வெள்ளி, 1 ஜூலை, 2016

Y G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு!

உங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் "உசந்த ஜாதி"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி!உங்கள் படிப்பை என்னால் உறுதி  செய்ய முடியாவிட்டாலும் .. அந்த காலத்திலேயே "பொறியியல் பட்டம் " பெற்றவர் என்ற ஒரு கருத்து நிலவியது.

பொது இடங்களில் இத்தனை நாள் தாம் நடந்து வந்த  விதம் தம்மை ஒரு நன்னடத்தை உள்ள மனிதனாகதான் காட்டி வந்தது. இவை அனைத்தும் தாம் செய்த ஒரு ஒரு முட்டாள்தனமான காரியத்தினால் சுக்கு நூறாக போனது.

முகநூலில் யாரோ அனுப்பிய ஒரு தகவலை பகிர்ந்தேன் என்கின்றீர்கள். என்ன ஒரு யுக்தி. மஹேந்திரன் அவர்களே... யாரோ ஒருவர், தமக்கு அறிமுகமல்லாதவர் எழுதிய கருத்தை.. அதில் எனக்கு உடன் பாடு உண்டு, அதனால் அதை மற்றவர்களுக்கு பகிரும் உரிமையும் உண்டு என்று சொல்லி செய்த தவறை நியாயப்படுத்துகின்றீர்கள்.

இரண்டு வாரத்திற்கு முன் தம் அருமை நண்பர் ஆருயிர் தோழன் எஸ் வீ சேகர், இப்படி தான் மற்ற ஒரு நபரின் கருத்தை தான் எழுதியது போல் காட்டி .... வாங்கி கட்டி கொண்டாரே ..... அது தமக்கு தெரியாதா?

ஒரு உண்மையும் இல்லாத ஒரு தகவலை அதுவும் ஜாதி - மதம் - கட்சி என்று எதையும் விட்டுவைக்காமல் வந்த கருத்து.. அதில் அவசியம் இல்லாத ஒரு பெயர் வேறு..

நான் அந்த பெயரை படிக்கவில்லை, அதில் குறிப்பிட்ட மதத்தை நான் பார்க்கவில்லை. ஆனால் அந்த கருத்தில் எனக்கு உடைபட்டு உண்டு, அதனால்  பகிர்ந்தேன்.

என்ன ஒரு கேவலமான . "Excuse".



என்னிடம் தமிழ் எழுத்துக்களே இல்லை.  அதனால் அதை நான் எழுதவில்லை. நீர் தான் எழுதினீர் என்று நான்  சொல்லவில்லை. ஆனால், காவல் துறைக்கு எந்த துப்பும் கிடைக்காத நேரத்தில் நீர் பகிர்ந்த இந்த செய்தி அவர்களை திசை திருப்பாதா?

BTW, இந்த பதிவை எழுதும் என்னிடமும் தமிழ் எழுத்துக்கள் இல்லையோ. வலைதளத்தில்  "Type Tamil Online" தட்டினால் போதும். நம் எழுத்துக்களை நமக்கு தமிழில் தரும் என்பது தமக்கு தெரியாது என்ற விஷயம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

நமக்கு எதிரில் இருக்கும் அனைத்தையும் தீரவிசாரிக்காமல் " எனக்கு உடன் பாடு உண்டு" நான் பகிருவேன், என்று சொல்வது திமிர்.

நேற்று, நானும் ஒரு பதிவை பார்த்தேன்.

 பிஜேபி கட்சியில் மஹேந்திரன் மகளுக்கு கல்வித்துறையின் தமிழகத்தில் தலைவர் பதவியும்.  பிஜேபி க்கு கல்வி துறை என்ன தவறு செய்ததோ! மத்தியில் கல்லூரிக்கு செல்லாத ஸ்மிரிதி இராணி. இங்கே மாநில  கல்வி துறை பதவியில் ஒரு நடிகனின் மகள்.  நடிகனின் மகள் என்பதை  தவிர இந்த அம்மணிக்கு இந்த கட்சி பதவி கிடைக்க ஏதாவது தகுதி உண்டா ? இந்த பதவியை அடைய இந்த அம்மணி என்ன என்ன தியாகம் செய்தார்கள் ?

என்று கேட்டு இருந்தார்கள். இந்த மாதிரி பதிவுகள்.. எத்தனை. எத்தனை.. ஏன்..
நீங்கள் இந்த முட்டாள்தனமான காரியத்தை செய்தபின்  உங்களை கழுவி கொட்டிய பதிவுகள் கருத்துக்கள் தான் எத்தனை.

இதையெல்லாம் நாங்களும் "உடன் படுகிறோம்" என்று சொல்லி பகிர்ந்தால் தங்கள் நிலைமை என்னவாகும்.

சரி தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்பார்கள். உணர்ச்சிவசப்பட்டு ஆடி விட்டீர்கள்.

இந்த காரியத்தை ஏன் செய்தீர்கள் என்ற கேள்விக்கு... ஏற்க தக்க பதில்கள் எவ்வளவோ இருக்க.. என் உரிமை...உடன்பாடு...உசந்த சாதி... எழுதியவரை போய் கேளுங்கள்.....என்ற கேவலமான பதில்கள்.

தம்மை ஒரு "Gentleman" என்று  நான் எத்தனை முறை எத்தனை பேரிடம்சொல்லி இருப்பேன். ஏன், சில மாதங்களுக்கு முன் திருமதி. ராதிகா சரத்குமார் அவர்கள் தம்மை கேவலமாக விமரிசித்தபோது கூட ...அடியேன்.. அந்த அம்மணியை விட்டு விடுங்கள்.. நடிகர் சங்க தேர்தலில் தோற்ற பொறாமையில் பேசுகின்றார்கள் என்று தான் சொல்லி இருந்தேன்.

After all, YGM, Leopards dont lose their Spots! Thou hast proved it...

கடைசியாக எனக்கு ஒரு சந்தேகம்.. நீங்களும் சரி.. எஸ் வி சேகரும் சரி....அடுத்தவர் போன்ற பதிவுகளை நீங்கள் போட்ட மாதிரி பகிருகின்றீர்களே....ஒரு சிறிய கருத்துக்கே இன்னொருவரும் போறீங்களே... உங்கனால எப்படி நாடகம் எழுத முடியுது ?

கன்பூயுஷன்...


பின் குறிப்பு :

பல வருடங்களுக்கு  முன், "போக்கிரிராஜா" என்று ஒரு படம்.  தாம் ஒரு அடிமட்ட முட்டாளாக நடித்து இருந்தீர்கள். எப்படி இவரால்  வடி கட்டிய முட்டாளை போல் தத்ரூபமாக நடிக்க முடிகின்றதே என்று நினைத்தேன். இத்தனை  வருடங்களுக்கு பின் இப்போது தான் புரிகின்றது.

தாம் அதில் நடிக்கவில்லை.  


8 கருத்துகள்:

  1. இந்த அரை வேக்காட்டு அரை மண்டையன்களை கேள்வி கேட்டு தம் கட்டி பதிவு எழுதணுமா?!

    பதிலளிநீக்கு
  2. பல்வேறு மக்கள் இணைந்து வாழும் நாட்டில் துவேஷ கருத்துக்களை பகர்வதும் மத சாயம் பூசுவதும் குற்ற செயலே இவர்களை தண்டிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? இந்த கேள்விக்கான விடை இல்லை என்றுதான் கூற முடியும் ஏனென்றால் ஆளும் அரசாங்கமே மத சாயம் பூசி கொண்டுதானே ஆள்கிறது

    பதிலளிநீக்கு
  3. நன்றாக அலசி உள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு. ஆனால் சொந்த புத்தி இல்லாத மரமண்டைகளுக்கு உறைக்குமா உறைக்காதா தெரியாது. உடம்பு அனைத்தும் மதவெறி. நாண்டுக்கிட்டு சாகலாம் தூ (நன்றி வி.காந்த் )

    M. செய்யது
    Dubai

    பதிலளிநீக்கு
  5. நானும் இவர் நடித்த படங்களை எல்லாம் பார்த்து இருக்கிறேன், ஒரு காட்சியில் கூட எனக்கு சிரிப்பு வந்ததில்லை,முதன்முறையாக ஒரு வாரம் ஆக பிலால் மாலிக் ஜோக்குக்காக சிரித்து கொண்டு இருக்கிறேன்.





    பதிலளிநீக்கு
  6. அவசரக்காரனுக்கு புத்தி மட்டு என்று நிருபித்து விட்டார் வொய். ஜி. மகேந்திரா.

    பதிலளிநீக்கு
  7. எவ்வளவு மறைத்தாலும் அவர்களிடம் உள்ளது உயர் ஜாதி வெறி. அவர்கள் வாழும் சொகுசு வாழ்வு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தபட்ட மக்களிடம் சினிமா, கல்வி போன்றவற்றின் மூலம் பெறப்பட்டது. அதெல்லாம் மட்டும் நன்றாக மணக்கும். !!

    பதிலளிநீக்கு
  8. even in comedy field ygm was a failure he survived the film industry because of his caste connections all sabhas secretaries were brahmins those days this fellow should be probed first

    பதிலளிநீக்கு