திங்கள், 25 ஜனவரி, 2016

நிறமோ ஒரு பறவை....

டாடி… உங்களுக்கு மொத்தம் எத்தனை நிறத்தின் பெயர் தெரியும்?





பள்ளி கூடத்தில் இருந்து ஓடி வந்து என் காரில் அமரும் போதே கேட்டாள் என் இளைய ராசாத்தி.
எனக்கு மட்டும் இல்ல ராசாத்தி.. ஒட்டு மொத்தமா எல்லா ஆம்பிளைகளுக்குமே மூணு இல்லாட்டி நாலு நிறம் தான் தெரியும்.

யு நீட் டு லேர்ன் மோர் அபௌட் கலர்ஸ் டாடி.

எனக்கு எதுக்கு ராசாத்தி.. அதை தெரிஞ்சி நான் என்ன சாதிக்க போறேன் …?
இல்ல டாடி.. இன்னைக்கு பள்ளிகூடத்தில் … குப்பை கொட்டும் விதத்தை பற்றி சொல்லி கொடுத்தாங்க..
என்னாது…? 8வது படிக்கிற பிள்ளைகளுக்கு கல்யாண வாழ்க்கையை பற்றி சொல்லி கொடுத்தாங்களா ?
கல்யாண வாழ்க்கைக்கும் குப்பை கொட்ரதுக்கும் என்ன டாடி சம்மந்தம் ?
எனக்கு என்ன தெரியும்….நினைவு தெரிந்ததில் இருந்தே…"அந்த ஆளோடு எப்படி குப்பை கொட்ற" .. என்று நிறைய பேர் உங்க அம்மாவை கேப்பாங்க .. !
ஐ அம் கன்புயுஸ்ட். வை வூட் எனி ஒன் கம்பர் குப்பை டு கல்யாணம் …?
அதை உங்க அம்மாட்ட கேளு..
சரி.. கமிங் பேக் ..டு வேர் ஐ வாஸ் … யு நீட் டு லேர்ன் கலர்ஸ்…டு கொட்டு தி குப்பை ப்ராபர்லி …
சொல்லு…
pic1
வாரந்தோறும் வியாழன் காலையில் .. 
டாடி.. இந்த “கருப்பு” பெட்டியில் நமக்கு உதவாத குப்பை .. சமையலறை ..மற்றும் .. கூட்டி பெருக்கி எடுக்குற தூசி .. பழைய துணி.. அந்த மாதிரி திங்க்ஸ்..
ஓகே..
இந்த “பிரவுன் ” பெட்டியில் ரீ சைக்கிள் பண்ண கூடிய சாமான்கள் .. பேப்பர் , பிளாஸ்டிக், பாட்டில் … அந்த மாதிரி….
அந்த “ப்ளூ” பெட்டி எதுக்கு ?
அதுல நமக்கு தேவையற்ற எலெக்ட்ரானிக்ஸ் … பழைய கம்ப்யூட்டர் , பிரிண்டர் , பாட்டரி … மற்றும் வயர் …
என்னை குழப்பிட ராசாத்தி.. இத்தனை நாளா நான் இதை கவனிக்க வில்லை… தேங்க்ஸ் பர் தி இன்பர்மேசன்.
இருங்க… ஒன் மோர் திங்.. அந்த “பச்சை” பெட்டியில் புள், இலை மற்றும் மரகிளை போன்ற திங்க்ஸ்…
அது சரி ராசாத்தி.. இது எல்லாம் எனக்கு தெரியாதுன்னு உனக்கு எப்படி தெரியும்….
pic2
விழுந்து கிடப்பது பக்கத்து வீட்டுகாருது … அதை எடுத்து நிக்க வைச்சிட்டு தான் வந்தேன்…
எங்க டீச்சர் தான் சொன்னாங்க.. எல்லாரும் நேரா போய் அவங்க அவங்க அப்பாவிடம் சொல்ல சொன்னாங்க..
அப்ப, உங்க அம்மாவிற்கு யாரு சொல்லி தருவாங்களாம் ..
கண்டிப்பா அம்மாவிற்கு தெரியம்னு எங்க டீச்சர் சொல்லிடாங்க..
பேசி கொண்டே இருக்கும் போது .. மக்களை பெற்ற மகாராசி அங்கு வந்து சேர்ந்தார்கள்…
ராசாத்தி… உங்க அம்மாவை டெஸ்ட் பண்ணு..
அம்மா.. இந்த குப்பை பெட்டியின் நிறத்தை வைத்து அதில் என்ன என்ன போடனும்னு தெரியுமா?
தெரியும்..
எங்க சொல்லுங்க..
ஒன்னு ..கருப்பு ?
குப்பைக்கு
இரண்டு..பிரவுன்?
ரீ சைக்கிள்
மூண்ணு....ப்ளூ?
 எலெக்ட்ரானிக்ஸ்
நாலு....பச்சை?
கிரீன் வேஸ்ட்..
வெரி குட் மம்மா …டாடி.. மை டீச்சர் இஸ் ஆல்வேஸ் ரைட் .
இந்தாங்க, இந்த ஷூ ரொம்ப பழைசு. போய் குப்பையில் போடுங்க..
சரி,
எந்த கலர் குப்பை.
இது .. இது.. இது...
டாடி.. இது கருப்பு பெட்டியில்... 
எனக்கு தெரியும்.. உன்னை செக் பண்ணேன் ..
நண்பர்களே.. ஒவ்வொரு வாரம் வியாழகிழமை எங்கள் தெருவில் இந்த குப்பை பெட்டிகள் வெளியே வைக்க படவேண்டும் . அதை முனிசிபாலிடியில் இருந்து ஒரு வாகனத்தை எடுத்து வந்து அள்ளி செல்வார்கள். இதற்கு மாதம் 40 முதல் 100 டாலர் வரை பணம் கட்டவேண்டும். 24 மணிநேரத்திற்கு மேல் இந்த பெட்டிகள் வீட்டின் வெளியில் இருந்தால் நமக்கு "நோடீஸ்" வந்து விடும்..
பொதுவாக இந்த பெட்டிகளை எடுத்து வைக்கும் வேலை … இங்கே ஆண்வர்கத்திர்க்கு சொந்தமாகும்.
பின் குறிப்பு:
ஹலோ..
சொல்லுங்க அண்ணே..
சுந்தரி, தண்டத்திடம் பேசலாமா?
சரியா சொன்னீங்க.... பேசுங்க.
என்ன சுந்தரி கிண்டலா பதில் சொல்ற?
அவர் என்ன வேலை பண்ணாருன்னு அவரையே கேளுங்க.
ஹலோ தண்டம்.. என்ன ஆச்சு.
ஒரு சின்ன தவறு, அதுக்கு அரசாங்கத்திடம் ஒரு கடிதம், ஒரு அபராதம்.. என்னத்த சொல்றது.?
விவரமா சொல்லு.
வாத்தியாரே.. வார வாரம் குப்பைய வெளியே வைக்கிறோம் இல்ல ..
ஆமா.. அதுக்கு என்ன இப்ப? வியாழகிழமை தானே அது.
"வெயிட் எ நிமிட்" வாத்தியாரே.
சொல்லு.
அந்த குப்பைக்கு நாலு தொட்டி கொடுத்து இருக்காங்க.
ஆமா.
இந்த நாலும் வேற வேற பொருட்கள் போட்ரதுக்காம்.
ஆமா.. இத ஏன் பெரிய சிதம்பர ரகசியத்த கண்டுபிடிச்ச மாதிரி சொல்ற?
என்ன? .. இந்த விஷயம் உனக்கு தெரியுமா. வாத்தியாரே..!
என்ன தண்டம்.. இது எல்லாம் "பேசிக்" ஆச்சே..இதுகூடவா தெரியாமல் எந்த மடையனாவது இருப்பான்.
மடையன்...ம்...ரொம்ப அவசியம்..எங்க நான் கலர சொல்றேன் நீ, விஷயத்த சொல்லு.
கருப்பு ?
குப்பைக்கு
பிரவுன்?
ரீ சைக்கிள்
ப்ளூ?
 எலெக்ட்ரானிக்ஸ்
பச்சை?
கிரீன் வேஸ்ட்..
வாத்தியாரே.. என்ன வாத்தியாரே... இடந்சூட்ட சொன்னா.. பொருள் கூட விளக்குறியே.. எப்படி... 
எப்போதுமே நம்மை சுத்தி நடக்குற சின்ன சின்ன விஷயத்தை கொஞ்சம் கவனித்து பார்க்கணும் தண்டம். சும்மா 24 மணி நேரமும் பகல் கனவில் இருக்க கூடாது.
உனக்கு தெரிஞ்சு இருக்கு எனக்கு தெரியில பாரு.
ஏன் தண்டம் ரொம்ப நொந்து பேசுற.
ஒரு பழைய கம்புயுடர் மானிட்டரை அந்த பச்சை பெட்டியில் வச்சிட்டேன். அதுக்கு போய் ஒரு கண்டிப்பு, அபராதம்.. என்னமோ போ, வாத்தியாரே.

நண்பர்கள் சிலர், அமெரிக்கவாழ் முறை பற்றி பதிவுகள் எழுத கேட்டு கொண்டதின் பேரில் ஒரு சில திருத்தங்களோடு ஒரு மீள் பதிவு. 

5 கருத்துகள்:

  1. ஆம்! அங்கு இது அபார்ட்மெண்டிலும் உண்டே அருமையான விஷயம். இங்கு சில வருடங்களுக்கு முன் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று வீடு வீடாக வந்து எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஒரு சில மாதங்கள் நடந்தது, ஒரு சில பகுதிகளில் மட்டும். அதுவும் நகரத்தில். ஹும் அவ்வளவுதான். நம்மூரில்தான் எல்லாமே ஒரு நாள் முதல்வன் போலத்தானே...கோவிந்தா அந்தத் திட்டத்திற்கு! இங்கு இரண்டுவிதக் குப்பைகளுக்கே வழியில்லை...ஒவ்வொரு தெருவிலும் முக்கிலும் இல்லை இடைப்பட்ட இடங்களிலும் பாருங்கள் வீட்டு மெத்தை முதற்கொண்டு அங்கு இருக்கும்! என்னவோ போங்க..அடுத்த வெள்ளம் வந்து ஊரையே இழுத்துக் கொண்டு செல்லட்டும்...அவ்வளவு கோபம் வருகின்றது..

    கீதா

    பதிலளிநீக்கு
  2. எனது ஒரு பரிந்துரை கூட உண்டு. அங்கெல்லாம் சோசியல் செக்யூரிட்டி நம்பர் போல இங்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு நம்பர் கொடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தெருவிலும் குப்பைகள் பெட்டியில் இல்லாமல் வீதியில், ஒரு சிறு குப்பை கூட இருந்தாலும் உடனே அந்தத் தெரு முகவரியில் இருக்கும் அனைத்து வீடுகளின் பேங்க் அக்கவுண்டிலிருந்து அபராதம் கழிக்கப்படவேண்டும். அப்போது யார் குப்பைப் போட்டார்கள் வீதியில்? உனக்காக நான் எதற்குத் தண்டம் (தண்டபாணி மன்னிக்கவும் இது உங்கள் பெயர் அல்ல!!ஹிஹி) அழவேண்டும் என்று ஒரு சர்ச்சை வந்து...அப்படியாவது பணத்தில் கைவைக்க நம் மக்கள் திருந்த மாட்டார்களா என்ற எண்ணம் கூட வருவதுண்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அமெரிக்க வாழமுறை பற்றிய பதிவு அருமை நண்பர் விசு அவர்களே! இந்த நான்கு வண்ணத்திற்கும் இருப்பதுபோல நம் ஊரில் பிஸ்கட், சாக்லேட் போலும் உணவுப்பொருள் மற்றும் சோப், பற்பசை போன்றவற்றில் இடப்பட்டிருக்கும் கோடுகளுக்கும் தொடர்புண்டா என்று விசாரிக்க வேண்டுகிறேன். என்பதிவில் இந்தச் சந்தேகத்தைக் கிளப்பி “இதை வாங்காதீர்கள்” என்றொரு பதிவு எழுதியிருக்கிறேன் பார்க்க - http://valarumkavithai.blogspot.com/2015/12/blog-post_31.html

    பதிலளிநீக்கு
  4. மீண்டும் ஒரு முறை ரசித்தேன்... சிரித்தேன்...

    பதிலளிநீக்கு
  5. திட்டமிட்டு செயல்படுத்துகின்றார்கள்! இந்தியாவில் திட்டமிடுதலோடு சரி! தூய்மை இந்தியா, ஸ்வச் பாரத் எல்லாம் போயே போச்!

    பதிலளிநீக்கு