செவ்வாய், 14 ஜூலை, 2015

முருகதாஸ் ,கௌதம் மேனன் மற்றும் சங்கர் கவனத்திற்கு ....

இரவு 8:52. சிறை கைதிகள் அனைவரும் தம் தம் இரவு உணவை முடித்து விட்டு தூங்க போகும் நேரம். சிறை சாலை பாதுகாவல் அதிகாரிகள் அவர்கள் உணவை முடித்து விட்டு ஒவ்வொரு அறையாக சென்று எல்லா கைதிகளும் இருகின்றார்களா என்று பரிசோதிக்கும் நேரம்.

அதிகபட்ச காவல் கொண்ட முக்கிய கைதிகள் இருக்கும் அறையில்  இருந்த "குள்ளன்" (El  Chapo  என்ற Shorty ) என்று செல்லமாக அழைக்க படும் கைதியை காணவில்லை.


சிறைசாலையின் அபாய சங்கை அழுத்திவிட்டு அங்கே இருந்த அணைத்து  காவல் அதிகாரிகளும் குள்ளனை தேட ஆரம்பித்தனர். மெக்ஸிகோ நாட்டில் அமைந்துள்ள மிகவும் பாதுகாவல் மிகுந்த சிறை சாலையில் ஜூலை 11 ம் தேதி  நடந்த நிகழ்ச்சி தான் இது.

குள்ளனை தேடி கொண்டு சிறைசாலை முழுவதும் அனைவரும் சல்லடை போட ... குளியல் அறையில் ஒரு குழி வெட்ட பட்டு இருந்தது கண்டு பிடிக்க பட்டது.  அந்த குழியில் இறங்கி பார்த்த காவல் அதிகாரி பேய் அறைந்ததை போல் அலறினார் (மெக்ஸிகோ நாட்டு கதை, சுஜாதாவின் சலவை காரி கதை போல்.. இந்த பேய் அறைந்த கதை எப்போது வரும் என்று கோப படவேண்டாம், அந்த கதை கூடிய சீக்கிரம் வெளிவரும்).  20 X 20 இன்ச் அளவில் இருந்த அந்த குழி ஒரு ஐந்து அடி கீழே போனதும் ஒரு நவினமயாமான சுரங்க பாதையாக மாறியது .


சுரங்கத்தை பற்றிய காணொளி

யார் இந்த குள்ளன்?  ஒரு நாட்டின் மத்திய சிறையில் அதுவும் கடுமையான கைதிகள் உள்ள அறையில் ஏன் அடைக்க பட்டான் . இப்போது எப்படி தப்பித்து சென்றான்...?

ஜோகின்  குஸ்மான் என்ற பெயர் கொண்ட El  Chapo என்று அழைக்க படும் இந்த நபர் போதை பொருள் கடத்தும் தொழில் உலகின் நம்பர் 1. தன்னுடைய கடத்தல் தொழிலுக்கு தடையாக இருக்கும் யாரையும் சுட்டு கொள்ள தயங்க மாட்டார். மெக்ஸிகோ நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு  போதை பொருளை கடத்தி பல் லாயிர கோடி டாலர்களை சம்பாரித்தார்.

60 வயதான இவர் வாலிப வயதில் இருந்தே இந்த கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்தார். 1991ல் இன்டர்போல், அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் இவரை கைது செய்ய ஆணை பிறப்பிக்க பட்டு இருந்தது.   சிறிய தெரு போதை வியாபாரிய இருந்த மெதுவாக இந்த தொழில் வளர்ந்து 1990ல் உலகிலேயே பெரிய போதை கடத்தல் மன்னன் ஆனார் . 1992 போல் இவரை தென் அமெரிக்காவில் ஒரு நாட்டில் கைது செய்து மெக்ஸிகோவில் சிறை வைத்தார்கள். 2001 போல் சிறையில் இருந்த அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தப்பித்து விட்டார். 10 வருடம் போல் வெளியே உல்லாசமாக இருந்த இவரை 2014ல் அதிகாரிகள் மீண்டும் கைது செய்தார்கள். மீண்டும் அவரை சிறையில் அடைக்க 15 மாதத்தில் இந்த சிறையில் இருந்து தப்பிசென்றுள்ளர் .
இவரை கண்டு பிடித்து தருபவர்களுக்கு அமெரிக்க 5 மில்லியன் மற்றும் மெக்ஸிகோ 2 மில்லியன் டாலர் தருவதாக சொல்லி இருகின்றது.

சரி தப்பித்த விதத்தை பார்போம் . இந்த சிறைசாலையில் இருந்து  ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இரு வீட்டில் இருந்து இந்த சுரங்கம் தோண்ட பட்டு உள்ளது. ஒரு மைலுக்கும் மேலே உள்ள இந்த சுரங்கத்தை  தோண்ட நிறைய பொறியியல் நிபுணர்களும் மற்றும் வேலையாட்களும் தேவை பட்டு இருப்பார்கள்.  இந்த சுரங்கத்தை வெளியுலகிற்கு தெரிய கட்டுவதற்கே கிட்ட தட்ட ஒரு வருடமாகும். யாருக்கும் தெரியாமல் எப்படி கட்டினார்கள் என்பது இப்போது ஒரு புதிராக உள்ளது.



தப்பித்த விதத்தை பற்றிய காணொளி  

தப்பி வந்த குள்ளன் வெளியே வந்தவுடன் அமைதி காக்காமல் காவல் துறையினருக்கு பல சவால் விட ஆரம்பித்து இருக்கின்றார் .

என்னதான் நடக்குதோ...

பின் குறிப்பு :

2001ல் இவர் தப்பித்த விதமே  வேறு. சிறை பணியாளர்களுக்கு லஞ்சத்தை   கொடுத்து துவைக்க வெளியே போகும் அழுக்கு துணி கூடையில் ஓளிந்து மறைந்தார்.

சரி,
தலைப்பிற்கும் பதிவிற்கும் என்ன சம்பந்தமா ...? இந்த கதையை வெச்சி ஒரு சூப்பர் படம் கொடுங்க. திரைகதை வசனத்த நான் தரேன். ஹீரோவா . கமல் இல்லாட்டி சூரியா தான். நம்ம தமிழ் திரை உலகில் இவங்க ரெண்டு பேரு தானே.. El Chapo....

www.visuawesome.com

9 கருத்துகள்:

  1. கில்லாடி தான்...

    கமல் / சூர்யா பரிந்துரைத்திலும் கில்லாடி...!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்,
    நான் சொல்ல வந்தேன்,,,,,,,,,
    அருமை திரைகதை வசனம் மட்டும் தானே,,,,,,
    வாழ்த்துக்கள்,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம தான் ஆறு அடி ஒரு அங்குலம் ஆச்சே.. இந்த பாத்திரத்திற்கு வேலைக்கு ஆவாது. அதனால் தான் திரை கதை வசனம் .

      நீக்கு
  3. கமல் சூர்யா! நீங்க நக்கலா சொன்னாலும் பொருத்தமா இருப்பாங்க!

    பதிலளிநீக்கு
  4. செம கில்லாடியா இருப்பாரு போல...அதெப்படி மெக்சிகோல கூட லஞ்சமா...நம்மூரப்போலத்தானா...மேலை நாடுகளிலும் கொள்ளையர்கள் பிடிபடுவதில்லை...எப்படியோ தப்பிவிடுகிறார்கள்...அதுவும் மெக பட்ஜெட் சுரங்கம்...அப்ப சங்கர்தான் இந்த ப்ராஜெக்டுக்கு....அவருதான் இந்தாள மாதிரி மெகா பட்ஜெட் படம் எடுக்கற ஆளு....அதுக்கு அடுத்து முருகதாஸ் அப்புறம்தான் கௌதம்...கௌதம் கீதா வீட்டுக்கு அடுத்து...தினமும் பார்க்கலாம் அவரது வீட்டையும் அவரையும் ஊரில் இருந்தால்....பல ஷூட்டிங்க்ஸ் ஏன் கமல் வேட்டையாடு விளையாட்டில் படத்தில் அவரது வீடு கௌதமின் வீடுதான்...இங்குதான் சில ஷாட்ஸ், அடையார் பாலத்தில் என்று எடுக்கப்பட்டது....அப்போல்லாம் சினிமா துறையினர் படையெடுப்பாக இருக்கும்...இப்பதான் கொஞ்ச நாளா எந்த சலனமும் இல்லை...கௌதம் சூரியா இப்ப இணையுமானு தெரில...சூர்யா சங்கர் காம்பினேஷன் வரல ஸோ அப்படிப்பார்த்தா உங்கள் திரைக்கதை வசனம் சங்கர் கிட்ட பெருசா ஒரு டீல் போட்டுருங்க ...ஹஹஹஹஹ் மெகா பட்ஜெட் படம் தான் சங்கர் எடுப்பாரு .....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சங்கரோட சேர்ந்து ஒரு படம் பண்ணா ... நம்ம திவால் ஆகவேண்டியது தான். அவர் இன்னொரு "ரோல்ஸ் ராய்ஸ்" வாங்கிட்டு நிம்மதியா இருப்பார். நம்ம இருக்கிற சொத்தை எல்லாம் கடனை அடைக்க கொடுத்துட்டு ... வீட்டில் துண்ட போட்டு உட்கார வேண்டியது தான்.

      நீக்கு

    2. கவலையை விடுங்க இதை துளசி சாரிடம் விடுங்க அவர் உங்களை வைச்சு மிகப் பிரமாண்டமான படம் எடுத்து வெற்றிப்படமாக்கிவிடுவார், ஆனால் கதாநாயகனான நீங்கள் சற்று உயரம் அதனால் என்ன உங்களை அபூர்வசகோதரகள் கமல் மாதிரி குட்டையாக்கி விடலாம் எப்படி என் ஐடியா

      நீக்கு
    3. இதைபற்றி நான் எழுதிக் கொண்டிருக்கும் போது உங்கள் பதிவு வெளிவந்து இருக்கிறது. அதனால் எனது பதிவு சற்று தாமதமாக எனது ஸ்டைலில் இன்று இரவு வெளியாகும்,

      நீக்கு
  5. என்னது.... 100 கோடி சொத்து வச்சுருக்கீங்களா (வீட்டைத் தவிர்த்து). பரவாயில்லை. கண் போடவில்லை. இப்போதான் நீங்க சுவிஸ் போன உண்மையான காரணம் தெரிந்த்து. அப்படின்னா, நம்ம மோடி, எனக்கு 15 லட்சத்து ஒரு ரூபாய் தரணும்.

    பதிலளிநீக்கு