செவ்வாய், 27 அக்டோபர், 2015

ரஜினியின் "முரட்டுகாளை" & கமலின் "குரு" எனக்கு கிடைத்த வாய்ப்பு!

இது சென்ற பதிவின் தொடர்ச்சி. அந்த பதிவை படித்து விட்டு இங்கே வந்தால் இன்னும் நன்றாக புரியும். அதை படிக்க இங்கே சொடுக்குங்கள் ...

அதிசயம் : "நடக்காதென்பார் நடந்துவிடும் ..."(தொடர்ச்சி..1)


தென்னிந்திய நடிகர் சங்கத்தின் "பொழுதுபோக்கு பூங்கா"விற்கு அக்டோபர் 25, 2018 குடும்பத்தோடு வந்த நான், அப்படி என்ன ஒரு எதிர் பாராத காட்சியை காட்சியை பார்த்தேன்.

திரும்பி பார்த்த நான் அக்காலத்து மாமன்னர்கள் உடையணிந்த இரண்டு மன்னர்களையும் மற்றும் அவர்கள் இருவரின் மத்தியிலும் நடந்து வந்த ஒரு மூதாட்டியும் பார்த்தேன். நான்காம் வகுப்பில் நான் படித்த வரலாற்று நாடகம் நினைவிற்கு வர அந்த மூதாட்டியை அவ்வையார் என்று அறிய நிறைய நேரம் பிடிக்கவில்லை. அம்மை அவ்வையார்... அப்போது அந்த மன்னர்கள்... ஒருவேளை ...அதியமானும் .. தொண்டைமானும்..


ஒருவேளை .. நெற்றி கண் படத்தில் வந்த "தீராத விளையாட்டு பிள்ளை " என்ற பாடலை போல் நெற்றிக்கண் இரண்டிலேயும் ஒரு பாடலா?

அருகில் இருந்த ஒரு ஊழியரிடம் ...

ஏதாவது வரலாற்று படம் பிடிக்கின்றார்களா?

இல்லை...? ஏன்..

இவர்கள் மன்னர்கள் மற்றும் அவ்வையார் உடை அணிந்து செல்கின்றார்களே.. அதுதான்..

இந்த வளாகத்தில் தென் இந்தியாவிலே சிறந்த ஒரு அரங்கம் இருகின்றது.

இங்கே வாரந்தோறும் சிறந்த நாடகங்கள் நடக்கும். நாடகங்கள் இல்லாத அன்று இந்த வளாகத்தை திருமண மண்டபமாகவும் மற்றும் சிறப்பு காட்சிக்கான திரை அரங்கமாகவும் மாற்றிவிடுவார்கள்.

அடே .. டே.. ஒரு  கல்லில் நான்கு மாங்காய்.. அருமை.. அருமை..இந்த நாடகத்திற்கான கலைஞர்கள் எங்கிருந்து வருகின்றார்கள்?

வெவ்வேறு ஊர்களில்இருந்து.. மதுரை, நாமக்கல், புதுகோட்டை.. காரைக்குடி.. திருச்சி.. மற்றும் பல ஊர்களில் இருந்து...

நாடகத்தில் அவ்வளவு ஊதியம் இருக்காதே.. இவர்கள் பயண செலவு .. தங்கும் இடம்..

அதோ அங்குள்ள ஆறு பேருந்துகளை பாருங்கள். அவை அனைத்தும் நாடக நடிகர்களுக்காக சங்கம் வாங்கியது. மற்றும், இந்த வளாகத்தில் வெளியூர் நடிகர்கள் தங்குவதற்கான விடுதி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த நடிகர்களுக்கு சங்கத்தில் இருந்து மாத சம்பளம் தரப்படுகின்றது.

அருமை.. அருமை...

என்று நான் சொல்லும்போதே..ஷூட்டிங் இன்னும் ஐந்து நிமிடத்தில் ஆரம்பிக்கும் என்று ஒலிபெருக்கியில் ஒரு அறிவிப்பு வர .. குடும்பத்தோடு அந்த இடத்தை அடைந்தோம்..

குண்டூசி விழும் அமைதி ... (அதுதாங்க  Pin Drop Silence) ... ஸ்டார்ட், கேமரா , அக்சன் என்று இயக்குனர் சொல்ல , ரஜினி அவர்கள் தனக்கே உரியபாணியில் தன் மகள் பாத்திரத்தில் நடிக்கும் இளம் நடிகைக்கு அறிவுரை வழங்கி ஒரு வசனம் பேசினார்..

"அவரை பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாது அப்பா.. ஒன்றுமே தெரியாது "

"ஆனால் உன்னை பற்றி எனக்கு எல்லாம் தெரியுமே, ராசாத்தி"..

தகப்பன் - மகள் உறவை பற்றிய காட்சியை படமாக்கி கொண்டு இருந்தார்கள். மனதில், அவர் வயதுகேற்ப பாத்திரம் கிடைத்தால் .. ரஜினி ரஜினி தான் என்று நினைத்து கொண்டே வெளியே வரும் போது மணி 11:30.

அடுத்து என்ன... என்று சிறியவள் கேட்க்க.. இங்கே ஒரு 4D திரை அரங்கம்
உள்ளது, அதில் 15 நிமிடத்திர்க்கான தத்ரூபமான 4D  படம் காட்டுவார்கள் என்று யாரோ சொல்ல, அதற்க்கான ஐம்பது ரூபாய் டிக்கட் வாங்கி கொண்டு செல்லுகையில்...

என்ன படம் ?

முரட்டு காளை.. இந்த கண்ணாடி அணிந்து கொண்டு நீங்கள் திரையில் வரும் காளையை அடக்க முயற்சிக்கலாம்.

 எனக்கு காளைன்னா கொஞ்சம் பயம் .. (பீப் என்று சொல்லி எவனாவது தர்ம அடி கொடுத்தால், அதுதான்..) வேறு, ஏதாவது படம்..

கமல்ஹாசன் அவர்களோடு ஒரு சிறிய விமானத்தில் ஏறி..'பறந்தாலும் விடமாட்டேன்" என்று பாடி கொண்டே மெட்ராசை (சென்னை என்னும் வார்த்தை வாயில் நுழைய மறுக்குது) சுத்தி சுத்தி பறக்கலாம் .

எனக்கு உயரம்ன்னா கொஞ்சம் பயம்.. வேற ..?

ஒ.. உலகம் சுற்றும் வாலிபன் பாணியில் MGR  அவர்களோடு .. ஜப்பானில் ஒரு பயணம்..சிவாஜி சாரோடு அந்தாமான் காதலியை பார்க்க ஒரு படகு பயணம்...

வேறு..

விஜய் அவர்களோடு நீங்களும் ஒரு "பன்ஜி ஜம்ப்" அல்லது ..அஜித்தோடு நீங்கள் ஒரு கார் பந்தயத்தில் போட்டியிடலாம்...

ராசாத்திக்கள் இருவரும் .. காளையை அடக்குங்கள் என்று ஆணை இட .. கண்ணாடியை அணிந்து ... படம் ஆரம்பித்தவுடன்.... முரட்டு காளையில் பாய்ந்து வந்த அதே காளை என் எதிரே பாய்ந்து வர , கண்ணாடியை தூக்கி எறிந்துவிட்டு..பேய் அறைந்தவன் போல் (பேய் அறைந்த கதையை பிறகு சொல்கிறேன்) ஓடி வந்த என்னை பார்த்து அனைவரும் சிரிக்க..
எனக்கு இது எல்லாம் பிடிக்காது.. நகைச்சுவை பகுதிக்கு அழைத்து செல்லுங்கள் என்று ஆணையிட...

தமிழ் படங்களிலே மிகவும் சிறந்த நகைச்சுவை படங்களில் ஒன்றான .. "பாமா விஜயம் " படத்தின் காட்சிகள் சிலவற்றை பார்க்கலாம் என்று அழைத்து சென்றார்கள்..

நான் பார்த்த காட்சியில்.. நடிகர் ஸ்ரீகாந்த்... அன்றைய நகைச்சுவை நடிகை  இன்றைய நடிகர் சங்க ஆயுள் உறுப்பினர் சச்சுவிடம்...

"எனக்கு ... நோ பாமிலி..நோ மணி.. நோ காதல்" என்று ஒப்பாரி வைத்து கொண்டு இருந்தார்...

அதை பார்த்து கொண்டு இருக்கையில்..

டாடி.. வாங்க.. .அந்த 80 அறைக்குள் போகலாம் என்று அழைக்க..
அங்கே... பாலச்சந்தர் துவங்கி பாரதிராஜா  பாக்கியராஜ் சுந்தராஜ் பாலு மகேந்திரா ... என்று பலரின் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவங்கள் திரையில் ஓடி கொண்டு இருந்தது.. அதன் பின்னணியில் இளையராஜாவின் இசை..

மெய்மறந்து போன என் செவியில் ஒரு ஓசை கேட்டது...

விசு சார் ...எப்படி இருக்கீங்க ..?

நல்ல இருக்கேன்.

என்று சொல்லி நான் திரும்பி பார்க்கையில்.. எதிரில்..

மீண்டும் பேய் அறிந்தவனை போலானேன் .. (பேய் அறைந்த  கதையை கண்டிப்பாக  மற்றொரு  நாள்  சொல்வேன் )

தொடரும் ...

தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்கவும் 


"பராசக்தி"யில் இருந்து "படையப்பா" வரை...

 

6 கருத்துகள்:

  1. முதல் பதிவைவிட இரண்டாம் பதிவில் சற்று சுவை குறைந்திருப்பதுபோல் தெரிகிறது அய்யா! ஆனாலும் அருமை!
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. விசு, பதிவு நன்றாக, விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது... எதிரில் வந்தது யாரென்று எனக்கு மட்டும் ரகசியமா சொல்லுங்க!!!

    பதிலளிநீக்கு
  3. பழைய பல படங்கள் ஞாபகம் வந்தன இனிமையுடன்...!

    பதிலளிநீக்கு
  4. எதிரில் வந்தது யாரய்யா? அதுவும் நீங்கள் பேயறைந்தது போல ஆகும்படி? தொடர்கின்றோம்...

    பதிலளிநீக்கு
  5. கொஞ்சம் கெஸ் பண்ணறோம்...அந்தப் பைத்தியத்துக்கு வைத்தியம் செய்ற டாக்டருக்குப் பைத்தியம்........ஸ்பா.......அவர்தானே??!!!!

    பதிலளிநீக்கு