திங்கள், 7 டிசம்பர், 2015

ஒன்றே நன்றே இன்றே செய்ய வேண்டும்

கடந்த சில நாட்களாக தமிழ் நாட்டில் பெய்து வரும் மழை. இந்த வரத்தை நாம் வாய் தவறியும் சபிக்க கூடாது.



சிறுவயதில் பள்ளியில் ராஜா - ராணி நாடகம் நடிக்கையிலே ஒவ்வொரு ராஜாவும் தம் தம் மந்திரியை பார்த்து கேட்ட கேள்வி..

மும்மாரி பொழிந்ததா?

மழையை நம்பியே வாழ்ந்தவர் நாம் என்பதற்கு இதைவிட அத்தாட்சி?

இந்த மழையை சாபமாக்கினோம். நாம் அனைவரும் தான். கூட்டாகா சேர்ந்து நமக்கு நாமே விஷம் வைத்து கொண்டோம்.

யார் புண்ணியமோ.. சாவதற்கு முன்னால் நம்மை இந்நாள் வரை காத்துவந்த மழை நமக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்து இருகின்றது. வழக்கம் போல் இனிப்பான மருந்தல்ல. நமக்கு இருப்பது தொழு நோய் அல்லவா ? அதனால் ஒரு அறுவை சிகிச்சை.

பிழைத்து கொண்டோம்.... பிழைக்க மட்டும் இல்லை விழித்தும் கொண்டோம்.

கிட்ட தட்ட அறுபது ஆண்டுகள் ஊழலினால் கெட்டு குட்டி சுவராகிய டெல்லியில் வாழும்  மக்கள் .. கடந்த வருடம் ஆம் ஆத்மி என்ற கட்சி வந்ததும் கட்டி பிடித்து கொண்டார்கள். ஏன். ஒரு மாற்றம் வேண்டும் என்று. டெல்லி வாழ் மக்கள் ராசியானவர்கள். அவர்களின் மாற்றத்திற்கு  ஒருவர் கிடைத்து விட்டார். இவர் சாதிப்பாரா? காத்து இருந்து பார்போம். ஆனால் சில மாதங்களிலேயே ஜாம்பாவன் கட்சிகளை  மக்கள் தூக்கி எறியும் படி செய்தாரே.. அதுவே சாதனை தான்.

இந்த பாக்கியம் தமிழ் நாட்டுக்கு கிடைக்குமா?

எனக்கு என்னமோ மக்கள் தயாராக உள்ளார்கள் என்று தான் எண்ணம். அவர்களை சொல்லியும் குற்றம் இல்லை. என்ன செய்வோம். நமக்கு கிடைத்த ராசி. ஐம்பது வருடமாக மாற்றி மாற்றி ஆட்சி அமைத்து இன்று நாடே குட்டி சுவராகியுள்ளது.

இந்த மழையினால் வந்த நல்ல காரியம் ஒன்று. மக்கள் இப்போது தான்  தாங்கள் எங்கே தவறினோம் என்று உணர்ந்துவிட்டார்கள். இந்த உணர்ச்சி தாமதமாக வந்தாலும் வந்ததே அதை பாராட்டுவோம்.

இவர்கள் போனால் அவர்கள், அவர்கள் போனால் இவர்கள் நமக்கு இனி தேவையில்லை. இவர்கள் இருவரும் இல்லாத மற்றவர்களும் இவர்கள் இருவரில் ஒருவரோடு "காலத்துக்கேற்ற கோலம்" போட்டவர்கள் தான்.  அதனால்  அவர்களும் நமக்கு தேவை இல்லை.

நம்மை நாமே ஆள்வோம். அதற்கு டெல்லியில் அமைந்தது போல் நமக்கும் நாமாகவே அமைத்து கொள்ளவேண்டும்.

சாதி மதம் நம்மை எப்போதும் பிரித்து கிடையாது. அதை வைத்து நம்மை பிரித்தார்கள்.

இன்று தமிழக மக்கள் தயாரான நிலையில் உள்ளனர்.  ஆம் ஆத்மி ஒன்று இன்று உருவானால் அடுத்த ஆட்சி நல்லாட்சி தான்.

இங்கே தான் ஒரு வலி. இதயத்தை நோகடிக்கும் வலி. மக்கள் தயாராக இருக்கும் வேளையில் நம்மை அழைத்து செல்ல தலைவர்கள் இல்லையே. என்ன ஒரு கொடுமை?

சுயநலமற்ற அப்பற்ற  ஊழலற்றவர்களுக்கு ஒரு விண்ணப்பம். இந்த தருணம் இனியும் கிட்டாது. பொருத்தது போதும் என்று பொங்கி எழுந்து டெல்லி பாணியில் ஒன்றை ஆரம்பியுங்கள்.

அங்கே ஒரு அர்விந்த் போல் நமக்கு ஒருவர் தேவை. படித்தவர். தேர்ந்தவர். ஊழலற்றவர். கையில் நெய் வைத்து கொண்டல்லவா வெண்ணையை தேடுகிறோம்.

IAS  சகாயம் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம். பொருத்தது போதும் ஐயா. பொங்கி எழுந்து வாருங்கள். உங்கள் பின்னே வர மக்கள் தயாரான  நிலையில் உள்ளனர்.

இந்த மாற்றத்தை நாம் இப்போது செய்யாவிட்டால் எப்போதும் செய்ய முடியாது. இது ஒரு நல்ல தருணம்.

இயற்கை அன்னையின் இந்த அறுவை சிகிசை இனிமேல் நமக்கு கிடைக்காது. இந்த நிலைமை மாறாவிடில் அடுத்து நாம் அனைவரும் பிணம் தான்.

நம் மக்கள் நிமிர்ந்துவிட்டார்கள் என்று தான் தோன்றுகின்றது. இங்கே நான் சொன்ன பெயர் சாகயம் என்ற ஒரே பெயர் தான்.

இவரை போல் பலர் உள்ளார்கள். வெளிநாடு வாழ்க்கையில் வருட கணக்கில் இருந்ததால் இந்த பெயர்களை நான் அறியேன்.

இதை படிக்கும் தோழர் தோழிகளே.. இந்த பதிவில் சகாயம் என்ற பெயர் வரும் இடத்தில் தங்களுக்கு தெரிந்த நாணயமான நபர்களின் பெயர்களை போட்டு பரப்புங்கள்.

இன்னும் ஆறே மாதங்கள் தான் உள்ளன. மாற்றம் கண்டிப்பாக வரும். அதற்கு மக்கள் தயார். தலைவர்களே புறப்படுங்கள்.

ஒன்றே நன்றே இன்றே செய்ய வேண்டும்.

#SagaayamforCM

11 கருத்துகள்:

  1. சகாயம் இப்போதுவரை ரொம்ப நல்லவர்தான். இப்படித்தான் நாங்கள் உமாசங்கர் ஐ.ஏ.எஸ் பற்றியும் மதிப்பிட்டு ஏமாந்தோம். சகாயம் நல்ல 'நம்பிக்கை வெளிச்சம் தருகிறார். இப்போதைய அரசியலில் நல்ல கொள்கையோடு கட்சி கட்டுப்பாடு இல்லாத நல்லவர்கள் ஒருவரும் இல்லை. ஆனாலும், கம்யூனிஸ்டுகளில் நிறைய பேர் நல்லவர்கள்தாம். கொள்ளை அடிக்காதவர்கள். நல்லக்கண்ணு அவர்கள் போன்று பலர் இருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல நெருப்பு கங்கு இது எங்கும் பற்றி பரவட்டும்,,,

    நல்ல பகிர்வு,

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு மாற்றம் தான்.. ஆனால் அவர் சம்மதிப்பாரா?

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு தொடக்கம். உண்மையில் மக்கள் மாற்றத்துக்காக காத்துக்கிடக்கிறார்கள். நீங்கள் சொன்னதுபோல் தலைவர்கள்தான் கிடைக்கவில்லை.
    த ம 1

    பதிலளிநீக்கு
  5. It is really sad that many of us have started to think that there is only ONE honest person in the state.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Tamizan.. We have many honest persons. Its just that I have seen the work of IAS Sagaayam. You may know someone else. Its for us to convinced these souls to save all of us, including themselves.

      நீக்கு
  6. கண்ணுக்குத்தெரிந்த நல்லவரை சொல்லியிருக்கின்றீர்கள்...
    ஒரு நல்ல தொடக்கம் பாதி வெற்றி....
    நீங்கள் வெல்வீர்கள்.....
    நாமும்...

    பதிலளிநீக்கு
  7. விசு கை கொடுங்கள். சத்தியமாக நானும் கூட இவரைப் பற்றி யோசித்தேன். அவர் நல்லவர் என்பது ஒருபுறம்...மறுபுறம்.. ஏனென்றால் புதுக்கோட்டைக்காரர். அங்கேயே அருமையான நல்ல உள்ளங்கள் நம் சகோதர சகோதரிகள் இருக்கின்றார்களே! ஒரு பெரும்படையே இருக்கின்றதே!!! விதைக்கலாம் உட்பட...அதுவும் இளம்புயல்கள். விரைந்து செயல்படக்கூடியவர்கள். இவருடன் கை கோர்த்தால் பல நல்லது நடக்கும். ஆனால் இவர் முன்வருவாரா தலைமை தாங்க???!!! புதுக்கோட்டைக்காரர்களே உங்கள் கையில் பந்து உள்ளது. பயன்படுத்துங்கள். முத்துநிலவன் அண்ணா காதில் விழு ந்த தா..... விசு நாமும் நம் பங்கிற்கு இந்த ப்ளாகில் பண்ணுவது போல பல நல்ல கருத்துரைகள் வழங்கிச் சிறப்பிக்கலாமே...???!!!??!
    பகல் கனவோ...??!! கனவு காண்போம் நடக்கும் அல்லவா விதைக்"கலாம்" தளிர்க்கும்!!

    பதிலளிநீக்கு
  8. விசு கை கொடுங்கள். சத்தியமாக நானும் கூட இவரைப் பற்றி யோசித்தேன். அவர் நல்லவர் என்பது ஒருபுறம்...மறுபுறம்.. ஏனென்றால் புதுக்கோட்டைக்காரர். அங்கேயே அருமையான நல்ல உள்ளங்கள் நம் சகோதர சகோதரிகள் இருக்கின்றார்களே! ஒரு பெரும்படையே இருக்கின்றதே!!! விதைக்கலாம் உட்பட...அதுவும் இளம்புயல்கள். விரைந்து செயல்படக்கூடியவர்கள். இவருடன் கை கோர்த்தால் பல நல்லது நடக்கும். ஆனால் இவர் முன்வருவாரா தலைமை தாங்க???!!! புதுக்கோட்டைக்காரர்களே உங்கள் கையில் பந்து உள்ளது. பயன்படுத்துங்கள். முத்துநிலவன் அண்ணா காதில் விழு ந்த தா..... விசு நாமும் நம் பங்கிற்கு இந்த ப்ளாகில் பண்ணுவது போல பல நல்ல கருத்துரைகள் வழங்கிச் சிறப்பிக்கலாமே...???!!!??!
    பகல் கனவோ...??!! கனவு காண்போம் நடக்கும் அல்லவா விதைக்"கலாம்" தளிர்க்கும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. நன்றி விசு நான் நினைத்த நபரை நீங்கள் இங்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதற்கு...

    பதிலளிநீக்கு

  10. சிறந்த எண்ணங்கள் மின்னுகின்றன
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு