வியாழன், 24 செப்டம்பர், 2015

கலைஞரை கலாய்த்த கண்ணதாசன் !

 நான் மற்ற தளத்தில் எழுதி கொண்டு இருந்தபோது எழுதிய பதிவு. ஏற்கனவே படிகாதவர்கள் ஒரு முறை படியுங்கள். படித்தவர்கள் மீண்டும் படியுங்கள்.

சிறு வயதிலேயும் சரி, பள்ளி காலத்திலேயும் சரி, கல்லூரி நாட்களிலும் சரி, ஏன் கடந்த சில மாதங்களாக நான் மகிழ்ந்து வரும் பதிவுலகிலும் சரி .. என் “பேச்சை – எழுத்தை” “கேட்பவர்கள் – படிப்பவர்கள்” பொதுவாக கூறும் ஓர் பின்னோட்டம் ..

“விசு, உனக்கு ரொம்ப குசும்பு. யார பார்த்தாலும் ரொம்ப கலாய்க்கின்றாய்”
இந்த குசும்பு என்பது உப்பை போல். அதை சரியான அளவாக உபயோகபடித்தினால் நாம் பரிமாற்ற போகும் படைப்பு ருசியாக  இருக்கும். அதை சற்று குறைவாக போட்டால் … குப்பையில் தான் போட வேண்டும்  (உப்பில்லா பண்டம்… வேறு என்ன செய்வது .. ) அதை அதிகமாக போட்டால் … தண்ணீர் குடித்து கொண்டே இருக்க வேண்டும்  (உப்பு தின்னவன் …. கதை தான்).


நாம் ஒருவரை குசும்பு பண்ணுவதை அவர் கோவித்து கொள்ளாமல் எடுத்து கொள்ள வேண்டுமென்றால், முதன் முதலாக நம்மை நாமே கலாய்த்து கொள்ள வேண்டும். ஒரு இடத்தில ஒரு முட்டாள்தனமான ஒரு நிகழ்ச்சியினால் நல்ல ஒரு நகைச்சுவையை அளிக்க முடியும் என்றால் அந்த முட்டாள்தனத்தை பண்ணது “நான்” என்று சொல்லிகொள்ளவேண்டும். அப்படி  சொல்வதினால் அந்த நகைச்சுவையை அனைவருக்கும் யார் முகமும் வாடாமல் சொல்லி விடலாம். (சொல்லி முடித்து வீட்டிற்கு வந்த பின் உங்கள் முட்டாள்தனத்தை பெருமையா வேற வெளியே சொல்ற அளவிற்கு நீங்கள் முட்டாளா என்ற ஒரு கேள்வி வரு, அது வேற கதை),
அறுசுவையை விட்டு தள்ளுங்க. வாழ்க்கையின் எல்லா சுவையிலும் எனக்கு பிடித்ததே நகைச்சுவை தான். உதாரணதிற்கு சொல்ல வேண்டுமானால் … ரஜினி காந்த் அவர்களின் படத்தில் எனக்கு பிடித்ததே “தில்லு முல்லு”  தான். அந்த படத்தில் தேங்காய் சீனிவாசன் பேசும் ஒரு வசனம் ..
“ழா னாவும் வராது, ஷா  னாவும் வராது அப்புறம் எதுக்குயா  ஷார்ட் நேம் …. சுப்பி …”

இந்த வசனத்தை என் வாழ்க்கையில் கோடி கணக்கில் சொல் லி இருப்பேன் …
மற்றும் ஒரு படம் … பாக்யராஜ் அவர்களின் ” டார்லிங் .. டார்லிங் …டார்லிங்”  என்ற படத்தில் கல்லா பெட்டி சிங்காரம் பாத்திரம் …செய்யும் காமெடி!
என் குடும்பத்திலேயும் சரி, நண்பர்கள் மத்தியிலேயும் சரி யாராவது விசனமாக இருக்கும் போது இந்த வசனத்தில் இன்றை எடுத்து விட்டால் போதும் .. அந்த இடமே “கல கல” என்று ஆகிவிடும் …
எங்கள் வாழ்க்கையில் நகைச்சுவைக்கு அவ்வளவு முக்கியத்துவம்.
இது எல்லாம் சினிமா நகைச்சுவை …இப்போது கலாய்த்தலை பற்றி பார்க்கலாம்.

என்னை பொறுத்தவரை கலாய்த்தல் என்றாலே நினைவு வருபவர் கண்ணதாசன் அவர்கள்  தான்  இவரை “கலாய்த்தல் கிங்” என்றே அழைக்கலாம் .

ஒரு முறை சேலம் அருகே ஒரு இடத்தில் பேசுவதற்காக கலைஞர் கருணாநிதியும் கவியரசு  கண்ணதாசன் அவர்களும் சென்று இருந்தார்கள் . கண்ணதாசன் அவர்கள் தன்னுடைய பேச்சை முடித்து கொண்டு ஒரு அவசர “குடி” போகும் விஷயமாக அந்த இடத்தை விட்டு கிளம்பி அவர்கள் தங்கி இருந்த அறைக்கு சென்று விட்டார் .

தன் பேச்சை முடித்துக்கொண்டு  அறைக்கு சென்ற  கருணாநிதி அவர்கள் கதவை தட்டிய போது கண்ணதாசன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார் . தூங்கி கொண்டு இருந்தவர் எழுந்து வந்து  கதவை திறந்து விட்டு மீண்டும தூங்க செல்ல சென்றார் ..உள்ளே சென்ற கலைஞ்சர் அவர்கள்  தன் படுக்கையில் ஒரு கருநாகத்தை கண்டு அலற , ஊரே கூடி அந்த  நாகத்தை அங்கு இருந்து விளக்கியது ..

அதற்கு பின்  ..

கண்ணதாசா, அந்த பாம்பை படுக்கையில் பார்த்தது பயமா இருக்கு …

அதுக்கு ..

நீ வந்து இந்த படுக்கையில் படுத்துக்க, நான் உன் படுக்கையி ல் படுத்துக்கிரன்..

வெட்கமா இல்ல உனக்கு .. ஒரு ஆம்பிளை இப்படி பயப்படலாமா …

இல்ல கண்ணதாசா..

“பராசக்திக்கு” வசனம் எழுதியது நீதாநானு எனக்கு சந்தேகமா இருக்கு

இல்ல, அதை பார்த்த பயம் தான் ..

ஒரு ஆம்பிளை மாதிரி தைரியமா இருக்கணும் ..இதுக்கு எல்லாம் பயப்படலாமா?  நீ அதிலே படுத்துக்க  நான் இங்கேயே படுத்துகிறன் ..


untitled

மற்றும் ஒருமுறை கண்ணதாசன் அவர்கள் தமிழில் எப்படி மற்றவர்களை குழப்பலாம் என்று ஒரு உதாரணம் கொடுத்தார் …

நீதி மன்றத்தில் நடந்த கற்பனை காட்சி ..

அவனுக்கு இருநூறு ருபாய் தருவதாக சொன்னாயா ?

இல்லை, இரு!  நூறு ருபாய் தருவதாக தானே சொன்னேன் ..

இவனுக்கு முன்னூறு  ருபாய் தருவதாக சொன்னாயா ?

இல்லை, முன் நூறு ருபாய் தருவதாக சொன்னேன் ..அது இப்போது முடியாது.

அவனுக்கு நானூறு ருபாய் தருவதாக சொன்னாயா ?

இல்லை, நான்  நூறு ருபாய் தருவதாக சொன்னேன் ..ஆனால் இப்போது
கொஞ்ச கஷ்டம் பிறகு பார்க்கலாம் ..

நகைச்சுவை ஒரு அருமையான காரியம், அதை பகிர்ந்து மகிழ்வோம்.

5 கருத்துகள்:

  1. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
  2. அருமையான விடயம் தான், தங்களுக்கு அது நன்றாக வரும் போலும்,,,,,
    எங்க உங்க தண்டம் காணோம்,,,,
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. சிலேடை பக்கா...

    தலீவரும் கவிஞரும் வேட்டைக்குப் போய் சமாளிச்ச கதைக்கு
    இங்க சுட்டுங்க.... http://malarinninaivugal.blogspot.com/2013/10/blog-post.html

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்

    அழகாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு