சனி, 23 ஜனவரி, 2016

சீமானுக்கும் - SV சேகருக்கும் "லொள்ளு" ஜாஸ்திதான் !

என்ன இருந்தாலும் சீமானுக்கும் SV சேகருக்கும் "லொள்ளு" ஜாஸ்திதான் !

"அரசியலில் சினிமா பிரபலங்கள்" என்ற ஒரு நிகழ்ச்சியை "நியூஸ் 7 தமிழ்" என்ற சேனலில் காண நேர்ந்தது.



இந்த நிகழ்ச்சியில் சினிமா நடிகர்களும் அரசியலும் என்று தலைப்பில் நிருபர் கேட்ட கேள்விகளுக்கு சீமான் அவர்களும் SV சேகர் அவர்களும் பதில் அளித்து கொண்டு இருந்தனர்.

இவர்கள் இருவரில் சீமான் அவர்கள் உரக்க உணர்ச்சிவசப்பட்டு பேசுவதில் வல்லவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவ்வாறே...நையாண்டி, நக்கல், லொள்ளு பண்ணுவதில் SV சேகர் வல்லவர் என்பதும் அனைவரும் அறிந்ததே.

பல கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டு இருக்கையில், அரசியல் கூட்டங்களில் நகைசுவையாக பேச முடியுமா என்ற கேள்வி வந்தது.. அதற்கு கண்டிப்பாக முடியும் என்று ஒப்பு கொண்ட இருவரும் தங்களுக்கே  உரிய பாணியில் உதாரணம் தந்தார்கள்.

SV  சேகர் அவர்கள் ...தான் ஒரு முறை பேசுகையில், ஒரு மத்திய மந்திரியை எதிர்த்து பேசுகையில்..

"மந்திரி மிகவும் சாதரணமானவர். இவ்வளவு வசதி இருந்தும் இன்றும் கோரை பாய் போட்டு அதில் தான் படுக்கின்றார். ஏன் என்று கேளுங்கள். அவருக்கு காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக எதையாவது சுருட்ட வேண்டும் என்று நினைப்பவர். அதனால் தான் கோரை பாய் போட்டு படுக்கின்றார் என்றார்".

சீமானோ..

விலைவாசி என்பதை ஏன் விலைவாசி என்கிறோம். இது அதிகமான விலை. இதை உன்னால் வாங்க முடியாது. இந்த விலையை வாசித்து விட்டு நொந்து கொண்டே போய் விடு. அதனால் நான் "விலைவாசி " என்றார்.

தொடர்ந்து பேசிய சீமான்,

முன்பெல்லாம் பாலில் தண்ணீர் கலக்குகின்றார்கள் என்று கண்டித்தோம். ஆனால் இப்போது பாலில் நீர் கலக்க படுவது இல்லை. நாங்கள் பேசியதை மதித்து விட்டார்கள் என்று நினைக்காதீர்கள். தண்ணீரின் விலை பாலை விட அதிகம், அதனால் தான்.

இவர்கள் இருவரும் இதை சொன்னவிதம் ரசிக்கும்படி இருந்தது.

தொடர்ந்த அந்த நிகழ்ச்சியில் அதை நடத்துபவர் .. இன்றைய நிலவரப்படி "தேர்தலில் எந்த சினிமா பிரபலத்திற்கு வாக்கு வங்கி அதிகம் உள்ளது"  என்று ஒரு அட்டவணையை போட்டு எண்களை காட்டினார். அங்கே தான் இந்த "குசும்பு" எனப்படும் "லொள்ளு" ஆரம்பித்தது.

இந்த புள்ளி விவரத்தில் நம் அன்பு சகோதரர், சுப்ரீம் ஸ்டார் சரத் குமார் அவர்களுக்கு பூஜ்ய எண்ணிக்கை என்று வந்தது. அதை கண்டவுடன் ஒரு சிரிப்பு சத்தம் கேட்டது.
"தேர்தலில் எந்த சினிமா பிரபலத்திற்கு வாக்கு வங்கி அதிகம் உள்ளது" 

தொடர்ந்து பேசிய SV சேகர், அவர்கள் ,

இதில் சரத்குமாரை நீங்கள் காட்டி இருக்க வேண்டாமே, பூஜ்யம் போட்டு ஏன் அவர் பெயரை காட்ட வேண்டும், இது தவறு!

 என்று சொல்ல ...

சீமான் அவர்களோ ... அவருக்கு ஒருவருமே ஆதரவு இல்லை என்பதை காட்ட வேண்டும் அல்லவா என்று வஞ்சக புகழ்ச்சியில் சொன்னார்.

SV சேகரோ.. அட் லீஸ்ட் சரத்குமாரிடம் கேட்டு இருந்தால் அவராவது ஆதரவை சொல்லி இருப்பார் அல்லவா,

என்று சொல்ல

நிகழ்ச்சியை நடுத்துபவரோ .. ஆளும் கட்சியின் கூட்டணியில் உள்ள ஒருவரை மக்கள் ஆதரிக்கவில்லையே என்று கேட்க..

SV சேகரோ ..

சரத் குமார் ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருகின்றாரோ என்று அவருக்கும் தெரியவில்லை , ஆளும் கட்சிக்கும் தெரியவில்லை

என்று ஒரு நையாண்டித்தனம் செய்தார்.

இவர்கள் பேசியதை கேட்டு நான் கொஞ்சம் சிரித்தாலும், என்னை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த காரியம் மற்ற பிரபலங்களுக்கு வந்த ஆதரவு எண்கள் தான்.

என்னமோ போங்க.. 

4 கருத்துகள்: