திங்கள், 1 ஆகஸ்ட், 2016

ஒரு அறை கொடுத்தா இன்னொரு அறை Free ....

வாத்தியாரே.....

தண்டம்... எப்ப வந்த?

அது இருக்கட்டும்... எனக்கு வர கோவத்துக்கு....

நிதானம் தண்டம்... என்ன ஆச்சி...?

என்ன ஒரு அநியாயம் வாத்தியாரே..

பாணி... விஷயத்தை சொல்லு...

இதுவே எனக்கு நடந்து இருந்தா...


தண்டம்.. திங்கள் கிழமை சாயங்காலம்... இப்ப தான் வேலை முடிஞ்சு வீட்டுக்கு போய்ன்னு இருக்கேன். விஷயத்தை ஜல்தி சொல்லு.. இல்லாட்டி இந்த சனிக்கிழமை பார்க்கலாம்..

சனி கிழமை.. சனி கிழமை என்ன பிளான்.. எங்கே பாக்குறோம்.

தண்டம்.. யாரு இந்தியாவில் இருந்து வந்தாலும் அந்த வார இறுதியில் அவன் வீட்டுக்கு தற்செயலா போனா இந்தியாவில் இருந்து வந்த " இனிப்பு - காரம்" வகையறாக்கள் கிடைக்கும்னு நீ தானே சொல்லி கொடுத்த.. இன்னைக்கு தான் நீ இந்தியாவில் இருந்து வந்து இருக்கே... அதுதான்.. சனி வந்து பாக்குறேன்.

உன் பிரச்சனை உனக்கு வாத்தியாரே.. நான் சொல்ல வந்தது...

நீ  சொல்ல வந்தத தான் சொல்லவே மாட்டுறியே.... என்ன பிரச்சனை...?

வாத்தியாரே.. போனவாரம் டெல்லி விமான நிலையத்தில் காத்துனு இருந்தேன்.

அட பாவி.. இந்தியா போனா டெல்லி மட்டும் போகாதே. அங்கே எந்த புத்துல எந்த பாம்போன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன்.. உன்னை  யார் அங்கே போக சொன்னது.. சரி.. யாராவது "அரசியல்வாந்தியிடம்" வாங்கி கட்டிக்கினியா ?

இல்ல வாத்தியாரே.. நான் கவனமாதான் இருந்தேன்...

அப்புறம் என்னை பிரச்சனை..

எனக்கு எதிரில் என் கண் எதிரில் ஒரு ஆம்பிளைக்கு நடந்த அநியாயம்...


அட பாவி.. டெல்லியில் பொம்பளைக்கு தான பிரச்சனை.. இது புது கதையா இருக்கே.. மேலே சொல்லு..

அங்கே நாங்க எல்லாரும் சென்னை விமானத்துக்கு போக காத்துனு இருந்தோமா, அப்ப...

அப்பத்தான் , அய்யய்யோ சென்னையில் இறங்க போறோம் .. ஹெல்மெட் இல்லாமல் போறோமேன்னு நினைப்பு வந்திச்சா?

உன் லொல்லை கொஞ்சம் நிறுத்து... விஷயத்தை கேளு..

லொல்லு.. சாரி.. சொல்லு...

எனக்கு எதிரில் "ஒருதலை ராகம் ராஜேந்தர்" பாணியில் ஒரு ஆள்.. பாவம்...

டேய்.. ராஜேந்தர் மாதிரி இருக்கிறது பாவம் இல்லடா.. அதுலேயும் அவர் வெற்றி பெற்று.. வந்து இருக்காரு இல்ல ...விடு.. மனசு இருந்தா மார்க்க பந்து..

அது மார்க்க பந்து இல்ல வாத்தியாரே.. மார்க்கண்டு..

ரொம்ப அவசியம்...

அது இல்ல வாத்தியாரே..

சொல்லு...

அந்த ஆள்.. இருந்தாரா..

இருந்தார்..

திடீர்னு ஒரு  பொம்பள ... பாக்கவே பயமா இருக்குது... நேர அவரை பாத்து ஓடி வந்துச்சி...

ஓடி வந்துச்சா.. ஒரு வேளை சம்சாரமா?

சம்சாரம் போல தெரியல வாத்தியாரே... சமாச்சாரம் போல இருக்கு.

சரி ஓடி வந்துச்சி, அப்புறம்...

அந்த ஆளு கன்னத்துல ...

முத்தமிட்டிச்சா...?

நல்லா சொன்ன போ.. கன்னத்தில முத்தமிடல ...முத்திரையிட்டுச்சி..

புரியல..

வாத்தியாரே.. பாரதிராஜா படத்துல வர சவுண்ட் எபெக்ட்டோட பளார் .. பளார்னு நாலு அறை...

யாருக்கு..

அந்த ராஜேந்தர் பாணி ஆளுக்கு தான்..

பாணி.. அந்த அம்மணி எப்படி இருந்தாங்க..

கொஞ்சம் மப்பும் மந்தாரமுமா தெரிஞ்சாங்க..அவங்க விட்ட அறையில் நான் கொஞ்சம் அலறிட்டேன்.

பாணி.. எப்பவுமே.. அடுத்த ஆம்பிளை ஒரு பொம்பிளையிடம் அறை வாங்குறத    நம்ம பாத்தோம்ம்னா. கொஞ்சம் ஆச்சரிய பட்டு அலறனும்.. அது தான் ஆம்பிளைக்கு அழகு.,

ஏன்..?

டேய்... அப்படி அலராட்டி நமக்கும் வீட்டில இந்த மாதிரி பளார் கிடைக்குதுன்னு எல்லாருக்கும் தெரியவரும்..

வாத்தியாரே... உன் பிரச்சனை...உனக்கு.. விஷயத்தை கேளு..

சொல்லு...

அறைய வாங்கின அந்த ஆளு அப்படியே கன்னத்தை பிடிச்சின்னு உக்கார.. அந்த அம்மணியோ... தனக்கு என்னமோ அறை விழுந்ததை போல் "அம்மா" அம்மா"னு அலற...

டேய்.. இந்த விஷத்தை தொலைக்காட்சியில் நானும் பார்த்தேன். நீ பொய் சொல்ற..

நான் என்ன பொய் சொன்னேன்?

அந்த TR ..ஒரு அறை தானே வாங்கினேன்னு சொன்னார்..

வாத்தியாரே.. அவர் சொன்னதும் சரிதான்,.

ஒரு அறையா ? நாலு அறையா?

விழுந்தது நாலு அறை.. ஆனால் அவருக்கு தெரிஞ்சது ஒரு அறை..

புரியல..

வாத்தியாரே.. முதல் அறையில் பாதி மயக்கம்.. மீதியை அவரு என்ன எண்ணின்னா இருப்பார்...? சரி.. இதை ஏன் தொலைக்காட்சியில் போட்டாங்க..

பாணி.. இந்த ரெண்டு ஜென்மத்தையும் "என் இனிய தமிழ் மக்கள்"  எம் பி யா தேர்ந்தெடுத்து டெல்லி அனுப்பி இருக்காங்க..

வாத்தியாரே.. நான் ஒரு ஆணுக்கு நடந்த கொடுமையை பத்தி பேசின்னு இருக்கேன்.. நீ என்னடானா.. தமாஷ் பண்ணின்னு இருக்கியே..

டேய்.. இவங்க ரெண்டு பேரும் உண்மையாகவே எம் பி தான். அந்த அம்மணி அம்மா கட்சி.. TR ஐயா கட்சி..

ஐயோ ..வெக்க கேடு வாத்தியாரே... நம்ம ஆளுங்களுக்கு வேற யாருமே கிடைக்கலையா? சரி.. அந்த அம்மணி ஏன் அவரை அறைஞ்சாங்களாம்..

அந்த விசாரணை நமக்கு வேண்டாம் பாணி.. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வரும்...

சரி.. தொலைக்காட்சியில் வேற என்ன சொன்னாங்க...

பாணி.. நேத்து அந்த அம்மணி.. நாடாளுமன்றத்தில் ஒரே ஒப்பாரி...

என்னன்னு.. ?

அந்த அம்மணியை கட்சி தலைமை அறைஞ்சாங்களாம்..

ஓ... முற்பகல்... பழமொழி போல இருக்கே..சொல்லு...

அவங்க நாடாளுமன்றத்தில் எழுந்து... இந்த நாட்டில் ஒரு பெண் எம் பி ய எப்படி ஒருத்தங்க அறையலாம்..  பெண்களின் பாதுகாப்பு எங்கே போச்ச்சுன்னு கேள்வி மேல் கேள்வி..

இவங்க மட்டும் ஒரு ஆண் எம் பிய அறைஞ்சாங்களே.. ஆம்பிளைங்க பாதுகாப்பு என்ன ஆச்சம்?  அது சரி, இந்த அம்மா இப்படி ஒப்பாரி வைக்கும் போது TR கூட அங்கே தானே இருந்து இருப்பார்.. அவர் எதுவும் சொல்லலையா?

அவர் பாவம்.. தாடியை தடவினே தாடிக்கு நன்றி சொல்லினு இருந்தாரு..

தாடிக்கு நன்றியா? ஏன்?

மவனே தாடி மட்டும் இல்லாட்டி  ரேகை பதிஞ்சி இருக்குமே.. அதுதான்.

சரி.. மேலே சொல்லு..

என்  உயிருக்கு ஆபத்து.. என்னை காப்பாத்துங்கோ.. காப்பாத்துங்கோன்னு..

அந்த ஆள் சொன்னாரா?

டேய்.. அவரு சிவாஜி பாணியில் அழுது கொண்டே சிரித்தார்.. இந்த அம்மா தான் அப்படி புலம்புனாங்க..

சரி.. இப்ப எல்லாரும் என்ன தான் சொல்றாங்க..

இந்த தமிழ் சனியன்கள் இல்லாமல் நம்ம நாடாளுமன்றத்தை நடத்த முடியாதா? இந்த தமிழ் சனியங்களில் ஏதாவது ஒரு எம் பி  நமக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து உருப்புடியா ஏதாவது ஒரு வேலை பண்ணி இருக்குமா? இந்த தமிழ் சனியங்களுக்கு .. கொள்ளை ..கொலை.. திருடு, பதவி ஆசை.. பேராசை... பொறாமை , புத்தி சுவாதீனம் தவிர வேறு ஏதாவது இருக்கா..

இந்த மாதிரி சனியங்களை தேர்ந்தெடுத்து அனுப்புதுங்களே..அந்த சனியங்களுக்கு அறிவே இல்லையா?

வாத்தியாரே.. பேச்சு வாக்குல நாலு அஞ்சு முறை சனியன்னு திட்டிட்ட?

தண்டம் ..  நான் திட்டலை.. அப்படி எல்லாரும் திட்டுறாங்கன்னு சொல்ல வந்தேன்.

பின் குறிப்பு :

Jokes apart....  உண்மையாகவே ஒரு கேள்வி.. நமக்கு நினைவு தெரிஞ்சதில் இருந்து ஒரு தமிழ் எம் பி யாவது உருப்படியா ஏதாவது நல்ல காரியம் செஞ்சி இருக்காங்களா? எனக்கு தெரிஞ்ச சில எம் பி பேரை சொல்றேன்.. அவங்க செஞ்ச நல்ல காரியத்தை பின்னூட்டத்தில் போடுங்க..

தயாநிதி.. சிதம்பரம். ...பாலு... கனி மொழி.. ராஜா.. சசிகலா, அழகிரி ...

நெஞ்சு பொறுக்குதில்லையே.. 

6 கருத்துகள்:

  1. காலைல ஒழுங்கா வேலை பார்க்க வேண்டாமா? இந்த அரசியல்வியாதிகளை நினைவு படுத்தினால், உங்களுக்கு வர்ற 'நெஞ்சு பொறுக்குதில்லையே' எங்களுக்கும் வராதா? நானே, கணிணி வேலைகளை அவுட்சோர்ஸ் பண்ணுவதுபோல், எம்பி பதவிகளையும் அவுட்சோர்ஸ் பண்ணினால் இந்தியாவுக்கு நல்லதே என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். வருபவர்கள், அதை வேலையாக எண்ணி ஒழுங்காகச் செய்வார்கள். நம்ம ஆட்கள், அந்தப் பதவி வந்தவுடனே, பலவித தொழில்களில் ஈடுபட்டு அவர்களை டெவலெப் செய்துகொள்கிறார்கள். இதுக்கு விதிவிலக்குகள் எல்லாம் 70லேயே போய்விட்டார்கள்.

    பதிலளிநீக்கு

  2. //ஒரு தமிழ் எம் பி யாவது உருப்படியா ஏதாவது நல்ல காரியம் செஞ்சி இருக்காங்களா? //

    தமிழ் எம்பிங்கெல்லாம் நம்மை சிரிக்க வைத்து கொண்டு இருக்கிறார்களே அது உங்கள் கண்களுக்கு படவில்லையா?இல்லை உங்களை விட அவங்க தமிழர்களை அதிகம் சிரிக்க வைக்கிறார்கள் என்ற பொறாமையா

    பதிலளிநீக்கு
  3. தயாநிதி.. சிதம்பரம். ...பாலு... கனி மொழி.. ராஜா.. சசிகலா, அழகிரி ...
    இவங்கள எல்லாம் பார்த்து ரொம்ப நாளாச்சு...ஸோ நினைவுக்கு வர லேட்டாகுது விசு..இவங்க எல்லாரும் எங்கருக்காங்க?

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இவங்கள்ளாம் அவங்க குடும்பத்துக்கு நல்லது செஞ்சவங்க சாரே!

    பதிலளிநீக்கு
  5. தாடி வளர்த்தால் ஒரு நன்மை இருக்கு
    யாரும் அறைந்தால் அடையாளம் விளாது
    மூன்று அறைவிட்டாலும்
    முப்பது அறிவிட்டாலும்

    இந்தனைப் பெரிய விஷயம் எல்லோருக்கும்
    உண்மையில் இப்பத்தான் தெரிந்தது

    அறிந்தும் அறை வாங்கியும்
    புரிய வைத்த ஆளுமைகளுக்கு
    ஆண்கள் சார்பாக மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  6. DMK HAS NO GUTS TO SEEK EVEN AN EXPLANATION FROM TIRUCHI SIVA
    OVER THIS INCIDENT MR STALIN WHO TALKS ALL UNNECESSARY ISSUES
    DOES NOT OPEN HIS MOUTH IN THIS SLAPPING CASE

    பதிலளிநீக்கு