திங்கள், 21 மார்ச், 2016

என்னை விட கேடு கேட்டவன் எவனும் இல்ல...

கடந்த ஒரு மாதமாக விஜய் மல்லையா என்னும் சனியை பற்றிய செய்திகள் நிறைய வந்தது. இந்த மல்லையா என்பவர் மிக பெரிய புத்திசாலி என்றும் வியாபார தந்திரகாரர் என்றும் 80கல் இருந்தே ஒரு  செயற்கையான செய்தி பரப்பப்பட்டு வந்தது.

மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர், அது என்னவோ உண்மை தான். இன்னும் சொல்ல போனால் அது மட்டும் தான் உண்மை. அதை தவிர இவரின் புத்திசாலித்தனம் அனைத்தும் ... புரளியே..

சோமபானம் தாயரிக்கும் ஒரு நிறுவனம். இந்தியாவில் சோமபானம் தயாரித்து எவனாவது நஷ்டத்தை அடைய இயலுமா? அது போல் இவரின் சோமபானம் அதிக அளவில் லாபத்தை பெற்று வந்தது. சோமபான லாபத்திற்கு குடிக்காரகள் இருந்தால் போதும். புத்திசாலித்தனம் தேவை இல்லை.

இந்த ஒரு நிறுவனத்தை தவிர மற்ற அனைத்திலும் இவர் பெற்றது பெரிய நஷ்டமே. இந்த நஷ்டத்தை அடையும் அனைத்து   நிறுவனத்திற்கும் தான் வங்கிகள் போட்டி போட்டு கொண்டு கடன் தந்தன.



9000கோடிகளை  சுவாஹா செய்து விட்டு இவர் லண்டனில் கொண்டாடி கொண்டு இருக்கையில், வாங்கிய கடனில் முக்கால்வாசியை அடைத்த விவசாயிக்கு அடி உதை. மற்றொரு இளைய விவசாயி  வங்கியின் தொல்லையால் தற்கொலை.

சரி.. இது தான் நாம் அனைவரும் அறிந்த செய்தி ஆயிற்றே.. புதுசா ஏதாவது சொல்லுங்க என்று நினைப்பவர்களுக்கு..

தலைப்பை மீண்டும் நினைவுறுத்த விரும்புகிறேன்.

என்னை விட கேடு கேட்டவன் எவனும் இல்ல...

விவசாயிகளை பாடுபடுத்தி விட்டு மல்லையாவிர்க்கு கொடை பிடித்த வங்கிகளை விடுங்கள்.. இந்த மல்லையாவிர்க்கு இந்த மாதம் மட்டும் நாம் ..

பொது மக்கள், நம் சொந்த பணத்தில் எவ்வளவு தருகிறோம் தெரியுமா?

இதோ அந்த கணக்கு..

மாத சம்பளம் 50,000

தின கூலி  - ஒவ்வொரு நாளுக்கும் 2000

இதர செலவு 45,000 (மாதம் )

அலுவலக செலவு 45,000 (மாதம் )

விமான செலவு - செய்த செலவை விட 25% அதிகம் ( பாவம் தனியா போக
முடியாது இல்ல, அதனால் மனைவிக்கும் சேர்த்து)

வாடகை இல்லாமல் மின்சாரம், தண்ணீர், இலவசத்தோடு வாழ அரண்மனை போல் ஒரு பங்களா

வாகனம் வாங்க வட்டியிலா தவணை முறை

மூன்று தொலை பேசி.

துணி துவைக்க மாதம் ஒரு கணிசமான  தொகை.

எங்கே போனாலும் ஒரு கிலோ மீட்டருக்கு 16 ருபாய்.

கடைசியாக, ஊருக்கு நல்ல திட்டங்கள் கொண்டு வர இவர் கையில் வருடத்திற்கு ஐந்து கோடி ( இந்த சனிய நம்பி வாடகை சைக்கிள் தர கூடாது.. இவரை நம்பி வருடத்திற்கு  ஐந்து கோடியாம்)

அது சரி.. இதையெல்லாம் நாங்க எப்ப எங்க பணத்தில் இருந்து தந்தோம்ன்னு கேக்கறிங்களா? நல்ல கேள்வி..

இது எல்லாம் இவர் பொது மக்களுக்காக தியாகம் செய்து "ராஜ்ய சபா" உறுப்பினரா  கஷ்ட படுறாரு இல்ல, அதுக்காக வழங்க படும் சன்மானம்

விவசாயி இருந்தா என்ன? செத்தா என்ன ? இவருக்கு மறக்காம பணத்த அனுப்பிடுவோம்.

ஏன் தெரியுமா? எங்களை மாதிரி கேடு கேட்ட பிறவிங்க இதுவும் கடந்து போகும்னு இதையும் மறந்துடுவோம்..

பின் குறிப்பு :

இந்த சில பெயர்களையும் பாருங்க. இவங்களுக்கு கூட நம்ம பாரி வள்ளல் போல் வாரி இறைத்து இருக்கோம்.

கனிமொழி, எஸ் எஸ்  சந்திரன், சரத்குமார், வைஜெயந்தி மாலா, சத்ருகன் சின்ஹா, ஹேமா மாலினி, லதா மங்கேஸ்கர்  மற்றும் பலர்..

மேலே சொன்ன இவங்க எல்லாரும் தான் நமக்காக அவர்களுடைய சொந்த வேலையெல்லாம் விட்டு விட்டு தியாகம் செய்து ராஜ்ய சபா உறுப்பினர்களாக உழைத்தார்கள்.

நெஞ்சு பொறுக்குதில்லையே......

1 கருத்து:

  1. ஜனநாயகத்தின் இன்னொரு பக்கம். ஆனால் இந்தியாவில் உண்மையான ஜனநாயகம் இருக்கிறதா என்பதே கேள்விக் குறி.

    பதிலளிநீக்கு