புதன், 31 ஆகஸ்ட், 2016

நித்தம் நித்தம் நெல்லு சோறு... நெய் மணக்கும் தங்கம்...!

இந்த வாரத்திற்கான நாதாரித்தனம் செய்தாலும் நாசூக்கா செய்யவேண்டும் விருதை பெறுபவர்..

சுடிதார் புகழ்...... பாபா ராம்தேவ்.

இவரே ஆசிரமத்தில் தயாரிக்க படும் சில ஐட்டங்களை விற்க இவர் செய்யும் வியாபார தந்திரங்கள் .. ஏல் பல்கலைக்கழகத்தில் கூட சொல்லி தரப்படாது.

ஆண்  குழந்தை பெற வேண்டுமா? இந்த லேகியத்தை சாப்பிடுங்கள் என்று சென்ற வருடம் ஏதோ ஒரு கருமாந்திரத்தை தந்திரமாக விற்றார்.



இப்போது அந்த ஆசிரமத்தில் செய்யப்படும் நெய் விற்பனைக்கு ஒரு தந்திரம்.

//பசு நெய் சாப்பிட்டால் ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கலாம்//

என்னத்த சொல்றது... இதை படித்தவுடன் மனதில் வந்த சில விஷயங்கள்...

நெய்க்கு தங்கம்.
வெண்ணைக்கு வெள்ளி
தயிருக்கு வெண்கலம்....


பசு நெய் சாப்பிட்டு நம்ம ஏன் போய் தங்கம் வாங்குனும்? அதுக்கு பதிலா பசுவையே... 100 மீட்டர்... 200 மீட்டருன்னு பயிற்சி கொடுத்து அனுப்பிடலாமே.


ஒலிம்பிக்கில் தங்கம் வருதோ இல்லையோ! நீங்க எக்கசக்கமா தங்கம் வாங்கலாம், அது கேரண்டி..


அட பாவி பாபா... இதை முன்னாலே சொல்லி இருக்க கூடாதா? ஒரு வெள்ளி ஒரு வெண்கலத்துக்கு ரியோ ஒலிம்பிக்கிற்கு நாங்க 100 கோடி செல்வது செய்துட்டோமே..


அப்ப எருமை நெய் சாப்பிட்டா... காமன்வெல்த்தில் தங்கம் வாங்கலாமா...?


நெஞ்சு பொறுக்குதில்லையே...

5 கருத்துகள்:

  1. விசு.. நீங்க ஏன் இவரை மாதிரி வெட்டி ஆட்களின் செய்திகளைப் படிக்கிறீர்கள். உங்களுக்கும் எனக்கும்தான் நிறைய பதிவர்கள் பாஸிடிவ் நியூஸ் கடந்தவாரம்னு பதிவு எழுதறாங்களே.

    உண்மையாவே, பா.ஜ.க மத்தியில் இருக்கிறது என்ற தைரியத்தில் உளறுவாயன்'கள் அதிகமாயிட்டாங்க.

    பதிலளிநீக்கு
  2. அற்புதம் சார்
    எப்படி வித்தியாசமாகவும்
    இரசித்துச் சிரிக்கும்படியாகவும்
    உங்களுக்கு மட்டும் எல்லா
    விஷயங்களையும் சொல்ல முடியுதுன்னு
    நிஜமாகவே ஆச்சரியமாக இருக்கு//

    நெய்க்கு தங்கம்.
    வெண்ணைக்கு வெள்ளி
    தயிருக்கு வெண்கலம்....//

    இதை மிகவும் இரசித்தேன்

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. ம்ம்ம் வியாபார யுக்திதான்...என்ன ஒரே ஒரு விஷயம் பொருட்கள் பதஞ்சலியில் விலை குறைவாகக் கிடைக்கிறது என்று கேள்விப்படுகிறோம். தெரியவில்லை

    கீதா: சரி சாமியாருக்கு எதுக்குப் பிசினஸ்? நம்மூரில் எல்லா சாமியார்களுமே கில்லாடிகள். டாட்டா பிர்லா ரிலையன்ஸ் எல்லாம் வேஸ்ட்...ஹும் மூளையே இல்லை. அவர்கள் பிசினஸில் கூட நஷ்டம் சரிவு எல்லாம் ஏற்படலாம். ஆனால் பாருங்கள் சாமியார்கள் பிசினசில் மட்டும் எந்த நஷ்டமும் இல்லையே நாளுக்கு நாள் ஏறிக் கொண்டேதானெ போகிறது...ஆனானப்பட்ட மால்யாவே கிங்க்ஃபிஷர் ஏர்லைன்ஸ் மூட வேண்டிய நிலைமை ஆனால் எந்த சாமியாருக்கும் மூட வேண்டிய நிலைமை ஏற்படவே இல்லையே!!! பாருங்கள்.... அதனால் பேசாமால் நான் சாமியாரிணி ஆகிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன். என்ன சொல்கின்றீர்கள் விசு!!

    பதிலளிநீக்கு
  4. already complaints are pouring from all quarters regarding the quality of these products... particularly GHEE... god save our nation

    பதிலளிநீக்கு