திங்கள், 12 செப்டம்பர், 2016

அமெரிக்க தமிழனும் - தமிழ் ரத்னாவும்.

நேற்று இரவு உறங்கும் முன் நண்பர் ஒருவரின் அழைப்பு வந்தது.


சொல்லுங்க...

விசு அமெரிக்க தமிழர் யார்?

ஆமா.. இவ்வளவு நாள் தமிழர் யாருன்னு கேட்டுனு இருந்திங்க? இப்ப அமெரிக்க தமிழர் யாரு? ரொம்ப முக்கியம்.

சீரியஸ் ..அமெரிக்க தமிழர் யார்?

அப்படி ஒரு ரகமே இல்லை. தமிழை தாய்மொழியாக கொண்டோர் இடம் பெயர்ந்து வந்து அமெரிக்காவில் வசிப்பவர்கள் என்று வைத்து கொள்ளலாம்.

சரி...சந்தோசம்.

தமிழருக்காக நீங்க என்ன செய்து இருக்கீங்க.

இந்த விஷமம் தானே வேண்டாகுன்றது. தமிழருக்குஆகா தமிழநாட்டில் நீங்க தேர்ந்தெடுத்த தலைகளையே ஒன்னும் செய்யல ..
நாங்க என்னாத்த செய்ய போறோம்?

அப்புறம் "தமிழ் ரத்னா " என்ற ஒரு விருதை உருவாக்கி அதை கொடுக்கறதுக்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தா?
உலக தமிழரின் கௌரவத்திற்கு உழைத்ததற்காக ... 
(இப்பவும் இந்தியா தானே.. இதுல என்ன Former?)

டேய்.. இந்த தமிழ் ரத்னா எல்லாம் எனக்கு தெரியாது. நான் கொடுக்குறது " நாதாரித்தனம் செய்தாலும் நாசூக்கா செய்வோர் விருது" அதுக்கும் இதுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல.. இருந்தாலும் வேறே வேறே விருது...

சீரியஸ் விசு.. அமெரிக்க்கா தமிழ் சங்கத்தில் இருந்து .. தமிழ் ரத்னா என்ற விருதை சுபராமணிய ஸ்வாமிக்கு தந்து இருக்காங்க.

தமிழ் ரத்னா ... .சுனா சானாக்கா? எதுக்கு ?

."For his Service to enhance the Prestige of Global Tamils:......."

நீ சும்மா தமாஷ் பண்ற? எனக்கு வேலை இருக்கு அப்புறம் பாக்கலாம்.

விசு, எனக்கு வர கோவத்துக்கு... நீ  தப்பிக்க பாக்குற!

எனக்கு .. சரி.. கேக்க ... ள்ளைன்னு நானே விட்டு விட்டு பேசி தொடர்ப்பை துண்டித்து... விசாரித்தேன்.

உண்மையாகவே தான் இவருக்கு அமெரிக்க தமிழ் சங்கம் என்ற ஒரு அமைப்பில் இருந்து இந்த விருதை தந்து இருக்கின்றார்கள்.

இந்த அமைப்பிற்கு இப்படி ஒரு விருதை தர யார் உரிமை தந்தார்கள் என்று தெரியவில்லை.

யு டுயூப் சென்று இந்த நிகழ்ச்சியை  கண்டேன். மூன்று பேர் மேடையில் உள்ளார்கள்.

மொத்த நிகழ்ச்சியும்  ஆங்கிலத்தில் நடந்தது. அந்த பகுதியில் வாழும் அறிந்த  நண்பர் ஒருவரை அழைத்து, நீங்க சென்று இருந்தீர்களா என்றேன்?

அவரோ..

ஏதோ கலந்துருடையாடல் என்று கூறினார்கள். இருந்தாலும் நான் செல்லவில்லை. மொத்தமே 15-20 பேர் தான் சென்று இருப்பார்கள்.. என்றார்.

இதனால் என் இனிய தமிழ் மக்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால்... இந்த விருதுக்கும் அமெரிக்க வாழ் தமிழ் மகனாகிய எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை.  இந்த விருதை பற்றி அடியேனின் கருத்துக்களை முக நூலில் இட்டு இருந்தேன்... அதை கீழே படிக்கலாம்.


************************
அமெரிக்க தமிழ் சங்கத்தில் இருந்து தமிழ் ரத்னா விருது பெற்ற சுனா சானாவிற்கு அமெரிக்க இலங்கை தமிழ் சங்கமும் உடனடியாக இலங்கை தமிழ் ரத்னா என்ற விருதை வழங்குமாறு...

நாதாரித்தனம் செய்தாலும் நாசூக்கா செய்யணும் சங்கம் சார்பாக பணிவோடு கேட்டு கொள்கிறோம் .
                                                                 ************************
நாதரித்தனம் செய்தாலும் நாசூக்கா செய்யணும் விருதில் ஒரு இன்ப அதிர்ச்சி .
இவ்வளவு நாளாக இந்த விருதை நாம் நமக்கு தெரிந்தோர்க்கு அளித்து வந்தோம். இம்முறை.. இந்த விருதை ஒரு விருதுக்கு கொடுக்கும் வாய்ப்பை பெற்று இருக்கின்றோம்.
இந்த வாரத்திற்க்கான விருது ... தமிழ் ரத்னா விருதுக்கு ..

                                                        ************************
அமெரிக்காவில் பொது இடத்தில குப்பையை போட்டதால் சுப்ரமணிய ஸ்வாமிக்கு அபராதம்.
குப்பையை எடுத்து பார்த்ததில்... ஒரு கட்டையினால் செய்த சட்டத்தில் "தமிழ் ரத்னா " என்று எழுதி இருந்தது.

                                                            ************************


இதுதாங்க அந்த தமிழ் ரத்னா மொமெண்ட்...
எல்லாரும் எழுந்து நின்னு ஒரு முறை " நீராரும் கடலெடுத்த" பாடிட்டு ... புளியோதரை இனமா தரங்களாம் சாப்பிட்டு போங்க..
By the Way ... அமெரிக்காவில் இந்த விருதை ஆர்டர் பண்ண 8 டாலர் ஆகியிருக்கும். ஒரு வேளை இந்தியாவில் 250 ரூபாய்க்கு வாங்கி இருப்பாங்களா?
                                                           ************************
சரி.. நம்ம தகுதிக்கு நாமும் ஏதாவது செய்து வைப்போம்.
அமெரிக்க தமிழ் வழிவந்தோர் சங்கத்தில் இருந்து தமிழ் ரத்னா விருது வழங்க போகின்றோம்.
தமிழே தெரியாத.. தமிழுக்கு சம்மந்தம் இல்லாதா ஆட்கள் யாராவது இருந்தா சொல்லுங்க..
இந்த விருதை அனுப்பி வைக்கிறோம்.
                                                           ************************
அட பாவிகளே..
கொஞ்சம் பெருமையா அமெரிக்க வாழ் தமிழன் என்று வண்டிய ஒட்டின்னு இருந்தேன்.
அதுக்கு இந்த அமெரிக்க தமிழ் சங்கம் வைச்சாண்டா ஆப்பு.
உண்மையா சொல்றேங்க.. யாராவது இந்த அமைப்பை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.
எந்த தகுதியில் சுனா சானாவிற்கு தமிழ் ரத்னா என்ற விருதை கொடுத்தாங்கன்னு கேக்கவேணும்.
                                                           ************************
இன்னாபா நடக்குது உங்க ஏரியாவில் .... தமிழ் ரத்னா ன்னு வைச்சு தாக்குறீங்களாமே..
இந்த விருதுக்கான கலிபோர்னியா உரிமையை எங்களுக்கு தர முடியுமா?
நானும் இதை ரெண்டு மூணு பேருக்கு தரலாம்னு இருக்கேன்.

                                                           ************************

புதுக்கோட்டையில் மொத்தம் எத்தனை பேர் இருக்கீங்க.. ஒன்னும் இல்ல ... தமிழ் ரத்னா விருது ஆர்டர் பண்ணனும்.. மொத்தமா பண்ண சீப்பா இருக்கும் இல்ல ... அதுதான்,

                                                           ************************
On a serious note.... American Tamil Sangam has awarded Tamil Ratna ... to Dr. Subramaniya Swami..."For his Service to enhance the Prestige of Global Tamils:.......
Wow.. I am flabbergasted... More like Conked to the Gills and Blown to the Lungs...

                                                           ************************

6 கருத்துகள்:

  1. அமெரிக்க தமிழர்களை அமெரிக்கா வாழ் தமிழ் சங்கம் கேவலப்படுத்தி இருக்கிறது சாமிக்கு அவார்ட் கொடுத்ததன் மூலம்

    பதிலளிநீக்கு
  2. அந்த பகுதியில் வசிக்கும் தமிழர்கள் எங்களுக்கு தெரியாமலே விருது கொடுத்திருக்காங்க இந்த அமெரிக்க வாழ் தமிழ் சங்கம். ஒரு

    பதிலளிநீக்கு
  3. ஆஹா அந்த தமிழ்ரத்னா விருதுக்கு சுனாசானா தான் சரி..புதுக்கோட்டை ஆளுங்க சரிப்பட மாட்டாங்க...சகோ...நல்ல பகடி...

    பதிலளிநீக்கு
  4. அடுத்த முறை அமெரிக்கா
    வருகையில் எனக்கும் கிடைக்க
    வாய்ப்பிருக்கிறது
    ஏனெனில் எனக்கும் இங்கு
    சொந்த பந்தம் மற்றும் தெரிந்தவர்கள்
    என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உள்ளார்கள்
    வழிகாட்டிய சு.சா வுக்கு வாழ்த்துக்கள்
    நிஜத்தை வெளிச்சமிட்டுக் காட்டியமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. சு சா வுக்கு விருது கொடுத்து தழிழர்களையே கேவலப்படுத்திவிட்டார்கள். அது சரி சு சா யாரு? கிழக்கும் மேற்கும் அங்கு என்ன செய்துகொண்டிருக்கீங்க. இங்க மட்டும்தான் உங்க விராப்பா?!!!! இவ்வளவு பதிவுலகில் கொடி கட்டிப் பறக்கும் கிழக்கிற்கும் மேற்கிற்கும் தெரியாமல் அமெரிக்காவில் தமிழ் விருதா?? !! ஆச்சரியம்தான்....

    நல்ல பதிவு விசு!!

    பதிலளிநீக்கு
  6. மிகப் பெரிய கொடுமை இது? உங்கள் பக்கத்திற்கு வந்ததால் அறிந்து கொண்டேன். இந்த செய்தி தமிழ் ஊடகங்களில் வராத அளவிற்கு ரகசியமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் போல. நாளை இது பற்றி எழுத வேண்டும்

    பதிலளிநீக்கு