சனி, 24 அக்டோபர், 2015

எங்கிருந்தோ வந்தான் ….

என்னா, வாத்தியாரே ..? “பாம்பேயில் பீப்” சாப்பிட்டவன் போல் திருட்டு முழி முழிக்கிற!
கிண்டலாக கேட்டு கொண்டே வந்தான், நண்பன் தண்டபாணி . எல்லாம் என் நேரம் தான் என்று மனதில் நினைத்து கொண்டே …
ஒன்னும் இல்ல தண்டம்.. நீ எப்படி இங்க ?சொல்லாம கொள்ளாம?
சும்மா வீட்டில ரிலாக்ஸ் பண்ணி கொண்டு இருந்தேன் …

என்னாது… ரிலாக்ஸ் பண்ணியா? அப்படினா என்ன தண்டபாணி..
ரிலாக்ஸ் என்பது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை வாத்தியாரே.. நம்ம வளரும் வயதில் அப்பா அம்மா காசில் சந்தோசமா ஒரு வேலையும் வெட்டியும் இல்லாமல் இருந்தோம் தானே … அது தான் ரிலாக்ஸ்..
திருமணமான உனக்கு எப்படி .. ரிலாக்ஸ் பண்ண முடிந்தது…?
எங்க முடிந்தது.?. ரிலாக்ஸ் பண்ணலாம்னு உட்கார்ந்தேன் …உடனே சுந்தரி.. “புருஷ லட்சணமா” இது.? புதனும் அதுவுமா இப்படி மந்தமா வீட்டில் இருக்கீங்களே …” கொஞ்சம் சுறு சுறுப்பா இருங்கன்னு சொல்லி உன்னை பாத்துட்டு வர அனுப்பி வைச்சா ?
என்னை பாக்கவா ? ஏன்..
அதர்சம் செய்ய போறாளாம். உனக்கு சக்கரை போட்டா புடிக்குமா இல்லாட்டி வெல்லம் போட்டு செய்யட்டுமானு அவசரமா கேட்டு வர சொன்னா..
அதர்சம் வெல்லம் போட்… டேய் என்ன கிண்டலா ? என்ன விஷயம் சொல்லு.
உங்க அம்மணி சொன்னாங்களாம்… வீட்டுக்கு பின்னாலே “சாதி மல்லி” கொத்து கொத்தா பூத்து குளுங்குதுன்னு .. போய் ரெண்டு முழம் பறிச்சின்னு வான்னு சொல்லி அனுப்பினா..
சரி போய் பறிச்சிக்க ..
சரி வாத்தியாரே… நீ என்ன ஒரு மாதிரி இருக்க ..?
ஒன்னும் இல்ல …
வாத்தியாரே.. ஒரு ஆணின் கஷ்டம் இன்னொரு ஆணுக்கு தான் தெரியும்…வயிற்ருக்கும் தொண்டைக்கும் உருவமிலா ஒரு உருண்டை உருளுற மாதிரி இருக்கே.. என்ன விஷயம்…?
ஒன்னும் இல்ல தண்டம்.. ஒரு சின்ன “அக்சிடென்ட்.”.
வாத்தியாரே… மாமி.. மற்றும் ராசாத்திங்க …! ஓகே தானே ..
டேய்.. அவங்க எல்லாரும் ஒ கே .. எனக்கு தான் பிரச்சனை ..
ப்ளீஸ் கண்டின்யு, ஐ அம் லிசனிங்..
மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்தேன் .. வந்த அவசரத்தில் காரை சரியா நிறுத்தாம இறங்கி வந்துட்டேன்.. அது நேரா போய் கராஜ் கதவு மேல மோதிடிச்சி …
தமாஸ் பண்ணாத வாத்தியாரே.. விஷயத்த சொல்லு..
டேய் உண்மையா அதுதான் விஷயம்.. இப்ப அந்த கதவு ‘ரிமோட் கண்ட்ரோல்” வேலை செய்ய மாட்டுது .. அது தான் அம்மணி வீட்டுக்கு வரதுக்குள அந்த மெக்கானிக் ஒருத்தனை வர சொல்லி வெயிட் பண்றேன்.. அப்ப தான் நீ வந்த..
எங்க கதவை காட்டு..
ஏன் உனக்கு ரிப்பேர் பண்ண தெரியுமா?
ரிப்பேர் எல்லாம் எனக்கு தெரியாது… இப்படி இடிச்சா டமாஜ் எவ்வளவுன்னு தெரிஞ்சி வச்சிக்கலாம் பாரு, அது தான் ..
அடுத்தவன் தவறில் நீ பாடம் கத்துக்குற.. நடக்கட்டும் .. நடக்கட்டும் …
காரையும் கதவையும் பார்த்தது தான் .. தண்டபாணி ..குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்து விட்டான் …
என்ன வாத்தியாரே..எவ்வளவு நாளா கார் ஓட்டுற.. ?
ரொம்ப முக்கியம் பாணி.. டேய், இது புது வண்டி .. போன வாரம் தான் வந்தது.. வண்டி ஆனில் இருக்கா ஆபில் இருக்கானு கூட தெரியாது..அது தான்…
பேசி கொண்டே இருக்கும் போதே மெக்கானிக் வந்தான்..
ஹாய் ..என்ன ஆச்சி…?
ஒன்னும் இல்ல… மதியம் காரில்…
நான் இப்படி சொல்லும் போதே… தண்டபாணி குறுக்கிட்டு அந்த மெக்கானிக்கிடம் . .”வெயிட் எ மினிட்” என்று சொல்லி … என்னை கண் சிமிட்டி இல்லத்தின் உள்ளே அழைத்தான் .

வாத்தியாரே.. என்ன முட்டாள்தனமா பண்ற ?
என்ன பண்ணேன்..?
இப்ப அவனிடம் நீ வண்டிய நிறுத்தாம இறங்கி வந்தேன்னு சொன்னா .. அவன் உன்னையும் சரி.. உன் நண்பன் என்னையும் சரி என்ன நினைப்பான் … ?
டேய்.. அவன் என்ன நினைத்தால் என்ன? அம்மணி வரதுக்குள்ள … இது ரிப்பேர் ஆனா போதும்..
ரிப்பேர் ஆகும்.. நீ பேசாத.. நான் அந்த ஆளிடம் பேசிக்கிறேன்..
ஹாய் .. ஐ அம் ஹிஸ் நெய்பர். மதியம் இவர் மனைவி அவசரமா வந்து காரை நிறுத்தாம இறங்கி போய்டாங்க .. அப்ப கார் மெதுவா நகர்ந்து கதவை மோதிடிச்சு.. ப்ளீஸ் ..ரிப்பேர்  இட்…
ஒ மை காட்..இந்த லேடீஸ் கொஞ்சம் நிதானமா இருக்க கத்துக்க வேண்டாமா .. அது எப்படி காரை நிறுத்தி ஹேன்ட் பிரேக் போடமால் போவாங்க.. எந்த ஊரு பொம்பளையா இருந்தாலும் இந்த அவசர குடுக்கு பிரச்சனை இருக்கு ..
என்று அவன் நாட்டு ( அருகில் உள்ள மெக்ஸிகோ நாடு ஆசாமி இவன்) பெண்களையும் குறை கூறி விட்டு ரிப்பேர் செய்ய ஆரம்பித்தான் ..
பாணி… மனசுள்ள எதோ குறு குருன்னு இருக்கு..
உள்ள சரோஜா தேவி உபயோகித்த சோப்பு டப்பாவில் லக்ஸ் சோப்பு இருந்தா நல்ல போட்டு தேச்சி குளி, வாத்தியாரே .. சரியாகிடும் .
டேய்.. நான் சொல்ல வரது.. குற்றமுள்ள நெஞ்சு கதை..
அது ரெண்டு நாளில் சரி ஆகிடும்..
தனக்கு தேவையான மல்லிகையை பறித்து கொண்டு தண்டபாணி கிளம்பினான் …
அரை மணி நேரம் கழித்து …அம்மணி வீட்டில் நுழையும் போதே..
என்னங்க… கராஜ் கதவு அடி பட்டு இருக்கு.. என்ன ஆச்சி…?
கோத்ரேஜ் பீரோ… என்ன சொல்ற…?
உங்க காதுல.. கராஜ் கதவு என்ன ஆச்சி..?
ஒ அதுவா…
அதுவே தான்..
நம்ம தண்டபாணி மல்லிகை பூ பறிக்க வந்தான்… வந்த அவசரதில காரை
நிறுத்தாம இறங்கி வந்துட்டான்.. அது மெதுவா மூவ் ஆகி கதவை தட்டிடிச்சு..
அய்யய்யோ .. அவருக்கு ஒன்னும் ஆகலையே..
அவன் தான் காரிலேயே இல்லையே…
ஆம்பிளைங்க உங்க எல்லாருக்கும் அவசர புத்திங்க..
நீ சொன்னா சரியா தான் இருக்கும்..
எனக்கு ஒரு உதவி பண்ணு..
என்ன உதவி.. ?இந்த விஷயத்த சுந்தரியிடம் சொல்ல கூடாது .. அது தானே..
எப்படி அவ்வளவு கரக்டா சொல்ற ..?
செஞ்ச தப்ப ஆம்பிளை தன் பரம்பரை எதிரியிடம் கூட ஒத்து கொள்வான்.. ஆனால் கட்டின பொண்டாடியிடம் மறைப்பான்..
ச்சே.. ச்சே.. ஏன் அப்படி சொல்ற..
என்னமோ போங்க.. நீங்க அப்படி மாறிடாதிங்க..
பின் குறிப்பு ;
ஹலோ தண்டம்…
சொல்லு வாத்தியாரே…
ரொம்ப தேங்க்ஸ் .. நீ ஆபத்வாந்தவன் …
அப்படினா..?
அவசரத்துக்கு உதவி செய்தா அப்படி தான் எதோ சொல்லுவாங்க..
இது என்ன பெரிய விஷயம்.. ஒரு ஆம்பிளையின் மானத்தை இன்னொரு ஆம்பிளை தான காப்பத்தனும்.. எனக்கே இந்த கஷ்டம்னா நீ கூட இந்த மாதிரி ஐடியா கொடுத்து இருப்ப இல்ல..

இதுவும் ஒரு மீள் பதிவுதான் ... மற்றொரு தளத்தில் எழுதியது.

4 கருத்துகள்:



  1. கடைசி வரித் தத்துவம்
    எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு

    பதிலளிநீக்கு
  2. சின்ன வயசிலே
    நான் ஸ்கூல் போயிருந்தபோது
    பாட்டி வந்து போன விஷயத்தை
    தட்டை முறுக்கை வைத்துக்
    கண்டு கொள்வேன்

    இப்போ பிறர் பதிவுக்கு வந்து போவதை
    பின்னூட்டம் ஓட்டு வச்சுக் கண்டு பிடித்து
    விடலாம்

    இது எப்படி இருக்கு ?

    பதிலளிநீக்கு
  3. மீள் பதிவாக இருந்தால் என்ன இன்னும் வாசிக்காதவர்கள் வாசிக்கலாமே....நாங்கதான் அப்போவே வாசிச்சுட்டமே..

    பதிலளிநீக்கு