வெள்ளி, 25 நவம்பர், 2016

நன்றி... நன்றி... நன்றி...

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு....


ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் நான்காம் வியாழன் அன்று இந்நாட்டில் நன்றி திருநாள் கொண்டாடப்படும்.

மதம் - இனம் - நிறம் என்று எந்த வித்தியாசமும் பாராமல் நடைபெறும் ஒரு விழா தானே .. வியாழன் ஆரம்பித்து ஞாயிறு வரை இந்த கொண்டாட்டம் போகும்.

இந்த நாளை பொதுவாக குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒருவர் வீட்டில் சேர்ந்து கொண்டாடுவார்கள். இந்நாளின் உணவையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். வான்கோழி... அனைவரின் வீட்டிலும் வான்கோழி தான் சமைப்பார்கள்.


முழு வான்கோழியை அப்படியே அடுப்பில் வைத்து மெல்லிய சூட்டினால்  பதமாக செய்து வைப்பார்கள். கூடவே குழைந்த உருளை ( Mashed  Potatoe ) மற்றும் சில விசேஷங்கள்.

வருடம் முழுவதும் குடும்பத்தில் நடக்கும் சில கோபங்கள் - சில சண்டைகள் - சிறு சிறு பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நாளாக கூட இதை பார்க்கலாம்.

இந்நாளின் அழைப்பை முன்பகையை வைத்து நிராகரிக்க முடியாது. அதனால் வேண்டா வெறுப்பாய் சென்றாலும்.. அங்கே அநேக நேரத்தில் பழைய பிரச்சனைகள் முடித்து வைக்க படும்.

சில வேண்டாவாத ஆசாமிகளால் புதிய பிரச்சனைகளும் ஆரம்பித்து வைக்கப்படும். திருஷ்டிக்கென்றே சில ஆட்கள் இருக்கின்றார்கள் தானே.

இந்நாளில் அனைவரும் கூடி இருக்கையில் ஒவ்வொருவராக இந்த வருடம் தான் யார் யாருக்கு நன்றி கடமை பட்டுளேன் என்று சொல்லுவார்கள்.

பதிவர்கள் நாமும் குடும்பம் தானே. அதனால் என் நன்றியை கூறிக்கொள்கிறேன்.

அவனன்றி ஓர் அணுவும் அசையாது... அதற்கு நன்றி..
பெற்றெடுத்த அன்னைக்கு நன்றி..
காத்துக்கொள்ளும் அம்மணிக்கு நன்றி..
என்னை வளர்த்தெடுக்கும் மகள்களுக்கு நன்றி.


இந்த வருடம் நன்றி திருநாளை கொண்டாடுகையில் ஒரு பாடல்.... இதோ கேளுங்கள்.


பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே... 

5 கருத்துகள்:

  1. பதிவர்கள் நாமும் குடும்பம் தானே. அதனால் என் நன்றியை கூறிக்கொள்கிறேன்.//

    மிகச் சரி... வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  2. நன்றி திருநாளா? புதுசா இருக்கே. இதுவரை கேள்விப்படவே இல்லை. ஆனா கண்டிப்பா கொண்டாடப்படவேண்டிய நாளாகத் தோன்றுகிறது.
    உங்களுக்கும் நன்றி. நன்றி திருநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல செய்தியா இருக்கே..மகிழ்வாகவும் இருக்கு...பாடல் அருமை.நன்றி சார்.

    பதிலளிநீக்கு