வெள்ளி, 3 அக்டோபர், 2014

உள்ளே - வெளியே...எங்காத்தா?

என்ன தலைப்பு வித்தியாசமாய் இருக்கின்றதே என்று பார்க்கின்றீர்களா? ஒரு நிமிடம்...தலைபிற்கு செல்லும் முன்...


யார் இந்த "விசுAwesome"!



சக வலைபதிவர்களே, மற்றும் என் தளத்தில் வந்து என் வார்த்தைகளை படித்து போகும் என் சொந்தங்களே. உங்கள் எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி.  இவர் யாராய் இருந்தால் எனக்கு என்ன? எழுதுகின்றார் அதை படிப்போம், மற்றப் படி இவர் யார் என்று நமக்கு தெரிய அவசியம் இல்லை என்று சிலர் கேட்பது புரிகின்றது.

என்னை தெரியுமா?

மதுரை என் தாயின் ஊர். தந்தையை ஐந்து வயதிலே இழ(ற)ந்ததால் தாயே சரணம் ஆகி போன வாழ்க்கை. 12 ம் வகுப்பு படித்து முடிக்கும் முன் 12 வெவ்வேறு பள்ளி கூடங்கள் (8 பள்ளி கூடங்கள் என்னை வேண்டாம் என்று தள்ள, 3 பள்ளி கூடத்தை நான் வேண்டாம் என்று தள்ள.. கடைசியில்   இருந்த ஒரு பள்ளி போனால் போகட்டும் என்று என்னை +2 இறுதி ஆண்டு தேர்வு எழுத அனுமதித்தது).

அது முடிந்தவுடன் கல்லூரி. அங்கே இளங்கலை மற்றும் முதுகலை. அங்கே எனக்கு நண்பனாக வாய்த்தவன் தான் ... "கோயில்பிள்ளை"
அவனுக்கும் தமிழ் என்று பெயர் என்று வைக்கலாம். அவ்வளவு தமிழ் பிரியன்.

நான் எப்போதுமே என்னை பற்றி கூறும் போது "எனக்கு தமிழின் மேல் ஒரு தலை காதல்" என்பேன். ஆனால், தமிழுக்கு ஏன் என் மேல் காதல் இல்லை தெரியுமா?

இப்போது கூறுகிறேன், கவனமாக கேளுங்கள். தமிழுக்கு என் நண்பன் கோயில்பிள்ளையின் மேல் அவ்வளவு காதல்.

கோயில்பிள்ளையின் தமிழ் அறிவை கண்டு எங்கள் கல்லூரியில் வியக்காதவர்கள் அல்ல. இவன் தமிழை கண்டு - நட்ப்பை கொண்டு திமிராக  இருந்த காலம் உண்டு. நானும் இவனும் எழுதிய பாடல்கள் - பேசிய பட்டிமன்றங்கள்- போட்டி போட்ட வினாடி வினாக்கள் தான் எத்தனை.

படித்து முடித்து இவன் இங்கிலாந்து செல்ல நான் அமெரிக்கா வந்தேன். விடுமுறையில் இந்தியா வந்த இவனை, எவனோ ஒருவன், " தமிழ் தமிழ் என்று திரிந்தாயே... இன்று நம்மை அடிமை ஆக்கிய ஆங்கிலேயனிடமே சென்று தஞ்சம் புகுந்தாயே, காந்தி சொன்ன " வெள்ளையனே வெளியேறு" என்பதை மறந்து விட்டாயா? என்று கேட்க, நம் நண்பன்..கொஞ்சமும் தளராமல்...

நம் நாட்டில் வந்த அவனை "வெள்ளையனே வெளியேறு" என்று சொன்னது காந்தியின் பாணி, ஆனால் அவன் நாட்டிலே சென்று "வெள்ளையனே சற்று வெளியே இரு" என்பது என் பாணி என்று ஆர்ப்பரித்தான்.

கடல் தாண்டி சென்ற பின்னும் நட்பு தொடர்ந்தது, எங்கள் தமிழால். இங்கே அமெரிக்காவில் நான் " ஆலை இல்லாத ஊரில் இல்லுப்ப பூ சர்க்கரை" போல இனிக்க, நண்பனோ அங்கே இங்கிலாந்தில் 'தனி காட்டு ராஜ" வாக வலம் வருகின்றான்.

 இப்போது தலைப்பிற்கு வரலாம்.  கிணற்று தவளையாக இருந்து வந்த என்னை 3 மாதத்திற்கு முன் நண்பன் அல்ப்ரெட் ராஜசேகர் (பரதேசி இன் நியூ யார்க்) நீ கண்டிப்பாக வந்து வலை பதிவு எழுதவேண்டும் என்று அன்பு கட்டளையிட தயங்கி எழுத ஆரம்பித்தவன் நான்.

ஆனால், இங்கே உள்ள உங்கள் அன்பினாலும் ஆதரவினாலும்,160 பதிவுகள் எழுதிவிட்டேன். இந்த பதிவுகள் எல்லாவற்றையும் படித்து கொண்டு இருந்த நண்பன் கோயில்பிள்ளையை ...ஒவ்வொரு முறையும்.. நீ கண்டிப்பாக எழுத வேண்டும் .. .என்று நான் மீண்டும் மீண்டும் வற்புறுத்த, தயங்கி கொண்டு எழுத ஆரம்பித்துள்ளான். கோயில்பிள்ளையின் முதல் பதிவு தான் இந்த...

எப்படி தலைப்பு?

தோழர்களே.. தோழிகளே.. என்னை பொறுத்தவரை நண்பன் நமக்கு கிடைத்த வரபிரசாதம். எனக்கு அளித்து வரும் அதே ஆதரவை நண்பனுக்கும் அளிக்குமாறு வேண்டி கொண்டு...

இதோ அளிக்கிறேன்.. நண்பனின் முதல் பதிவு...(கீழே தலைப்பில்  சொடுக்கவும்)



படித்து ரசியுங்கள்.

பின் குறிப்பு ;

இங்கே இவரை அறிமுகபடுத்தியது சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்வது போல் என்று எனக்கும் தெரியும். ஒருமுறை இவரின் எழுத்துக்களை படித்தீர்கள் என்றால் என்னை மறக்க வாய்ப்புள்ளது. இருந்தாலும், தமிழ் என்னும் என் காதலிக்காக ஒரு தியாகம் தான் செய்யலாமே...

7 கருத்துகள்:

  1. சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை என்று நண்பரை அறிமுகப் படுத்துகிறீர்களே, இதுதான் அன்பு
    போற்றப்பட வேண்டிய அன்பு
    நண்பரோடு தங்களையும் தொடர்வேன் நண்பரே
    இதோ தங்கள் நண்பரின் பதிவினைக் காணச் செல்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    தங்களைப்பற்றிஅறிந்தேன்... அத்தோடு 160வது பதிவுக்கு வாழ்த்துக்கள் இன்னும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. ரிலாக்ஸ் ப்ளீஸ் வருண் சார் பதிவின் மூலம் உங்கலை தொடர ஆரம்பித்தேன் சார்.

    உங்க மூலம் உங்கலோட ஃப்ரெண்ட் பதிவுகலை படிக்க ஆரம்பிச்சிருக்கேன் சார்.

    பதிலளிநீக்கு
  4. நண்பரை அறிமுகம் செய்ததுடன் உங்களைப் பற்றியும் சொல்லி அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. ஆஹா..இப்படியல்லவா இருக்க வேண்டும். நண்பேன்டா..என அறிமுகப்படுத்தி விட்டீர்கள்...செல்கிறேன் ...அவர் தளம்..

    பதிலளிநீக்கு
  6. நண்பனே,

    உன் "பிரிய" மனதையும் , "பெரிய" மனதையும் நான் என்னென்பேன், நண்பேண்டா என்பேன்.

    நன்றியுடன்,

    கோ

    பதிலளிநீக்கு