திங்கள், 12 அக்டோபர், 2015

பழமொழி சொன்னால் ….. ஆராயக்கூடாது …

அம்மா  … இந்த வியாழகிழமை பரவாயில்லை, அடுத்த வியாழ கிழமை காலையில் எனக்கு கோல்ப் பயிற்சி வகுப்பு புக் பண்ணாதீங்க ..
சொல்லி கொண்டே வந்தாள், சின்ன ராசாத்தி. அவள் இப்போது 8ம் வகுப்பில் இருகின்றாள். திங்கள் முதல் வெள்ளி வரை (வியாழன் தவிர ) வகுப்புகள் காலை 8:40க்கு ஆரம்பிக்கும். வியாழன் அன்று மட்டும் 10:20க்கு. அதனால் தான் வியாழன் காலை 8 மணிக்கு வாரந்தோறும் கோல்ப் வகுப்பிற்கு அனுப்பிவிடுவோம்.
அடுத்த வாரம் ஏன் வேண்டாம்னு சொல்ற …?
அம்மா  … ஒரு நாளாவது கொஞ்சம் நேரம் அதிகமா தூங்கலாம்னு தான் .
இந்த வயதில் உனக்கு என்ன தூக்கம், அமைதியா போ…
டாடி. ….

என்னைக்கோ ஒரு நாள் தானே .. பாவம் தூங்கட்டும் விடு..
உங்களை யாராவது கேட்டோமா ?
நீங்க யாரும் கேக்காத ஒரே காரணத்தினால் என் அபிப்ராயத்த சொல்லாம இருக்க கூடாதே …
சரி நீங்க கிளம்புங்க …
டாடி….
அம்மா தாயே… ஆளை விடு…
அன்று மாலை …
மகளை பள்ளியில் இருந்து அழைத்து கொண்டு வரும் போது..
சரி ராசாத்தி.. அடுத்த வியாழன் அதிக நேரம் தூங்குவது என்ன ஆச்சி..?
ஒன்னும் ஆகவில்லை .. ஆனால் அம்மா தான் என்னை குழப்பி விட்டார்கள் ..
என்ன குழப்பினார்கள்..?
என்னமோ தெரியல… இது என்ன ரொம்ப நேரம் தூங்குற வயசா? இந்த வயசில ஓட்ற பாம்பை மிதிக்க வேண்டாமான்னு சொல்றாங்க..
ஒ…
ஓட்ற பாம்ப எந்த முட்டாள் டாடி மிதிப்பாங்க.. ஐ அம் பிரிட்டி கன்புயுஸ்ட்..
அது ஒரு பழமொழி மகள்..
அப்படினா …
பழமொழி சொன்னா ரசிக்கணும்… ஆராயா கூடாது…
டாடி.. என்ன சொன்னீங்கனே புரியல .. இதுல எங்க ரசிக்கிறது…ஒய் வூட் சம்ஒன் ஸ்டாம்ப் எ ஸ்நேக்?
அது ஒரு பேச்சுக்காக சொல்றது …
என்னமோ போங்க …
வீட்டை அடைந்ததும்…
இவளை என்ன பாம்பு அது இதுன்னு பயமுறுத்தி வச்சி இருக்க ?
என்ன சொல்றீங்க ?
என்னமோ பாம்பை மிதிக்க சொன்னியாமே?
எப்ப ?
இன்னைக்கு காலையில் .. அதிக நேரம் தூங்க கேட்டதற்கு …
ஒ அதுவா …ஓட்ற பாம்பை மிதிக்கிற வயசுல என்ன தூக்கம்ன்னு கேட்டேன் …
தயவு செய்து இந்த பழமொழிகளை ராசாதிக்களிடம் சொல்றத நிறுத்திவிடு …
ஏன்..?
நீ சொன்னேன்னு இவளும் போய்எங்கேயாவது ஓட்ற பாம்பை மிதிச்சானா .நமக்கு தான் பிரச்சனை
ஏன் …?
பாம்பு இவள கடிச்சா பெரிய தொந்தரவு.. இவ மெதுச்சி பாம்புக்கு அடி பட்டா .. ப்ளூ க்ராஸ் வந்தா அது இன்னொரு பெரிய பிரச்சனை .
அதுவும் சரிதான்.. அப்ப இந்த மாதிரி விஷயத்த எப்படி தான் புரிய வைப்பது ..?

அந்த பிரச்சனையே உனக்கு வேணாம். இனிமேல் இந்த மாதிரி விஷயங்களை நான் கையாடுறேன் …
டாடி…
சொல்லு ராசாத்தி ..
அம்மாவிடம் சொல்லி அடுத்த வாரம் வகுப்பை கன்சல் பண்ணுங்க ..
ஏண்டி … அம்மா …
எனக்கு கொஞ்சம் நேரம் அதிகமா தூங்கவேண்டும் ..
அதிகமா தூங்கனும்மா… இந்த வயசிலா …கடபாறையை முழுங்குற வயசு..
வாட் டூ யு மீன் ?
ஐ மீன்……ஐ மீன்…
முழுங்குறது மீன்ஸ் “Swallow ” வாட் இஸ் கடப்பாரை …?
அது வந்து.. அது வந்து …
என்னத்த வந்து.. இது தான் நீங்க கையாடுற முறையா …?
மம்மா , வாட் இஸ் கடப்பாரை …?
கடப்பாரையை ஆங்கிலத்தில் “Crowbar” என்பார்கள்…
அதை ஏன் என்னை முழுங்க சொல்றீங்க ..?
உங்க அப்பாவையே கேளு…
எனக்கு கொஞ்சம் அவசரமான வேலை இருக்கு .. ஒரு அரை மணி நேரத்தில் வரேன்..
இரவு தூங்க போகும் முன் மூத்த ராசாத்தியின் அறையில்..
அக்கா.. ஐ அம் ரியலி வொர்ரிட் அபௌட் மாம் அண்ட் டாட்?
வாட் ஹப்பெண்ட்?
கொஞ்சம் நேரம் அதிகமா தூங்கனும்னு சொன்னா மாம் இஸ் டெல்லிங் மீ டு ஸ்டாம்ப் எ ஸ்நேக் அண்ட் டாட் இஸ் ஆஸ்கிங் மீ டு சுவாலோ Crowbar …
இதுவாது பரவாயில்லை .. நேத்து என்னிடம் … “Good Cow needs only one burn ” ன்னு சொன்னாங்க.. Why would anyone want to burn a cow, that too a  good one,anyways…?

நேரம் இல்லாத காரணத்தினால் ஒரு மீள் பதிவு...

5 கருத்துகள்:

  1. intha pathivai pala maathangkalukku munpe padithirunthaalum
    muthal oru sila varikal padithathum kandu pidithu vitten--ithu oru mil pathivu:-)

    vaasitha pathivukalil ninaivil nirukkum pathivukalil ungalodathum onru sir.
    thodarungal.

    பதிலளிநீக்கு
  2. பழமொழி சொன்னால் ரசிக்கனும்,,,,,,,,
    பாவம் ராசாத்திகள் இருவரும்.
    நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  3. உங்களுக்கு நேரம் கிடைக்காததால் ஒரு அருமையான மீள் பதிவு போட்டுட்டீங்க.. அதை நான் காலை நேரத்தில் படித்துவிட்டு சிரி சிரி என சிரித்து கொண்டிருந்தேன். அதை பார்த்த என் பாரியாள் காலங்ககார்த்தால நேரம் கிடைக்காத நேரத்தில் கண்டதையும் படித்துவிட்டு என்ன சிரிப்பு வேண்டி இருக்கிறது என்று சொல்லி நேரம் கிடைக்காத அந்த நேரத்திலும் கொஞ்சம் நேரம் செலவழித்து பூரிக்கட்டையால் சிறிது பூஜை செய்துவிட்டு சென்று இருக்கிறார்.

    சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் ஆனால் நான் சிரித்து கொண்டே அழுகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவர் விழாவைப் பார்க்காமல் மூவரும் கூட்டம் போட்டு சிரித்துக்கொண்டு இருந்தீர்களே அப்பவே எனக்குத் தெரியும் பூரிக்கட்டை இருக்கும் உங்களுக்கு என்று,,,,,
      மியூச்சிக் யார் என்று கேட்டீர்களா?

      நீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு