோ நீ பாவம் விசு...

சற்று நேரம் கழித்து.. அம்மணியிடம் .

பரவாயில்லை.. இப்ப நீ மாறிட்ட. என்னை தனியா வெளியூர்க்கெல்லாம் அனுப்புற..

ரியலி.. தனியா? எப்ப அனுப்புனேன்..

கடைசி ரெண்டு வருசமா .. நீ இல்லாம தானே நான் ஊர் ஊரா .

எப்ப போன்னீங்க?

ரெண்டு மாசம் முன்னால கூட நியூ ஜெர்சி போனேனே ..

தனியா.. ?இவளுங்க ரெண்டுல ஒருத்தி உங்க கூட   கூட இருக்கும் போது எனக்கு என்ன கவலை? நான் நிம்மதியா உங்களை அனுப்புவேன்.

அட பாவி.. இவளுங்க தான் உன் ஸ்லீப்பர் செல்லா?

பின் குறிப்பு:

இதை  படிக்கும் கால்பந்து ரசிகர்கள் அனைவருக்கும் .. மே 13  ,,, ரியல் மாட்ரிட் @ மாட்ரிட். விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.

Remember this is only for the Gentlemen - Ladies Excuse!


1 கருத்து:

  1. ஹா ஹா ஹா ஹா தண்டம் கூட சேர்ந்தாச்சா!!! முன்னாடி கால்பந்து பாக்கப் போயி சேலை வாங்கி மாத்தி வைச்சு!! மாட்டிக்கிட்டீங்களே!!! இப்ப ஸ்லீப்பர் செல்லா!! சரி சரி பாத்து போங்க வேற எதுக்காச்சும் மாட்டிக்கிட்டு ஒரு பதிவு வரும் நு சொல்லுங்க!!! தண்டம் வந்தா தண்டத்துக்காகவாவது (ஹையோ இது உங்க ஃப்ரென்ட் தண்டம் விசு! நாட் நாம சொல்லுற வேஸ்ட் தண்டம் இல்ல ஹா ஹா ஹா) ஒரு பதிவு போடணும்ல அவர மாட்டிக்கவைச்சு!!

    பதிலளிநீக்கு