செவ்வாய், 6 செப்டம்பர், 2016

சேரனின் அருவருப்பிற்கு கோடி நன்றி ...

சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இயக்குனர் சேரன் அவர்கள் பேசிய ஒரு பேச்சு பிரச்சனைக்கு உள்ளானது.

முதலில் இயக்குனர் சேரனின் திரைப்படைப்பை பற்றி என் கருத்து. ஆண்டவன் புண்ணியத்தில் இவர் இயக்கிய படமோ நடித்த படமோ இதில் எதையும் அடியேன் கண்டதில்லை.

ஆட்டோகிராப் என்ற படம் நல்ல படம் ... நம் ஒவ்வொருவருக்கும் நடந்ததை போல் ஒரு கதை, அதை மிகவும் அழகாக சித்தரித்து உள்ளார் என்று கேள்வி பட்டேன். இருந்தாலும் என் நல்ல காலம் அதையும்  பார்க்கவில்லை.

சரி இவரின் பேச்சுக்கு வருவோம்.

திருட்டு டிவிடி மற்றும் இணைய தலத்தில் தமிழ் படங்களை தருவது ஈழ தமிழர்களே ..



இவர்களுக்கு போய் போராடினோம் என்று நான் நினைக்கையில் "அருவருப்பாக" இருக்கின்றது.

என்ன ஒரு பேச்சு?

என்ன ஒரு கேவலமான பேச்சு?

இங்கே முதலில் ஒரு கேள்வி ....

அருவருப்பு என்பது என்ன?

நம்மால் சகித்து கொள்ளமுடியாத, நம்மால் உள்வாங்கி கொள்ள முடியாமல், நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு காரியம் தான் அருவருப்பானது.

ஒரு இனத்தையே தாரை வார்த்து கொடுத்தோம். பச்சிளங்குழந்தைகளை பறிகொடுத்தோம். வாலிப பெண்களை பச்சை வாழை மரத்தை வெட்டி சாய்த்தது போல் சாய்த்ததை கண்டோம்.

மகளுக்கு எதிரில் தந்தை நிர்வாணமாக.. மகனுக்கு எதிரில் தாய் நிர்வாணமாக.. அண்ணன் - அக்கா - தங்கை -மாமன் - மச்சான் என்று கும்பல் கும்பலாய் குருதி நடுங்க குண்டடிபட்டு குழியில் தள்ளப்பட்டார்களே..

அவர்களுக்காக சேரன் தான் போராடிய போராட்டத்தை கண்டு "அருவருப்பு"  அடைகிறாராம்.

வேண்டாம் சேரன். நீங்கள் அருவருப்பு அடைய வேண்டாம்.

நீங்கள் செய்த போராட்டம்  தானே.. பிரபாகரனின் தாயாரை தமிழகத்திற்கு அழைத்து வந்து மருத்துவ சிகிச்சை பெற்று தந்தது.

நீங்கள் செய்த போராட்டத்தினால் தானே.. உலக பிரசித்தி பெற்ற யாழ்ப்பாண நூலகம் மீண்டும் உருவெடுத்து வந்து நிற்கின்றது.

நீங்கள் செய்த போராட்டத்தினால் தானே ஈழமே ஒரு விதவை நாடாக உலா வருகின்றது..

நீங்கள் செய்த போராட்டத்தினால் தானே.. தன்மான தமிழன் தன் அடையாளத்தை இழந்து அகதி என்று வாழ்ந்து  கொண்டு இருக்கின்றான்.

உங்கள் போராட்டத்திற்கு மிக்க நன்றி. தங்களை அருவருப்பு அடைய செய்ததற்காக  ஈழ தமிழர்கள் மிகவும் வருந்துகிறார்கள்.

சேரன் அவர்களே....

இந்தியாவிலே, இந்த மாதிரி திருட்டுத்தனமான காரியங்கள் நடப்பது தமிழகத்தில் மட்டுமே.

ஊரில் நடக்கும் அட்டூழியத்தை தட்டி கேட்க நாதி இல்லை, வெளியூரில் இருக்கும் ஈழ தமிழரை பற்றி பேச வந்துள்ளீர்.

உமக்கு தைரியம் இருந்தால்.. இந்த திருடு நிறைந்த தமிழகத்தில் நடக்கும் கேடு கெட்ட  ஆட்சியினால்,  இந்த ஆட்சியின் ஆளுமை இல்லாமையால் , காவல் துறை எந்த ஆணியும் புடுங்காததை பார்த்து நான் "அருவருப்பு" அடைகிறேன் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

முடியாது... .ஏன் என்றால் ... பயம்.

எமக்கு ஒரு சந்தேகம். உம்மை போல்  "அருவறுப்படைவர்கள்" எல்லாம் நம்பி போராடியதால் தான் என்னவோ ... ஈழ தமிழரின் நிலை இப்படியாகிவிட்டது.

கடைசியாக ஒரு விண்ணப்பம்..

இனியாவது இவர்களுக்காக போராடாதீர்கள். எதிரி என்று அறிந்து அவனை போராடி வெல்வது எளிது. ஆனால் கூடவே அமர்ந்து அருவறுப்படையும் தங்கள் ஈழ தமிழர்களை  அறுவடை செய்ய வேண்டாம்.

பின் குறிப்பு :

நான் "அருவருப்பு" அடைந்தால் அடையாவிட்டால் உனக்கு என்ன என்று நீர் கேட்பது கேட்கின்றது.

ஈழம் நான் புகுந்த வீடு ...

புரியல...?

தனி ஈழம் என்று கேட்டால் கிடைக்காது என்று அறிந்து எனக்கு என்று ஒன்றை நானே அமைத்து கொண்ட   கருவம் எனக்கு இருக்கு!

நீ "அருவருத்தது".. என்னை.. என் அம்மணியை.. என் ராசாத்திகளை ....

சில நாட்கள் முன்பு வரை உனக்கு வாயில தான் சனி என்று நினைத்தேன்.  அது தவறு என்று இப்போது தான் தெரிகின்றது. உன் மனதே அது தான்.

மறக்கும் முன் எங்கள் நிர்வாணத்தை மறந்து - மறைத்து - மறுத்து சொல்கிறேன்...

தங்களின் தியாக போராட்டத்திற்கு எங்கள் நன்றி.

12 கருத்துகள்:

  1. விடுங்கள். இவன் வீட்டிலே ஆயிரம் பிரச்சினை அங்கே ஒன்னும் பண்ண முடியவில்லை. வெளியில் உளறுகிறான்....

    பதிலளிநீக்கு
  2. Finally a serious post from Visu! There are two sides to this coin. Today, because of Ezhath thamizharkaL, Kollywood gets millions of box office collection from UK, France, Germany, Canada, Australia. Those millions are Ezha makkal money! Moreover Aingaran and Lyca are making and distributing Kollywood movies. They do get hurt because of these illegal copies. It was unnecessary for Cheran to make such a sweeping statement fingering only on EzhaththamizarkaL!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Varun,

      Long time no see man. Trust things are fine. Hope you are enjoying the NFL Games.

      BTW, I do try to write serious ones now and then. Its just that, my character wouldn't let me do it, more often.

      Thanks for dropping by.

      You are right, there are two sides to every coin, but what Cheran did was "Carpet Bombing".

      நீக்கு
  3. கோபத்தின் ஞாயம்
    எங்களுக்குப் புரிந்தது
    அவருக்கும் புரிந்து தொலைந்திருக்கும்
    என நினைக்கிறேன்
    அதனால்தான் ஒரு வருத்த அறிக்கை
    தந்ததாக நினைவு
    பகிர வேண்டியபதிவு
    அருமையாகப் பதிவு செய்தமைக்கு
    நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. இவரெல்லாம் காசுக்கு விலை போகும் ஆள்....எண்ணற்ற உயிர்களின் மதிப்பை அறியாத பிண்டங்கள்..வெட்டி பேச்சு..அலட்சியப்படுத்த வேண்டும்.சார்..இவர்களைப்போன்றவர்களை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. hello mam you do not know the real situations.... well informed people know very well certain illegal activities of srilankan tamils do you know that particularly in credit card fraudelent usage certain srilankan tamils are definetely involved ../. reporets are there geetha m

      நீக்கு
  5. திரைப்படதுறையில் உள்ளவர்கள் பொதுவாகவே தன்னை பற்றிமட்டும்தான் கவலைப்படுவார்கள் அவர்கள் சமுதாயத்தைப் பற்றி எல்லாம் கவலைப்படமாட்டார்கள் ஆனால் அவரகள் சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் போலத்தான் நடிப்பார்கள் சேரனும் இதற்கு விதிவிலக்கு அல்ல....

    பதிலளிநீக்கு
  6. பல சமயங்களில் இப்படி எதையாவது சொல்லி தங்களை செய்திகளில் நிறுத்திக் கொள்வது இவர்களது வழக்கம்...... வேறென்ன சொல்ல.

    பதிலளிநீக்கு
  7. BRO OK OK BUT THERE ARE LOTS OF NEGATIVE NEWS ABOUT SRILANKAN TAMILS SETTLED IN INDIA >>> DO YOU HONESTLY BELIEVE THAT ALL SRILANKAN TAMILS ARE HUNDRED PERCENT LAW ABIDING CITIZENS......MY INTELLIGENT REPORTS DIFFER PL

    பதிலளிநீக்கு
  8. சினிமாக்காரர்களே அப்படித்தான்...எடுத்தோம் கவிழ்த்தோம் என்று வாய் விட வேண்டியய்து பின்னர் கூடவெ அன்னெக்சர் போல ஒரு சாரி என்று ஒரு அறிக்கை...

    கீதா

    பதிலளிநீக்கு
  9. எதையும் பொதுமைப்படுத்திப் பேசமுடியாது. யாரையும் குறை சொல்வதற்கு முன்னால், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், கதை பிடிக்க, வெளி'நாட்டுத் திரைப்படத்தின் ஒரிஜனல் டி.வி.டிக்களைத்தான் வாங்கிப் பார்க்கிறார்களா? (காபிரைட் படி, ஒருவர் வாங்கியது இன்னொருவருக்குக் கொடுக்கக்கூடாது) அதைச் சரிசெய்துவிட்டு மற்றவர்களைப் பற்றிப் பேசலாம்.

    பதிலளிநீக்கு