ஞாயிறு, 22 நவம்பர், 2015

பரதேசியின் காதலிகள் - பகுதி 2 (பரதேசியும் பரட்டையும் )

சில நாட்களுக்கு முன்  சக பதிவர் பரதேசி அவர்கள்...

"கிளாஸ்மேட்டை லவ் பண்ணாதீங்க !!!!!!!!!!!!!!!"


என்ற பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதில் தெரிந்தோ தெரியாமலோ தன் பழைய காதலிகளின் பெயர்களை குருப்பிட்டும் இருந்தார். அதை வைத்து எழுத படும் தொடர் பதிவின் இரண்டாம் பாகம் இது. 

முதல் பாகத்தை படிக்க இங்கே சொடுக்குங்கள் 


"பரட்டை But சுருட்டை"  தலை, பர்மா பஜார் பனியன், துவைக்காத ஜீன்ஸ்...

பரதேசியின் காதலிகள் - பகுதி 1 (கதிஜாவும் "சதி"ஜாவும் )



இரண்டாம் பாகம் படிக்க கீழே தொடருங்கள்.

பரதேசியின் காதலிகள் - பகுதி  (பரதேசியும்பரட்டையும்)

அடுத்த இரண்டு வருடங்கள் எப்படி போயின என்றே ராசாவிருக்கு புரியவில்லை.  "மதிப்பெண்ணை" மறந்துவிட்டு "பெண்ணின் மதிப்பிற்காக" நேரத்தை செலவிட்டான் ராசா என்ற பரதேசி.அந்த நேரமும் வீணாகவில்லை.


நாட்கள் கடந்தன, சில வருடங்களுக்கு முன் ஐந்தாவது படிக்கையில் "சதி" செய்த "கதிஜாவை" சில நேரம் நினைப்பான். கதிஜாமேல் இருந்தது ஒரு விதமான ஈர்ப்பு.

ஆனால், பொன்னுத்தாய்... அது ஏன்னோ தெரியல .. என்னமோ தெரியல.. வார்த்தைகள் வரமாடேங்குது. இது ஈர்ப்புக்கும் மேலே, ஒரு அன்பு கலந்த பாசம் போல் அவனுக்கு தெரிந்தது.
 நாட்கள் இப்படி போய் கொண்டு இருக்கையில்.. ஒரு நாள்..

ராசா.. ஊருல்ல இருக்குற எல்லா புள்ளைகளும் டைப்பிங் படிக்குது. நீயும் போய் சேரேன். நாளைக்கு அரசாங்க உத்தியோகம் ஏதாவது கிடைக்கும்..

என்று கூறிய தன் தாயின் மீது செல்ல கோபம் கொண்டான், ராசா.

ஏம்மா.. என்ன பார்த்தா எப்படி இருக்கு? ஒரு அரசாங்க குமாஸ்தாவா நான்? எனக்கு இருக்குற அறிவுக்கு நீங்க வேணும்னா பாருங்க .. நான் ஒரு நாள் அமேரிக்கா போய் அங்கே தான் வாழ்வேன்.

ஐயோ என் கண்ணே பட்டுடும் போல இருக்கே.. நீ டைப்பிங் போகாட்டி பரவாயில்லை. தெரியாமல் சொல்லிட்டேன்.

நாட்கள் மீண்டும் ஓடின. ஒரு நாள் ராசாவின் அப்பா, காலை ஆறு மணிக்கு ராசாவை எழுப்பி..

தம்பி, மணி கிட்ட தட்ட ஆறு ஆச்சி. இன்னும் செய்தி தாள் வரல.. கொஞ்சம் கடையில் போய் பாத்துட்டு வா?

இதோ போறேன் அப்பா .. என்று ராசா கடைக்கு ஓட... அவன் அப்பாவோ..

ராசா.. 10வது வந்துட்ட. சீக்கிரம் சைக்கிள் விட கத்து கொள் என்று சொல்ல,

ராசா எது யாருக்கு தெரிய கூடாது என்று மறைத்து வைத்து இருந்தானோ அது வெளியே வந்தது. 

அப்போது தான் டைப்பிங் வகுப்பு முடித்து திரும்பி கொண்டு இருந்த  பொன்னு தாய்..

குலுங்கி குலுங்கி சிரித்துவிட்டு..

ஐயோ ..ராசா.... உனக்கு சைக்கிள் ஓட்ட தெரியாதா?

இல்ல வந்து...

என் தம்பி நாலாவது படிக்கிறான்.. அவனே "மங்கி பெடல்" போடுவான்..

சீக்கிரம் கத்துக்குங்க.. என்று சொல்ல..

ராசாவோ.. அது சரி, நீ என்ன இவ்வளவு காலையில், கோயிலுக்கு எங்கேயாவது போனீயா?

இல்ல டைப்பிங் வகுப்பு, என்று பொன்னு தாய் சொல்ல,

அன்று மாலையே..

அம்மா, நாளையில் இருந்து என்னை காலையில் சீக்கிரம் எழுப்புங்க..

ஏன் ராசா?

நான் டைப்பிங் படிக்க போறேன்.

அப்ப .. அமெரிக்கா?

அமெரிக்காவிலும் அரசாங்க குமாஸ்தா வேலைக்கு டைப்பிங் தேவை படுமாம்.

என்று சொல்ல..

அம்மாவோ.. என் ராசா.. என் கண்ணே பட்டுடும் போல் இருக்கே... என்று மீண்டும் சந்தோஷ பட்டார்கள்.

அடுத்த நாள்.. காலை... பொன்னு தாய் எப்படியும் தன் இல்லத்தை தாண்டி தான் டைப்பிங் வகுப்பிற்கு போக வேண்டும்.  அப்படி அவள் வரும்போது நானும் அவளை தற்செயலாக பார்ப்பதை போல் பார்த்து விட்டு பிறகு இங்கிருந்து பேசி கொண்டே போகலாம் என்று சுவற்றின் பின் மறைந்து அவள் வருகைக்காக காத்து கொண்டு இருந்தான் ராசா..

சூரியனின் வெளிச்சத்தில் பனி மெல்ல விலகி கொண்டு இருக்கையில், பொன்னுத்தாய் ராசாவின் கண்ணில் அகப்பட்டாள். அவள் கொஞ்சம் தூரம் போகட்டும் சற்று பின்னாலே போனால் தான் தற்செயலாக தெரியும் என்றெண்ணி. அவள் இடது பக்க சாலையில் திரும்பியவுடன், தன் நடையை ஆரம்பித்தான், ராசா..

பொன்னுத்தாய் சென்ற அதே இடது பக்கம் புன்னகையோடு திரும்பிய ராசா கண்ட காட்சி அவன் இதயத்தை பூகம்பமாய் தாக்கி நொறுக்கியது. பொன்னு தாய்க்கும் இவனுக்கும் இடையில் மற்றொருவன்.

 "பரட்டையா இருந்தாலும் சுருட்ட தலை" பர்மா பஜாரில் வாங்கிய டூப்ளிகட் பனியன், மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்றே கையில் ஒரு ஆங்கில நாவல், ஆறு மாதத்திற்கும் மேலாக துவைக்க படாத ஜீன்ஸ், போட்ட "சுவி"யும் பொன்னு தாயும் "கண்ணாலே பேசி பேசி" ராசாவை கொன்றார்கள்.
"பரட்டை But சுருட்டை"  தலை, பர்மா பஜார் பனியன், துவைக்காத ஜீன்ஸ்...

அடுத்த நிமிடத்தில், ராசாவை கண்ட பொன்னுத்தாய்.

ராசா... என்ன இவ்வளவு காலையில்.. கையில் என்ன பேப்பர், அடே டே நீயும் டைப்பிங் படிக்கிறியா? வா மூணு பெரும் பேசினே போகலாம் என்று சொல்ல.
"சுவி"யோ...

ராசா, என் பெயர் சுவி, உங்களை பத்தி நிறைய கேள்வி பட்டு இருக்கேன்..

அப்படியா...? யாரு சொன்னா?

எங்க வகுப்பு லீடர் கதிஜா....நான் உங்கள் பழைய ஸ்கூலில் தான் படிக்கிறேன். நீங்க  அங்கே இருந்து வந்ததில் இருந்து கதிஜா தான் வருசா வருஷம் எனக்கு லீடர்.

ராசாவோ.. மனதில்..

 அட பாவி.. மூணு வருஷமா கட்டி காத்து வந்த பொன்னுதாயை தட்டின்னு போனதும் இல்லாமல், வெந்த புண்ணில் வேலை பாச்சுற மாதிரி கதிஜாவை வேற நினைவு படுத்துரியா?

என்று நொந்து கொண்டே டைப்பிங் வகுப்பை அடைய..

தம்பி புது ஸ்டுடென்ட் தானே நீ? உன் பெயர் என்ன?

ராசா...

அங்கே போய் ... "ராதிகா" பக்கத்தில் உக்காரு.

என்று சொல்ல, அங்கே போய் அமர்ந்த ராசாஎன்ற பரதேசி .. ராதிகாவை பார்த்தவுடன் பேய்  அறைந்ததை போல் ஆனான் (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக இன்னொரு நாள் சொல்கிறேன்)

ராசா என்னும் பரதேசி ஏன் அப்படி ஆனான்... அடுத்த பாகத்தில் பார்க்கலாமே...

தொடரும் ...

தொடர்ச்சியை படிக்க இங்கே சொடுக்குங்கள்.  


பரதேசியின் காதலிகள் - பகுதி 3 ( ராதிகாவும் அறிஞர் அண்ணாவும் )


பின் குறிப்பு :

சரி.. பரதேசி அண்ணன் எப்ப தான் சைக்கிள் ஓட்ட கத்துகுன்னார்னு அவர் வாயேலே சொல்றத இங்கே சொடுக்கி படியுங்கள்.


ஓரம்போ ஓரம்போ பரதேசி வண்டி வருது !!!!!!!!!!!!

9 கருத்துகள்:

  1. பரபரப்பாய் இருக்கிறது....பெயர்களில் ஒரு கவர்ச்சி...அந்த காலங்களுக்கு அழைத்துப்போகிறது...சீக்கிரம்.....அடுத்த பரதேசிக்காதலுக்கு நானும் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. மத்தவங்க காதலை படிக்கும் போது ஒரு சுவாரஸ்யம் தன்னாலே வந்துடுது! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
  3. கரெக்ட் ,மத்தவங்க காதலை படிக்கும் போது ஒரு சுவாரஸ்யம் தன்னாலே வந்துடுது! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணே.. என்னமோ சொல்ல வரீங்க.. என்ன சொல்றீங்கன்னு தான் தெரியில ..

      நீக்கு
    2. அடடா என்ன விசு இது பரதேசியின் காதல் இல்லையா...ஹஹஹஹ் என்னவோ சொல்லுறாரு?!!!

      நீக்கு
  4. காதலாவது கத்தரிக்காயாவது என்று சொல்வதன் அர்த்தம் இன்று தான் புரிந்தது.

    அதாவது, கத்தரி காய்க்கு கால் முளைத்தால் கடைதெருவிற்கு வந்துவிடும் அதுபோலவே அடுத்தவர் காதலும் இப்போது சந்தை (சந்தி சிரிக்க)படுத்தபடுவதால் காதலும் கத்தரிக்காயுடன் சேர்த்து பேசப்டுவது இன்றுதான் புரிந்தது.

    "கண்ணால் பேசவேண்டுமே , காணாமல் ரசிக்க வேண்டுமே " எனும்காதலின் அடிப்படையான தத்துவங்கள் பலர் அறியும் ஒரு நூலகமாக மாறிப்போனதோ.

    என்னங்க பரதேசி உங்கள் காதல் கதை(கள்) இப்படி காற்றோடு பறக்கின்றதே.

    நண்பர் விசுவின் பாணியில் கொஞ்சம் சுவாரசியமாகத்தான் போகிறது.

    கோ

    பதிலளிநீக்கு
  5. ரைட்டு... அடுத்த பகுதிக்கு செல்கிறேன்...

    பதிலளிநீக்கு
  6. ஆஹா எனக்குள்ளும் அந்த டைப் ஆபீஸ்
    சுருட்டின பேப்பர் அகஸ்மாத்தாக வருவது போல்
    இரண்டு மணி நேரம் காத்திருந்து வருவது எல்லாம்
    வந்து போகுதே /
    சுவாரஸ்யமான பதிவுகள்
    இரசித்து வாழ்ந்திருக்கிறீர்கள்
    தொடர்ந்து அப்படியே வாழ மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. அது சரி நீங்க கூட ஒரு காலத்துல டைப்பிற்குப் பேப்பர் சுருட்டிக் கொண்டு சென்றதாக நினைவு....ஹஹஹ

    பதிலளிநீக்கு