ஞாயிறு, 27 மார்ச், 2016

கலாய்க்க போவது யாரு ? ஏப்ரல் 2016 போட்டி.

வணக்கம் பதிவர்களே...சென்ற மாதம் அடியேன் ஆரம்பித்து வைத்த "கலாய்க்க போவது யார் ?என்ற போட்டியின் முடிவு அனைவரும் அறிந்ததே.  அடியேன் ஒரு கார்டூன் போட்டு அதில் வாசகர்களை ஒரு வசனத்தை எழுத அழைத்து இருந்தேன். அநேகர் பங்கேற்ற இந்த போட்டியில் நண்பர் மலர்வண்ணன் அளித்த கார்ட்டூன் வெற்றி பெற்றது.

இந்த போட்டியை நான் ஆரம்பிக்கும் போது என் மனதில் வந்த ஒரே எண்ணம்     "பதிவர்களாக இருக்கும் நமக்கு இந்த பதிவுகளினால் வரும் ஒரே வருமானம் ஒரு மகிழ்ச்சி தான்". இந்த மகிழ்ச்சியை நாம் எப்படி நம் குடும்பத்தோடு பகிர்ந்து  கொள்ள போகிறோம்.

அதனால் தான் இந்த போட்டியை உருவாக்கி வெற்றி பெற்றவர்களுக்கு அவர்களுக்கு பிடித்த உணவகத்தில் இருந்து 2,500 ருபாய்க்கு  கிப்ட் கார்ட் கொடுத்து அதை அவர்கள் தம் குடும்பத்தோடு சேர்ந்து மகிழும் படி அமைத்தேன்.

முதல் போட்டியில் வெற்றி பெற்ற மலர்வண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். வெற்றி பெற்றார். அவர் அதை எப்படி கொண்டாடினார் என்பதை ஒரு பதிவாக வெளியிட்டுள்ளார் .அதை படிக்க இங்கே சொடுக்கவும்.


சரி, இந்த போட்டியை மாதம் ஒரு முறை வைக்கலாம் என்று முடிவு பண்ணியுள்ளேன். அடுத்த போட்டிக்கான கார்ட்டூன் இது தான்.

மயங்கி விழுற அளவுக்கு அப்படி என்ன செய்தியை ரேடியோவில் கேட்டார் ?


அப்படி அவர் கேட்ட செய்தி என்னவாய் இருக்கும்? 

உங்கள் காலாய்ப்பை பின்னூட்டத்தில் தாருங்கள்...போட்டிக்கு வரும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். 

போட்டியை பற்றி சில விதிமுறைகள்.

மொத்த பரிசு தொகை ருபாய் 2,500. 

  • உணவகத்தின் "கிப்ட் கார்டாக" மட்டுமே வழங்கப்படும். பணமாக அளிக்க படமாட்டாது.
  • ஏற்கனவே வென்றவர்களும் பங்கேற்கலாம்.
  • ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
  • ஏப்ரல் மாதத்தின் போட்டி இன்று (மார்ச் 27) துவங்குகின்றது.
  • முடிவுகள் ஏப்ரல் 9ம் தேதி வெளிவரும்.
நண்பர்கள் சிலரின் யோசனையால் போட்டியின் நாட்கள் மாற்ற பட்டுள்ளது. 
மார்ச் 27ம் தேதி ஆரம்பித்த இந்த போட்டி ஏப்ரல் 8ம் தேதி முடிவடையும். இவ்வாறு செய்வதின் மூலம் போட்டியின் முடிவிற்காக பங்கேற்பவர்கள் ஆவலோடு இருக்கும் போதே அறிவிக்க படும் வாய்ப்பு. இந்த யோசனை சரியாக பட்டதால் போட்டியின் முடிவு ஏப்ரல் 9ம் தேதி மாலை 7 மணி (இந்திய நேரப்படி) அறிவிக்கப்படும்.

தங்கள் புரிதலுக்கு நன்றி. 

பின் குறிப்பு :

இது ஒரு சராசரி மனிதனால் இன்னொரு சராசரி குடும்பத்திற்காக நடத்தபடும் சராசரி போட்டி. வரும் பின்னூட்டங்களில் எனக்கு பிடித்ததை தேர்வு செய்கிறேன்.

தங்களில் யாரவது இந்த முறையில் வெற்றியை தீர்மானம் செய்வதை விட, வேறு மாதிரியாக வெற்றியை தீர்மானித்தால்  நலமாக இருக்கும் என்று நினைத்தால், எனக்கு தெரிவியுங்கள்.

மற்றும்.. ஒரே ஒரு பரிசிற்கு பதிலாக முதல் மூன்று பரிசு தரலாமே என்ற ஒரு எண்ணமும் சில நாட்களுக்கு முன் வைக்கப்பட்டது. அதை பற்றி உங்களின் கருத்தையும் கூறுங்கள்.


கடந்த போட்டியில் மலர் வண்ணன் அவர்களின் வெற்றி பெற்ற கார்ட்டூன், இதோ...


22 கருத்துகள்:

  1. அ தி மு க சமத்துவ மக்கள் கட்சியுடன் இணைப்பு ..

    ராதிகா ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்..

    தேர்தலுக்கு பின் முதல்வரை அறிவிப்போம் என செய்தி..

    அநேகமாக சுழற்சி முறையில் இருக்கவும் வாய்ப்பு...

    பதிலளிநீக்கு
  2. 1. என்னது அய்யா கூட்டணிக்கு ஆதரவா டிரம்ப் வந்து தேர்தல் பிரச்சாரம் செய்யப் போறாரா....

    2. என்னது ம.ந.கூட்டணி ஜெயிச்சு விஜயகாந்த் steady யா நின்னு முதல்வர் பதவி ஏத்துக்கிட்டாரா???

    3. என்னாது சீமான் 234 தொகுதியிலும் ஜெயிச்சு முதல்வர் ஆகிட்டாரா??

    பதிலளிநீக்கு
  3. குடிப்பவர்களுக்கு என் கட்சியில் உறுப்பினர் பதவிகூட கிடையாது....
    முதல் கையெழுத்தே மதுவிலக்கு தான்..
    - விஜய்காந்த்..

    பதிலளிநீக்கு
  4. ஆல் இந்திய ரேடியோ- நேற்று நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானது அதன்படி:
    கலைஞர் 6வது முறை தமிழக முதலமைச்சராகிரார். புரட்சி தலைவி அம்மா அவர்கள் துணை முதல்வராகவும். தளபதி ஸ்டாலின் நிதி அமைச்சராகவும் நாளை மறுநாள் வளர்பிறையில் பதவிபிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்.. தலைப்புச் செய்திகள்.. தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகல். தேர்தலில் பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி அமைக்க மேலிடம் முடிவு. 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு கூட்டணி ஆட்சி அமைப்போம் - தமிழிசை, இளங்கோவன் கூட்டு அறிக்கை.

    பதிலளிநீக்கு
  6. விசு..
    போட்டியை மேலும் சுவாரசியமாக்க சில யோசனைகள்...

    போட்டிக்கான கடைசி நாள் ஏப்ரல் 7ஆம் தேதியாக வைக்கலாம்...
    முடிவுகளை ஏப்ரல் 8 அல்லது 9ஆம் தேதி அறிவிக்கலாம்...
    அடுத்த ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள் வெற்றி பெற்றவர்க்குண்டான பரிசை அனுப்பி வைத்தால், அம்மாதமே அவர்களும் குடும்பத்துடன் சென்று மகிழ்ந்து அதையும் பகிரலாம்...
    இவையனைத்தும் ஒரே மாதத்திற்குள் நண்டந்து முடியும் பட்சத்தில் அடுத்த மாதம் அடுத்த போட்டியை ஆரம்பிக்கலாம்...

    இவையனைத்தும் எனக்குத் தோன்றிய யோசனைகள் மட்டுமே.., நடுவர் தீர்ப்பே இறுதியானது...
    பாத்து செய்ங்க!!

    பதிலளிநீக்கு
  7. ஆண்டு: 2026
    ரேடியோவில் கேட்ட நியூஸ்: "தி.மு.க. தலைவர் கருணாநிதி, இதுவே தனது கடைசி தேர்தலாக இருக்கக் கூடும் என அறிவாலயத்தில் தொண்டர்கள் முன்பு அறிவித்தார். தொடர்ந்து கட்சியின் இளைஞர் அணி செயலாளர் ஸ்டாலின் அவர்களின் 74-வது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப் பட்டது. மத்திய அமைச்சர் குஷ்பூ அம்மையார் ஸ்டாலினுக்கு கேக் ஊட்டி விழாவைச் சிறப்பித்தார். குணச்சித்திரை நடிகையும், செய்தி வாசிப்பாளுருமான பாத்திமா பாபு "ஸ்டாலின்- மிசா to சாமி" என்ற புத்தகத்தை வெளியிட, முதல் பதிப்பை கழகத்தின் கொ.ப.செ நயன்தாரா, உதயநிதியுடன் பெற்றுக் கொண்டார்..."

    பதிலளிநீக்கு
  8. நண்பர்கள் சிலரின் யோசனையால் போட்டியின் நாட்கள் மாற்ற பட்டுள்ளது.
    மார்ச் 27ம் தேதி ஆரம்பித்த இந்த போட்டி ஏப்ரல் 8ம் தேதி முடிவடையும். இவ்வாறு செய்வதின் மூலம் போட்டியின் முடிவிற்காக பங்கேற்பவர்கள் ஆவலோடு இருக்கும் போதே அறிவிக்க படும் வாய்ப்பு. இந்த யோசனை சரியாக பட்டதால் போட்டியின் முடிவு ஏப்ரல் 9ம் தேதி மாலை 7 மணி (இந்திய நேரப்படி) அறிவிக்கப்படும்.

    தங்கள் புரிதலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. பாரத பிரதமர் மோடியின் தீவிர நடவடிக்கையால் கருப்புபணம் அனைத்தும் மீட்கப்பட்டது.வாரக்கடன் மீதான நடவடிக்கையால் பல்வேறு நிறுவணங்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டது.பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பிடித்தது..

    பதிலளிநீக்கு
  10. ரஜினி தனி கட்சி தொடங்கினர், 2016 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு!!
    இது ஐந்துமுனை போட்டி அல்ல, என்று ரஜினி அறிவிப்பு !!
    நாங்கள் takeoffஆகி பலநாட்கள் ஆகிறது , இருப்பினும் ரஜினி'க்கும் இடம் உண்டு - வைகோ அறிவிப்பு !!
    அய்ய்ஒ ஒஒஒஒஒஒஒ!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  11. தொங்கு சட்டமன்றம் வந்தால் யாரையும் ஆதரிக்க மாட்டோம் : தமிழிசை

    பதிலளிநீக்கு
  12. 1.என்னது ஹிந்து முண்ணணியுடன் திமுக கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுகிறதா? அதற்கு ஹிமுதிமுக என்று பெயர் வைத்திருக்கிறார்களா?


    2.என்னது நயன்தாரா திமுக கொள்கை பரப்பு செயலாளரா?


    3. என்னது வடிவேலு விஜயகாந்துக்கு ஆதரவா தேர்தல் பிரச்சராத்தில் இருங்குகிறாரா?


    4. என்னது கலைஞர் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர தூதரை அனுப்பி வைத்திருக்கிறாரா?


    5. என்னது இந்த வாரம் முழுவதும் பூரிக்கட்டையால் அடிவாங்காமல் மதுரைத்தமிழன் தப்பித்துவிட்டாரா?

    பதிலளிநீக்கு
  13. 1) இன்று முதல் 1000 ருபாய் நோட்டு செல்லாது...
    (கீழே விழுந்தது கெட்ட அரசியல்வாதி/கருப்பு பணக்காரர்)
    (நண்பர் விசுவாவும் இருக்காலம்.. அவர் இந்தியாவில் சேர்த்து/பதுக்கி வச்சத என்ன பண்ணுறதுன்னு)

    பதிலளிநீக்கு
  14. பல அரசியல்கட்சிகளின் பலத்த போட்டியிட்ட தமிழகசட்டசபைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அனைத்திலும் தி.மு.க. பார்டரில் ஓட்டுகள் பெற்று அரசமைக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இதற்கிடையில், யார் முதல்வர் என ஸ்டாலின் மற்றும் அழகிரிக்கு ஏற்பட்ட வீட்டுச்சண்டையில் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக்கொண்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்ததால், முதல்வராக கனிமொழி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    பதிலளிநீக்கு
  15. பிரதமர் மோடி, தேர்தலுக்குமுன் அறிவித்தபடி வெளி நாட்டில் உள்ள இந்தியர்களின் கறுப்புபணத்தில் ஒருபகுதியை மீட்டுவிட்டபடியால், இந்தியர் ஒவ்வொருவருக்கும் அதை பிரித்துகொடுக்க உத்திரவு இட்டுள்ளார். அது ஒவ்வொருவருக்கும் ரூபாய் 3 முதல் 5 கோடிவரை கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன்படி உடனடியாக ரூபாய் 15 லட்சம் இன்றைய தேதியில், இந்தியரான ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் டெப்பாசிட் செய்யப்படுகிறது! மேலும், 5 வருடங்களுக்கு மறைமுக வரி நேரடி வரி அனைத்தையும் நீக்கிவிடவும் உத்திரவு இட்டுள்ளார். விற்பனைவரி சேவை வரி வருமாண வரி சுங்கவரி எதுவும் இனி தேவைப்படாது. மீதியுள்ள பணமே தேசத்தை முன்னேற்றப்பாதையில் நடத்த 5 வருடங்களுக்கு போதுமானதால் இந்த வரிகள் எதுவும் தேவையில்லை என்றும் அறிவித்துள்ளார். இந்தியா இன்றுமுதல் வரிகள் இல்லா நாடாக ஆனது. ஆகையால் இந்தியராகிய அனைவரும் தங்கள் வங்கி கணக்கை இன்றே சென்று சரிப்பார்த்துக்கொள்ளுமாறு கோரப்படுகிறார்கள்! இதில் குறை ஏதும் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய அவசர தொலை பேசி எண்: 111.

    பதிலளிநீக்கு
  16. பிரேமலதா முதல்வராகத் தேர்வு...கேப்டன் இந்தியப் பிரதம கேப்டனாகத் தேர்வு........சுதீஸ் அனைத்து இலாகா அமைச்சர்....முதல் நடவடிக்கையாய் மநூ தலைவர்கள் அடுத்த தேர்தல் வரை சிறையிலடைப்பு.

    பதிலளிநீக்கு
  17. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்ட கருப்பு பணத்தை மீட்டு கொண்டுவந்ததின் பலனாக, 5 வருடம் எந்த வரியும் கிடையாது என்று அறிவித்துள்ளது மாபெரும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது.

    பெட்ரோல் விலை ரூ.0.90 ஆக குறைந்துவிட்டது. காரணம் ரூபாய் மதிப்பு மிகவும் உயர்ந்து, ரூ1=$1 ஆனதால் மாபெரும் மாற்றங்கள் உண்டாயின. ஹோண்டா சிட்டி கார். ரூ.22000/- புல்லட். ரூ 4500/- என குறைந்தது. வரிகள் இன்றி நாட்டில் அனைவரிடமும் பணம் மிகவும் பெருகியதால் சௌபாக்கியம் உண்டானதுதான் இதன் காரணம். அரிசி விலை. ரூ1-க்கு 6 கிலோ. மற்ற தாணிய வகைகளும் விலைகள் மிக குறைந்தன. காய்கறிகள் விலை குறைந்ததால் 1 பைசா, 2 பைசா, 5 பைசா 10 பைசா நாணயங்களை அரசு வெளியிட்டது. ரூ 18000-ல் 2400 சதுர அடி வீட்டை எளிதாக கட்ட முடிகிறது.
    மேலும், அரசு அலுவலர்களுக்கு கொடுக்கப்படும் பஞ்சப்படி இனி அவசியமில்லாத்தால் அது முழுவதும் நிறுத்தப்பட்டது. பணம் பெருகியதால் இலஞ்சம் வாங்குவது ஈன செயலாக அலுவலர்கள் கருதுகிறார்கள்.
    பங்கு சந்தைகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. சென்செக்ஸ் 25000 ல் இருந்து கடும் வீழ்ச்சி கண்டு 300 புள்ளிகளானது. இதனால் பெரும் பண முதலைகள் கடும் நஷ்டத்துக்கு ஆளானதால் சந்தை கலக்கம் அடைந்துள்ளது. பெரும் விலை போகும் பங்குகள் எல்லாம் மிகவும் சரிவு கண்டன. 3200 விற்ற மாருதி பங்கு ரூ.15 கு விற்கிறது. வெளி நாட்டில் வாழ் இந்தியர்கள் பேரளவாய் நாடு திரும்புகின்றனர். நாட்டின் பொருளாதாரம் வளம்பெற்று பெருகியதால் வெளி நாட்டிலிருந்து தகுதி உள்ள/குறைந்த தொழிளாளர்கள் பெருமளவு தேவைப்படுகிறார்கள்.
    இதில் விசேஷம் என்னவெனில், பிரிவினை விரும்பும் காஷ்மீர், மற்றும் வட மாநில தீவிரவாதிகள் மனம் மாறினர். இனி இந்திய தேசமே தங்கள் தேசம் என்று அறிவித்தனர்.

    வங்கியில் கடன் வாங்க ஆளில்லை. வாகனக்கடன், வீட்டுக்கடன், வியாபாரக்கடன், கல்விக்கடன், விவசாயக்கடன் என அனைத்து வகை கடன்களும் தேவையற்றவை ஆயின. அனேக தனியார் வங்கிகள் இதனால் மூடப்படுகின்றன. தனியார் கல்வி நிருவணங்கள், தனியார் ஆஸ்பித்திரிகள் தானே முன்வந்து இலவசமாக சேவை செய்கின்றன. இதனால், மெடிக்கல் இன்ஸூரன்ஸு அவசியமற்றதாக ஆனதால் இந்த கம்பேனிகள் மூடப்படுகின்றன.
    பண முதலைகள் நஷ்டமடைவதும், சின்ன விவசாயிகள், தொழில் முனைவர்கள் வளமடைவதும் பதுக்கப்பட்ட இந்திய செல்வத்தை திரும்ப கொண்டுவந்து ஜனங்களுக்கு கொடுத்ததாலும் வரிகள் நீக்கப்பட்டதாலும் மகத்தான மாற்றம் உண்டாயின.

    மனைவி: நாக்காலியோட கீழே விழுந்தாலும், இன்னும் குறட்டைவிட்டு தூங்குவதைப்பாரு! எந்திரிங்க...!

    பதிலளிநீக்கு
  18. 2. இன்று முதல் பூரி கட்டையில் அடி வாங்கிய விபத்துக்கு/காயத்துக்கு இன்சூரன்ஸ் கிடையாது...
    கீழே விழுந்தது யார் என்று உங்களுக்கே தெரியும்.. :)

    பதிலளிநீக்கு
  19. எந்திரன்-5 ரிலீசுக்குப் பிறகு ஆண்டவன் விரும்பினால் வரும் 2026 தேர்தலில் அரசியலுக்கு வருவேன்

    பதிலளிநீக்கு
  20. 73வது முறையாக சென்னை விமானநிலைய கூரை..., மன்னிக்க... அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது!!

    பதிலளிநீக்கு
  21. கலாய்க்க போவது யாரு ? ஏப்ரல் 2016 போட்டி
    _______________
    விசு:
    தமிழில் எழுதியுள்ள இரண்டும் ஒரே கருத்தை கொண்டாலும், ஒரு வித்தியாசம் உண்டு. அதாவது, "அது வேற வாய்! இது வேற வாய்..!" என்ற வரி மட்டும்.

    1). "என் குடும்பத்துல இருந்து யாராவது அரசியலுக்கு வந்தா முச்சந்தியில் நிறுத்தி என்னை சாட்டையால் அடியுங்கள் என்று சொன்ன மாதிரி தானா 'முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு' வாக்குறுதியும்?" என்று நிருபர்கள் கேட்டதிற்கு டாக்டர் ராமதாஸ் "சே! ச்சே! அப்படியெல்லாம் இல்லை! அன்புமணி முதலமைச்சராகி மூன்று மாதங்கள் ஆகியும் மதுவிலக்கு அமல் படுத்தாதற்கு ஒரே காரணம் அவருக்கு கையெழுத்தே போடத் தெரியாது" என்றார்..!

    2)."என் குடும்பத்துல இருந்து யாராவது அரசியலுக்கு வந்தா முச்சந்தியில் நிறுத்தி என்னை சாட்டையால் அடியுங்கள் என்று சொன்ன மாதிரி தானா 'முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு' வாக்குறுதியும்?" என்று நிருபர்கள் கேட்டதிற்கு டாக்டர் ராமதாஸ் "சே! ச்சே! அப்படியெல்லாம் இல்லை! அது வேற வாய்! இது வேற வாய்..! அன்புமணி முதலமைச்சராகி மூன்று மாதங்கள் ஆகியும் மதுவிலக்கு அமல் படுத்தாதற்கு ஒரே காரணம் அவருக்கு கையெழுத்தே போடத் தெரியாது" என்றார்..!
    ------------------------
    இதுவே ஆங்கில செய்தியாக இருந்தால்...மேலும் விசு CPA என்பதால், இந்த செய்திக்கு கட்டாயம் மயக்கம் போட்டு விழுந்திருப்பார். அது என்ன?

    Barack Obama, being the first U.S. President to visit Cuba since 1928, on his return from Cuba has asked fellow Americans to shelve Capitalism and, instead, embrace Communism!

    பதிலளிநீக்கு