புதன், 7 அக்டோபர், 2015

கருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி !

கடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு "கருணாஸ்  ஒரு ரெகார்ட் டான்சர்" என்று ஒரு கிண்டல் அடித்தார்.


"கருணாஸ்  ஒரு ரெகார்ட் டான்சர்" என்பது உண்மையா என்று எனக்கு தெரியாது . அப்படியே இருக்கட்டுமே. அது என்ன பெரிய குற்றமா?

தெருவில் ரெகார்ட் டான்ஸ் ஆடி கொண்டு இருந்த ஒருவர் திரை உலகில் தன் திறமையால் படிப்படியாக முன்னேறி இன்று நடிகர் சங்கத்து துணை தலைவராக போட்டி இடுகின்றார் என்றால், அது பாராட்டதக்க விஷயமே தவிர, கிண்டல் பண்ண வேண்டிய விஷயம் அல்ல.


கருணாஸ் யாரை எதிர்த்து நிற்கின்றார். சிம்பு  அவர்களை. சிம்பு பிறக்கும் போதே அனைவரும் அறிந்த ஒரு இயக்குனரின் வீட்டில் பிறந்தவர். அடுத்த வேளை சாப்பாடிற்கும்  சரி, மற்ற எந்த ஒரு தேவைக்கும் சரி, கவலை இல்லாமல் வளர்ந்தவர்.  திரைத்துறையில் இவர் தகப்பனார் தெரிந்த முகமாய் இருந்ததால் எளிதாக தன் மகனையும் அறிமுக படுத்தி கொள்ள முடிந்தது . சிம்புவும் பல வருடங்கள் நடிகர் சங்கத்து உறுப்பினாராக இருந்தவர்.  

இப்படி வாழ்க்கையின் இரு முனைவில் இருந்தவர்கள் சங்க தேர்தலில் ஒரு பதவிக்கு போட்டி இடுவது தானே ஜனநாயகத்தின் அழகு.


 இப்படி இருக்கையில், ராதா ரவி அவர்கள் கருணாஸ் அவர்களை ரெகார்ட் டான்சர் என்று போது மேடையில் பேசுவது நாகரீகம் அல்ல.

மற்றும் , நேற்று ஒரு நிகழ்ச்சியில் ராதிகா அவர்கள் மீண்டும் மீண்டும் விஷாலை " விஷால் ரெட்டி " என்று அழைத்தார். தவறே இல்லை. அவர் பெயர் "விஷால் ரெட்டி", அப்படி அழைத்து கொண்டு போகட்டும். விஷால் யாரை எதிர்த்து நிற்கின்றார்?  திரு ராதா ரவி  அவர்களை. விஷாலை ரெட்டி என்று அழைக்கும் ராதிகா அவர்கள், ராதரவியையும் "ராதா ரவி நாயுடு " என்று அழைக்க வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகொள்.

சமரசம் வேண்டும் என்று ஒரு அவசர சமையல். சமரசம் செய்ய ஒருவர் வெள்ளை கொடி தூக்கினால், ஒன்று, அவர்கள் சமாதானத்தை விரும்புகின்றார்கள் என்று அர்த்தம், இல்லை தோல்வி பயம் என்று அர்த்தம்.

இந்த நிகழ்ச்சியில்பேசிய பாக்யராஜ் அவர்கள் மற்றும் ஊர்வசி அவர்கள் இருவரும் பேசிய பேச்சு "சமாதானத்தை" நோக்கி இருந்தது. ஆனால் ராதிகா அவர்களின் பேச்சு, தோல்வியின் பயத்தை தான் காட்டியது.

சிம்புவின் பேச்சு, என்னை கொஞ்சம் சிந்திக்க வைத்தது. இவர் இந்த அணியில் இருந்து கொண்டு மற்ற அணிக்காக பாடுபடுகின்றாரோ என்று . இவர் பேச்சில் அவ்வளவு காழ்ப்புணர்வு.


எது என்னவோ! இவ்வளவு கரடு முரடான பாதையை கடந்து வந்த "பாண்டவர் அணி" இந்த சமரச சூழ்ச்சியில் விழ கூடாது. இவர்கள் பேசும் பேச்சு, எதிர் அணியை பிரிக்க முயலும் பேச்சாக உள்ளது.

நாசர் தலைமையில் வர போகும் புதிய நிர்வாகம், இந்த சூழ்ச்சியை புரிந்து கொண்டு, கொஞ்சம் கவனமாக செயல் படவேண்டும்.

இந்த சூழ்ச்சி : "IF YOU CANNOT BEAT THEM, BREAK THEM".

மற்றவை தேர்தலில் தெரியும்.

பின் குறிப்பு :

சமரசம் செய்ய பேசவந்தவர்கள், திரு சரத்குமாரையும் திரு ராதா ரவியையும் ஏன் அழைத்து வரவில்லை. அவர்களால் சமரசம் பேசமுடியாதோ.

மற்றும் ராதிகா அவர்கள், கமல் - ரஜினி ஏன் அமைதி காக்கின்றார்கள் என்றார்? ஏன் என்றால், அவர்களும் மாற்றத்தையே விரும்புகின்றார்கள். அதனால்  தான்.

6 கருத்துகள்:

  1. பதவி ஆசை யாரை விட்டது...சார்

    பதிலளிநீக்கு
  2. சிம்புவை தேர்தலில் நிருத்தியதில் இருந்தே சரத்குமார் அணி எவ்வளவு பலவீனமானது என்பது தெரிகின்றது. ஒவ்வொருமுறை பத்திரிக்கையாளர் சந்திப்பின் போதும் அல்லக்கைகளின் கூட்டம் குறைந்துகொண்டே வருவது நன்றாக தெரிகின்றது.

    பதிலளிநீக்கு
  3. நண்பரே நான் தமிழ் சினிமா இயக்குதல் துறையில் இருக்கிறன், இந்த தேர்தல் ஒன்றும் மக்களுக்கு அவசியமான ஒன்றல்ல, ஆனால் நன்றாக பொழுது போகிறது, என்னைக் கேட்டால் விஷாலின் கோபம் சரி, ஆனால் அவர்கள் வெற்றி பெற்றால், நடிகர் சங்கம் அடுத்த சில ஆண்டுகளுக்கு மூடித்தான் கிடக்கும், 3100 உறுப்பினர்களில் 1000 பேர் மட்டுமே சினிமா நடிகர்கள் மீதம் இருப்போர் நாடக நடிகர்கள், அவர்கள் முற்றிலும் புறக்கணிப்பு செய்ய படுவார்கள்.

    ராதாரவி - அவரது தனிப்பட்ட செயல்பாடுகள் அருவருக்க தக்கவை, கட்டிடம் கட்டுவதில் கமிஷன் பெற்றிருப்பதும் உண்மை போலத் தான் தெரிகிறது,

    ஆனால் சங்கப் பணி செய்வதில் அவருக்கு நிகராக உறுப்பினருக்கு குரல் கொடுக்க விஷால் அணியில் ஒருவர் கூட இல்லை இது தான் நிதர்சனம், இரவு எத்தனை மணியானாலும் போன் செய்தால் ராதாரவி போன் எடுப்பார், பிரச்சினையை தீர்த்து வைப்பார் நானே நேரடியாகப் பார்த்திருக்கிரேன்.

    விஷால் அணியில் நிற்க்கும் ஒருவர் கூட போனை எடுக்கவே மாட்டார்கள், பிறகுதானே தீர்க்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞானன் அவர்களே,
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. நடிகர் சங்க தேர்தல் ஒரு சங்கத்தின் தேர்தல் தான். அது மக்களுக்கு அவசியமானது அல்ல. ஆனால் இந்த சங்கம் ஒரு "Public Trust". பப்ளிக் டிரஸ்ட் பற்றிய விவரங்களை யார் வேண்டுமானாலும் கேட்கலாம்.
      ராதா ரவி செய்த சில காரியங்கள் அருவருக்க தக்கவை, மற்றும் கட்டிட விவகாரத்தில் கமிசன் வாங்கி இருக்கலாம் என்று தாம் கூறி இருந்தீர்கள். இப்படிபட்ட அருவருக்க தக்க காரியங்களை செய்யும் ராதாரவி எப்படி நாடக நடிகர்களுக்கு உதவினார் என்று தாம் சொல்வது எனக்கு புரியவில்லை.
      மேலும், இந்த பாண்டவர் அணி தேர்தலில் நின்று வெற்றி பெற்று, சங்க உருப்பினர்களுக்காக எந்த நல்ல காரியமும் செய்யாவிடில் அடுத்த தேர்தலில் இவர்களும் விரட்டி அடிக்க படுவார்கள்.
      தேர்தல் என்பது ஒரு ஜனநாயக முறை. வரட்டும்.
      ராதாரவி இரவு பகலாக தமக்காக வேலைசெய்தார் என்று 2100 நாடக நடிகர்கள் நினைத்தால் அவர்கள் கண்டிப்பாக ராதாரவி அவர்களுக்கு தான் வாக்கு அளிப்பார்கள்.

      இப்போது சரத்குமார் தலைமை அணி தேர்தலே வேண்டாம் என்று சொல்வது, " தங்களின் படுதோல்வியை தடுப்பதற்கே".

      சரி, இது நடிகர் பிரச்சனை தானே உனக்கென என்று நீங்கள் நினைத்தால்... அதற்கான விளக்கத்தை நான் ஏற்கனவே ஒரு பதிவில் (நடிகர் சங்கம் : உனக்கும் எனக்கும் தான் என்ன?) அளித்துள்ளேன்.
      மீண்டும் ஒரு முறை, தம் வரவிற்கு நன்றி.

      நீக்கு
  4. எவரும் தொடர்ந்து பதவியில் இருக்கும் போது தவறுக்கு இடம் வந்துவிடும், தலைக்கனமும் வந்து விடும். ராதா ரவிக்கு தலைக்கனம் அளவுக்கு மீறி விட்டது. அடக்கப்படவேண்டியது.
    அடுத்து ஒரு மாற்றம் தேவை. அது இப்போதே இந்தப் புதிய அணி மூலம் வரட்டும். இவர்கள் சரியாக இயங்காவிடில் அடுத்த தேர்தலில் வெளியேற்றட்டும். இதைப் புரிந்து புதிய அணி வெற்றி பெற்றால் செயற்படும் என நம்புகிறேன்.
    பல நடிகர்களின் மௌனம் மாற்றத்தை விரும்புவதுபோல் உள்ளது.
    இதனால் நமக்குப் பயனில்லை என்பதே உண்மை! பொழுது போகிறது.
    அதுவும் ராதா ரவியின் பேச்சு- ஒரு மேடையில் இவ்வளவு தரக்குறைவாகப் பேசமுடியுமா? ஆச்சரியம் . இவர் சகோதரி ராதிகா , இத் தேர்தலை ஒட்டிய பேச்சில் "ராதா ரவி அண்ணா நன்கு படித்தவர், புத்திசாலி, திறமைமிக்கவர்" என கூறினார். இவர் கல்வி தகமையை யாராவது தெரிந்தவர் கூறவும். ஏனெனில் ராதிகா சொல்லும் இவ்வளவும் இருக்கும் ஒருவர் இந்த அளவு பிதற்ற முடியாது.

    பதிலளிநீக்கு
  5. bro radha ravi is a graduate and also a degree holder in law but never practiced radha ravis tongue>>>> main reason for his downfall both dmk and aiadmk kept him in a distance>>>>

    பதிலளிநீக்கு