ஞாயிறு, 20 டிசம்பர், 2015

அய்யய்யோ ஊரே கெட்டு போச்சு

மீண்டும் வார இறுதி.. அருமை நண்பர் ஒருவர் இல்லத்திற்கு வர இருவரும் சேர்ந்து ஒரு பாடலை பதிவு செய்தோம். இன்றைய வாழ்க்கைத் தரத்தை பற்றியது.

இந்த ராகமும் பொப்பிசை பிதா நிதி கனகரதினர்திக்கு சொந்தம். எழுத்துக்கள் மற்றும் பாடியது மட்டுமே நான். இசை அவருடையதே.

கேட்டு பார்த்து பிடித்து இருந்தால்.. சொல்லுங்கள்..


                  ஐயையோ ஊரே கெட்டு போச்சி
                  பாடலை கேட்க இங்கே சொடுக்குங்கள் ..
                  ஐயையோ ஊரே கெட்டு போச்சி
                  https://soundcloud.com/vcornelius/fnzauibtiest


அய்யய்யோ ஊரே கெட்டு போச்சு
அம்மாடி காலம் மாறி போச்சி
நாகரீகம்  போற வேகம்
 நடுதெருவில் நின்று நடனம் ஆடுது
அய்யய்யோ ஊரே கெட்டு போச்சு 

காலையின் படிப்பு கனவாகி போச்சி
கனிவு பாட்டால் காது கிழிந்து போச்சு
மாலை ஆட்டம்  மறந்து போச்சு
மருந்தும் இப்போ விருந்துக்காச்சி
அய்யய்யோ ஊரே கெட்டு போச்சு 

முந்தானை இப்போ பறந்து பறந்து போச்சி
அறைதாவணி  அரிதாகி போச்சி
நீல கூந்தல் ஆணுக்கு சாட்சி
மூக்குத்தி இறங்கி தொப்புள்ளுக்கு போச்சி
அய்யய்யோ ஊரே கெட்டு போச்சு

பாலும் தயிரும்பெப்சி கோலா  ஆச்சி
ஏப்பத்தின் எதிரொலி  எட்டு ஊருக்கு போச்சி
கேப்ப ரொட்டி கேக்கா மாறி
புளிேயாேதாைர போய் பிட்சா வந்தாச்சி
அய்யய்யோ ஊரே கெட்டு போச்சு

கல்யாணம் என்பது கேலி கூத்தா ஆச்சி
மாங்கல்ய புனிதம் புளிச்ச மாவா போச்சி
வெட்கம்  இப்போ விலைக்கு  போச்சி
வெறுங்கையிலே முழம் போட்டாச்சி
அய்யய்யோ ஊரே கெட்டு போச்சு

கடவுள் என்பது கடந்த காலம் ஆச்சி
காணிக்கை அளிப்பது கடனாக போச்சி
கடைசி  காலம் நெ ருங்கியாச்சி
கணக்கு கொடுக்கும் நேரம் வந்தாச்சி
அய்யய்யோ ஊரே கெட்டு போச்சு

8 கருத்துகள்:

  1. வரிகள் எல்லாமே அருமை..நகையும் வரவழைத்ததௌ..விசு..பாடியதும் நல்லாருக்கு! After a very long time srilankan pop music...

    பதிலளிநீக்கு
  2. பாடல் அருமை பாடியவிதமும் மிக அருமை. எனக்கு இலங்கை தமிழில் பாப் இசையில் வரும் பாடல்களை கேட்பது மிகவும் பிடிக்கும் நாலைந்து சிடிகள் வைத்து இருந்தேன் அவைகள் எல்லாம் காணமல் போய்விட்டன. ஹும்ம்ம்ம்ம்

    உங்கள் புத்தகதை எனது மனைவி படித்து வருகிறாள் மிகவும் நகைச்சுவை உணர்வுடன் இருப்பதாக கருத்டு தெரிவித்து இருக்கிறாள். நல்ல வேளை என் எழுத்துகளை அவள் இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை அப்படி ஆரம்பித்தால் அடிகள் இன்னும் அதிகரிக்கும் என்பது உறுதி

    பதிலளிநீக்கு
  3. இந்த பாடலுக்கு தகுந்த புகைப்படங்களை தொகுத்து அதை இந்த பாடலுடன் இணைத்து வீடியோவா வெளியிட்டால் மிக சிறப்பாக இருக்கும் அல்லது நீங்கள் பாடுவதை வீடியோவாக எடுத்து இட்டாலும் சிறப்பாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  4. I go for the first one, offcourse with your help.......do one for me. THANKS.

    பதிலளிநீக்கு
  5. மிகவும் அற்புதம்
    இசையோடு கேட்கையில் பாடல் வரிகள்
    கூடுதல் வீரியம் பெறுகின்றன
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. ஆஹா...அய்யய்யோ...உங்கள் பாட்டு வருமெனில் ஊர்கெட்டுப் போநாலும் தப்பில்ல...அழகு....

    பதிலளிநீக்கு
  7. அய்யய்யோ ஊரே கெட்டு போச்சு
    மெய்யெல்லோ நம்மாளுங்க கெட்டுப் போனாங்க...
    உய்யுமா நாளைய தலைமுறை!

    பதிலளிநீக்கு