வெள்ளி, 25 நவம்பர், 2016

நன்றி... நன்றி... நன்றி...

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு....


ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் நான்காம் வியாழன் அன்று இந்நாட்டில் நன்றி திருநாள் கொண்டாடப்படும்.

மதம் - இனம் - நிறம் என்று எந்த வித்தியாசமும் பாராமல் நடைபெறும் ஒரு விழா தானே .. வியாழன் ஆரம்பித்து ஞாயிறு வரை இந்த கொண்டாட்டம் போகும்.

இந்த நாளை பொதுவாக குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒருவர் வீட்டில் சேர்ந்து கொண்டாடுவார்கள். இந்நாளின் உணவையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். வான்கோழி... அனைவரின் வீட்டிலும் வான்கோழி தான் சமைப்பார்கள்.

செவ்வாய், 15 நவம்பர், 2016

தென்பாண்டி சீமையிலே...

2016  செப் மாதம் பள்ளி கூடம் துவங்கியதில் இருந்தே மனதில் ஓர் அமைதியின்மை. மூத்தவள் பள்ளி இறுதி வருடமாயிற்றே. அடுத்த வருடம் கல்லூரிக்கு போக வேண்டும்.

பொதுவாக இங்கே இந்தியர்களின் பிள்ளைகள் 100 க்கு 80 %  சதவீதம் கல்லூரியில் என்ன படிக்க போகின்றாய் என்று கேட்டால் அதற்கு வரும் பதில் .. Pre Medicine.

இந்த  Pre Medicine  என்ற படிப்பு இந்திய பெற்றோர்களுக்கு என்றே வந்த சனி என்று தான் சொல்லவேண்டும். இந்த படிப்புக்கு ஏற  குறைய நான்கு வருடங்கள் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும். அதற்க்கு எக்கசக்க செலவு, அதை முடித்தால் பின்பு மருத்துவ கல்லூரியை சேர்ந்து மருத்துவராகலாம். இந்த Pre Medicine   முடிப்பது என்பது குதிரை கொம்பு. நிறைய பிள்ளைகள் கிட்டத்தட்ட 3   வருடம் படித்து விட்டு தங்களால் முடியவில்லை என்று விலகி கொள்வார்கள்.

அமெரிக்காவின் கல்வி திட்டத்தின் படி ஒருவர் 26 - 28 வயதிற்குள் மருத்துவரானார் என்றல் அது பெரிய விஷயம்.

நானும் சரி - என் தோழமைகளுக்கு சரி முதல் பரம்பரை குடியேறிகள் ( First Generation Immigrants). நாங்கள் இந்தியாவில் படித்ததால் எங்களுக்கு இந்திய கல்வி திட்டம் சற்று தெரியும்.

18   வயதில் +2  முடித்து விட்டு அடுத்த  4 - 5  வருடங்களில் ஒருவர் மருத்துவர் -தணிக்கையாளர் - செவிலியர் - என்று ஏதாவது ஒரு துறையில் சான்றிதழ் பெற்று வேலைக்கு வந்து விடலாம்.

திங்கள், 14 நவம்பர், 2016

அமெரிக்காவில் பாக்யராஜின் லொள்ளு !


உறவினர் ஒருவரின் "திருமணம்" மற்றும் ராசாதிக்களின் "கோல்ப் சீசன்"  மற்றும் "அம்மணியின் ஐம்பதாவது பிறந்தநாள்" என்று கடந்த சில வாரங்கள் படு வேகமாக சென்றது.

எழுத எவ்வளவோ இருந்தபோதும், தமிழர்களுக்கு இப்போது பழக்கமாகிய " இன்னும் மூணு வாரத்தில் சரியாகிவிடும்" என்று ஒரு வாக்கியத்தை எழுதி விட்டு, முக்கியமான காரியங்களில் ஈடுபட்டேன்.

இப்போது, திருமணம் - கோல்ப் சீசன் - பிறந்தநாள் மூன்றும் முடிந்து வந்து இருந்த அணைத்து உறவினரும் இந்திய திரும்ப .. இல்லத்தில் இயல்பு நிலை திருப்பியது என்று ஞாயிறு நண்பகலில்  ஒரு பூனை தூக்கம் போடுகையில் . அலை பேசி அலறியது...

வாத்தியாரே...

சொல்லு தண்டம்..

என்னை இப்படி ஏமாத்திட்டேயே.. ?

சாரி தண்டம்.. அந்த 5௦௦-1௦௦௦ மாத்தமுடியாதுன்னு  அந்த பணத்தை உனக்கு கொடுத்தவுடன் தான் எனக்கு தெரிய வந்தது!

என்னாது 5௦௦-௦௦௦ மாத்தமுடியாதா? வாத்தியாரே?

அப்படி தண்டம் கேட்கும் போது தான் தண்டத்திற்கு இந்த விஷயம் இன்னும் தெரியவில்லை என்று சுதாரித்து கொண்டு...

இல்ல... ஐநூறாயிரம் பிரச்சனை தண்டம், நான் என்ன ஏமாத்தினேன்னு கேட்டேன்  ?

இம்புட்டு நாளா என்னமோ உலகத்திலே உன்னை மாதிரி யாரும் சமைக்க முடியாதுன்னு சொன்ன?

இன்னைக்கும் அதே தான் சொல்றேன், விஷயத்துக்கு வா.

உனக்கு சமையே தெரியல , சும்மா "டூப்" விட்டு  இருக்கன்னு சுந்தரி சொல்றா?

அட பாவி.. ஏன்..

சனி, 12 நவம்பர், 2016

500 -1000 பற்றிய என் கருத்து .. யாசிரின் மூலம்.

இந்த  பற்றி இவ்வளவு உன் எண்ணங்களை எழுத்து என்று பலர் கேட்டு இருந்தீர்கள். எழுத ஆரம்பிக்க அமர்ந்த நிமிடத்தில் அருமை நண்பர் யாசிரின் பதிவு ஒன்று வந்தது.

வார்த்தைக்கு வார்த்தை நான் சொல்ல வந்தது.. இதோ அவரின் எழுத்தை என் எழுத்தாக படித்து கொள்ளுங்கள்.

யாசிர்... தங்களின் அனுமதி இன்றி இங்கே தங்கள் பதிவின் தொடர்பை கொடுத்துளேன்.  ஆட்சேபனை எதுவும் இருந்தால் சொல்லவும். எடுத்து விடுகின்றேன்.

இந்த பதிவு மட்டும் இல்லாமல் யாசரின் மற்ற பதிவுகளை படித்து பாருங்கள். மனுஷன் என்னமா எழுதுகின்றார்.

நான் எழுதும் எழுத்துக்களை வைத்து என்னை நகைசுவை பதிவர் என்று நீங்கள் அநேகர் அழைத்து இன்றோடு பொய்யாகிவிடும்.

புதன், 9 நவம்பர், 2016

அமெரிக்க தேர்தலில் பிடித்தது...

வல்லரசான அமெரிக்க நாட்டில் வாழ்வதை ஒரு வரமாக கருதுபவன் நான். நன்மை தீமை எங்கும் உண்டு... அதை எடை போட்டு பார்த்து நன்மை தான் அதிகம் என்று எனக்கே ஒரு தீர்ப்பு வழங்கி கொண்டு தான் இந்த வாழ்க்கையை இங்கே ஆரம்பித்தேன்.

இந்த நன்மைகளில் ஒன்று தான் இந்த நாட்டின் தேர்தல் முறை. அதில் எனக்கு பிடித்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.

செவ்வாய், 8 நவம்பர், 2016

ஆயிரம் நிலவே வா !

அருமை அண்ணன் ஜார்ஜ் அவர்களுக்கு....

சென்ற வாரம் தாம் அடியேனின் இல்லத்தில் இருக்கையில் அடியேனின் இளைய ராசாத்தி என்னை  அலை பேசியில் அழைத்து உடனடியாக இல்லத்திற்கு வர சொன்னாள்.

அலுவலகத்தில் சில முக்கியமான வேளையில் இருக்கின்றேன் என்றேன். அவளோ பிடிவாதமாக உடனடியாக வரவேண்டும் என்ற கட்டளையிட ...

உடனடியாக வண்டியை எடுத்தேன்.

ஐம்பத்திலும் ஆசை வரும்...

என்னங்க ... எப்ப பாரு கம்ப்யூட்டரில் இருக்கீங்க...

அம்மணியின் குரல் கேட்டு அடித்த எழுத்தை கூட சேமிக்காமல் அப்படியே கணிணியை மூடி ...

ஒன்னும் இல்ல செய்தி படிச்சினு இருந்தேன்...

என்ன செய்தி படிச்சீங்க சொல்லுங்க...

தமிழக முதல்வர் எப்படி இருக்காங்கன்னு?

எந்த தளத்தில்...

தினமலரில் தான்..