செவ்வாய், 11 அக்டோபர், 2016

காவல் துறைக்கு ஒரு ஆழ்ந்த கேள்வி!


கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் நாம் அனைவரும் அறிந்ததே.

ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு முன் ஜெயலலிதா அவர்கள் உடல் நலம் குறைந்ததால் அவசரமாக அப்போலோ மருத்துவமனையில் சேர்க்க பட்டார்கள்.

பெரும்பான்மையான தமிழக மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட முதல்வராயிற்றே. ஓர் கட்சியின் தலைமை ஆயிற்றே. அதனால் இவர்களின் ஆரோக்கியத்தை பற்றி பொது மக்கள் அறிந்து கொள்வது மிக அவசியம் என்பது மிகவும் முக்கியமானது என்பதை கட்சியும் சரி - அரசாங்கமும் சரி - அப்போலோவும் சரி மறந்து விட்டனர்.



இப்படி இந்த மூன்று அமைப்புகளும் தம் தம் கடமையில் இருந்து தவறியதால் ஜெயலலிதாவின் உடல் நிலையை பற்றி அதிக அளவில் வதந்தி பரவி வந்தது.

நேற்று  செய்திகள் படிக்கையில் ...

ஜெயலலிதாவின் உடல் நிலையை பற்றி வதந்தி கிளப்பியதால் காவல் துறையினர் இரு நபர்களை கைது செய்ததாக வந்த இருந்தது.

நல்ல செயல் தான். வதந்தி என்பது யாருக்குமே என்றுமே நல்லது இல்லை . இதை முளையிலேயே கிள்ளி ஏறிய வேண்டும். இந்த நபர்களை கண்டறிந்து கைது செய்த காவல் துறையினருக்கு பாராட்டுகள்.

இங்கே காவல் துறையினருக்கு ஒரு அறிவுரையும் சொல்ல விரும்புகிறேன். இந்த நபர்களை மின்சார கம்பி இல்லாத அறையில் வைக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

சரி, இப்போது தலைப்பிற்கு வருகிறேன்.

வதந்தி என்றால் என்ன?  ஆங்கிலத்தில் இதை "Gossip  என்று அழைப்பார்கள். அதற்கான அர்த்தம் :

"Casual or unconstrained conversation or reports about other people, typically involving details that are not confirmed as being true".

மற்றவர்களை பற்றி உண்மைக்கு புறம்பான பேச்சுகளை பேசுவது .. பரப்புவது.

ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோ அழைத்து செல்ல பட்ட பின்பு அப்போல்லோவில் இருந்து வந்த முதல் மருத்துவ அறிக்கையில் இவர்களுக்கு காய்ச்சல் உள்ளது அதற்கு சிகிச்சை எடுக்க வந்தார்கள். இன்னும் இரண்டு நாட்களில் இல்லத்திற்கு திரும்புவார்கள் என்று போட்டு இருந்தது.

இந்த அறிக்கையை படித்து கொண்டு இருக்கும் போதே..

பா ஜ க வின் சுப்ரமணிய சாமி... தனது சமூக வலைத்தளத்தில்..



போட்டு இருந்தார்.

சாதாரண காய்ச்சலில் இருப்பவர்களை உடனடியாக தனி  விமானம் மூலம்சிங்கப்பூர் சென்று மருத்துவம் செய்து கொள்ளவும் என்று அறிவுறுத்துவது "வதந்தி " தானே.

நம்மில் எத்தனை பேர் காய்ச்சலுக்கான  தனி  விமானம் மூலம் சிங்கப்பூர் செல்கிறோம். நமது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில்.. இனி இந்தியாவில் இருந்து பிழைக்க முடியாது என்ற நிலையில் தானே அரசியல்வாதிகளும் - பணக்காரர்களும் - அதிகாரிகளும் வெளி நாடு செல்வார்கள்.

காவல் துறையே.

இப்படியான   சாதாரண காய்ச்சலை மிக பெரிய பாதிப்பு என்ற வதந்தியை பரப்பிய சுப்ரமணிய ஸ்வாமியை உடனடியாக  கைது செய்ய வேண்டாமா?

சாதாரண குடிமகனுக்கு ஒரு சட்டம்.. சுப்ரமணிய ஸ்வாமிக்கு ஒரு சட்டமா?

தமிழக காவல் துறைக்கு தைரியம் இருந்தால் சுப்ரமணிய ஸ்வாமியை கைது செய்யட்டும்.

ஒரு வேளை, ஜெயலலிதாவிற்கு உண்மையாகவே சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெரும் அளவிற்கு உடலில் பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருந்தால்,  காவல் துறை உடனடியாக...

இந்த உண்மையை மறைத்து, முதல்வருக்கு வெறும் காய்ச்சல் என்று பொய் சொன்ன அப்பல்லோ  மருத்துவமனையின் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு சுப்ரமணிய ஸ்வாமியையும் - அப்போலோவையும் ஒன்றும் செய்ய முடியாமல்.. நாங்களும் போலீஸ் என்று நிரூபிக்க...

பொது மக்களில் இருவரை கைது செய்து....


மீண்டும் சொல்கிறேன்..

தைரியம் இருந்தால் வதந்தியை கிளப்பி விட்ட சுப்ரமணிய ஸ்வாமியை அல்லது பொய் சொல்லிய மருத்துவமனை அதிகாரிகளை கைது செய்யுங்கள்,

அப்போது பொது மக்கள் அனைவரும் வதந்தியை தவிர்ப்பார்கள்.


பின் குறிப்பு  :

ஒரு வேளை.. இதை படித்த பின்பு ...

இதுதாண்டா போலீஸ் என்ற வேகத்தில் இவர்களை கைது செய்துவிட்டீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள்..

இவர்கள் இருக்கும் அறையில் மின்சார கம்பி இருந்தால் பரவாயில்லை.. !

5 கருத்துகள்:

  1. நல்ல பதிவு என்று கமெண்ட் போட கூட பயமாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  2. சுப்பரமணிய சுவாமிக்கு அப்போலோ ஹாஸ்பிடலை பற்றி நன்றாக தெரிந்திருக்கிறதது அதனால் அப்படி சொன்னார்.
    அது போல அப்போலோ ஹாஸ்பிடல் டாக்டர்களும் முதலில் காய்ச்சலுக்குதான் சிகிச்சை அளித்தார்கள் ஒரே நாளில் அம்மாவை வீட்டிற்கு அனுப்பி வைச்சால் நன்றாக இருக்காது என்பதால் அவரை தங்க வைச்சு உபசாரம் செய்கிறார்கள் இதெல்லாம் தப்பா?

    முதலி உங்களைதான் உள்ளே பிடிச்சு போடனும் மக்களின் மனதில் தவறான கருத்தை விதைப்பதால்.....

    பதிலளிநீக்கு
  3. https://www.facebook.com/sam.george.946/posts/10209093664372010?pnref=story

    பதிலளிநீக்கு
  4. ஹஹஹ் நல்ல கேள்வி. அது சரி பொது மக்களில் வதந்தி கிளப்பியவர்கள் என்று யாரைக் கைது செய்ய முடியும் அப்படியென்றால் சமூக வலைத்தளங்களில் இது பற்றி பல செய்திகள் நக்கல்கள், நையாண்டிகள் வந்துளள்ளனவெ அதை எழுதியவர்களை எல்லாம் என்ன செய்வார்கள்? அதுவும் யார் புரளி கிளப்பினார்கள் என்று தெரியாமலேயே வாட்ஸ் ஆப்பில் வலம் வருதே....

    பதிலளிநீக்கு