வியாழன், 28 ஜூலை, 2016

"கலைப்புலி - பேரரசு " சின்ன சின்ன ஆசை!

அட பாவி...

கவி பேரரசு கலைபுலியிடம் காபாலி படத்துக்கு ஒரு நயாபைசா கூட தராமல் 4,000 டிக்கட் வாங்கினு போனாராமே

எப்படியும் இந்த டிக்கட்களை பேரரசு தன்னுடைய ரசிகர்களுக்கு இலவசமா தந்து இருக்க மாட்டாரு.... (அப்படி இலவசமா தந்து இருந்தா இந்த பதிவுக்கான மன்னிப்பை இங்கேயே கேட்டு கொள்கிறேன்.) பின்னர் இந்த டிக்கட்கள் என்னவாகி இருக்கும்?

சரி.. இந்த விஷயத்துக்கு போகும் முன்னால், கலைப்புலி ரொம்ப கறார்  பார்ட்டியாச்சே... அவர் எப்படி இவருக்கு 4,000 டிக்கட் இலவசமா  கொடுத்தாரு?

சம்பந்தம் எங்கேயோ இடிக்குதே மொமெண்ட்....

கபாலி படம் வெளியிட்ட அன்று ஒரு டிக்கட் கிட்டத்தட்ட 1,500 ரூபாய்க்கு போனது. சரி.. ஒரு ஐநூறை தரகருக்கு கொடுத்துட்டு மீதியை எடுத்தா கூட ... ஒரு டிக்கட் ஆயிரம் ரூபாய்.

எனக்கு கணக்கு சொல்லி கொடுத்த வாத்தியார் சரியா சொல்லி கொடுத்து இருந்தார்னா இந்த இரண்டையும் பெருக்கி பார்த்தா நாற்பது லட்சம்.

கலைப்புலி நாற்பது லட்சத்தை இனாமா பேரரசுக்கு கொடுத்தாரா?  ஏன் கொடுத்து இருப்பார்?  இத்தனைக்கும் இந்த படத்தில் பேரரசும் சரி.. தமிழின்  அடுத்த நம்பிக்கை " கார்க்கி" யும் சரி பணி புரியலையே..

மீண்டும், சம்மந்தம் எங்கேயோ இடிக்குது மொமெண்ட்.

சரி... கலைப்புலி தாணு இரா போட்டு சுறா புடிக்கிறாருனே வைச்சிக்குவோம். இப்ப முக்கியமான விஷயத்துக்கு வருவோம்.

இந்த 4,000 டிக்கட்டை பேரரசு யாருக்கு கொடுத்து இருப்பாரு.  கல்லூரிகளில் தமிழ் துறையில் நடக்கும் விழாக்கு போகவே 500 புத்தகம் வாங்குனா தான் வருவேன்னு சொல்ற அரசு ஆச்சே நம் பேரரசு ... எப்படி இத்தனை டிக்கட்டை உபயோகித்து இருப்பார்?


ஒரு வேளை... வளரும் கவிஞர்கள்  3998 பேரை (ரெண்டு டிக்கட் அவருக்கும்  தமிழின் அடுத்த நம்பிக்கைக்கும் வேணுமே) தேர்ந்தெடுத்து தன் இனிய நண்பர் ரஜினிகாந்தின் படத்தை பார்க்க அன்போட அனுப்பி வைச்சி இருப்பாரோ...

இல்லாட்டி... ஒரு வேளை .. படம் ரொம்ப நல்லா இருக்கும், அடுத்த 4000 ஷோ பார்க்கலாம்னு தனக்கு தானே பதுக்கி வைச்சி இருப்பாரோ....?

இல்ல.. நான் பேரரசு ... பரதேசி கூட்டத்தோடு உக்கார்ந்து பார்க்க மாட்டேன். தியேட்டர் முழுக்க புக் பண்ணிட்டு தான் மட்டும் பார்த்து இருப்பாரோ ?

இல்ல, 4,000  டிக்கடையும் கூறு போட்டு அறுபது லட்சம்  (அது எப்படி  நாற்பது லட்சம் அறுபது லட்சமா மாறிச்சா? நல்ல கேள்வி.. நம்ம பேரரசு தரகர் எல்லாம் வைக்க மாட்டார்.. மேட்டரை அவரே முடிப்பார்) ஸ்வாஹா பண்ணிட்டாரா?

என்னமோ போங்க..

போற போக்க பார்த்தா அடுத்த நாலு வாரத்துக்கான "நாதாரி தானம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும் விருதை வேற யாருக்கும் கொடுக்க முடியாது போல இருக்கே.

பின் குறிப்பு:

வாத்தியாரே....

சொல்லு தண்டம்....

அவரு மேல உனக்கு ஏன் உனக்கு "சின்ன சின்ன ஆசை..."?

பதிலும் கேள்வியிலேயே இருக்கு...

சொல்லு.. என்ன பதிலு?

"சின்ன சின்ன ஆசை" தான்...

அதுதான் என் கேள்வி .. .

அதே தான் என் பதில்..

சரி.. பதில கேட்டா கேள்வியை சொல்ற...

நீ கேள்வி கேக்காம பதில சொல்ற...

சரி.. மீண்டும் ஆரம்பிக்கிறேன்..அவரு மேலே உனக்கு ஏன் சின்ன சின்ன ஆசை..?

சின்ன சின்ன ஆசை , அது தான்..

வாத்தியாரே.. எனக்கு வர கோவத்துக்கு...

கோவத்துக்கு...?

நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது...

தண்டம்.. இந்த மாதிரி நேரத்துல... தான் "Sound of Music"  படத்துல வர  " Favorite Things"  பாட்ட கேக்கணும்.

ஏன்.... ?

அந்த பாராட்டை கேக்கும் போது உனக்கும் சின்ன சின்ன ஆசை வரும்?

யாரு மேலே?

பாட்டு மேலேயும் ... பேரரசு மேலேயும்..

எங்கே ... அந்த பாட்டை கொஞ்சம் பாடேன்..

அடுத்தவங்க பாட்டை நான் பாடுறது நல்லா இருக்காது.. நீயே கேட்டுக்க .... இதோ அந்த தொடர்பு..

சின்ன சின்ன ஆசை

அடுத்த ஐந்து நிமிடத்தில் அலை பேசி அலறியது...

வாத்தியாரே..

சொல்லு...

பேரரசு மேலே சின்ன சின்ன ஆசை தான்.. இருந்தாலும் இந்த பாட்டை கேட்டவுடன்.... மணிரத்தினம் மேல் பெரிய பெரிய ஆசை வருது...

டேய் நிதானமா பேசு.. அந்த அம்மணி சுஹாசினி காதுல கேட்டுற போது..

ஏன்..?

மௌஸ் புடிக்கிற பசங்க எல்லாம் கேள்வி கேக்க படாதுன்னு சத்தம் போடுவாங்க..

என்னமோ போ வாத்தியாரே... எனக்கு கோவ கோவமா வருது..

டேய் இதுக்கே கோவ பட்டா எப்படி..

பின்ன..

மைக்கேல் ஜாக்சன் பாட்டு ஒன்னு அனுப்புறேன்.. அதை பாரு.. இயக்குனர் சங்கர் மேல் " உயிருள்ளவரை இவன் தான் இந்தியன்" ன்னு பேராசை வரும்.





10 கருத்துகள்:

  1. இடி இடின்னு செமயா இடிச்கிட்டீங்க
    உங்க கணக்கெல்லாம் ரொம்ப சரியாத் தானே
    இருக்குது

    ஒரு சின்னச் செல்ல சைடு இடியா
    மணிரத்தினத்தையும்
    சங்கரையும் இடிச்சது ரொம்ப ரொம்ப அருமை

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  2. இடி இடின்னு செமயா இடிச்கிட்டீங்க
    உங்க கணக்கெல்லாம் ரொம்ப சரியாத் தானே
    இருக்குது

    ஒரு சின்னச் செல்ல சைடு இடியா
    மணிரத்தினத்தையும்
    சங்கரையும் இடிச்சது ரொம்ப ரொம்ப அருமை

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  3. நண்பர் ஒருவர் கணக்கு இடிக்குதேன்னு சொல்றார்.. அங்கே தான் நிக்குது இந்த நாதாரித்தனம்...

    பதிலளிநீக்கு
  4. கார்டூன்ல கணக்கு தப்பு. கொஞ்சம் பாருங்க கணக்குபுள்ள. வைரமுத்துக்கு வயித்தெரிச்சல். பாவம் கபாலியை விட்டுட்டு கொஞ்சம் ஜல்லிக்கட்டு, பியூஸ் மனுஷ் பக்கம் வாங்க. நேத்து ஒன் இண்டியால நியூஸ்ல ஏழு மாச கொழந்தைக்கு சரக்கு ஊட்றான் ஒரு பண்ணாடை.
    விஜயன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.. விஜயன்.. மேலே உள்ள பின்னூட்டத்தில் கார்ட்டூன் கணகிற்கான காரணம் உள்ளது.

      நீக்கு
  5. நாதாரின்னா பன்னி மேய்க்கறவன்னு "நம்பள்கி" சொல்றார். அதனால நாதாரியை மத்தவங்க கூட கம்பேர் பண்ணி நாதாரி பேர கெடுக்காதீங்க.
    விஜயன்.

    பதிலளிநீக்கு
  6. அதை பாரு.. இயக்குனர் சங்கர்...... link please

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 3:00 ல் இருந்து "மாயா மச்சீந்திரா மச்சம் பார்க்க வந்தீரா" பாடலை பார்த்து கண்டு களியுங்கள்.

      https://www.youtube.com/watch?v=LeiFF0gvqcc

      நீக்கு