செவ்வாய், 17 நவம்பர், 2015

பரதேசியும் நானும்...

திங்களும் அதுவுமா  வாரவாரம் ஒரு காரியம் செய்வேன்.ஒன்னும் பெருசா இல்ல. நம்மளை பதிவுலகத்திற்கு இழுத்து வந்து விட்ட அண்ணன் பரதேசிக்கு காலை வேளையில் வேலைக்கு போகும் போதுஒரு காலை போட்டு  காலை வணக்கம் சொல்லிட்டு, அவர் போன "வார இறுதிய" எப்படி கொண்டாடினார்னு கேட்பேன்.

இங்கே நண்பர்கள் சிலர்.. .என்ன உங்களை பரதேசி தான் பதிவு உலகத்திற்கு அழைத்து வந்தாரா ? என்று ஆச்சரியபடுவது தெரிகின்றது. பதிவு உலகத்திற்கு மட்டும் இல்லங்க. வளைகுடா பகுதியில் "எண்ணை" கிணற்றில் ஒரு நாளைக்கு 200 பக்கெட் "எண்ணை" சேந்தி கொண்டு இருந்த "என்னை",  என் அண்ணனிடம் என் தொலை பேசி "எண்ணை"வாங்கி அமெரிக்காவில் ஒரு வேலையும் போட்டு கொடுத்து இங்கே அழைத்து வந்ததும் அண்ணன் "பரதேசி"அவர்கள் தான்.


இங்கே வந்து இறங்கி பல வருடங்கள் ஆனபிறகு, ஒரு நாள் அண்ணனிடம்,

அண்ணே, போன வாரம் பேராசிரிய பாப்பையாவின் பட்டிமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைத்தது...

அப்படியா.. (அவரின் மனதில் .. தமிழ் இனி மெல்ல சாகும்) சந்தோஷம். உனக்கு எப்படி..?

ஆலை இல்லாத காட்டில் இலுப்ப பூ கதை தான் அண்ணே..

என்னப்பா.. எப்போதும் ஆங்கிலத்தில் பேசுவ.. ? தமிழில் பழமொழி எல்லாம் வருது.

அண்ணே.. இவ்வளவு நாளா உங்களுக்கு தமிழ் தெரியாதுன்னு தான் நான் ஆங்கிலத்தில் பேசுனேன்.. எனக்கு தமிழ் மேல் ஒரு தலை காதல் அண்ணே..

அடப்பாவி.. எனக்கு தமிழ் தெரியாதா? தம்ப்ரி.. paradesiatnewyork.blogspot.com என்ற பெயரில் வருட கணக்கில் எழுதி வரேன். என்னை பார்த்து தமிழ் தெரியாதுன்னு..

அண்ணே.. என்ன சொல்றீங்க.. அதை நான் எப்போதும் படிப்பேன். அது நீங்களா?

சாட்சாத் நான் தான்.

ரொம்ப சந்தோசம் அண்ணே.. அதுசரி.. உனக்கு தான் தமிழ் மேல் ஒரு தலை காதல்ன்னு சொல்றியே.. நீயும் எழுத வேண்டியது தானே.

அண்ணே.. கிண்டலா?

இல்ல,விசு.. நிறைய ஊரில் படிக்கிறேன் என்ற பெயரில் சுத்தி இருக்க    ... நிறைய இடத்துக்கு பிரயாணம் பண்ணி இருக்க..ஒரு மனைவி, இலங்கை இந்திய கூட்டு தயாரிப்பில் ரெண்டு ராசாத்திக்கள் , நிறைய நண்பர்கள்.. சும்மா உன் மனதில் வந்தத எழுது.

யார் படிப்பாங்க?

நான் படிக்கிறேன்..

அப்படி ஆரம்பித்தது தான் என் பதிவுலக வாழ்க்கை.

இங்கே நீங்கள் அனைவரும் ஒரு சிறிய "பிரேக்" எடுத்து பரதேசியை உங்கள் வாய்க்கு வந்தபடி தாராளமாக திட்டலாம்.

சரி.. இன்றைக்கான அலைபேசி அழைப்பிற்கு வரலாம்.

ரிங்.. ரிங்.. ரிங்..

எதிர் முனையில்..

"மேகம் கொட்டட்டும் திண்டாட்டம் உண்டு " என்ற இளையராஜாவின் பாடல் பரதேசி அண்ணன் பாடுவது கேட்டது.

ஹலோ ... அல்பி ஹியர்.

அண்ணே வணக்கம்.

வணக்கம்.. விசு..

என்ன அண்ணே, பாட்டெல்லாம் பிரமாதமா இருக்கு...?அது சரி.. இந்த பாட்ட கொஞ்ச நாளைக்கு பாடாதீங்க.. மதராசில் இருந்து யாராவது கேட்டாங்கனா நீங்க கிண்டல் பண்றீங்கன்னு யோசிப்பாங்க..

ஆமா இல்ல..

அண்ணே ஒன்னு ஆமான்னு சொல்லுங்க இல்ல, இல்லேன்னு சொல்லுங்க இது என்ன " ஆமா இல்ல" ?

அது சரி..ஆமா!

 பாட்டு, குரல் சந்தோசம் பார்த்தா.. என்னமோ "நோ தங்கமணி என்சாய்" காட்சியில்  வரமாதிரி சந்தோசமா இருக்கீங்க என்ன விஷயம்?

அட பாவி.. கண்டு பிடிச்சிடியா.. தங்கமணிய விமானத்தில் ஏத்தி விட்டுட்டு இப்ப திரும்புறேன்.




உங்க குரலை பார்த்தவுடனே நினைச்சேன். எத்தனை நாளுக்கு விடுதலை?

ரெண்டே ரெண்டு வாரம் தான்.

அடே டே, அதுத்தான் ஆடலும் பாடலுமா? நடக்கட்டும்.. நடக்கட்டும்.. மதிய சாப்பாடு எப்படி?

நேரா இங்கே இருந்து "அஞ்சப்பர்" தான்..

அண்ணே.. அண்ணிக்கு இந்த விஷயம் தெரியுமா?

இன்னிக்கு தெரியாது, அண்ணிக்கு என்னிக்கு தெரியுதோ , அன்னிக்கு பாத்துக்கலாம்?

சோக்கா சொன்னீங்க அண்ணே. அஞ்சப்பர் நெத்திலி சூப்பர்ன்னு கேள்வி பட்டு இருக்கேன்.போட்டு தாக்குங்க..

எனக்கு இந்த நீர்வளம் ஆகாது தம்ப்ரி, ஒரு தாளி இருந்தா போதும்.

ஆமா, "தாலி" கட்டினவள  தூர அனுப்பிட்டு "தாளி" சாப்பிட்றேன்னு அஞ்சப்பர் போய் இப்படி எண்ணெய் ஊத்தாம என்னை  "தாளி"க்கிரீங்களே, நடக்கட்டும் .. நடக்கட்டும்.

சரி, சாப்பாடு முடிச்சிட்டு நேரா ஆபிசா?

நீ ஒன்னு.. சாப்பிட்டு நேரா வீடு தான்.

அப்ப வேலை ?

அம்மணி வரவரைக்கும் "வொர்க் ப்ரம்  ஹோம்".

அடே ...அதுக்கு உங்க ஆப்பிஸில் "ஒகே" வா?

விசு.. எப்ப வேண்டுமானாலும் "வொர்க் ப்ரம்  ஹோம்" ஓகே தான்.

அப்ப ஏன் அண்ணி இருக்கும் போது மட்டும் வேலைக்கு போறீங்க?

புரியாத மாதிரி பேசாத விசு..அம்மணி இருக்கும் போது "வொர்க் ப்ரம் ஹோம்" "வொர்க் பார் ஹோம் " ஆகிடும்.

புரியல.

அட பாவி.  உனக்கு கண்ணாலம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சி. .இதுகூடவா தெரியல .நாளுமுழுக்க வீட்டில் தானே இருந்தீங்க. கொஞ்சம் "கூட்டி-பெருக்கி-கழுவி-துவைச்சி- மடிச்சி" வைக்க கூடாதான்னு கேப்பாங்க.. அதுதான். அவங்க ஊரில் இருக்கும் போது  "நோ வொர்க் ப்ரம் ஹோம்"

அண்ணே, எங்கேயோ போய்டீங்க அண்ணே. அது சரி. ஊருக்கு போய் இருக்காங்களே. "ஹெல்மட் - லைப் ஜக்கட்" எல்லாம் கொடுத்து அனுப்பினீங்களா ?

அவங்க என்ன "பைக் - கார்-நீச்சல் " பந்தயத்துக்கா போய் இருக்காங்க. அது எல்லாம் எதுக்கு?

அண்ணே, மதராசில் விமான நிலையத்தில் நிறைய கல் மண்டை மேலே விழுதாம். அதுவும் இல்லாமல் சமீபத்தில் பெஞ்ச மழையில் விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கே படகில் தான் போகணுமாம். அதுதான்.

அவங்க மதராசுக்கு  போகல.

பின்ன எங்க போய் இருக்காங்க ?

நம்பெருமான் ஏசுபிரான் பிறந்த ஊரான இஸ்ரேல் நாட்டுக்கு அதுவும் அவர் பிறந்த ஊராகிய பெத்லேஹெம்க்கு போய் இருக்காங்க.

என்ன விசேஷம் அண்ணே?

ஒன்னும் இல்ல.. சின்ன வயதில் அவங்களுக்கு ஒரு வேண்டுதலாம். அது பலிச்சா தான் இஸ்ரேலுக்கு வந்து நன்றி கடன் செலுத்துவேன்னு ஒரு பிரார்த்தனை!

அண்ணே.. பிரார்த்தனை பலிச்சிடிச்சு போல இருக்கே.. "லம்பா" ஏதாவது போனஸ் கிடைத்ததா?

லம்ப்பா ? எனக்கு ? நல்லா கேட்ட போ.

பின்ன அப்படி என்ன பிரார்த்தனை அண்ணே?

தன் மனசுக்கு பிடிச்ச, நல்லா படிச்ச, பார்க்க லட்சணமா இருக்க, ரொம்ப பொறுமை சாலியா ஒரு மாப்பிள்ளை வேணும்னு வேண்டுனாங்களாம் .. அது பலிச்சிடிச்சாம், அதுக்கு நன்றி கடனா போய் இருக்காங்க.

அண்ணே, என்ன அண்ணே? இவ்வளவு பெரிய மேட்டரை கொஞ்சம் கூட சோகம் இல்லாம சந்தோசமா சொல்றீங்க?

யோவ்.. உன் வாயில் எண்ணையை காச்சி ஊத்த .. அந்த மாப்பிள நான் தான்.
 கண்ணாலம் ஆனா காலத்தில் போக முடியில.. இப்ப தான் வாச்சி இருக்கு, அதுதான் இப்ப போனாங்க.

சும்மா தமாஸ் பண்ணேன் அண்ணே..  .அது நீங்கதானு எனக்கும் தெரியும்!

அது சரி... உன் பொண்டாட்டியை எப்ப இஸ்ரேல் அனுப்பி வைக்க போற?

அவங்களுக்கு உங்களை மாதிரி எதுவும் பலிக்கலையே.. அதனால் தான் வேண்டாம்னு விட்டுட்டன் .

பலிகாட்டி பரவாயில்லை. உன்ன மாதிரி ஒரு ஆளோடு குப்பை கொட்ரதுக்கு அவங்களுக்கு ஆண்டவனின் அருள்  நிறைய தேவைபடும். அதுக்கே அவங்கள வருஷத்துக்கு ரெண்டு முறை அனுப்பி வைக்கலாம்.

பின் குறிப்பு:

என்னை எழுத தூண்டிய பரதேசி அண்ணனுக்கு கோடி நன்றி.

24 கருத்துகள்:

  1. என்னது அஞ்சப்பர் செட்டிநாடு ரெஸ்டராண்டிலா போய் சாப்பிடுகிறார் அடப்பாவமே அஞ்சப்பர் செட்டிநாடு (NJ)ரொம்ப மோசம்தான் எங்க வீட்டிற்கு எதிரில்தான் இருக்கிறது ஒரே ஒரு தடவை போய் இருக்கோம் அதுக்கு அப்புறம் அந்த பக்கம் தலையை கூட அந்த பக்கம் திருப்பறது இல்லை.. ஒரு வேளை நீயூயார்க்கில் உள்ளது நன்றாக இருக்குமோ என்னவோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழா ..
      முதமுறையா துபாயில் நண்பன் ஒருத்தன் அஞ்சப்பர் திறந்து இருக்காங்க.. வா அங்கே போய் சாப்பிடலாம்னு சொல்ல.. நானும் போனேன். சும்மா சொல்ல கூடாது. நல்லாத்தான் இருந்தது. அதுக்கு அப்புறம் துபாயில் இருந்து வீட்டுக்கு (ஓமான் நாட்டில் .. ஒரு 1 மணி நேரம் விமான பயணம்) இங்கே இருந்து சாப்பாடு வாங்கினு போவேன். அதுக்கு அப்புறம் மதராசில் நண்பன் ஒருத்தன் அடையாரில் உள்ள அஞ்சப்பர் கூஇகொண்டு போனான். அதுவும் சூப்பர். ஆனால்.. ஆனால்.. எச் சால் பெஹலே.. (கொஞ்சம் செண்டிமெண்டா இருக்கட்டுமே ஹிந்தி போட்டேன்) ... ஒரு வருஷத்துக்கு முன்னாடி.. நானும் என் மூத்த ராசாத்தியும் ஸ்போ நகர் பக்கத்துல்ல உள்ள ஒரு ஊருக்கு அவ கோல்ப் விளையாட்டு போட்டிக்கு போக வேண்டி இருந்தது. போட்டி முடிந்தது, இங்கே இருந்து 50 மைல் தான் போய் அஞ்சப்பர் சாப்பிடு ஒரு நண்பன் சொல்ல.. என் ராச்தியிடம் நல்ல பில்ட் உப கொடுத்து ரெண்டு பெரும் போய் .. காசை கரியாகிட்டு குப்பையில் போட்டுட்டு வந்தோம். ஒரு சாப்பாடு வாயில் வைக்க முடியல. நியூ யார்க் நல்ல இருக்கும் போல தான் இருக்கு. மற்றும் நம்ம பரதேசி.. வெட்டு ஜ்குது விரும்ப மாட்டாரே.. புல் பூண்டு தானே..

      நீக்கு
    2. நான் போனது ஜெர்சி சிட்டியில் உள்ள பாவர்ச்சி ரெஸ்டாரென்ட் .

      நீக்கு
  2. நீயூயார்க்கில் அதுவும் மனைவி இல்லாமல் தனியாக இருக்கிறார், ஹும்ம்ம்ம்ம் அவருக்கு மச்சம் உடம்பு பூரா இருக்கு போல.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடு தமிழா.. ஏதோ அத்தி பூத்த மாதிரி.. அவருக்காக சந்தோஷ படுவியா.. அதை விட்டுட்டு .. பொறாமை பட்டுன்னு..

      நீக்கு
    2. அடப்போங்கப்பா ,தங்கமணி போனாலும் ரெண்டு செல்லமணிகளை துணைக்கு விட்டுட்டு தான் போயிருக்கா .அவள்களும் ரொம்பவே கண்காணிக்கிறாங்க .

      நீக்கு
    3. மதுரைத் தமிழனின் லொள்ளு உங்கள் + ஆல்ஃபி அவர்களின் லொள்ளு தாங்கலைப்பா...ஒரே டீமா இப்படி பௌன்சர்ல விளாசினீங்கனா நாங்கலாம் எங்கப்பா போறது ஹஹஹஹ்....எழுந்து நின்னை கைதட்டி ஆர்பரிக்கறோம்....

      கீதா

      நீக்கு


  3. மனைவி வீட்டில் இல்லை டேய் விசு வாடா இங்கே நாம ஜாலியாக இருப்போம் என்று கூப்பிடாமல் தான் மட்டும் ஜாலியாக இருக்கிறாரே.... அதை எல்லாம் தட்டி கேட்காமல் இப்படி பதிவு எழுதிகிட்டு இருக்கீங்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேண்டாம் தமிழா... நாளைக்கு நமக்கு இந்த மாதிரி வாய்ப்பு வரும் போது வந்து உட்கார்ந்துடுவாரு...

      நீக்கு
    2. ஐயோ ஐயோ...வயிறுபோச்சுப்பா...

      நீக்கு
  4. பதில்கள்
    1. அவர் மனைவி ஊருக்கு போய் அவரு சந்தோசமா இருக்காரு.. அதுக்கு வாழ்த்துக்கள் தான சொல்லணும்.. நீங்க என்னமோ நன்றி சொல்லிட்டு..
      நடிகை மஞ்சுளா இறப்பின் போது கேப்டன் ...அவர் இரங்கலுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்ற வசனம் தான் நினைவிற்கு வந்தது.

      நீக்கு
    2. தனபாலன் நன்றி சொன்னது உங்களை பரதேசி பதிவு எழுத சொன்னதற்காக

      நீக்கு
    3. ஹஹஹஹஹ்ஹ் பின்னூட்டத்திலும் ஒரு பௌன்சர்....

      நீக்கு
  5. விசு சார்....எங்கே இருந்து முடிச்சுகள் எடுக்கிறீர்கள்....அழகாய் இருக்கிறது ஓட்டமும்,பாட்டமும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க செல்வா.. எங்கே இருந்து முடிச்சு எடுக்குறேன்... எனக்கே தெரியாது. வார்த்தைகளுக்கு நன்றி.

      நீக்கு
  6. எப்போதும் போல தாறுமாறு தக்காளி சோறு.

    பதிலளிநீக்கு
  7. ஒரு நல்ல எழுத்தாளரை பதிவுலகத்திற்கு அறிமுகம் செய்த நண்பர் பரதேசிக்கு நன்றி! கலக்கல் நகைச்சுவை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. இங்க சோன்னு நல்ல மழை
    சோ நோ என்சாய்..

    அங்க நோ தங்கமனின்னு அவரும்....
    நோ மழைன்னு நீங்களும் என்சாய்..

    இதுல வயித்தெரிச்சலை கிளப்பற மாதிரி இந்த (மதுரை) தமிழன் வேற ரொம்பத்தான் லொள்ளு பன்றாரு. மாப்ளைக்கு 1 டஜன் பூரிக்கட்டை பார்சலில் அனுப்பினாத்தான் சரிப்படும்போல...

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்

    அறிய வேண்டும் என்று நினைத்திருந்த எழுத்தாளரை பதிவு செய்தமைக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. இந்தப்பதிவை என் மனைவி மட்டும் படிக்கக்கூடாதுன்னு அந்த இஸ்ரவேலின் கடவுளை வேண்டுகிறேன், ஆமென்.

    பதிலளிநீக்கு
  11. .அம்மணி இருக்கும் போது "வொர்க் ப்ரம் ஹோம்" "வொர்க் பார் ஹோம் " ஆகிடும்.//

    ஐயோ செம விசு! இப்படிப் போட்டுத் தாக்கறீங்களே...வார்த்தை ஜாலம் சும்மா பொளந்து கட்டி அடிக்குது! பௌன்சர்! எல்லா வார்த்தை ஜாலங்களையும் ரொமப்வே ரசித்தோம்...சிரித்தோம்....இங்க துன்பம் வரும் வேளையிலும் சிரித்தோம் ...அதான் அடுத்து என்னென்ன காய்ச்சல் வருமோனு பீதில...ஹஹ்ஹ்...

    தண்டபாணி இல்லாமலேயே நிறைய பௌன்சர் ...செம...

    பதிலளிநீக்கு