திங்கள், 7 செப்டம்பர், 2015

சிரிக்க , சிந்திக்க ... சீரியஸ்ஸாக ...

வாரத்திற்கு குறைந்த பட்சம் நான்கு அல்ல ஐந்து பதிவுகளை எழுதி கொண்டு இருந்த நான், கடந்த இரண்டு வாரங்களாக  எதுவும் எழுத முடியாத நிலையில் இருக்கின்றேன்.


பிள்ளைகளின் புது வருட பள்ளிகூட ஆரம்ப நாட்கள் ஒரு காரணமாக இருந்தாலும், அது ஒன்று  தான் காரணம் என்று சொல்ல முடியாது. பின்னே, ஏன் எழுத முடியவில்லை ?

நண்பன் தண்டபாணி வேறு ஊருக்கு சென்று விட்டாரா ? இல்லை இல்லை.. இங்கே தான் இருகின்றார். அவரின் குறும்பு வேலைகள் சொல்லி மாளாது.

வீட்டில் நடக்கும் தினசரி நகைச்சுவை நிகழ்சிகள் ...? அவை தன் போக்கில் போய் கொண்டு தான் இருக்கின்றன .

அரசியல் - சமுதாயம் - பொழுது போக்கு ... நிறையவே இருக்கின்றன ..
பின்னர் ஏன் எழுத முடியவில்லை.

சில நாட்களுக்கு முன் சக பதிவர் வருண் அவர்களின் ஒரு சிறிய கருத்து தான்.

"விசு, உங்கள் பதிவுகளில் இதுவரை சீரியசாக எதுவுமே வருவதில்லை. கொஞ்சம் சீரியஸ்ஸாக எதாவாது எழுதுங்கள் என்றார். நண்பர் கூறியதில் தவறு எதுவுமே இல்லை. நல்ல வார்த்தைகளிட்டு தம் மனதில் பட்டதை சொன்னார். அதை படித்ததில் இருந்து தான் எழுதுவதில் ஒரு தயக்கம் தட்டிவிட்டது.

இப்போதோ ஐம்பது ஆகி விட்டது. சிறுவயதில் இருந்தே  எந்த ஒரு காரியத்தையும் பெரிது படுத்தாமல்  " இதுவும் கடந்து போகும் " என்ற முறையில் வாழ்க்கையை கடத்திவிட்டேன்.  எந்த ஒரு காரியம் எதிரில் நடந்தாலும் அதில் உள்ள நகைசுவையை  ருசித்து "யாம் பெற்ற இன்பம் " என்ற மொழிக்கு ஏற்ப எழுதி வருவதாக எனக்கு நானே சொல்லி கொண்டு வந்தேன்.

வருண் அவர்களின் கருத்து , என்னை ஸ்தம்பதிக்க வைத்து விட்டது. நண்பர் கூறியது போல் சீரியசாக எழுதலாம் என்று எழுதிய கடைசி சில பதிவுகளை எழுதி முடித்த பின் நானே படித்து பார்த்தேன்.  அந்த எழுத்துக்களில் ஏதோ ஒன்று அடி படுகின்றது. அதை படித்த பின் நம்மாலே சீரியசான  விஷயங்களை வெளிக்கொணர முடியவில்லையே என்ற ஒரு தாழ்மை உணர்ச்சியின் தாக்கம்.

நகைச்சுவையை சில நாட்கள் மூட்டை கட்டி வைத்து விட்டு, சில சீரியசான விஷயங்களை கண்டிப்பாக மற்றவர்களும் படிக்குமாறு எழுத கற்று கொள் .என்ற ஒரு எண்ணம் எதிரொலியாக கேட்கின்றது.

பார்க்கலாம். அடுத்த சில பதிவுகள் வர தாமதமாக வாய்ப்பு உண்டு. இதற்கிடையில் ...1875- 1925 காலங்களில் நடந்த ஒரு கிராமிய சூழலை கொண்ட ஒரு தொடர் கதை எழுதலாம் என்ற ஒரு ஆசை.
இந்த தொடர் கதையை யோசித்தாலே எனக்கு "புல்லரிப்பு" தான். யோசித்து பாருங்களேன்.

மின்சாரம் இல்லாமல், போக்கு வரத்து வாகனங்கள் இல்லாமல், கல்வி அறிவு இல்லாமல், விவசாயம் ஒன்றையே நம்பி வந்த காலம் அல்லவா அது. அந்த காலத்தை தழுவி இந்த கதையை எழுத ஒரு ஆசை.

எதையாவது எழுதலாம் என்று இருந்த அடியேனை, சற்று மாற்றி இப்படியும் எழுதலாமே என்று வழிகாட்டிய நண்பர் வருணிற்கு நன்றி.

தொடர்ந்து எழுதுகிறேன், நீங்களும் தொடருங்களேன்.

11 கருத்துகள்:

  1. ஆகா! புது முயற்சிக்கு வாழ்த்துகள்! உங்கள் பாணியிலும் தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. கலக்குங்கள் நண்பரே!

    ஆனால் இங்கு ஒன்று சொல்ல விழைகின்றோம். நகைச் சுவை என்பது மிக மிக அரிய ஒரு கலை...நகைச்சுவை எழுதுவது என்பதோ அதை ரசிப்பது என்பதோ மிகவும் அரிது...எல்லோருக்கும் எளிதாக வருவதில்லை. ஏனென்றால் நகைச் சுவை எழுத தனி மனது வேண்டும். பொதுவாக நகைச் சுவை நடிகர்கள் கூட திரையில் தான் நகைச்சுவையாக நடிப்பதாகவும் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் சீரியசானவர்கள், அவர்கள் வாழ்வும் சோகமானது என்றும் கேட்டதுண்டு. மிஸ்டர் பீன்ஸாக நடித்தவர்=ரோவன் அட்கின்சன், சார்லி சாப்ளின்...ஏன் நம் தமிழ் திரைப்பட ஆட்களும்தான்....எஸ்வி சேகர்....இப்படி

    சீரியசாக எழுதுவது நல்லதுதான்...உங்கள் திறமையை அதில் வெளிப்படுத்தலாம் உங்களால் முடியும்.....ஆனால் அதற்கு நிறைய பேர் இருக்கின்றார்கள்..நகைச்சுவை என்பது நம்மைச் சுற்றி உள்ளோரையும் அட்லீஸ்ட் கொஞ்ச நேரமேனும் பலதையும் மறந்து இருக்கச் செய்யும் ஒன்று...ஒரு சிறு நிகழ்வைக் கூட நகைச்சுவை மிளிர எழுதும் ஆற்றல் தங்களுக்கு இருப்பது இறைவன் தந்த வரம் என்பது நாங்கள் அடிக்கடிச் சொல்லிக் கொள்வது....அதிலுமே கூட நீங்கள் பல சமயங்களில் நல்ல கருத்தைச் சொல்லி இருக்கின்றீர்கள்....

    நீங்கள் சீரியசாக எழுதினாலும், தொடர்கதை எழுதினாலும்,....நகைச்சுவை எழுதுவதை விட்டுவிடாதீர்கள்....எங்கள் கொடி அதற்கே.....உங்களையும் மதுரைத் தமிழனையும் உங்கள் இருவரின் நகைச்சுவைக்காக மிகவும் ரசிப்பதுண்டு....அமெரிககவின் ஈஸ்ட் அண்ட் வெஸ்ட் அதில் கலக்குது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்தை நான் ஆமோதிக்கிறேன்..
      //சீரியசாக எழுதுவது நல்லதுதான்...உங்கள் திறமையை அதில் வெளிப்படுத்தலாம் உங்களால் முடியும்.....ஆனால் அதற்கு நிறைய பேர் இருக்கின்றார்கள்..நகைச்சுவை என்பது நம்மைச் சுற்றி உள்ளோரையும் அட்லீஸ்ட் கொஞ்ச நேரமேனும் பலதையும் மறந்து இருக்கச் செய்யும் ஒன்று...ஒரு சிறு நிகழ்வைக் கூட நகைச்சுவை மிளிர எழுதும் ஆற்றல் தங்களுக்கு இருப்பது இறைவன் தந்த வரம் என்பது நாங்கள் அடிக்கடிச் சொல்லிக் கொள்வது....அதிலுமே கூட நீங்கள் பல சமயங்களில் நல்ல கருத்தைச் சொல்லி இருக்கின்றீர்கள்....//

      நீக்கு
  3. துளசியாரை வழிமொழிகிறேன்...
    வழக்கம் போல awesomeமாகவே எழுதுங்க..., ஆவேசம் நமக்கு ஒத்துக்குமான்னு தெரியல...

    பதிலளிநீக்கு
  4. ***வருண் அவர்களின் கருத்து , என்னை ஸ்தம்பதிக்க வைத்து விட்டது. நண்பர் கூறியது போல் சீரியசாக எழுதலாம் என்று எழுதிய கடைசி சில பதிவுகளை எழுதி முடித்த பின் நானே படித்து பார்த்தேன். அந்த எழுத்துக்களில் ஏதோ ஒன்று அடி படுகின்றது. அதை படித்த பின் நம்மாலே சீரியசான விஷயங்களை வெளிக்கொணர முடியவில்லையே என்ற ஒரு தாழ்மை உணர்ச்சியின் தாக்கம்.***

    விசு: என்னுடைய விமர்சனத்தை நீங்க நகைச்சுவையாக எடுத்துட்டு போகாமல் சீரியஸா எடுத்துக்கிட்டீங்களே! :)

    அட் லீஸ்ட் ட்ரை பண்ணிப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து இருக்கீங்க! முயற்சியே செய்யாமல் "என்னால் முடியாது" னு சொல்றதுக்கு இது எவ்வளவோ மேல்! :)


    பதிலளிநீக்கு
  5. ***பார்க்கலாம். அடுத்த சில பதிவுகள் வர தாமதமாக வாய்ப்பு உண்டு. இதற்கிடையில் ...1875- 1925 காலங்களில் நடந்த ஒரு கிராமிய சூழலை கொண்ட ஒரு தொடர் கதை எழுதலாம் என்ற ஒரு ஆசை.
    இந்த தொடர் கதையை யோசித்தாலே எனக்கு "புல்லரிப்பு" தான். யோசித்து பாருங்களேன்.

    மின்சாரம் இல்லாமல், போக்கு வரத்து வாகனங்கள் இல்லாமல், கல்வி அறிவு இல்லாமல், விவசாயம் ஒன்றையே நம்பி வந்த காலம் அல்லவா அது. அந்த காலத்தை தழுவி இந்த கதையை எழுத ஒரு ஆசை.***

    All the best, Visu! :)

    பதிலளிநீக்கு
  6. ஆஹா அருமையான முடிவு தான் கலக்குங்கள் ( அய்யோ நீங்க வேற கலங்குங்க நினைக்க வேண்டாம்) படிக்க ரெடி,
    ஏன் தங்கள் பதிவு இப்போ எல்லாம் என் டேஷ்போர்டில் தெரியமாட்டேங்குது.
    நன்றி.

    பதிலளிநீக்கு