ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

"முத்து" என்றால் என்னை பொறுத்தவரை "ரஜினி" அல்ல!

சினிமா என்று ஒன்றை நான் பார்க்க ஆரம்பித்ததில் இருந்தே அதில் உள்ள நகைசுவை நடிகர்களின் ரசிகன் ஆகியவன் நான். சிறு வயதில் MGR அவர்களின் படங்களை ரசித்த நான், கதாநாயகானாகிய MGR  அவர்களை எவ்வளவு ரசித்தேனோ அதே அளவு அவர் படத்தில் அங்கு இங்கு வரும் நடிகர் நாகேஷ் அவர்களையும் ரசித்து வந்தவன்.


முதலில் நாகேஷ் பிறகு சந்திரபாபு அதற்கு அடுத்து சுருளிராஜன்  பின்னர் செந்தில் கௌண்டமணி .. இவர்களின் காமடியை ரசித்து கடைசியாக விவேக் அவர்களோடு நிறுத்தி கொண்டேன்.

ஏற்கனவே பல பதிவுகளில் கூறியது போல் பாபா படத்தில் பாதியில் எழுந்து வந்ததில் இருந்து தமிழ் படங்களை (அதற்கு பிறகு வந்த படங்களில்   இரண்டு அல்லது மூன்று  பார்த்து  இருப்பேன் ) பார்ப்பதை அறவே நிறுத்திவிட்ட நிலைமையில் அறிந்த நண்பர் ஒருவர் வடிவேல் அவர்களின் காமடியை பற்றி கூறினார்.

அவருக்கு பதிலாக நானும், வடிவேல்  காமடியை முன்பு பார்த்து இருக்கின்றேன், பிடிக்கவில்லை என்றேன். அவரோ பதிலாக, இல்லை, நீங்கள் வடிவேலின் சமீபத்து (இது நடந்து ஐந்து வருடங்கள் ஆகி இருக்கும் ) காமடி பாருங்கள் என்று ஒன்றை போட்டு காட்டினார். அடே டே, அருமையாக இருகின்றதே என்று ரசித்து பார்த்தேன். என் போதாத காலம், வடிவேலுக்கு நாக்கில் சனி, அதற்கு பின் அவர் படம் எதுவும் வரவில்லை.

இயல்பான நகைசுவையை  பெரிய அளவில் கொடுக்காவிட்டாலும், தனக்கென்று ஒரு பாணி வைத்து அளித்தவர் அருமை குமரி முத்து அவர்கள்.
பல படங்களில் அவரை பார்த்து இருந்தாலும் பாக்கியராஜ் இயக்கத்தில் அவர் நடித்த "இது நம்ம ஆளு" என்ற படம் மனதில் நிற்கின்றது.

பாக்கியராஜ்க்கு தகப்பானாராக வரும் இவர் ஒரு நாவீதர்.  இந்த படத்தில் இவரும் இவர் மனைவியாக வரும் மனோரமா அவர்களும் மனதில் தனியே ஒரு இடத்தை பிடித்து நிற்பார்கள்.

வயிற்று பிழைப்பிற்காக தான் ஒரு பிராமிணன் என்று சொல்லி வந்த பாக்கியராஜை ஒரு பெரிய பிராமின  ஆத்து பெண் காதலிக்க திருமணம் நடக்கும் நேரம்.

தாலி கட்டும் வேளையில் நாவிதரான குமரி முத்துவும் மனோரம்மாவும் அங்கு வர.. அதற்கு பின் நடக்கும் காட்சிகள்.  சொல்லி மாளாது.

இது போல் பல படங்களில் குமரி முத்து அவர்கள் நம்மை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்துள்ளார்.

கோணலான  பார்வையை   ஒரு குறையாக அனைவரும் கருதும் நேரத்தில் அந்த குறையை வைத்தே வெற்றி பெற்றவர் என்று கூறினால் அது மிகையாகாது.

இவரது பார்வை ஒரு சிறப்பு அம்சம் என்றால் மற்றொரு சிறப்பு இவரின் சிரிப்பு.. ஹ ஹ ஹா என்று இவர் வாய் திறந்து சிரிக்கையில் நாம் அனைவரும் அல்லவா சிரித்தோம், இன்று இவ்வுலகை விட்டு பிரிந்து சென்று விட்டார். அண்ணலின் ஆத்மா     சாந்தியடைய வேண்டுவோம்.

இவரை பற்றி இன்னொரு காரியம் சொல்லியாகவேண்டும். நடிகர்சங்கத்தில் நடந்து வந்த "சரத்குமார்-ராதாரவி" அவர்களின்  நடவடிக்கைகளுக்கு "பூனைக்கு மணி கட்டியவரே " இவர் தான். தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்து எவ்வளவு தான் எதிர்ப்பு வந்தாலும் அதை எதிர்கொண்டு தன் மனதில் பட்ட காரியம் நிறைவேறும் வரை விடா பிடியாக  இருந்தார்.

சரத்குமார் ராதாரவி இருவரின் குறைகளை அனைவருக்கும் எடுத்து கூறி 25-30 வருடங்களுக்கு பின் இவர்களின் பிடியில்  இருந்து நடிகர் சங்கத்தை மீட்டு  கொடுத்த பெருமை குமரிமுத்துவை சாரும் .

நல்ல மனிதர், நல்ல கலைஞர் , நல்ல ஆன்மிகவாதி, உறுதியான உள்ளம் படைத்தவர்.

நினைவுகளுக்கு நன்றி முத்து அவர்களே. நன்றி.

5 கருத்துகள்: