செவ்வாய், 31 ஜனவரி, 2017

பக்கத்து வீட்டு.....

என்ன விசு... பாட்டை இவ்வளவு சத்தமா வச்சி இருக்கியே...பக்கத்து வீட்டில் கோப படமாட்டார்களா?

வா செந்தில் .. வா... பக்கத்து வீட்டில் யாரும் இல்லையே.. அடுத்த பக்கத்தில் வீடே இல்லை. அதனால் கவலையில்லை.

என்னாது பக்கத்து வீட்டில் யாருமே இல்லையா.. போன வாரம் கூட அந்த ஸ்டேட் பேங்க் மானேஜர் குடும்பத்தோடு இருந்தாரே.. என்ன ஆச்சி..

அவருக்கு ட்ரான்ஸ்பெர் .... வீடை காலி பண்ணிட்டு கிளம்பிட்டாரு.
சாவியை என்னிடம் தான் கொடுத்து இருக்கார். வாடகைக்கு நல்ல குடும்பமா வந்தா கொடுத்துட சொன்னார். மாசம் 150  ருபாய்.

உனக்கு எவ்வளவு..

நல்லா கேட்ட போ..அந்த ஆள் எச்சி கையில் காக்க ஓட்டுறத விடு  .. எச்சி கையில் ஜன்னலில் நீட்டி அதுல இருக்க சோத்து பருக்க காக்கா சாப்பிட வந்தா  அதை பிடிச்சி கொழம்பு வச்சி சாப்பிடுவான்.. அவனாவது எனக்கு ஏதாவது தரதாவது..

அப்புறம் ஏன் இந்த சாவியை வாங்கினே..

செந்திலு ..பக்கத்து வீடு நமக்கு அமையுறது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்.. அதை நாமே அமைச்சிக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு வந்தா அதை ஒழுங்கா யூஸ் பண்ணிக்கணும்.

திங்கள், 30 ஜனவரி, 2017

நெல்லை கண்ணன் அவர்களுக்கு .....

அன்பு ஆசான் நெல்லை கண்ணனுக்கு,

பொதுவாகவே பொங்கல் மற்றும் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு இந்தியாவில் இருந்து சிறப்பு விருந்தினர்களை அழைத்து வருவதை அறவே
வெறுப்பவன்  நான்.

கையில் வெண்ணையை வைத்து கொண்டு நெய்க்கு அலைவது போல் என்ற எண்ணம் தான் எனக்கு வரும்.

இந்த சிறப்பு விருந்தினரை நான் அறவே வெறுக்க காரணம்....

அமெரிக்க தமிழ் சங்கங்கள் நடத்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  தமிழை வளர்க்க.. திரைப்பட நடிகர் நடிகைகள் - இயக்குனர்கள் - தொலைக்காட்சி நடிகர்கள் என்று ஒரு பட்டாளமே வந்து செல்கின்றது.

வெள்ளி, 27 ஜனவரி, 2017

இந்த கவர்னர் சனியனை என்ன சொல்றது?

சென்ற வாரம் சென்னையில் நடந்த  புரட்சியில் லட்சக்கணக்கான மாணவர் மாணவியரும் மற்றும் நடுத்தர வயதோரும் சேர்ந்து ராவும் பகலுமாக ஒன்றாக போராடி வந்தனர்.

இந்த போராட்டம் வெற்றியே என்று நடுநிலையாளர்கள் சொன்னாலும்.. வன்முறையில் முடிந்தலால் .. தோல்வியே என்று மிருக நல ஆர்வலர்கள் சொல்லியும் வருகின்றார்கள்.

இந்த போராட்டத்தில்.. எனக்கு பிடித்த சில விடயங்கள்..

யார் ஒருவரின் தூண்டுதலும் இல்லாமல் ஒவ்வொருவரும் தம் தம் உரிமைக்காக வெளியே வந்தது. இந்நாள் வரை "வேலைக்காவைத்தவர்கள்.. அலை பேசியிலே வாழ்ந்து கொடு இருப்பவர்கள்"  என்று தான் நினைத்து இருந்தோம்.. ஆனால் இவர்களோ  நம் எண்ணத்தை மாற்றி அமைத்தார்கள்.

புதன், 25 ஜனவரி, 2017

கண்ணீரில் மிதக்க வைத்தான்..

சென்னையில் .. St.Gabriel  என்ற பள்ளிக்கூடத்தில் +2  படித்த காலம். எழில் என்ற ஒரு மாணவன் மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவன் கூட படித்து வந்தான். அவனை போல் அன்பானவனை நான் அறிந்ததே இல்லை.

ஒரு நாள் மதிய  உணவு வேளையில்....

எப்படி எழில் .. உன்னாலே மட்டும் இவ்வளவு அன்பா  இருக்க முடியுது?

சுயநலம் தான்...

டேய்.. உன் அன்ப பத்தி கேக்குறேன்.. சுயநலம்ன்னு சொல்றீயே..

இல்ல விசு .. உண்மையாகவே சுயநலம் தான்..

அட பாவி,. நான் சீரியஸா கேக்குறேன்..எப்படி..?

அப்பா..சொல்லி கொடுத்தாரு.

என்ன சொல்லி கொடுத்தாரு?

என்று கேட்க்கும் போதே.. அவன் தன் மதிய உணவை திறந்து அனைவருக்கும் மீன் வகையறாக்களை பகிர்ந்து கொடுத்தான்,..

என்ன எழில்.. தினந்தோறும்.. மீன் தானா?

ஆமா.. வாரம் ஒரு முறை இல்லாட்டி ரெண்டு முறை காய் வகைகள்..

சனி, 21 ஜனவரி, 2017

இப்படிக்கு, கேள்வி கேட்க உரிமை இல்லாத கொத்தடிமை.

இவ்வளவு நாளா எங்கே இருந்தீங்கன்னு கேக்கற அனைவருமே என் சந்ததி ஆட்கள் (40+). இவ்வளவு நாளா எங்கே இருந்தோம் என்று நாம் வெட்க பட்டு குனிய தான் வேண்டுமே தவிர.. இந்த சந்ததியை கேட்க கூடாது.

கடந்த 50 வருடங்களில் நம்மை நாமே கொத்தடிமையாகி கூத்தாடிகளுக்கு கூஜா தூக்கி குடும்ப அரசியலுக்கு பயந்து... பயந்து வாழ்ந்த நாம் .. இக்காலத்து பிள்ளைகளை கேள்வி கேட்கவே கூடாது.

வெள்ளி, 20 ஜனவரி, 2017

நான் காற்று வாங்க போனேன்.....

1983 ல் கல்லூரி நாட்கள்.. 1807 விடுதலை போராட்டத்தை ஆரம்பிச்சானே நம்ம தமிழன்.. அதே வேலுரில் ..
ஒரு வாரம் ... உணர்ச்சி பொங்கிய போராட்டம் ஆர்ப்பாட்டம். ஆனால் அன்று எங்களை நடத்த வழியில்லை. ஈன தலைவர்களை நம்பி ஈழ தமிழர்களை கோட்டை விட்டோம்.
அந்த தோல்வி போன வாரம் வரை மனதை உறுத்தி கொண்டே இருந்தது.
கடந்த நான்கு நாட்களாக ... அதே உணர்வு அதே போராட்டம் மனதில். 9000 மைலுக்கு அப்பால் இருந்தாலும் ..
மெரினா கடற்கரையில் ஒரு வாலிபனா உக்கார்ந்து இருக்கிறது போல் ஒரு "கெத்து"
எங்களை ஏமாற்றிய அதே இயக்கங்களின் -சங்கங்களின்
போராட்டமும் ஆர்ப்பாட்டமும் பார்க்கவே அருவருப்பா இருந்தது. இவர்களோடு சேர்ந்த நாமும் அந்த காலத்தில் செத்த பாம்பை அடித்து இருக்கின்றோம் என்ற வெட்கமும் வந்ததை சொல்லித்தானாக வேண்டும்.

ஊரார் பிள்ளைக்கு ஊட்டி விட்ட ... தாய்க்கு வணக்கம்..
ஊரே வியக்க உணவளித்த நல்லுள்ளங்களுக்கு வணக்கம்...
இந்த போராட்டத்தில் எத்தனையோ விஷயங்கள் அடியேனை கவர்ந்தது..
அதில் மிக்க முக்கியமான ஒன்று..
பெண்கள்... தமிழச்சிஎன்று தட்டி பார்த்தால்..... தெரியும்.
எவனோ ஒரு நீதிபதி சொன்னானமே.. முடிந்தால் தமிழனை புலியை அடக்கி காட்டு என்று..
அவனுக்கு..
புலியை அடக்க தமிழன் தேவை இல்லை... தமிழச்சி போதும்...
இந்த போராட்டத்தை பார்த்த அவன் வயிற்றில் புளி கரைந்து இருக்கும்.
இது காளைக்கான போராடலாம் என்று அவன் எண்ணி கொண்டு இருக்கின்றான்..
அவனுக்கு தெரியாது.. இது நாளைக்கான போராட்டம் என்று...
எனக்குள் செத்து மறைந்த உணர்வை மீட்டு வந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி!
மெரினாவில் நான் நுழைந்து வருடங்கள் பல.. அதற்கு காரணம் பல உண்டு.
அடுத்த முறை இந்தியா வருகையில்.. மெரினா செல்வேன்..
பாடலோடு...
நான் காற்று வாங்க போனேன்..
ஒரு காளை வாங்கி வந்தேன்.
என் தன்மானத்தை மீட்ட உனக்கு நன்றி..
ஐம்பது வயது தமிழன்.

திங்கள், 9 ஜனவரி, 2017

பொன்னான சில நிமிடங்கள்...

டாடி... சீக்கிரம் கிளம்புங்கோ...

கதறினாள் மூத்த ராசாத்தி..

எப்படியும் மறந்து இருப்பாள், நாமும் தூங்குவதை போல் பாசாங்கு செய்யலாம் என்று செயற்கையான குறட்டையை சத்தமாக விட்டு கொண்டு... மறுபக்கம் சாய்ந்து படுத்தேன்....

சனி மதியம்... பூனை தூக்கம் அரிதுதான்...

ஒன்றும் இல்லை இன்று காலையில் எழுந்தவுடன் அவள் சொன்னது...

வியாழன், 5 ஜனவரி, 2017

மக்கள் திலகமும் கலைஞரும் .... என்னே ஒரு காம்பினேஷன்..

மாடு ஒன்று வண்டி இழுக்க, வண்டியின் இரு பக்கமும் ..."உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் சுவரொட்டிகள். வண்டியை ஓட்டுபவர் கையில் இருக்கும் சிறு சிறு தாள்களை எதிரே வருபவர்களிடம் கொடுத்து கொண்டே செல்ல அடியேனுக்கும் கிடைத்தது அந்த தாளில் ஒன்று.

மக்கள் திலகம் MGR அவர்கள் இரட்டை வேடத்தில் உலகம் சுற்றும் வாலிபன்.

அதற்க்கு முன்னால் நான் எந்த படமும் பார்த்ததில்லை. அதனால் வீட்டில் அழைத்து செல்வார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை. சரி, நமக்கு வாய்த்தது இந்த தாள் என்று நினைக்கையில்..

பள்ளி கூடத்தில் கூட படிக்கும் தோழி ஒருத்தி..

என்ன விசு.. படம் பார்க்க ஆசையா?

 என்று கேட்க...

நானும் தலையாட்ட...

எங்க அப்பாவும் வாத்தியாரு தான். அவர் சொன்னால் உங்க அம்மா அனுப்பி வைப்பாங்க ...

என்று சொல்ல..

எனக்கோ நம்பிக்கை இல்லை.

அன்று இரவே வாத்தியார் இல்லத்தில் வந்து, அம்மாவிடம்...

புதன், 4 ஜனவரி, 2017

எங்கே ஆளையே காணோம்...?

அலை பேசி அலறியது...

விசு கதைக்கிறேன்...

என்ன வாத்தியாரே... ஈழத்து பாணியில் ....

சாரி .. பாணி... விஷயத்த சொல்லு..

என்னத்த சொல்றது..

சரி பின்னேரம் சந்திப்போம்...

நீ ஏன் வாத்தியாரே, எவனோ எழுதி கொடுத்ததை படிக்கிற மாதிரி பேசுற ?

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.

சரி.. எங்கே ஆளையே காணோம்...

இங்கே தான் நிக்கிறேன்..

என்னாது நிக்கிறியா?

ஓம்..

வாத்தியாரே .. என்ன கடுப்பு ஏத்துற...உனக்கு என்ன ஆச்சி..?

ஒன்னும் இல்ல தண்டம்... அம்மணியோட ஒன்று விட்ட சகோதரி... சுவிஸில் இருந்து குடும்பத்தோட வந்து இருக்காங்க.. அவங்க, அவங்க வீட்டுக்காரர் .. ரெண்டு ராசாத்திங்க ...