ஞாயிறு, 6 மார்ச், 2016

ஆதாமின் இழப்பிற்கு காரணம் சர்ப்பமே.. சம்சாரமே .. பட்டிமன்றம்

மனிதனாக பிறந்த அனைவரும் ... அவர் கிறிஸ்துவராக  இருந்தாலும் சரி, இஸ்லாமியராக இருந்தாலும் சரி, இந்துவாக இருந்தாலும் சரி, வேறு எந்த ஒரு மதத்தினை சார்ந்தவராக இருந்தாலும் சரி, ஏன், நாத்திகராக இருந்தாலும் சரி, அறிந்த ஒரு நிகழ்ச்சி,

ஆதாம் - ஏவாள் - சர்ப்பம் - மற்றும்  ஏதேன் தோட்டம்.

சாத்தானானவன்  சர்ப்பத்தின் உருவில் வந்து ஏவாளை ஏமாற்றி அதை தொடர்ந்து ஆதாமும் ஏமாந்து அவர்கள் தோட்டத்தை  இழந்த நிகழ்ச்சி இது.

ஆண்டவனின் அருளால், ஆண்டவன்  சாயலிலே உருவாக்க பட்ட முதல் மனிதன் ஆதாம் அன்று கண்ட இழப்பு இன்றுவரை நம்மை பாதிக்கின்றது.



இந்த ஏமாற்று வேலை எப்படி நடந்தது?

ஆதாம் சற்று கவனமாகே இருந்து இருக்க கூடாதா?

 ஏவாள் எப்படி ஏமாந்தாள்?

ஏமாந்த அவள் ஏன் ஆதாமையும் கூட்டு சேர்க்க வேண்டும்?

என்ற

பல கேள்விகள்  அனைவரை போல் அடியேனுக்கும் தான் இருந்தது.

இப்படி இருக்கையில் சில மாதங்களுக்கு  முன்பு ஒரு பட்டிமன்ற அழைப்பு வந்தது. நான் வசிக்கும் ன் கலிபோர்னியாவில் அருமை நண்பர் இசைவேந்தர் கிளெமென்ட் வேதநாயக சாஸ்திரியார் அவர்களின் தலைமையில்

"ஆதாம் ஏதேனை இழந்ததின் காரணம் சர்ப்பமே - சம்சாரமே"

என்ற பேச அடியேனுக்கு ஒரு வாய்ப்பு. இதை சொன்ன நடுவரிடம், நல்லதோர் தலைப்பு.. இதில் நான் எந்த அணியில் பேசவேண்டும் என்று கேட்க .. அவரோ ஒரு நொடியும் தயங்காமல்.. சம்சாரமே என்ற அணிக்கு நீ தான் தலைவன் என்று ஒரு குண்டை தூக்கி போட்டார்.

நல்ல தலைப்பு.. அருமையான நடுவர்... இருந்தாலும் இந்த அணியின் சார்பில் பேசிவிட்டு எப்படி இல்லத்திற்கு செல்வேன் என்று யோசிக்கையில்.. நடுவரோ.. நீ என்ன உன் சம்சாரத்தை பற்றியா  பேச போகிறாய்.. ஏவாளை பற்றி தானே, தைரியமாக பேசு என்று சொல்ல.. நானும் ஒப்பு கொள்ள..

இதோ அந்த பேச்சு....



அது சரி.. முடிவு என்னவாய் இருந்து இருக்கும் என்று எங்கே சொல்லுங்கள் பார்ப்போம்?

4 கருத்துகள்:

  1. சரியாக கேட்க முடியவில்லை! அப்படியே பதிவாக்குங்கள்!

    பதிலளிநீக்கு
  2. நல்ல தலைப்பு. கலக்கிருப்பீங்க..வீடியோ இன்னும் ஒரு முறை கூட பார்க்க வேண்டும் விசு. கொஞ்சம் புரிந்தது. கொஞ்சம் சரியாகக் கேட்கவில்லை. சம்சாரம்தான் தீர்ப்பு அதானே??!!!
    கீதா

    பதிலளிநீக்கு
  3. சரியாக கேட்க முடியவில்லை!
    kalakarthik
    karthik amma

    பதிலளிநீக்கு