வெள்ளி, 20 ஜனவரி, 2017

நான் காற்று வாங்க போனேன்.....

1983 ல் கல்லூரி நாட்கள்.. 1807 விடுதலை போராட்டத்தை ஆரம்பிச்சானே நம்ம தமிழன்.. அதே வேலுரில் ..
ஒரு வாரம் ... உணர்ச்சி பொங்கிய போராட்டம் ஆர்ப்பாட்டம். ஆனால் அன்று எங்களை நடத்த வழியில்லை. ஈன தலைவர்களை நம்பி ஈழ தமிழர்களை கோட்டை விட்டோம்.
அந்த தோல்வி போன வாரம் வரை மனதை உறுத்தி கொண்டே இருந்தது.
கடந்த நான்கு நாட்களாக ... அதே உணர்வு அதே போராட்டம் மனதில். 9000 மைலுக்கு அப்பால் இருந்தாலும் ..
மெரினா கடற்கரையில் ஒரு வாலிபனா உக்கார்ந்து இருக்கிறது போல் ஒரு "கெத்து"
எங்களை ஏமாற்றிய அதே இயக்கங்களின் -சங்கங்களின்
போராட்டமும் ஆர்ப்பாட்டமும் பார்க்கவே அருவருப்பா இருந்தது. இவர்களோடு சேர்ந்த நாமும் அந்த காலத்தில் செத்த பாம்பை அடித்து இருக்கின்றோம் என்ற வெட்கமும் வந்ததை சொல்லித்தானாக வேண்டும்.

ஊரார் பிள்ளைக்கு ஊட்டி விட்ட ... தாய்க்கு வணக்கம்..
ஊரே வியக்க உணவளித்த நல்லுள்ளங்களுக்கு வணக்கம்...
இந்த போராட்டத்தில் எத்தனையோ விஷயங்கள் அடியேனை கவர்ந்தது..
அதில் மிக்க முக்கியமான ஒன்று..
பெண்கள்... தமிழச்சிஎன்று தட்டி பார்த்தால்..... தெரியும்.
எவனோ ஒரு நீதிபதி சொன்னானமே.. முடிந்தால் தமிழனை புலியை அடக்கி காட்டு என்று..
அவனுக்கு..
புலியை அடக்க தமிழன் தேவை இல்லை... தமிழச்சி போதும்...
இந்த போராட்டத்தை பார்த்த அவன் வயிற்றில் புளி கரைந்து இருக்கும்.
இது காளைக்கான போராடலாம் என்று அவன் எண்ணி கொண்டு இருக்கின்றான்..
அவனுக்கு தெரியாது.. இது நாளைக்கான போராட்டம் என்று...
எனக்குள் செத்து மறைந்த உணர்வை மீட்டு வந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி!
மெரினாவில் நான் நுழைந்து வருடங்கள் பல.. அதற்கு காரணம் பல உண்டு.
அடுத்த முறை இந்தியா வருகையில்.. மெரினா செல்வேன்..
பாடலோடு...
நான் காற்று வாங்க போனேன்..
ஒரு காளை வாங்கி வந்தேன்.
என் தன்மானத்தை மீட்ட உனக்கு நன்றி..
ஐம்பது வயது தமிழன்.

7 கருத்துகள்:

  1. "இது காளைக்கான போராட்டம் அல்ல, நாளைக்கான போராட்டம்"...என்ன அருமையான கணிப்பு! வாழ்த்துக்கள் தம்பி! - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    அற்புதமான உரையாடல் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. நாளைக்கான போராட்டம் என்பது உண்மை...

    பதிலளிநீக்கு
  4. எங்கள் மன உணர்வுகளை
    அப்படியே பதிவு செய்து போகும்
    அற்புதமான பதிவு
    பகிர்வுக்கும் தொடர்வும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. "இது காளைக்கான போராட்டம் அல்ல, நாளைக்கான போராட்டம்"..// விசு அசத்திட்டீங்க போங்க!!! அவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்திருப்பது உண்மைதான்!!! சல்லிக்கட்டிற்காகப் போராடியவர்கள் இங்கு சல்லிக்கட்டே நடத்தி காளையை அடக்குவது போல் ஒரு எச்சரிக்கை மணி அடித்து திமிறினால் அடக்குவோம் என்று சொல்லியிருக்கிறார்கள்..

    கீதா

    பதிலளிநீக்கு
  6. திமில் என்பது சக்தி தேக்கி வைக்கப் படும் இடம்.எவ்வளவு சக்தியோ அவ்வளவு வலிமை.திமில் என்பதே திமிர் என்றாகியது.
    kalakarthik
    karthik amma

    பதிலளிநீக்கு