வியாழன், 18 பிப்ரவரி, 2016

நமக்கு புதைகுழி வெட்டும் சனியன்கள்....




சரி,

இன்று செய்தித்தாளை படிக்கலாம் என்று போனால், முகத்தில் அடித்தார் போல் ஒரு புகைப்படம். அதில் சில கரை வேட்டி அடிமைகள், மக்களை பார்த்து உங்களை கொலை செய்யவும் நாங்கள் தயங்கமாடோம். உங்களால் எங்களை என்னை செய்ய முடியும் என்று கேட்பது போல் ஒரு பெரிய தோரணம் வைத்து அதில் அவர்கள் நால்வரின் ஆளுயுர புகைபடம் வேறு போட்டு சிரித்து கொண்ட படி நிற்கின்ற
னர்.

இதை பார்த்தவுடன் மனதில் முதலில் இந்த நால்வரின் மேல் கோவம் தான் வந்தது. சில வினாடிகள் கழித்து இந்த புகைப்படத்தை பார்த்தே நமக்கு கோபம் வருகின்றதே, இதை நேரில் பார்த்து கொண்டு இருக்கும் மக்கள் எப்படி சகித்து கொள்கின்றார்கள் என்ற பரிதாபம் வந்தது.

பாருங்களேன் இந்த படத்தை.



என்ன ஒரு அநியாயம்.

சாலை என்பது ஒரு பொது சொத்து அல்லவா. நான்கு வரிசை கொண்ட இந்த சாலையின் நடுவே பள்ளங்கள் தோண்டி  அதில் கம்பங்கள் நட்டு, அந்த பாதையை குறுகலாக்கி.

இதை கேட்பார் யாரும் இல்லையா?

ஒரு தேசிய சாலையை எந்த ஒரு கரிசனையும் இல்லாமல் சிதறடித்து இருக்கின்றார்களே இந்த சனியன்கள், இவர்களுக்கு என்ன ஒரு தைரியம் இருந்தால்.. அங்கே தங்களின் ஆளுயர புகைப்படத்தையும் வைத்து சிறித்து கொண்டு.

எத்தனை  வாகனங்கள்  செல்லும் பாதை இது. இதன் நடுவேஇப்படி ஒரு காரியம்.  இந்த இடத்தில் இந்த அலங்காரத்தினால் ஒரு விபத்து ஏற்பட்டு யாரவது இறக்க நேரிட்டால் இந்த சனியன்கள் மேல் கொலை குற்றம் சாட்டமுடியுமா ?

விபத்து நடப்பது இருக்கட்டும். விபத்து நடப்பதற்கான மோச வேலையை செய்ததினால் இவர்களை கைது செய்து உள்ளே தள்ள முடியுமா?

நன்றாக உள்ள சாலையில் இந்த சனியன்கள் போட்ட குழி இனி யாரால் மூடப்படும். இரு சக்கரத்தில் வரும் யாராவது இருள்வேளையில் இதை கவனிக்காமல் தடுமாறி விழுந்து எதிர் திசையில் வரும் பேருந்தின் சக்கரத்தில் தலை நசுங்கி ....

அவன் வீட்டில் உள்ள மனைவிக்கும் அவள் கையில் உள்ள மூன்று மாத குழந்தைக்கும் இந்த நான்கு சனியன்கள் என்ன பதில் சொல்வார்கள்.

மற்றவர்களை விடுங்கள். இந்த சனியன்களின் வீட்டில் உள்ள பெண்கள், இவர்களை கண்டிக்க மாட்டார்களா என்ன? என்னடா குடும்பம் இது.

வாகனத்தை ஓட்டும் போட்டு,  வலது புறம் திரும்புகின்றோம் என்று விளக்கை போடாமல் திருப்பினாலே, நம் வீட்டு அம்மணி அடுத்த அரை மணிநேரத்திற்கு நம்மை ....மற்றவர்கள் மேல் உள்ள கரிசனை தானே.

நீங்க அடிமை சனியன்கள், உங்கள் பிழைப்பிற்க்காக மானம் ரோசம் எல்லாவற்றையும் தாரை வார்ப்பீர்கள். உங்கள் சுயலாபத்திற்கு எங்களை ஏன் சித்திரவதை செய்கின்றீர்கள்.  எங்கள் உயிரோடு ஏன் விளையாடுகின்றீர்கள்?

இதில் இன்னொரு வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால், பொது மக்களின் பயம். இந்த சனியன்கள் யாரையும் இவர்கள் செய்யும் அநியாயத்தை எதையும் கேட்க யாருக்கும் தைரியம் இல்லாதவாறு முடக்கி அடக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அறிவுகெட்ட அடிமைகளுக்கு பயப்படும் அளவிற்கு நாம் அனைவரும் கொத்தடிமைகள் ஆகிவிட்டோம் என்பதை நினைத்தால், மனது கனக்கின்றது.

பொது சாலை என்பது நம் சொத்து அல்லவா. நம் இல்லத்தின் உள்ளே இந்த சனியன்கள்  வந்து நாம் வாழும் அறையிலே நாம் உயிரோடு இருக்கும் போதே நம்மை புதைக்க ஒரு குழி தோண்டுவதற்கு சமம் அல்லாவா ?

 இந்த காரியம் நடக்கும் போது நாம் கை காட்டிகொண்டு பார்த்து கொண்டு இருக்கும் படி நம்மையும் அடிமை படுத்தி விட்டார்களே.

ஒட்டுமொத்தமாக நாம் அனைவரும் எங்கேயோ தவறிவிட்டோம்.

நெஞ்சு பொறுக்குதிலையே..

10 கருத்துகள்:

  1. tamilnadu has become a bad place to live

    பதிலளிநீக்கு
  2. இதற்கே இப்படிச்சொன்னால்...இன்னும் பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கு...தவறித்தான் போனோம்.. பார்க்கலாம் இந்தமுறை...

    பதிலளிநீக்கு
  3. இங்கே மனித உயிருக்கு எந்த மரியாதையும் இல்லை. பணம்,சாதி இரண்டும் எல்லா இடங்களிலும் வேலை செய்யும். வேதனை வெட்க கேடு. இதையெல்லாம் எப்படி எதிர்ப்பது என்று பள்ளிகளில் சொல்லி கொடுப்பது இல்லை. எந்த தவறு செய்தாலும் மனு நீதி அங்கு வேலை செய்யும். தண்டனையெல்லாம் மற்றவருக்குத்தான். எதிர்ப்பது என்பது வெட்டி வேலை. எவ்வளவு கேவலமாக ஆட்சி நடத்தினாலும் அதை புகழ் பாட மெத்த படித்த அடிமைகள் கூட்டம், படிக்காத கூட்டம் உண்டு. பிறகு இப்படிதான்.

    பதிலளிநீக்கு
  4. காயடிச்சு விட்டு பல வருசம் ஆச்சு...!! இனிமே எங்கிட்டு இருந்து பொங்கறது...!!
    இருண்ட காலம் வெகு அருகில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக மிக சரியாக சொன்னீர்கள்

      நீக்கு
    2. கட்சி காரண் இப்படி வைச்சுட்டு போயிட்டான் ஆனால் பொதுமக்களில் யாரவது ஒருவர் ஒரு தீக்குச்சி ஒன்றை பத்தவைச்சி அதன் அருகில் போட்டு போயிருக்கலாமே அதுக்கு கூட துணிச்சல் இல்லாமலா போயிட்டார்கள்

      நீக்கு
  5. மக்களின் மனதை மழுங்கடிக்க செய்வதில் தமிழக தலைவர்கள் போட்டி போட்டுக் கொண்டு செய்கிறார்கள் அதில் அவர்களும் வெற்றி பெற்று இருக்கிறார்கள் அதனால்தான் தமிழக மக்கள் இப்படி இருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  6. சரியாகச் சொன்னீர்கள்
    சனி விலக்கப் பட்டு விடும்
    என நினைக்கிறோம்
    பார்ப்போம்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. சரிதான் விசு! எங்கு பார்த்தாலும் இப்படித்தான் சில நாட்களுக்கு முன் எங்கள் வீட்டருகில் பழையமகாபலிபுரம் சாலையில் இப்படித்தான் வளைவுகள் "அன்னம் இட்டு அக்ஷயபாத்திரமான சொத்துச் சேர்க்காத தமிழ்நாட்டு மக்களுக்காக சுயநலமின்றி வாழும் தங்கத் தாரகை, தன் சொந்தப் பெயரையே மறந்து தமிழமக்கள் அனைவரும் அன்புடன் அழைக்கும் அம்மா என்ற பெயரையே தன் பெயரக்கிக் கொண்ட மாண்புமிகு.......விசு மூச்சு முட்டுது...அதனால இங்க நிறுத்துக்கறேன்...இப்படி எத்தனை தெரியுமா சிறு இடைவெளிக்குள் 100..பார்த்துக் கொள்ளுங்கள்....நாங்கள் எல்லாம் முட்டாளுங்க..

    என்னத்த சொல்ல..

    கீதா

    பதிலளிநீக்கு