வெள்ளி, 14 நவம்பர், 2014

மாமா ... மாமா ஏன் பார்த்தே ..?


"சூதாட்ட அறிக்கையில் சீனிவாசன் - மெய்யப்பன்  ; சுப்ரீம் கோர்ட் வெளியிட்டது"

இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது?
 (Picture Courtesy : Google)
மாமா ! என்னை "தத்து" எடுத்த சீனு மாமா? சுப்ரீம்  கோர்டில் வச்சிட்டானே ஆப்பு? இப்ப என்ன பண்றது?

மெய்யப்பா? முட்டாள் மெய்யப்பா! உன் அறிவின் அளவை பார்த்தால் நீ AVM குடும்பத்தில் எப்படி பிறந்தாய் என்று ஆச்சரியமா இருக்கு!

நான் எங்கே பிறந்தேன் என்பதா இப்போது முக்கியம்? சுப்ரீம் கோர்ட் அறிக்கையில் நம்ம ரெண்டு பேரையும் கொட்ட கொட்ட எழுத்தில் போட்டு இருக்கான். இப்ப என்ன பண்றது?

முட்டாள், கொஞ்சம் வாய மூடு  உன்னைத்தான் கல்யாணம் பண்ண போறேன்னு என் பொண்ணு வந்து நிக்கும் போதே கேட்டேன், இவ்வளவு பெரிய முட்டாளை எங்கே இருந்து கண்டுபிடிச்சன்னு?

எங்கே லயோலா கல்லூரியில் தான், வேறே எங்கே! அது சரி, சும்மா உள் குத்தம் வச்சு பேசாதீங்கோ.  நீங்க பெத்து வச்சி இருக்கீங்களே ஒரு பையன், அவனோட நான் எவ்வளவோ பரவாயில்லைன்னு ஊரெலாம் பேசுறாங்கோ.

அந்த சனியனை விடு ! அடுத்த  500 பரம்பரைக்கு பணம் சொத்து - எவன் கேட்டாலும் பொண்ணு தருவான், அதை எல்லாம் விட்டு விட்டு , இன்னொரு ஆம்பிளையோட தான் வாழ்வேன்னு அடம் பிடிக்கிறான். எனக்குன்னு வந்து சேர்ந்து இருக்கு பாரு , மகனும் , மருமகனும்!

சரி சும்மா புலம்பாதிங்கோ! யாரோட எப்படி வாழ்றது என்பது அவன் உரிமை, எல்லாரும் "தோனி" போல் ஆக முடியுமா? நீங்க சொல்றதுக்கு எல்லாம் தலையை ஆட்டிக்கொண்டு இருக்க .

மெதுவா பேசு சனி, இனிமேல் தான் நம்ம ஜாக்கிரதையா இருக்க வேண்டும்.

அட போங்க மாமா! சரி எப்படி மாமா இதுவரைக்கும் வாழ்க்கையில் ஒரு கிரிகெட் மட்டையை கூட பிடிக்காத உங்களுக்கு கிரிக்கெட் உலகத்தில் இவ்வளவு பெரிய பதவி?

டேய் முட்டாள் , நாதாரி தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ண வேண்டும்.

புரியல மாமா,

 உனக்கு புரிந்து இருந்தா தான் நான் குழப்பம் ஆகி இருப்பேன்! கவனமா சொல்றேன் கேளு!

சொல்லுங்க மாமா, ஒரு நிமிஷம் இருங்க, நம்ம பயில்வான் "தாராசிங்" மகன் "விண்டு சிங்" இங்க   தான் இருக்கான், அவன் தான் என் பங்காளி, அவனுக்கும் சேர்த்து சொல்லுங்க.

டேய் முட்டாள் மெய்யப்பா, உனக்கு பெயர் வைத்தவர்கள் வாயில் சக்கரை தான் போட வேண்டும்.

ஏன் மாமா,?

பண்றது திருட்டு வேலை , இதில் பங்காளி வேற  "மெய்யாலுமே" உன்னை மாதிரி  வேறு எவனும் ஒரு வடி கட்டின முட்டாள் இருக்கமாடானு முன்னமே தெரிந்து கொண்டு உனக்கு "மெய்யப்பன் "என்ற பெயரை வைத்தார்கள் அல்லவா, அதனால் தான் .

நீங்க  என்னை எத்தனை முறை வேண்டும் என்றாலும் முட்டாள் என்று அழையுங்கள், இருந்தாலும்  , நான் நீங்க பெத்த பையனோட பரவாயில்லைன்னு ஊரெலாம் பேசி கொள்கின்றார்கள். சரி எப்படி இவ்வளவு பெரிய ஆள் ஆகிவிட்டீர்கள், விவரமாக சொல்லுங்க.

டேய் , முதலில் ஒரு முக்கியமான காரியத்தை மனதில் வைத்து கொள்.

என்ன காரியம் மாமா ?

இந்த கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும்னு சொல்லி நேரத்தை வீணடித்து கொண்டு இருக்கின்றார்களே, இவங்க எல்லாம் "வடி கட்டின முட்டாள்கள்". இவங்களுக்கு சுத்தி போட்டாலும் புத்தி வராது . சொல் புத்தியும் இல்லை, சுய புத்தியும் இல்ல, இந்த முட்டாள்களை ஏமாற்றுவது ரொம்ப சுலபம் .

அப்ப எப்படி மாமா நான் மாட்டி கொண்டேன்.?

இவங்க எல்லாம் முட்டாள்கள், நீ அடி முட்டாள் அல்லவா?, அது தான் மாட்டி கொண்டாய்.

சரி , இப்ப இதில் இருந்து எப்படி தப்புவது?

அது ஒரு பிரச்சனயே இல்லை.

வேலைக்கு ஆகாத வேறு ஒரு நாட்டு அணியை வரவைப்போம் . அந்த அணியை நம்ம ஆட்க்கள் "செத்த பாம்பை அடிப்பது போல் அடிப்பார்கள்" அதுக்கு பிறகு நம்ம தலைவர் " தோனி" அருமையா ரெண்டு வார்த்தை சொல்வாரு , எல்லாரும் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள்.

அவர் " தோனி" சொல்ற வரைக்கும் ?

நம்ம "கை புள்ள சாஸ்திரியும்", " அன்ன கை கவாஸ்கரும்" நம்மள பத்தி நாலு வார்த்தை நல்லதா சொல்லுவாங்க, அதுக்கு அவங்களுக்கு சில கோடியை விட்டு எறியணும்.

கோடியா ?

டேய், அதுக்கு ஏன் பதறுற? அது என்ன உங்க அப்பன் ஆத்தா சொத்தா? "ஊரான் வீட்டு நெய் என் பொண்டாட்டி கை  " கதை தான் !

சரி, அப்ப நமக்கு எதுவும் பிரச்சனை வராதுன்னு சொல்லுங்க !

டேய் ஏற்கனவே இதில் பலி கொடுக்க ரெண்டு மூணு விளையாட்டு வீரர்கள தயார் பண்ணி விட்டேன். இந்த எல்லா பிரச்சனைக்கும் இவர்கள் தான் காரணம்னு இவங்கள உள்ளே தள்ளிட்டு நம்ப "எஸ்கேப்"!

ஐயோ பாவம் மாமா, அப்ப இவங்க எதிர்காலம்?

அது ஒன்னும் பிரச்சனை இல்ல, ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து நாடளுமன்றத்திற்கு போவாங்க, அதுக்கு எல்லாம் நீ கவலை படாதே !

மாமா, இந்த மூணு பேரில் " தோனி " ஒருவரா?

டேய் முட்டாள், "தோனி " நாம சிமெண்ட் கம்பனியில் "டைரடக்கரு ", அவனை எப்படி உள்ளே தள்ள முடியும்? அவன் உள்ள போனா எல்லாரும் போக வேண்டியது தான்.

சரி மாமா, இந்த  " அன்ன கை கவாஸ்கரை " எப்படி சமாளித்தீர்கள்?

டேய், 70-80 ல் ஒரு முறை விளையாட்டு மைதானத்தில் அவர் பெட்டியில் , அமெரிக்க டாலரில் கணிசமான  ஒரு தொகை இருந்தது. அது எப்படி வந்ததுன்னு "தமாசா" கேட்டேன் . மனுஷன் "பேய் அறைந்த" மாதிரி ஆகிவிட்டார்.

இது நல்லா இருக்கு மாமா! நானும் உங்க கூடவே ஒரு ரவுண்டு வரேன் .

பொண்ண கொடுத்துட்டேன், வராதன்னு சொன்னா விடவா போற? வந்து தொலை. ஆனால் எவன் என்ன கேட்டாலும் உனக்கும் நிர்வாகத்திற்கும் சம்மதம் இல்லை, நீ ஒரு கிரிக்கெட் ரசிகன்னு சொல்லு. வேறு எதையும் சொல்லாதே.

சரி மாமா . மாமா கடைசியா ஒரு காரியம் , கேட்கலாமா?

கேள்றா!

அந்த பாகிஸ்தான் அணியின்  கோச் "பாப் வோல்மர் " அவர் எப்படி மாமா செத்தாரு?

அவரா! நல்ல கேள்வி. "மேற்கு இந்திய தீவில்" உலக கோப்பை நடக்கும் போது, பாகிஸ்தான் பங்களாதேஷ் கூட ஆடும் போது தோற்று விட்டது அல்லவா? அந்த நாட்களில் பாத் ரூமில் வழுக்கி விழுந்தார். அதில் அடிபட்டு இறந்தார்.

அப்படியா மாமா? பாத்ரூமில் வழுக்கி விழுந்தார் என்கின்றீர்கள், ஆனால் பாத்ரூம் மேல சுவரில் எல்லாம் ரத்தம் இருந்ததாமே, அது எப்படி,?

ரொம்ப கேவலமா தோற்றார்கள் அல்லவா? ஓடி வந்து விழுந்து இருப்பார் , அதுதான் !

நானும் அதே தான் யோசித்தேன் . சரி மாமா, கைமாத்த ஒரு ரெண்டு கோடி இருந்தா தாங்களேன்.

ஏன்டா ?

இலங்கை அணி இங்கு வந்து இருக்கு, அது எப்படி முடியும்ன்னு ஒரு " பட்சி" வந்து காத கடிச்சது, அதில்  பந்தயம் கட்டி "டபுள்"ஆக்கிடலாம்.

டேய் முட்டாள் இவ்வளவு நாளா பணத்தை வைச்சா பந்தயம் கட்டின ?

ஆமாம் மாமா ,ஏன் ?

சனியன்  பிடித்தவனே , பணம் இல்லாமலே ஒரு தொகையை மட்டும் சொல்லி  டபுள் ஆக்கவேண்டும், அது தானே புத்திசாலித்தனம். உனக்கு எல்லாம்  லயோலா கல்லூரியில் எப்படி தான்  பி . காம் கொடுத்தாங்களோ !

நல்ல ஐடியா மாமா , சரி கோட்டும் சூட்டும்மா எங்கே கிளம்பி விட்டீர்கள்?

கிரிக்கெட் விஷயமா துபாயில் நடக்கும் ஒரு மீடிங்கிர்க்கு போறேன்

துபாய்க்கும் கிரிக்கெட்டிர்க்கும் என்ன மாமா சம்மந்தம்?

அதை பத்தி உனக்கு எதற்கு ? கிரிக்கெட் ஆட்டத்தை எப்படி விரிவு படுத்தலாம்னு "ரூம் போட்டு" யோசிப்போம். அத நிறைய நிருபர்கள் வந்து படம் எடுத்து செய்தியா போடுவாங்க, நம்ம மக்களும் பார்த்து விட்டு, சந்தோசமா எல்லாவற்றையும் மறந்து ஆட்டத்தை ரசிப்பார்கள்.

மாமா .. கடைசியா இன்னொரு கேள்வி.

சீக்கிரம் , கேட்டு தொலை !

இன்னுமா,  இந்த உலகம் நம்மள நம்புது?


www.visuawesome.com

பின் குறிப்பு :
அடியேனும் ஒரு காலத்தில் வடி கட்டிய முட்டாளாக இருந்து பணத்தையும் நேரத்தையும் வீணடித்தேன் என்பதை வெட்கத்தோடு தெரிவித்து கொள்கின்றேன் !

10 கருத்துகள்:

  1. நிறைய தகவல்கள்...ஒரே பதிவில்..
    கண்டிப்பாக Hanse Cronje & Bob Woolmer இருவரது ஆகால மரணமும் கேள்விக்கு உரியது தான். Clive Rice சொன்னது போல சில பேட்டிங் மாபியாகள் கிரிக்கெட்டை கட்டுக்குள் வைத்து இருக்கிறார்கள்.. என்ன செய்வது..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்னுமே சொல்லுவதற்கு இல்லை நண்பா. என்னை பொறுத்தவரை... "If you cheat me once, shame on you; and if you cheat me twice, shame on me". நம் நாட்டை பிடித்து ஆட்டும் இந்த சனியனை நான் உதறி தள்ளிய நாளும் என் வாழ்வின் பொன் நாளே !
      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. பல சங்கதிகள் வெளிய வருதே........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ஒரு சங்கதியே இல்லை மாது. இந்த கிரிகெட் சனியனை ஆராய்ந்தால் ... ஒரு சுடுகாடே வெளி வரும்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. ஐயா, இதில் ஒன்றும் புரியவில்லை என்றால், நீங்கள் மிகவும் புண்ணியம் பண்ணவர் என்று தான் அர்த்தம். பணத்தையும் நேரத்தையும் வீணடித்த என்னை போன்ற வடி கட்டிய (ஒரு காலத்தில்) முட்டாளுக்கு தான் இது புரியும்...
      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  4. கிரிக்கெட் சூதாட்டத்தை புட்டு புட்டு வைத்து விட்டீர்கள்! இன்னமும் இந்த விளையாட்டின் மீது மோகம் கொண்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அதுதான் வருத்தம்!

    பதிலளிநீக்கு
  5. ஹஹஹாஹஹஹ் சூது கவ்வும்!!!! இதுதானோ?!

    பதிலளிநீக்கு
  6. [[[நம்ம "கை புள்ள சாஸ்திரியும்", " அன்ன கை கவாஸ்கரும்" நம்மள பத்தி நாலு வார்த்தை நல்லதா சொல்லுவாங்க, அதுக்கு அவங்களுக்கு சில கோடியை விட்டு எறியணும்.]]]

    அன்ன கை கவாஸ்கரும்" ? அல்லது அல்லக்கை கவாஸ்கரும்"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "அல்லக்கை"?

      நான் நிஜமாகவே இன்று வரை அதை "அன்ன கை " என்று சொல்லுவார்கள் என்று தான் நினைத்து வந்தேன். சுட்டி காட்டியதற்கு நன்றி.

      நீக்கு